இரண்டாம் நந்திவர்மன்

இரண்டாம் நந்திவர்மன் கி.பி 732 - 769களில் தென்னிந்தியாவை ஆண்ட பல்லவ மன்னன் ஆவார்.

இரண்டாம் நந்திவர்மன்
பல்லவ சிம்ம கொடி
பல்லவ மன்னர்களின் பட்டியல்
முற்காலப் பல்லவர்கள்
பப்பதேவன் சிவகந்தவர்மன்
விசய கந்தவர்மன்
புத்தவர்மன்
விட்ணுகோபன் I
இடைக்காலப் பல்லவர்கள் - தமிழ் நாடு
குமாரவிட்ணு I
கந்தவர்மன் I
வீரவர்மன்
கந்தவர்மன் II II பொ. யு. 400 - 436
சிம்மவர்மன் I II பொ. யு. 436 - 477
கந்தவர்மன் III
நந்திவர்மன் I
இடைக்காலப் பல்லவர்கள் - ஆந்திர பிரதேசம்
விட்ணுகோபன் II
சிம்மவர்மன் II
விட்ணுகோபன் III
பிற்காலப் பல்லவர்கள்
சிம்மவர்மன் III
சிம்மவிட்டுணு பொ. யு. 556 - 590
மகேந்திரவர்மன் I பொ. யு. 590 - 630
நரசிம்மவர்மன் I (மாமல்லன்) பொ. யு. 630 - 668
மகேந்திரவர்மன் II பொ. யு. 668 - 669
பரமேசுவரவர்மன் பொ. யு. 669 - 690
நரசிம்மவர்மன் II (இராசசிம்மன்) பொ. யு. 690 - 725
பரமேசுவரவர்மன் II பொ. யு. 725 - 731
நந்திவர்மன் II (பல்லவமல்லன்) பொ. யு. 731 - 796
தந்திவர்மன் பொ. யு. 775 - 825
நந்திவர்மன் III பொ. யு. 825 - 850
நிருபதுங்கவர்மன் (தென் பகுதி) பொ. யு. 850 - 882
கம்பவர்மன் (வட பகுதி) பொ. யு. 850 - 882
அபராசிதவர்மன் பொ. யு. 882 - 901
தொகு

பதவியேற்றல்

கி.பி 731 பல்லவ மன்னர் பரமேஸ்வரவர்மன் சந்ததியில்லாமல் இறந்துவிட, எதிரிகளின் கைகளின் பல்லவதேசம் சிக்காமல் இருக்க தண்டநாயகர்களும், அறிஞர்களும் கம்புஜதேசம் (தற்போதைய கம்போடியா மற்றும் வியட்நாம்) சென்றனர். அங்கே சென்லா அரசராக ஆட்சி செய்து வந்த சிம்மவிஷ்ணுவின் தம்பியாகிய பீமவர்மன் வழிவந்த கடவேச ஹரி வர்மாவின் நான்கு இளவரசர்களில் பல்லவதேசம் வந்து ஆட்சிசெய்ய சம்மதம் தெரிவித்த பல்லவ மன்னன் நந்திவர்மனை அழைத்து வந்து பதவியேற்கச் செய்தனர்.

பட்டத்திற்கு வரும் பொழுது நந்திவர்மனுக்கு பன்னிரண்டு வயது தான். இதைப் பற்றிக் குறிப்பிடும் பண்டைய இலக்கியங்கள் சிறுவயதில் பட்டத்திற்கு வந்த மன்னன் என்று இரண்டாம் நந்திவர்மனைப் பற்றி தெரிவிக்கின்றன.

ஆட்சியும் போர்களும்

பரமேஸ்வரவர்மன் மற்றும் ராஜசிம்மனால் பலமாக்கப்பட்டிருந்த பல்லவ நாட்டின் அரசனாக முடிசூட்டிக் கொண்டான். அந்தக் காலத்தில் தென்னிந்தியாவை ஆண்டு கொண்டிருந்த மன்னர்கள் பல்லவ வம்சத்தை சந்ததியில்லாமல் ஒழிக்க எண்ணி பல்லவநாட்டின் மீது படையெடுத்தார்கள். அப்பொழுது இரண்டாம் நந்திவர்மனுக்கு வயது 12. இந்தப் போரில் முதல் முறையாக சிம்மவிஷ்ணு வழிவந்த பல்லவர்கள் தோற்கடிக்கப்பட்டாலும், பல்லவர் படைகளின் பலத்தால் ஆட்சிப் பகுதியில் எந்தவிதமான இழப்பும் இல்லாமல் பல்லவநாடு மீண்டது.

