உடல் திறன் விளையாட்டு

விளையாட்டுப் போட்டிகள் (Sport or sports) என்பவை உடல் வலுவையும் மனத்திண்மையையும் அடிப்படையாகக் கொண்டு ஆடப்படும் அனைத்து வகையான உடல் திறன் விளையாட்டுப் போட்டிகளையும் குறிக்கும் .

இவ்விளையாட்டுகள் சாதாரணமாகவோ அல்லது விதிகள் வகுத்து திட்டமிடப்பட்டு ஒழுங்கமைக்கப்பட்ட பங்கேற்புகள் மூலமாகவோ நடைபெறுகின்றன. போட்டிகளில் பங்கேற்கும் போட்டியாளர்களின் மனதிற்கு இன்பமும், அவர்களின் உடல் திறனைப் பயன்படுத்தவும், பராமரித்து மேம்படுத்தவும் விளையாட்டுகள் உதவுகின்றன.மற்றும் சில சந்தர்ப்பங்களில் பார்வையாளர்கள் பொழுதைப் போக்கவும் இவை பயன்படுகின்றன .

உடல் திறன் விளையாட்டு
கால்பந்து எனப்படும் உடல் திறன் விளையாட்டில் ஈடுபட்டுள்ள சிறுவர்கள்

வழக்கமாக விளையாட்டுப் போட்டிகள் இரண்டு பக்கத்தினருக்கிடையே நிகழ்கின்றன. ஒரு பக்கத்தினர் மற்றொரு பக்கத்தினரை விட அதிகப் புள்ளிகள் எடுத்து முந்த முயற்சிப்பதாக நிகழ்வு அமையும். வெற்றி தோல்வியற்ற சமநிலையையும் சில விளையாட்டுகள் அனுமதிக்கின்றன. சில விளையாட்டுகளில் சமநிலையை புறக்கணித்து வெற்றியாளர் அல்லது தோல்வியாளர் என்பதை உறுதி செய்ய சில விதிகளை உருவாக்கி முடிவு செய்கின்றனர். இத்தகைய பலவகையான இரண்டு-பக்க போட்டிகள் சாம்பியன்களை உருவாக்குவதற்கான போட்டிகளாக ஏற்பாடு செய்யப்படுகின்றன. பல விளையாட்டுக் கழகங்கள் ஒவ்வோர் ஆண்டும் வழக்கமான விளையாட்டுப் பருவத்தினை உருவாக்கி அதில் போட்டிகளை ஏற்பாடு செய்வதன் மூலம் வருடாந்திர வாகையாளரை உருவாக்குகின்றன. இத்தகைய வாகையாளர்களை உருவாக்கும் நூற்றுக்கணக்கான விளையாட்டுப்போட்டிகள் தனிநபர் விளையாட்டுகளாகவும், குழு விளையாட்டுகளாகவும் உலகெங்கும் உள்ள பல்வேறு நாடுகளில் நடத்தப்படுகின்றன. ஓட்டப்பந்தயம் போன்ற சில விளையாட்டுகளில், பல போட்டியாளர்கள் ஒருவரை எதிர்த்து மற்றொருவர் என்ற போட்டி மனப்பாங்குடன் பங்கேற்று வெற்றி பெற முயற்சிப்பர்.

தடகளம் அல்லது உடல் திறமையின் அடிப்படையில் விளையாடப்படும் போட்டிகள் மட்டுமே தொடக்கக் காலத்தில் விளையாட்டுப் போட்டிகள் என அங்கீகரிக்கப்பட்டன. ஒலிம்பிக் விளையாட்டுகள் போன்ற பெரிய போட்டிகளில் இந்த வரையறைக்குள் அடங்கும் விளையாட்டுகள் மட்டுமே ஒப்புக் கொள்ளப்பட்டன. உடல் திறனைப் பயன்படுத்தாமல் முன்னெடுக்கப்படும் விளையாட்டுகளைத் தவிர்த்து ஐரோப்பிய கழகம் போன்ற அமைப்புகள் விளையாட்டை வரையறுக்கின்றன . இருப்பினும் உடல் ரீதியான நடவடிக்கைகள் ஏதுமின்றி போட்டியிடத் தக்க பல விளையாட்டுகள் மன விளையாட்டுகள் என்ற பெயரில் விளையாட்டுப் போட்டிகளாக அங்கீகரிக்கப்படுகின்றன. சதுரங்கம், சீட்டுக்கட்டு போன்ற விளையாட்டுகளை அனைத்துலக ஒலிம்பிக் செயற்குழு விளையாட்டுப் போட்டிகளாக அங்கீகரித்துள்ளது. அனைத்துலக விளையாட்டு கூட்டமைப்பும் ஐந்து மன விளையாட்டுகளை விளையாட்டுப் போட்டிகளாக அங்கீகரித்துள்ளது . மேலும் விளையாட்டுப் போட்டிகளாக கருதப்பட கோரும் மன விளையாடுகளின் எண்ணிக்கையையும் கட்டுப்படுத்துகிறது .

