ஓர்க்கா திமிங்கலம்

Orca gladiator

ஓர்க்கா திமிங்கலம்
Two killer whales jump above the sea surface, showing their black, white and grey coloration. The closer whale is upright and viewed from the side, while the other whale is arching backwards to display its underside.
ஓர்க்கா திமிங்கலங்கள்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
உள்வரிசை:
குடும்பம்:
பேரினம்:
Orcinus

Fitzinger, 1860 
இனம்:
O. orca
இருசொற் பெயரீடு
Orcinus orca
(லின்னேயஸ், 1758
ஓர்க்கா திமிங்கிலத்தின் வாழ்விடங்கள்
Orcinus orca range (in blue)
வேறு பெயர்கள்

ஓர்க்கா திமிங்கலம் (Orcinus orca) என்பது கடல் ஓங்கில் குடும்பத்தைச் சேர்ந்த கடற்பாலூட்டி இனம் ஆகும். இது ஓர்க்கா எனவும் கொலைகாரக் திமிங்கலம் எனவும் அழைக்கப்படுகிறது. இதுவே ஓங்கில் இனங்களில் மிகப்பெரிய அளவுடைய இனம் ஆகும். இந்த ‘ஓர்க்கா’ திமிங்கலங்கள் உயிரினங்களில் மிக வேகமாக நீந்தக்கூடியதும், கடல் வாழ் உயிரினங்களுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியதும் ஆகும். இவை உலகின் அனைத்து கடல் பகுதிகளிலும் காணப்படுகின்றன.இவை சுமார் 30 ஆண்டுகளுக்கு மேல் உயிர் வாழ்கின்றன.

உடலமைப்பு

ஆண் ஓர்கா திமிங்கலம் 30 அடி நீளமும், பெண் ஓர்கா திமிங்கலம் 26 அடி நீளமும் இருக்கும். ஆண் திமிங்கலத்தின் எடை 16,000 பவுண்டும், பெண் திமிங்கலத்தின் எடை 12,000 பவுண்டும் இருக்கும். இவை அதிகபட்சமாக மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் நீந்தும் ஆற்றல் கொண்டவை. சாதாரணமாக மணிக்கு 10 முதல் 16 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும்.

நீந்தும்போது உடலை சமன் செய்து கொள்ள முதுகிலுள்ள துடுப்பு பயன்படுகிறது. இவற்றின் நீளம் சுமார் 6 அடி வரை காணப்படுகிறது. பெண் திமிங்கலங்களின் துடுப்பு பின்நோக்கி வளைந்து ஆணின் துடுப்பின் நீளத்தில் பாதியளவே காணப்படுகிறது. ஒவ்வொரு தாடையிலும் 20 முதல் 26 கூர்மையான பின்னோக்கி வளைந்த பற்கள் காணப்படுகின்றன. இவை பெரிய இரைகளைக் கடித்து உண்பதற்கு வசதியாக உள்ளன.

வாழ்க்கை

இந்த ஓர்கா திமிங்கலங்கள் குழுக்களாக வாழ்கின்றன. ஒவ்வொரு குழுவிலும் 5 முதல் 30 திமிங்கலங்கள் வரை இருக்கும். அதில் ஒரு பெரிய ஆண் திமிங்கலமும், பல பெரிய பெண் திமிங்கலங்களும், பல குட்டித் திமிங்கலங்களும் இருக்கும். பெரிய குழுக்களில் இரண்டோ, மூன்றோ பெரிய ஆண் திமிங்கலங்கள் இருக்கும், சில சமயம் பெரிய குழுக்களிலுள்ள திமிங்கலங்கள் தனி குழுக்களை உருவாக்கிக் கொண்டு பிரிந்து செல்வதும் உண்டு. எல்லா பெண் திமிங்கலங்களும் வாழ்நாள் முழுவதும் ஒரே குழுவிலேயே இருக்கும். ஆனால், ஆண் திமிங்கலங்கள் குழு விட்டு குழு மாறிக்கொண்டே இருக்கும்.

இனப்பெருக்கம்

இவை 12 முதல் 16 வயதுக்குள் இணை சேரும் பருவத்தை அடைகின்றன. தென் துருவ கடல்களில் வாழ்பவை திசம்பர் முதல் சூன் வரையிலான பருவகாலங்களிலும், வடதுருவ கடல் பகுதிகளில் வாழ்பவை மே முதல் சூலை வரையிலான பருவ காலங்களிலும் இணை சேருகின்றன. பின்னர் 12 மாத கர்ப்ப கால முடிவில் ஒரு குட்டியை ஈன்றெடுக்கிறது. சுமார் இரண்டு வயது வரை குட்டிக்குப் பால் கொடுக்கின்றன. குட்டி பல ஆண்டுகள் தன் தாயின் பாதுகாப்பிலேயே வாழ்கின்றது. எனவே, இவை 3 முதல் 6 ஆண்டுகள் இடைவெளி விட்டே அடுத்த குட்டியினைப் போடுகின்றன.

