ஓமோ இரெக்டசு

ஓமோ இரெக்டசு (Homo erectus) என்பது, ஒமினிட் குடும்பத்தைச் சேர்ந்த அழிந்துவிட்ட ஒர் இனம்.

Euteleostomi

பிளீசுட்டோசீன் நிலவியல் காலத்தின் பெரும் பகுதியூடாக இவ்வினம் வாழ்ந்திருந்தது. இதன் மிக முந்திய புதைபடிவச் சான்றுகள் 1.9 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தியவை. மிகப் பிந்திய சான்றுகள் 70,000 ஆண்டுகளுக்கு முந்தியவை. ஆப்பிரிக்காவில் தோன்றியதாகக் கருதப்படும் ஓமோ இரெக்டசு, ஜார்ஜியா, இந்தியா, இலங்கை, சீனா, இந்தோனீசியா ஆகியவை உள்ளடங்கலாக யூரேசியப் பகுதி முழுவதும் பரந்து குடியேறின.

ஓமோ இரெக்டசு
புதைப்படிவ காலம்:1.9–0.07 Ma
PreЄ
Pg
N
முந்திய பிளீசுட்டோசீன் – பிந்திய பிளீசுட்டோசீன்
ஓமோ இரெக்டசு
பிரான்சின் தவுத்தாவெல்லில் காண்டெடுக்கப்பட்ட மாதிரியொன்றின் மீட்டுருவாக்கம்
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
Hominidae
இனக்குழு:
Hominini
பேரினம்:
Homo
இனம்:
H. erectus
இருசொற் பெயரீடு
Homo erectus
(துபோயிசு, 1892)
வேறு பெயர்கள்

இதன் வகைப்பாடு, மூதாதைகள், சந்ததிகள் என்பன குறித்த விவாதங்கள் இன்னும் தொடர்ந்து வருகின்றன. குறிப்பாக ஓமோ எர்காசுட்டர் இனத்துக்கும் இதற்கும் இடையிலான தொடர்பு குறித்து இரண்டு நிலைகள் உள்ளன. முதலாவது, ஓமோ இரெக்டசு, ஓமோ எர்காசுட்டர் ஆகிய இரண்டும் ஒரே இனத்தையே குறிக்கும் என்றும் அதனால், ஓமோ இரெக்டசு ஓமோ ஈடில்பேர்கென்சிசு, ஓமோ நீன்டர்தாலென்சிசு, ஓமோ சப்பியன்சு ஆகியவற்றின் நேரடி மூதாதை ஆகும் என்னும் நிலைப்பாடு. இரண்டாவது, ஓமோ இரக்டசு ஒரு ஆசிய இனம், ஆப்பிரிக்க ஓமோ எர்காசுட்டர் இனத்தில் இருந்து வேறுபட்டது என்ற நிலைப்பாடு.

தொல்மானிடவியலாளர்களில் இன்னொரு பிரிவினர் இன்னொரு கருத்தை முன்வைக்கின்றனர். இது முன்னர் குறிப்பிட்ட முதலாவது நிலைப்பாட்டுக்கு மாற்றீடாக உள்ளது. இதன்படி, ஓமோ எர்காசுட்டர் என்பது, ஓமோ இரெக்டசுவின் ஆப்பிரிக்க வகை ஆகும். இவர்கள் ஆசிய வகைக்கு ஓமோ இரெக்டசு சென்சு இசுட்ரிக்டோ என்றும் ஆப்பிரிக்க, ஆசிய வகைகளை உள்ளடக்கிய பெரிய வகைக்கு ஓமோ இரெக்டசு சென்சு லாட்டோ என்றும் பெயர் இட்டுள்ளனர்.

டிமானிசி மண்டையோடுகள் ஆவணப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து 2013ல் புதிய விவாதம் ஒன்று தொடங்கியது. டிமானிசி மண்டையோடுகளில் காணப்படும் பெரிய உருவவியல் வேறுபாடுகளைக் கருத்தில் எடுக்கும்போது, முன்னர் வெவ்வேறாக வகைப்படுத்தப்பட்ட மனித மூதாதைகளை, எடுத்துக்காட்டாக ஓமோ எர்காசுட்டர், ஓமோ ருடோல்பென்சிசு, ஓமோ அபிலிசு போன்றவற்றை, ஓமோ இரெக்டசு இனமாக வகைப்படுத்த வேண்டும் எனச் சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

மேற்கோள்கள்

Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

பத்து தலசமணம்இந்திய தேசிய சின்னங்கள்மகாபாரதம்வசுதைவ குடும்பகம்பாம்புதேவேந்திரகுல வேளாளர்குறவஞ்சிஇந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்திராவிட முன்னேற்றக் கழகம்நவக்கிரகம்மியா காலிஃபாஆடுஜீவிதம் (திரைப்படம்)இராவண காவியம்சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்வினைச்சொல்முதுமொழிக்காஞ்சி (நூல்)பாரதிய ஜனதா கட்சிதிருமந்திரம்சித்தர்கள் பட்டியல்ஐக்கிய நாடுகள் அவைபிரேமலதா விஜயகாந்த்அணி இலக்கணம்தமிழில் சிற்றிலக்கியங்கள்கள்ளர் (இனக் குழுமம்)தில்லி சுல்தானகம்பொது உரிமையியல் சட்டம்தற்கொலை முறைகள்பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிபௌத்தம்முகம்மது நபிவித்யா பிரதீப்களவழி நாற்பதுசைவ சமயம்உணவு பதப்படுத்தல்காப்பியம்அன்புமணி ராமதாஸ்கணினிவேலு நாச்சியார்இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்சென்னைசட்டமன்ற உறுப்பினர் (இந்தியா)பீப்பாய்சீறாப் புராணம்காரைக்கால் அம்மையார்முல்லைப்பாட்டுஅருங்காட்சியகம்நெடுநல்வாடைஎம். சின்னசுவாமி அரங்கம்நீக்ரோஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்புணர்ச்சி (இலக்கணம்)தமிழக வரலாறுதுரைமுருகன்சமயபுரம் மாரியம்மன் கோயில்கடல்நாழிகைகொடைக்கானல்சன்ரைசர்ஸ் ஐதராபாத்இராவணன்கருக்காலம்லொக்கி பெர்கசன்நவரத்தினங்கள்பூர்ணம் விஸ்வநாதன்சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்லியொனார்டோ டா வின்சிநிறுத்தக்குறிகள்உமறுப் புலவர்பெருமாள் திருமொழிகரிகால் சோழன்ஹர்திக் பாண்டியாஅருந்ததியர்சிலப்பதிகாரம்சிறுதானியம்சமரச சுத்த சன்மார்க்க சங்கம்கணையம்நாடார்மகரம்வைரமுத்து🡆 More