விளையாட்டு பொதுவாக விதிகள் அல்லது விதிமுறைகளின் தொகுப்பால் நிர்வகிக்கப்படுகிறது, இவ்விதிகள் நியாயமான போட்டியை உறுதிப்படுத்த உதவுகின்றன. வெற்றியாளர்களை தொடர்ச்சியாக தேர்ந்தெடுக்க உதவும் தீர்ப்பை அனுமதிக்கின்றன. உடல் திறனைப் பயன்படுத்தி இலக்குகளை அடைவது அல்லது புள்ளிகளை ஈட்டுவது போன்ற செயல்பாடுகள் மூலம் வெற்றிபெறுதலை விதிகள் இறுதி செய்கின்றன. சில நிகழ்வுகளில் நுட்ப செயல்திறன் அல்லது கலை உணர்ச்சி போன்ற குறிக்கோள் அல்லது அகநிலை நடவடிக்கைகள் போன்ற விளையாட்டுச் செயல்திறன் கூறுகளை ஆராய்ந்தும் நடுவர்கள் வெற்றிகளை உறுதி செய்கிறார்கள்.

விளையாட்டுத்திறன் பதிவுகள் பெரும்பாலும் பராமரிப்பில் வைக்கப்படுகின்றன, மேலும் சில பிரபலமான விளையாட்டுகளுக்கு இந்த தகவல்கள் பரவலாக அறிவிக்கப்படுகின்றன அல்லது விளையாட்டு செய்திகளில் அறிவிக்கப்படுகின்றன. விளையாட்டில் பங்கேற்காத பார்வையாளர்களுக்கு இதுவொரு பொழுதுபோக்கு ஆதாரமாக உள்ளது, விளையாடுவதற்காக கூடும் பெரிய கூட்டங்கள், அதைப் பார்ப்பதற்காகத் திரளும் மக்கள், விளையாட்டுப் போட்டி மற்றும் அதன் ஒளிபரப்பு எனப் பலவிதமான பொழுது போக்கு அம்சங்கள் விளையாட்டுடன் தொடர்பு கொண்டுள்ளன. விளையாட்டுப் பந்தயம் சில சமயங்களில் கடுமையாக ஒழுங்குபடுத்தப்படுகிறது, சில சமயங்களில் விளையாட்டை மட்டுமே மையமாகக் கொண்டும் நிகழ்கிறது.

உலகளாவிய அளவில் விளையாட்டுத் தொழில் 2013 ஆம் ஆண்டு வரை $ 620 பில்லியன் மதிப்புள்ளதாக இருந்ததாக ஏ.டி. கியர்னி என்ற ஆலோசனை மையம் தெரிவிக்கிறது . விளையாட்டுலகில் மிகவும் அணுகக்கூடியதாகவும், நடைமுறையில் எளிதாக பயிற்சி பெறக்கூடியதாகவும் உள்ள விளையாட்டுப் போட்டியாக ஓட்டப்பந்தயம் கருதப்படுகிறது. அதேவேளையில் அதிக அளவு தீவிரப் பார்வையாளர்களைக் கொண்ட விளையாட்டாக கால்பந்துப் போட்டி கருதப்படுகிறது .

பொருளும் பயன்பாடும்

பெயர்க்காரணம்

விளையாட்டுப் போட்டியைக் குறிக்கும் "Sport" என்ற ஆங்கிலச் சொல் ஓய்வு என்ற பொருள் கொண்ட பழைய பிரெஞ்சு சொல்லான desport என்ற சொல்லிலிருந்து பெறப்பட்டுள்ளது. ஓய்வு நேரத்தில் மனிதர்கள் மகிழ்ச்சியுடன் பொழுது போக்க பயன்படுவது விளையாட்டு என்ற வரையறை 1300 ஆம் ஆண்டிலேயே பழைய ஆங்கிலத்தில் இருந்துள்ளது .