உணவு

இந்த ஓர்கா திமிங்கலங்கள் மீன்கள், சீல்கள், கடல் சிங்கங்கள் மற்றும் திமிங்கலங்களை வேட்டையாடி உண்கின்றன. தனது இரையின் இருப்பிடத்தைத் தெரிந்து கொள்ள இவை எதிரொலியைப் பயன்படுத்துகின்றன. இவை எழுப்பும் ஒலியானது எதிரே செல்லும் மற்ற மீன்கள் மற்றும் திமிங்கலங்களின் மீது பட்டு ஒலி அலைகளாக எதிரொலிக்கின்றன. அந்த ஒலி அலைகளை படவடிவத்தில் கிரகித்துக்கொண்டு அது எந்த வகையான இரை எந்த திசையில், எவ்வளவு தூரத்தில் இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டு தனது வேட்டையைத் துவக்குகின்றன. பல நேரங்களில் தனது இரையைத் துரத்திக்கொண்டு கரையை ஒட்டிய பகுதிகளுக்கும் இவை வருவதுண்டு.

உசாத்துணை

மேற்கோள்கள்

வெளி இணைப்புக்கள்

Tags:

ஓர்க்கா திமிங்கலம் உடலமைப்புஓர்க்கா திமிங்கலம் வாழ்க்கைஓர்க்கா திமிங்கலம் இனப்பெருக்கம்ஓர்க்கா திமிங்கலம் உணவுஓர்க்கா திமிங்கலம் உசாத்துணைஓர்க்கா திமிங்கலம் மேற்கோள்கள்ஓர்க்கா திமிங்கலம் வெளி இணைப்புக்கள்ஓர்க்கா திமிங்கலம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

கூகுள்தங்கம் தென்னரசுதேசிக விநாயகம் பிள்ளைசௌந்தர்யாதிருவள்ளுவர் ஆண்டுஆய்த எழுத்து (திரைப்படம்)உரிச்சொல்செந்தாமரை (நடிகர்)இலங்கைவசுதைவ குடும்பகம்மெய்யெழுத்துபஞ்சாங்கம்அம்மனின் பெயர்களின் பட்டியல்தொல்காப்பியர்எட்டுத்தொகை தொகுப்புவிக்ரம்2024 ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல்விழுப்புரம் மக்களவைத் தொகுதிநோட்டா (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)புறநானூறுபெ. ஜான் பாண்டியன்ஜெயகாந்தன்இந்தியத் தேர்தல்கள் 2024டெல்லி கேபிடல்ஸ்பாட்டாளி மக்கள் கட்சிபிரேமம் (திரைப்படம்)சமஸ்எடப்பாடி க. பழனிசாமிஅம்பிகா (நடிகை)இராவணன்ஆய்த எழுத்துவிந்துமக்களவை (இந்தியா)திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதிமகாவீரர்இரசினிகாந்துமயில்தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005மகேந்திரசிங் தோனியாவரும் நலம்இந்திய செஞ்சிலுவைச் சங்கம்நான் அடிமை இல்லை (திரைப்படம்)உலா (இலக்கியம்)செயற்கை மழைஇந்திய அரசியலமைப்பின் முகப்புரைகள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிகுரோதி ஆண்டுநான்மணிக்கடிகைஇரண்டாம் உலகம் (திரைப்படம்)தமிழ் தேசம் (திரைப்படம்)தமிழிசை சௌந்தரராஜன்வி. ஜெயராமன்வடிவேலு (நடிகர்)இணையம்அனுமன்கீழடி அகழாய்வு மையம்தேசிய ஜனநாயகக் கூட்டணிபெரம்பலூர் மக்களவைத் தொகுதிசஞ்சு சாம்சன்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்முதலாம் இராஜராஜ சோழன்மலையாளம்முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்காதல் தேசம்திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்ஆண் தமிழ்ப் பெயர்கள்மனித உரிமைஏற்காடுகருக்காலம்நேரிணைய எண்வரிசை கலைக்களஞ்சியம்கள்ளர் (இனக் குழுமம்)இரண்டாம் உலகப் போர்தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம்இந்தியத் தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணிதமிழ்ஒளிசைவத் திருமுறைகள்🡆 More