இரண்டாம் குலோத்துங்க சோழன்: சோழ மன்னர்

இரண்டாம் குலோத்துங்கன், விக்கிரம சோழனின் மகனாவான்.

இவரது அவைக்களப் புலவர்களில் கம்பரும் ஒருவர். இரண்டாம் குலோத்துங்கனைத் தம் உரிமைத் திருமகனாக அவனுடைய தகப்பனார் விக்கிரம சோழன் பொ.ஊ. 1133ம் ஆண்டு மே மாதத்திற்கும் சூன் இடையில் முடிவு செய்திருக்க வேண்டும். இந்தத் தேதி தான் அவனுடைய ஆட்சியின் தொடக்கமாக அவன் கல்வெட்டுகளில் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதன் பிறகு ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளுக்கு விக்கிரம சோழனின் ஆட்சி தொடர்ந்து நடைபெற்றது. அவனுடைய கல்வெட்டுக்களின் மெய்க்கீர்த்திகளில் பலவகை வாசகங்கள் உள்ளன. அவை எல்லாம் ஆட்சியின் மாட்சியைச் சொல் அலங்காரமாகக் கூறுகின்றன. ஆனால் மருந்திற்குக்கூட வரலாற்று முறையில் பயன்படக்கூடிய உண்மையான செய்தி ஒன்று கூட இடம்பெறவில்லை.

இரண்டாம் குலோத்துங்க சோழன்

{{{map}}}
{{{caption}}}
ஆட்சிக்காலம் பொ.ஊ. 1133-1150
பட்டம் கோப்பரகேசரி வர்மன்
தலைநகரம் கங்கைகொண்ட சோழபுரம்
அரசி
பிள்ளைகள் இரண்டாம் இராசராச சோழன்
முன்னவன் விக்கிரம சோழன்
பின்னவன் இரண்டாம் இராசராச சோழன்
தந்தை விக்கிரம சோழன்
பிறப்பு கங்கை கொண்ட சோழபுரம்
இறப்பு சிதம்பரம்

சிறப்புப் பெயர்கள்

அபயன்,அனபாயன்,எதிரிலிப் பெருமாள்.

மனைவிகள்

தியாகவல்லி,முக்கோக்கிழானடி இவர்களில் புவனமுழுதுடையாள் எனும் தியாகவல்லியே பட்டத்து அரசி. ஆதாரம்; திருமழப்பாடி கல்வெட்டு

மகன்

சிதம்பரத்தில் மன்னனின் பணிகள்

ஒரு கல்வெட்டில், 'தில்லை நகருக்கு ஒளியூட்டும் வகையில் தன் முடியினை அணிந்து கொண்ட அரசன்' என்று இம்மன்னன் புகழப்படுகிறான். 'இரண்டாம் குலோத்துங்கன்' தில்லையம்பலத்தில் முடிசூட்டிக் கொண்டான் என்று இது பொருள்படக்கூடும். அல்லது இரண்டாம் குலோத்துங்கனின் ஆட்சியில் தில்லை மாநகரம் புதுக்கியும் விரித்தும் அழகுபடுத்தப்பட்டது என்பதுவும் பொருளாக இருக்கலாம்.

தில்லைத் திருப்பணி

தேவர்கள் இருக்கின்ற வீதிகளே கண்டு நாணுமாறு நாற்பெருந்தெருக்கள் அமைத்தும் பற்பல மண்டபங்கள் கட்டுவித்தும் அந்நகரைச் சிறப்பித்தான் குலோத்துங்கன் என குலோத்துங்கன் உலாவில் கூத்தர் பாடுகின்றார். மேலும் தில்லையில் குலோத்துங்கன் செய்துவித்த பணிகளை பின்வருமாறு கூறுகின்றார்.

சிற்றம்பலத்தை பொன்னாலும் பற்பல மணிகளாலும் அலங்கரித்தான். பேரம்பலத்தையும் உள் கோபுரத்தையும் பொன் மாமேரு போலப் பொன் மயமாக்கினான். எழுநிலைக் கோபுரங்கள் எடுப்பித்தான். உமா தேவியார் தாம் பிறந்த இமய வெற்பை மறக்கும் படி சிவகாமி கோட்டம் அமைத்தான். அவ்வம்மையார் விழா நாளில் உலா வருவதற்குப் பொன்னாலும் மணியாலும் அழகுறுத்தப் பெற்ற தேரொன்று செய்தளித்தான். திருக்கோயிலில் பொன்னாலாகிய கற்பகத் தருக்களை அமைத்தான். நாற்புறமும் கூடங்களோடு திகழும் திருக்குளம் ஒன்று கட்டினான்.