சூதாட்டமும் இதே நோக்கத்திற்காக நடத்தப்படும் பிற ஆட்டங்களும் என்ற பொருளும் விளையாட்டு என்ற சொல்லுக்குள் அடங்குகிறது. இதைத் தவிர வேட்டையாடுதல், பயிற்சிகள் தேவைப்படும் பிற விளையாட்டுகள், உடற்பயிற்சி உள்ளிட்ட பிறவும் இச்சொல்லுக்கான பிற பொருள்களாகும். உடல் தளர்வு மற்றும் பொழுதுபோக்கிற்காக ஈடுபடும் செயல்பாடு வி்ளையாட்டு ஆகும் என்று ரோகெட் என்ற அறிஞர் விளையாட்டை வரையறை செய்கிறார். ஒரு மாற்றம் மற்றும் பொழுது போக்கு என்பனவும் விளையாட்டுக்கு இணையான சொற்களாக கருதப்படும் என்றும் அவர் குறிப்பிடுகிறார் .

பெயரிடல்

விளையாட்டு என்பதைக் குறிக்க இங்கிலாந்தில் "sport" என்ற ஒருமைச் சொல்லை பெரும்பாலான வட்டார வழக்குகளில் பயன்படுத்துகிறார்கள். அதேபோல "sports" என்ற சொல் பன்மையைக் குறிப்பதாகக் கொண்டு கால்பந்து , ரக்பி போன்ற குழு விளையாட்டுகளுக்குப் பயன்படுத்துகிறார்கள். அமெரிக்க ஆங்கிலத்தில் இவ்விரு வகைகளுக்குமே "sports" என்ற சொல்லே பயன்படுத்தப்படுகிறது.

வரையறைகள்

உடல் திறன் விளையாட்டு 
அனைத்துலக ஒலிம்பிக் குழு சதுரங்கம் உள்ளிட்ட சில பலகை விளையாட்டுகளை விளையாட்டுப் போட்டி என அங்கீகரித்துள்ளது.
உடல் திறன் விளையாட்டு 
குதிரைச் சவாரி என்பது ஒரு விளையாட்டுப் போட்டி

மற்ற ஓய்வு நேரச் செயல்பாடுகளிலிருந்து விளையாட்டைப் பிரிக்கும் அம்சங்களை துல்லியமான வரையறையானது ஆதாரங்களுக்கு இடையில் வேறுபடுத்துகிறது. விளையாட்டுப் போட்டி என்பதற்கான மிகவும் நெருக்கமான வரையறையை அனைத்துலக விளையாட்டுப் போட்டி கூட்டமைப்புகளின் உலகளாவிய கூட்டமைப்பு அளித்துள்ளது. விளையாட்டு வீரர்கள் கூட்டமைப்பு, கால்பந்து சங்கம், தடகள விளையாட்டுச் சங்கம், சைக்கிள் பந்தய சங்கம், குதிரைப் பந்தயச் சங்கம், டென்னிசு வீரர்கள் சங்கம் உள்ள பல்வேறு பெரிய சங்கங்களையும் இக்கூட்டமைப்பு உள்ளடக்கியுள்ளது. எனவேதான் இக்கூட்டமைப்பை அனைத்து விளையாட்டுச் சங்கங்களின் உண்மையான பிரதிநிதி என்று கருதுகிறார்கள்.

அனைத்துலக விளையாட்டுப் போட்டி கூட்டமைப்புகளின் உலகளாவிய கூட்டமைப்பு விளையாட்டுப் போட்டி என ஒரு விளையாட்டைக் கருத பின் வரும் சில அம்சங்கள் அவ்விளையாட்டில் இருக்க வேண்டுமென பரிந்துரைக்கிறது :.

  • போட்டி மனப்பாங்கு கொண்டதாக இருக்க வேண்டும்.
  • எந்த உயிரினத்திற்கும் துன்பம் விளைவிக்கக் கூடாது.
  • விளையாட்டுக் கருவிகள் உற்பத்தி ஒரு தனி நபரைச் சார்ந்திருக்கக் கூடாது.
  • யோகத்தால் வெல்வதாக விளையாட்டு அமையக்கூடாது.

