கானு சரண் மொகந்தி: ஒடியா எழுத்தாளர்

கானு சரண் மொகந்தி (Kanhu Charan Mohanty) (11 ஆகஸ்ட் 1906 - 6 ஏப்ரல் 1994) இவர் ஓர் இந்திய ஒடியா மொழி நாவலாசிரியர் ஆவார், இவர் 1930 முதல் 1985 வரை ஆறு தசாப்தங்களாக நீடித்த ஒரு வாழ்க்கையில் ஐம்பத்தாறு நாவல்களை எழுதியுள்ளார்.

அவர் "ஒடிசாவின் மிகவும் பிரபலமான மற்றும் புகழ்பெற்ற நாவலாசிரியர்களில் ஒருவராக" கருதப்படுகிறார். 1956 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட கா என்ற நாவலுக்காக 1958 ஆம் ஆண்டில் மொஹந்திக்கு சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டது, மேலும் சாகித்ய அகாதமியின் உறுப்பினர்களில் ஒருவராக இருந்தார். மொஹந்தி ஏப்ரல் 6, 1994 அன்று தனது 87 வயதில் இயற்கையெய்தினார்..

தனிப்பட்ட வாழ்க்கை

கானு சரண் மொகந்தி 1906 ஆகஸ்ட் 11 ஆம் தேதி இந்தியாவின் சோனேபூர் நாகபாலி கிராமத்தில் ஓர் ஒடியா குடும்பத்தில் பிறந்தார். அவர் கோபிநாத் மொஹந்தியின் (1914–91) மூத்த சகோதரர் ஆவார், அவரும் ஞானபித் விருது பெற்ற (1974) ஒடியா நாவலாசிரியர் ஆவார்.:299:317 கட்டாக்கில் பள்ளிப்படிப்பை முடித்த அவர் ஒரு பொறியியல் கல்லூரியில் சேர்ந்தார், அவர் நிதி சிக்கல்களினால் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பின்னர், அவர் 1929 இல் ராவன்சா கல்லூரியில் (இப்போது ராவன்சா பல்கலைக்கழகம்) பட்டம் பெற்றார். மொகந்தி அரசு சேவையில் எழுத்தராக சேர்ந்து 1964 இல் மூத்த நிர்வாக அதிகாரியாக ஓய்வு பெற்றார். மொகந்தி ஏப்ரல் 6, 1994 அன்று தனது 87 வயதில்இயற்கையெய்தினார்.