இந்தக் காலத்தைப் பற்றிக் குறிப்பிடும் கல்வெட்டுகள், பெரும்பாலும் இரண்டாம் நந்திவர்மனின் ஆட்சி அமைதியாக இருந்ததாகவே தெரிவிக்கின்றன. இம்மன்னரின் ஆட்சிக்காலத்தில் சோழர்களுக்கும் பல்லவர்களுக்கும் எதிரிகளான பாண்டியர்கள் இம்மன்னரிடம் தோல்வியுற்றனர். தற்போதைய நாகர்கோவில் மாவட்டத்தில் உள்ள பகவதி அம்மன் ஆலயம் இம்மன்னனால் கட்டுவிக்கப்பட்டது. இதன் மூலம் தென்னிந்தியாவில் இம்மன்னனின் ஆட்சி பலமாக நிறுவப்பட்டிருந்தது உறுதியாகிறது.

இம்மன்னர் கி.பி 769 ஆண்டு மறைந்தார். திருமங்கை ஆழ்வார் இவரது காலத்தவராக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

மேற்கோள்கள்

Tags:

பல்லவர்

🔥 Trending searches on Wiki தமிழ்:

விடுதலைச் சிறுத்தைகள் கட்சிஇந்திய அரசியலமைப்புஎச்.ஐ.விநாணயம்பஞ்சாயத்து ராஜ் சட்டம்ரோகிணி (நட்சத்திரம்)ஔவையார் (சங்ககாலப் புலவர்)சிற்பி பாலசுப்ரமணியம்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)மயக்கம் என்னகுருதி வகைபத்து தலபக்கவாதம்முத்துலட்சுமி ரெட்டிதமிழர் நிலத்திணைகள்விடுதலை பகுதி 1இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்நாம் தமிழர் கட்சிசைவ சமயம்நிதி ஆயோக்சித்திரைத் திருவிழாஇலட்சத்தீவுகள்குண்டூர் காரம்மக்களாட்சிதிவ்யா துரைசாமிசித்திரா பௌர்ணமிதிருக்குறள் பகுப்புக்கள்பெரியாழ்வார்தமிழ் இலக்கியப் பட்டியல்மாத்திரை (தமிழ் இலக்கணம்)திருத்தணி முருகன் கோயில்திருவாசகம்அவிநாசி அவிநாசியப்பர் கோயில்சங்க காலப் புலவர்கள்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை)யூடியூப்கட்டுவிரியன்பழமுதிர்சோலை முருகன் கோயில்விருமாண்டிஅம்பேத்கர்வீரமாமுனிவர்மணிமேகலை (காப்பியம்)முத்தரையர்சிறுபஞ்சமூலம்உயர் இரத்த அழுத்தம்ஒத்துழையாமை இயக்கம்கா. ந. அண்ணாதுரைஅறிந்தும் அறியாமலும் (திரைப்படம்)போக்கிரி (திரைப்படம்)அளபெடைசிறுநீரகம்ரோசுமேரிமங்கலதேவி கண்ணகி கோவில்போகர்அரங்குகிருட்டிணன்அமில மழைமும்பை இந்தியன்ஸ்கலைஞர் மகளிர் உரிமைத் தொகைபூலித்தேவன்முதுமலை தேசியப் பூங்காவினைச்சொல்விந்துஆதி திராவிடர்அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்சிங்கப்பூர்கங்கைகொண்ட சோழபுரம்பால் (இலக்கணம்)கலிங்கத்துப்பரணிவிஜய் (நடிகர்)கட்டுரைலீலாவதிசெண்டிமீட்டர்ம. கோ. இராமச்சந்திரன்விஜய் வர்மாஉத்தரகோசமங்கைஇயேசு காவியம்நாளந்தா பல்கலைக்கழகம்🡆 More