ரக்பி கால்பந்து அல்லது தடகள விளையாட்டு போன்ற முதன்மை விளையாட்டுகள், சதுரங்கம் போன்ற மன விளையாடுகள், பார்முலா 1 போன்ற மோட்டார் பந்தய விளையாட்டுகள், பில்லியர்ட் போன்ற ஒருங்கிணைப்பு விளையாட்டுகள், விலங்கு ஆதரவிலான குதிரைச்சவாரி விளையாட்டு போன்றவற்றையும் இக்கூட்டமைப்பு விளையாட்டுப் போட்டிகள் என்கிறது. விளையாட்டுப் போட்டிகளில் மன விளையாட்டுகள் சேர்க்கப்படுவது குறித்த உலகளாவிய புரிதல்கள் இன்னும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை, இதனால் மன விளையாட்டுகளுக்கு நிதியளிக்க மறுக்கப்பட்டு சட்டரீதியான சிக்கல்கள் தோன்ற வழியேற்படுகிறது . இதனாலேயே கூட்டமைப்பு குறைந்த எண்ணிக்கையிலான மன விளையாட்டுகளை விளையாட்டுப் போட்டி என அங்கீகரிக்கிறது.

அதிகமான நபர்களால் விளையாடப்படும் காணொளி விளையாட்டுகள் எனப்படும் வீடியோ விளையாட்டுக்கள் குறிப்பாக மின்-விளையாட்டுகள் என்றும் அழைக்கப்படும் விளையாட்டுக்களையும் இவ்வரையறை குறிக்கும் என்ற அளவிற்கு விளையாட்டுப் போட்டி என்பதன் பொருள் விரிவடைந்து வருகிறது. ஆனால் இவ்வகை உடல் திறன் சாராத விளையாட்டுகள் அனைத்துலக விளையாட்டுக் கூட்டமைப்பால் பரவலாக அங்கீகரிக்கப்படவில்லை. முக்கியமான விளையாட்டு அமைப்பான ஐரோப்பிய கவுன்சில் பரிந்துரையில் விளையாட்டுப் போட்டி என்பது அனைத்து வகையான உடல் திறன் செயல்பாடுகளையும் குறிக்கிறது, சாதாரணமாக அல்லது ஒழுங்கமைக்கப்பட்ட பங்கேற்புகள் மூலம் உடற்பயிற்சி மற்றும் மன நலத்தை வெளிப்படுத்தும் அல்லது மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருக்கும். சமூக உறவுகளை உருவாக்கும் அல்லது அனைத்து மட்டங்களிலும் போட்டியின் முடிவுகளைப் பெறும் .

போட்டிகள்

ஒரு விளையாட்டுப் போட்டிக்கு அத்தியாவசியத் தேவையாக போட்டிமனப்பான்மை இருக்க வேண்டுமா என்பது தொடர்பாக எதிர்மறையான பார்வைகளும் நிலவுகின்றன. போட்டியிடும் கிட்டத்தட்ட அனைத்து தொழில்முறை விளையாட்டுகளின் சர்வதேச ஒலிம்பிக் குழு அல்லது அனைத்துலக விளையாட்டுப் போட்டிகளின் கூட்டமைப்பு ஆகியவற்றால் அங்கீகரிக்கப்பட வேண்டுமெனில் போட்டிமனப்பான்மை அவசியம் என்ற கருத்தும் மேலோங்கியுள்ளது , எல்லாவிதமான உடலியல் செயல்பாடுகளையும் உள்ளடக்கியதாக விளையாட்டின் வரையறையை விரிவுபடுத்த வேண்டும் என பிற அமைப்புகள் பரிந்துரைக்கின்றன. உதாரணமாக வெறும் மனமகிழ்ச்சிக்காக நடத்தப்படும் அனைத்து வகையான போட்டிகளையும்கூட விளையாட்டுப் போட்டிக்கான வரையறையில் சேர்க்க வேண்டும் என ஐரோப்பிய விளையாட்டுக் கழகம் பரிந்துரைக்கிறது.

பள்ளிக்கூட நாட்களிலிருந்தே இத்தகைய போட்டி மனப்பாங்கற்ற விளையாட்டுப் போட்டிகளை பாரம்பரியமாக நடத்தி வந்தால் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பை அதிகரிக்க இயலும் என்றும் தோல்வியினால் ஏற்படும் தாக்கத்தை குறைக்க முடியும் என்றும் கருதப்படுகின்றது. இருந்தாலும் இத்தகைய நோக்கம் கொண்ட நகர்வுகள் விவாதத்திற்குரியனவாகவே உள்ளன .

