எட்மோனியா லூவிசு

மேரி எட்மோனியா லூவிசு (யூலை 4, 1844 – செப்டம்பர் 17, 1907) ஒரு அமெரிக்க சிற்பி, இவர் தன் வேலை வாழ்நாளில்  பெரும் பகுதியை உரோம்  இத்தாலியில் கழித்தார்.

இவரே முதல் ஆப்பிரிக்க-அமெரிக்க மற்றும் அமெரிக்க தொல் குடியினர் மரபில் பன்னாட்டு  புகழும்    உலக  நுண்கலைகளில்  பெயரும் பெற்ற முதல் பெண்மணி  ஆவார்.  இவருடைய  கருப்பு  இனத்து  மக்களும்  அமெரிக்க  தொல்  குடி  இன  மக்களும் கலந்தவாறே  இவருடைய புதிய பாணி சிற்பங்கள் பெரும்பாலும்  இருக்கும். இவர் அமெரிக்க உள்நாட்டுப் போர் காலகட்டத்தில்  புகழ்  பெறத்தொடங்கினார். .19ஆம்  நூற்றாண்டில்  அமெரிக்க  கலை  மையநீரோட்டத்தில் அறியப்பட்ட  ஒரே  ஆப்பிரிக்க அமெரிக்க பெண்  இவராவார்.  2002இல் சிறந்த 100  சிறந்த ஆப்பிரிக்க  அமெரிக்கர்கள்  பட்டியலில் இடம்  பிடித்தார்.

எட்மோனியா லூவிசு
எட்மோனியா லூவிசு
பிறப்புஎட்மோனியா லூவிசு
c. (1844-07-04)சூலை 4, 1844
கிரின்புசு, நியூ யார்க், ஐக்கிய அமெரிக்கா
இறப்புசெப்டம்பர் 17, 1907(1907-09-17) (அகவை 63)
இலண்டன், இங்கிலாந்து, ஐக்கிய இராச்சியம்
தேசியம்அமெரிக்கன்
கல்விஓப்பிரெலின் கல்லூரி
அறியப்படுவதுசிற்பி
அரசியல் இயக்கம்புதிய பாணி
Patron(s)யுலிசீசு கிராண்ட்

வாழ்க்கை வரலாறு

ஆரம்ப வாழ்க்கை

எட்மோனியா லூவிசு யூலை 4, 1844 பிறந்ததாக  பட்டியலிடப்பட்டுள்ளது நியூ யோர்க்   மாநிலத்திலுள்ள   கிரின்புசு  என்னுமிடத்தில்  இவர்  பிறந்தார்.  கிரின்புசு  இப்போது  ரென்சுசில்லர்  என  அழைக்கப்படுகிறது. லூவிசின் தந்தை ஆப்பிரிக்க-எய்ட்டி  இனத்தவர்,  தாய் ஆப்பிரிக்க  அமெரிக்க  இன  மரபுள்ள   அமெரிக்க  தொல் குடி  இனத்தைத்  சேர்ந்தவர். லூவிசின்  தாய்  சிறந்த கை  வினைக்  கலைஞரும்   தையற்காரரும்  ஆவார்.  தந்தை பெருமுதலாளியின் வேலைக்காரன்.  இக் குடும்ப பின்னணியால் ஈர்க்கப்பட்டு லூவிசு பின்னர்  சிற்ப  வேலையை  தேர்ந்தெடுத்தார்

