காட்டலான் (Catalan language) என்பது ஒரு உரோமானிய மொழி.
இது அந்தோராவின் தேசிய மொழியும் ஆட்சி மொழியும் ஆகும். மேலும் பாலேயாரிக் தீவுகளிலும் காட்டலோனியாவிலும் இணை ஆட்சி மொழியாகவும் உள்ளது.
காட்டலான் மொழி வல்கர் இலத்தீனிலிருந்து பைரெனி மலைத்தொடர்களின் கிழக்கு பகுதியிலிருந்து பேசப்படத் துவங்கியது. இது கால்லோ-உரோமானியம், ஐபெரோ-உரோமானியம் மற்றும் கால்லோ-இத்தாலியம் போன்ற மொழிகளை ஒத்தது.
காட்டலான் பேசப்படும் இடங்கள்:
இடம் | புரிந்துகொள்ளக் கூடியவர்கள் | பேசக்கூடியவர்கள் |
காட்டலோனியா (எசுப்பானியா) | 6,949,195 | 6,043,088 |
பாலேயாரிக் தீவுகள் (எசுப்பானியா) | 931,989 | 746,792 |
வாலென்சிய சமுதாயம் (வாலேன்சியன் என) (எசுப்பானியா) | 3,648,443 | 2,547,661 |
அந்தோரா | 75,407 | 61,975 |
வட காட்டலோனியா (பிரான்சு) | 203,121 | 125,622 |
மொத்தம் | 11,808,155 | 9,525,138 |
மேற்கண்ட எண்கள் காட்டலான் மொழியைத் தாய்மொழியைக் கொண்டவர்களை மட்டுமின்றி அதை பேசக்கூடிய அனைவரையும் குறிக்கிறது.
இடம் | புரிந்துகொள்ளக் கூடியவர்கள் | பேசக்கூடியவர்கள் |
அல்கேரோ நகரம் (சார்தீனியா, இத்தாலி) | 20,000 | 17,625 |
ஆரகோனிலுள்ள சில இடங்கள் | 47,250 | 45,000 |
கார்சே (மூர்சியா) | சரியாக தெரியவில்லை | சரியாக தெரியவில்லை |
உலகின் மற்ற இடங்களில் | சரியாக தெரியவில்லை | 350,000 |
மொத்தம் | 67,250 | 412,625 |
மேற்கண்ட எண்கள் காட்டலான் மொழியைத் தாய்மொழியைக் கொண்டவர்களை மட்டுமின்றி அதை பேசக்கூடிய அனைவரையும் குறிக்கிறது.
இடம் | புரிந்துகொள்ளக் கூடியவர்கள் | பேசக்கூடியவர்கள் |
காட்டலான் பேசப்படும் இடங்கள் (ஐரோப்பா) | 11,875,405 | 9,587,763 |
உலகின் மற்ற இடங்களில் | 362,000 | 350,000 |
மொத்தம் | 12,237,405 | 9,937,763 |
மேற்கண்ட எண்கள் காட்டலான் மொழியைத் தாய்மொழியைக் கொண்டவர்களை மட்டுமின்றி அதை பேசக்கூடிய அனைவரையும் குறிக்கிறது.
குறிப்பு: மேற்கண்ட பட்டியல்களில், புரிந்துகொள்ளக் கூடியவர்களின் எண்ணிக்கை பேசக்கூடியவர்களின் எண்ணிக்கையையும் தன்னுள்ளடக்கியதே.
மையக் கட்டுரை: காட்டலான் எழுத்து
மையக் கட்டுரை: காட்டலான் இலக்கணம்
காட்டலான் பெயரிடும் வழக்கங்கள் எசுபானியாவிலுள்ள பெயரிடும் வழக்கங்களைத் தழுவியே வரும். ஒரு நபருக்கு இரண்டு இறுதிப்பெயர்கள் வைக்கப்படுகிறது. அந்நபரின் தந்தையினுடைய பெயர் ஒன்று, தாயினுடைய பெயர் மற்றொன்று. அவ்விரு இறுதிப்பெயர்கலும் "i" (பொருள்: மற்றும்) என்ற எழுத்தால் பிரித்தெழுதப்படுகிறது. (எசுப்பானியத்தில் இதற்கு இணையான எழுத்து "y" ஆகும். ஆனால், அநேகநேரங்களில் இது எழுதப்படுவதில்லை; தவிர்க்கப்படுகிறது.)
காட்டலோனியாவில் பொதுவாக பேசப்படும் சில வார்த்தைகள் (மத்திய வட்டார மொழி வழக்கின்படியான உச்சரிப்பு - பார்செலோனிய (Barcelona) மற்றும் புறநகரம்).
சில உபயோகமான வாலேன்சிய வாக்கியங்கள். (ஸ்டாண்டர்டு வாலேன்சியன் உச்சரிப்பு.)
This article uses material from the Wikipedia தமிழ் article காட்டலான் மொழி, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.