இலக்கியப் படைப்புகள்

மொகந்தி தனது முதல் நாவலான உத்சேப் பைசானேவை 1923-24 காலத்தில் எழுதினார். இருப்பினும், அந்நாவல் வெளியிடப்படவே இல்லை, அதன் கையெழுத்துப் பிரதியையும் பின்னர் கண்டுபிடிக்க முடியவில்லை. அராணா மற்றும் படலகா என்ற இவரது இருநாவல்கள் முதன்முதலில் 1930 இல் வெளியிடப்பட்டன,:15 அவரது 1932 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட நாவலான நிசிப்பட்டி ஒரு குழந்தைக்கும் விதவைக்கும் இடையிலான திருமண நிகழ்வுகளை சித்தரிக்கும் முதல் ஒரியா நாவலாக கருதப்படுகிறது. அவர் 1944 இல் பாலா பைபரா சேசா கதா மற்றும் துண்டா பைடா என்ற இரண்டு நாவல்களை வெளியிட்டார்.பாலா பைபரா சேஷா கதா இந்திய சமுதாயத்திலுள்ள தீண்டாமையைச் சித்தரிக்கிறது மற்றும் துண்டா பைடா ஒரு விதவைக்கும் அவரது இளைய மைத்துனனுக்கும் இடையிலான உறவை சித்தரிக்கிறது.:74–75.கா அண்ணா (1935) 1866 ஆம் ஆண்டு ஒரிசா பஞ்சத்தின் பின்னணியில் அமைக்கப்பட்டிருந்தது, அவரது 1946 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட நாவலான சாத்தி (தண்டனை) 1866 மற்றும் 1870 ஆண்டுகளில் பஞ்சத்தின் பின்விளைவுகளையும் கொள்ளைநோயையும் சித்தரிக்கிறது. இரண்டு நாவல்களும் காதல் கதைகளையும் சமூக மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளையும் சித்தரிக்கின்றன.:74–75 அவரது சாகித்ய அகாடமி விருது பெற்ற நாவலான கா (ஆள்மாறாட்டம், 1956) பெண் மலட்டுத்தன்மை மற்றும் குழந்தை பிறப்பின் போது தாய்வழி மரணம் என்ற விஷயத்தைக் கையாண்டுள்ளது. சானா சானகே அனாவில் (ஒவ்வொரு தருணத்திலும் உலகம் மாறுகிறது, 1975) மொஹந்தி மாற்றாந்தாய்மார்களின் கதையையும் வீட்டு வன்முறையையும் விவரிக்கிறார்.:67 1930 முதல் 1985 வரை ஆறு தசாப்தங்களாக நீடித்த ஒரு வாழ்க்கையில் ஐம்பத்தாறு நாவல்களை வெளியிட்டார், சாக்சா (1985) இவரால் கடைசியாக வெளியிடப்பட்ட நாவலாகும்.:74–75

நாவல்களின் கலை சித்தரிப்பு

மொகந்தியின் சில நாவல்கள் பின்னர் படங்களாக உருவாக்கப்பட்டன. 1965 ஒடியா திரைப்படம் அபிநெட்ரி (நடிகை) 1947 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட அவரது நாவலாகும், அதே பெயரில் வெளிவந்தது மற்றும் ஒடியா சினிமாவில் சார்னா தாசு நடித்த இரட்டை வேடத்தில் வந்த முதல் திரைப்படமாகும். கா (1956) என்ற மற்றொரு நாவல் பின்னர் கா (1965) திரைப்படமாக உருவாக்கப்பட்டது.இந்த படத்திற்கு 14 வது தேசிய திரைப்பட விருதுகளில் ஒடியாவிற்கான சிறந்த திரைப்படத்திற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.துண்டா பைடா (கிசுகிசு, 1944) 1987 ஆம் ஆண்டில் அதே பெயரில் திரைப்படமாக உருவாக்கப்பட்டது.:141

நூற்பட்டியல்

மொஹந்தி தனது பெயரில் பின்வரும் படைப்புகளை வெளியிட்டார்::

உட்சே பைசேன் (1923) (வெளியிடப்படாதது)1920-40

அரனா (1930)

படலகா (1930)

பலிராசா (1932)

நிச்பட்டி (1932)

சவப்னனா சத்யா (1933)

துனியாரா ட au (1934)

கா அண்ணா (1935)

தத்தாஸ்து (1936)

பரிச்சயா (1936)

ஒலதபாலதா (1937)

பராக்கியா (1938)

உதண்டி (1939)

1941-60

அடேகா காதா (1943)

பிரதிக்சா (1943)

பாலா பைபரா சேசா கதா (1944)

துண்டா பைடா (1944)

எபரிசேபரி (1945)

சாச்தி (1946)

பனகானாரா சேல் (1947)

அந்தராயா (1947)

அபிநேத்ரி (1947)

பூலி கூனா (1948)

சான்சா (1950)

சான்சா (1950)

மிலானாரா சாந்தா (1951)

சர்பாரி (1952)

பரி (1954)

கா (1956)

பச்ராபாகு (1959)

1961-80

துதீயுகா (1962)

பாகபாகுலி (1964)

இதிகாசா (1967)

ச்வப்னா (1968)

சுட்டிலேகட்டா (1968)

சாரங்கரா டேல் (1969)