லூவிசுக்கு ஒன்பது வயது அடையும் போது அவரின் பெற்றோர்கள் இறந்துவிடுகின்றனர்.  அவரின்  தந்தை  1847இல் இறந்துவிடுகிறார். அவரின் மூத்த சகோதரரும் அவரும் அவரின் தாய் வழி உறவுகளால் தத்து எடுத்து  வளர்க்கப்படுகிறார்கள்.  அவரின் மூத்த  சகோதரர் சாமுவேல் 1835ஆம் ஆண்டு  எயிட்டியில்  லூவிசின் தந்தைக்கும் அவரது  முதல்  மனைவிக்கும் பிறந்தவர்.  அவரது  தந்தை  இறக்கும் போது சாமுவேல் முடி திருத்துநராக வேலைக்கு சென்றிருந்தார் அப்போது அவருக்கு 12 வயது ஆகியிருந்தது. எட்மோனியாவும் சாமுவேலும் 4 ஆண்டுகள்  தாய் வழி  உறவுகளுடன்  நயாகரா அருவி  நகரத்திலேயே இருந்தனர்.  லூசிசும்  அவரது  உறவுகளும் அமெரிக்க தொல்  குடிகளின்  கூடைகளையும்  நினைவுச்சின்னங்களையும் நயாகரா அருவி டொராண்டோ நியு யார்க் நகரங்களுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு  விற்று  பணம்  சம்பாதித்தனர்.  அச்சமயத்தில் இவரது  பெயர் தொல் குடிகள்  இவருக்கு வைத்த  பெயரான  வைல்ட்பையர்   என்றும்  சாமுவேலின்  பெயர்  சன்சைன்  என்றும் கூறுவார்கள்.. 1852ஆம் ஆண்டு  சாமுவேல் சான் பிரான்சிசுக்கோ, கலிபோர்னியா நகருக்கு ,  கேப்டன் எசு. ஆர். மில்சு பாதுகாப்பில்  சென்றார்.எனினும் சாமுவேல் தன் படிப்புக்கும் தங்கும் இடத்திற்குமான பணத்தை  தந்துகொண்டிருந்தார். 1856ஆம்  ஆண்டு லூவிசு  மக்குராவில்லில் உள்ள நியூயார்க் நடுவண் கல்லூரியில் சேர்ந்தார்.. 1958ஆம் ஆண்டு கோடை விடுமுறையில் வழக்கமான கல்லூரி படிப்புக்கு தயார் செய்யும் சிறப்பு வகுப்பில் படித்தார். மூன்று ஆண்டுகள் கழித்து அக்கல்லூரியை விட்டு வெளியேறினார்.

மேற்கோள்கள்

Tags:

அமெரிக்க உள்நாட்டுப் போர்ஆபிரிக்க அமெரிக்கர்இத்தாலிஉரோம்ஐக்கிய அமெரிக்காவிலுள்ள தொல்குடி அமெரிக்கர்

🔥 Trending searches on Wiki தமிழ்:

சுப்பிரமணியசுவாமி கோயில், எட்டுக்குடிதிருவள்ளுவர்ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்சுற்றுச்சூழல்தமிழ்நாடு காவல்துறைஎ. வ. வேலுகள்ளுபோக்குவரத்துஇந்திய மக்களவைத் தொகுதிகள்ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்பாமினி சுல்தானகம்சீரடி சாயி பாபாதரணிதிருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்மஞ்சும்மல் பாய்ஸ்இந்திய விடுதலை இயக்கம்பதினெண்மேற்கணக்குவிண்ணைத்தாண்டி வருவாயாமதுரைக் காஞ்சிஆற்றுப்படைஇல்லுமினாட்டிதங்கம்தேசிய மகளிர் ஆணையம் (இந்தியா)தமிழ்நாடுசடுகுடுசுய இன்பம்மகாவீரர் ஜெயந்திதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021அரிப்புத் தோலழற்சிகேள்விபஞ்சாயத்து ராஜ் சட்டம்குக்கு வித் கோமாளிநீதிக் கட்சிவேலு நாச்சியார்கருப்பு நிலாநிதி ஆயோக்முத்துலட்சுமி ரெட்டிசின்ன மாப்ளேதற்கொலை முறைகள்அகத்திணைஇந்தியக் குடியரசுத் தலைவர்சங்க காலப் புலவர்கள்ஐக்கிய நாடுகள் அவைஅயோத்தி தாசர்கா. ந. அண்ணாதுரைஎயிட்சுஆயுள் தண்டனைசிவபெருமானின் பெயர் பட்டியல்உயர் இரத்த அழுத்தம்மழைசிறுபாணாற்றுப்படைடேனியக் கோட்டைஅஜின்கியா ரகானேபௌர்ணமி பூஜைஜல் சக்தி அமைச்சகம்இந்திய உச்ச நீதிமன்றம்நான்மணிக்கடிகைஅன்னை தெரேசாசிலம்பம்இலங்கையின் பொருளாதாரம்ரத்னம் (திரைப்படம்)நாடார்புணர்ச்சி (இலக்கணம்)கல்லணைசிங்கம்கமல்ஹாசன்கே. எல். ராகுல்திருப்பாவைதேவாங்குஆதி திராவிடர்தேசிக விநாயகம் பிள்ளைதமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்மனித வள மேலாண்மைகாதலுக்கு மரியாதை (திரைப்படம்)சீமான் (அரசியல்வாதி)காயத்ரி மந்திரம்களப்பிரர்தகவல் தொழில்நுட்பம்அறுபது ஆண்டுகள்🡆 More