போட்டியிடும் நிகழ்வுகளில், பங்கேற்பாளர்கள் தாங்கள் ஈட்டும் முடிவு அடிப்படையில் வகுக்கப்படுகின்றனர் அல்லது வகைப்படுத்தப்படுகின்றனர், பெரும்பாலும் அவர்களின் செயல்திறனை ஒப்பிட்டு மேலும் பல குழுக்களாக பிரிக்கப்படுகிறார்கள் (எ.கா. பாலினம், எடை மற்றும் வயது). முடிவுகளின் அளவீடு புறநிலை அல்லது அகநிலை, சார்ந்ததாக உள்ளது. உதாரணமாக ஓட்டப்பந்தயத்தில் நிச்சயமாக ஓடி முடிக்கும் நேரம் ஒரு புறநிலை அளவீடு ஆகும். சீருடற்பயிற்சி மற்றும் நீரில் குதித்து மூழ்குதல் போன்ற விளையாட்டுப் போட்டிகளின் இறுதி முடிவுகள் போட்டி நடுவர்களால் தீர்மானிக்கப்படும் அகநிலை சார்ந்தவையாக உள்ளன. இவ்வாறே குத்துச்சண்டை போன்ற பல தற்காப்புக் கலை போட்டிகளிலும் அகநிலை நிலை அளவீடுகளே பயன்படுத்தப்படுகின்றன.

மேற்கோள்கள்

புற இணைப்புகள்

Tags:

உடல் திறன் விளையாட்டு பொருளும் பயன்பாடும்உடல் திறன் விளையாட்டு மேற்கோள்கள்உடல் திறன் விளையாட்டு புற இணைப்புகள்உடல் திறன் விளையாட்டு

🔥 Trending searches on Wiki தமிழ்:

தற்குறிப்பேற்ற அணிஎட்டுத்தொகைஜெ. இராபர்ட் ஓப்பன்கைமர்கடையெழு வள்ளல்கள்கபிலர் (சங்ககாலம்)ஆப்பிள்துரை வையாபுரிஎடப்பாடி க. பழனிசாமிகந்த புராணம்நெடுநல்வாடை (திரைப்படம்)கிருட்டிணன்எம். கே. விஷ்ணு பிரசாத்தொகைநிலைத் தொடர்வெள்ளியங்கிரி மலைசெவ்வாய் (கோள்)சரண்யா துராடி சுந்தர்ராஜ்மாடுநிலக்கடலைதட்டம்மைபறையர்இந்திய தேசிய சின்னங்கள்தெருக்கூத்துஇந்திய தேசியக் கொடிஆடு ஜீவிதம்காம சூத்திரம்தனித் தொகுதிகள், தமிழ்நாடு சட்டமன்றம்தமிழ் எழுத்து முறைவாசெக்டமிஅன்மொழித் தொகைசெயற்கை நுண்ணறிவுரயத்துவாரி நிலவரி முறைவன்னியர்பிரபுதேவாஇரட்டைக்கிளவிகம்பர்திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்பனைபலத்தீன் நாடுபெரியபுராணம்வைப்புத்தொகை (தேர்தல்)முக்கூடற் பள்ளுபண்ணாரி மாரியம்மன் கோயில்கல்லணைதென்காசி மக்களவைத் தொகுதிகருக்கலைப்புபங்குனி உத்தரம்எஸ். ஜெகத்ரட்சகன்பரிபாடல்நன்னூல்இலங்கையின் மாவட்டங்கள்தொல்காப்பியம்நீலகிரி மக்களவைத் தொகுதிமலக்குகள்பூனைஆ. ராசாபங்குச்சந்தைஸ்ரீலீலாமரகத நாணயம் (திரைப்படம்)கண்ணகிமருது பாண்டியர்அனுமன்சுற்றுச்சூழல் மாசுபாடுதன்னுடல் தாக்குநோய்சீர் (யாப்பிலக்கணம்)தேவாரம்பிரேமலதா விஜயகாந்த்ஏலாதிமயில்நாய்கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதிஆரணி மக்களவைத் தொகுதிகாசி காண்டம்மதுரைதாராபாரதிநாலாயிர திவ்வியப் பிரபந்தம்முகம்மது நபியின் இறுதிப் பேருரைஎழுவாய்உப்புச் சத்தியாகிரகம்கே. எல். ராகுல்🡆 More