மன சேன் பாப்பா (1969)

மனமந்தனா (1970)

அதி கோபனியா (1970)

அங்கனா (1971)

மமதாரா மாயா (1971)

ககிபாகு லாசா (1973)

நிர்பிசங்கா (1973)

அசி நுகென் ஆ டைன் (1973)

க்சானா க்சானகே அனா (1975)

மாயா பார்ட்டா (1978)

சத்யா பாட்டி (1980)

க்சானிகா (1980)

அபா (1980 )

நமதி தாரா சம்பா (1980)

1981-85

தாரகா (1981)

தபசி (1982)

லலடலிகானா (1983)

மெலனி மகுனி (1983)

பபானி (1984)

சாக்சா (1985)

மேற்கோள்கள்

Tags:

கானு சரண் மொகந்தி தனிப்பட்ட வாழ்க்கைகானு சரண் மொகந்தி இலக்கியப் படைப்புகள்கானு சரண் மொகந்தி நாவல்களின் கலை சித்தரிப்புகானு சரண் மொகந்தி நூற்பட்டியல்கானு சரண் மொகந்தி மேற்கோள்கள்கானு சரண் மொகந்திசாகித்ய அகாதமி விருது

🔥 Trending searches on Wiki தமிழ்:

பத்து தலதாவரம்கோத்திரம்குற்றாலக் குறவஞ்சிபிரெஞ்சுப் புரட்சிஇயற்கை வளம்விடுதலை பகுதி 1தீபிகா பள்ளிக்கல்புதுமைப்பித்தன்சி. விஜயதரணிவருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)என்றி ஆல்பிரட் கிருஷ்ணபிள்ளைமதீச பத்திரனவிளையாட்டுதஞ்சாவூர்திருக்குர்ஆன்கார்த்திக் (தமிழ் நடிகர்)தஞ்சைப் பெருவுடையார் கோயில்வேற்றுமையுருபுபரதநாட்டியம்காலநிலை மாற்றம்கன்னி (சோதிடம்)அத்தி (தாவரம்)யாழ்விலங்குகளின் பெயர்ப் பட்டியல்இயேசு காவியம்சரண்யா துராடி சுந்தர்ராஜ்சுந்தரமூர்த்தி நாயனார்மொழிபெயர்ப்புநாயன்மார்திரௌபதி முர்முஇந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்சங்க காலம்சிறுநீரகம்விஜய் (நடிகர்)இந்தியாவில் இட ஒதுக்கீடுதமன்னா பாட்டியாஇரண்டாம் உலகப் போர்வேளாண்மைவைணவ சமயம்சஞ்சு சாம்சன்திருக்குறள்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்திருவிளையாடல் புராணம்முதுமொழிக்காஞ்சி (நூல்)சிவபெருமானின் பெயர் பட்டியல்புனித ஜார்ஜ் கோட்டைஅட்டமா சித்திகள்தரில் மிட்செல்ஜி. யு. போப்தேசிய மகளிர் ஆணையம் (இந்தியா)சைவ சமயம்தமிழக மக்களவைத் தொகுதிகள்தமிழ்நாடு சட்டப் பேரவைபணவீக்கம்காடுஇந்திரா காந்திஇல்லுமினாட்டிகணியன் பூங்குன்றனார்தனுஷ் (நடிகர்)ஜல் சக்தி அமைச்சகம்சித்ரா பௌர்ணமிசித்த மருத்துவம்அரங்குசென்னை மாகாணம்திருமால்முன்னின்பம்ரோகிணி (நட்சத்திரம்)ரஜினி முருகன்புறநானூறுகாடழிப்புஅனுமன் ஜெயந்திஇந்திய ஐந்தாண்டு திட்டங்கள்பங்குச்சந்தைவிளம்பரம்மார்கஸ் ஸ்டோய்னிஸ்வாரணம் ஆயிரம் (திரைப்படம்)🡆 More