கடல் கொண்ட திருமால்

இவ்வாறு இவன் இத் திருப்பணிகளை எல்லாம் மிக விரிவாக செய்யத் தொடங்கியபோது தில்லை சிற்றம்பலத்திற்கு இடம் போதாதவாறு போனதால் திருமுற்றத்தின்கண் இருந்த திருமால் மூர்த்தத்தைப் பெயர்தெடுத்து அலைகடலில் கிடத்தும்படி செய்து அதனால் இடத்தைப் பெருக்கி கொண்டு, திருப்பணிகளை நிறைவேற்றினான் என்று ஆசிரியர் ஒட்டக்கூத்தர் தம் நூல்களில் குறிப்பிட்டுள்ளார்.

எட்டாம் நூற்றாண்டில் நந்திவர்மப் பல்லவனால் தில்லையம்பல மூன்றில் நிறுவப்பெற்று அந்நாள் முதல்நிலை பெற்றிருந்த திருமால் பெரிதும் புண்படுத்தி விட்டது. மூர்த்ததைப் கடலில் எறிந்த இவன் செயல் வைணவர் உள்ளத்தைப் பெரிதும் புண்படுத்தி பகைவர் ஆயினர் எனலாம். ஆனால் உண்மையில் திருமால் சமையத்தில் வெறுப்பு உடையவனாக இருந்திருப்பின் அவன் தன் ஆட்சிக்குட்பட்ட அனைத்து திருமால் கோயில்களுக்கும் இடையுறு செய்திருக்க வேண்டும் ஆனால் அவ்வாறு இல்லாமல் தில்லையில் மட்டுமே அவன் இவ்வாறாக செய்திருக்கின்றான். தில்லைநாதன் மேல் கொண்ட பற்றினால் அக்கோவிலைப் பெரிதாக அமைக்க முற்பட்டதிற்கு கோவிந்தராசனை வழிப்பட்டு வந்த அந்தணர்கள் இடையூறு விளைவித்தனர். இதனால் சினம் கொண்ட சோழன் பள்ளி கொண்டிருந்த திருமாலை அவனது இருப்பிடமான பழைய கடலுக்கே அனுப்பி விட்டான் என தக்கையாப் பரணியில் கூத்தர் கூறுகின்றார்.

இராமானுசர்

குலோத்துங்கனின் சரித்திரத்தினை பற்றி அறிந்து கொள்ளும் பொது அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய உண்மை இராமானுசர் மற்றும் குலோத்துங்கனின் இடையே ஏற்பட்ட பிரச்சனையே. இது ஒரு தனிப் பிரச்சனையாக இல்லமால் ஒரு சமூகப் பிரச்சனையாகவே மாறியது.

சைவத்தின் மீது தீராப் பற்றுக் கொண்ட குலோத்துங்கனுக்கும் வைணவத்தினைப் பரப்ப பிறந்த ராமனுசருக்கும் ஏற்பட்ட சாடல்கள் வரலாற்று உண்மை வாய்ந்ததே. ராமானுசர் வைணவத்தின் மீது தீவிரப் பற்றுக் கொண்டிருந்ததால் தில்லையில் விசுணுப் பெருமாள் அகற்றப் படுவதை ஏற்றுக்கொள்ள இயலவில்லை. சிவனின் மீது பற்றுக் கொண்ட குலோத்துங்கனுக்கு தில்லையில் சிவத்தலமாக உள்ள இடத்தில் விசுணு சிலை இருப்பது சிவத்தலம் முழுமை அடைந்ததாக தெரியவில்லை. அங்கே சிவன் மட்டும்மே இருக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது. ஆதலால் பக்தி மேலோங்க விசுணு சிலை தனை அகற்ற முடிவு செய்தனன். இவனது செயலை எதிர்த்தார் ராமானுசர்.

விசுணு சிலைதனை அகற்றுவது கோவிலின் லட்சுமி கடாட்சம் அகன்று விடும் என்றும் விசுணுவே உயர்ந்த கடவுள் அவனது சிலைதனை அகற்றக் கூடாது என்று வேண்டிக் கொண்டார். குலோதுங்கனுக்கோ அங்கே சிவன் மட்டும் தான் இருக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது. விசுணுவின் புகழ் பாடிய ராமனுசத்திற்கு துணையாக கூரத்தாழ்வார் மற்றும் ஆண்டான் இருந்தனர். தில்லையில் நிகழும் நிகழ்வுகளினால் புண்பட்ட குருநாதர் மனதினை குளிர்விக்க குலோத்துங்கனின் அவைக்கு சென்றனர். அங்கே விசுணுவின் பெருமைகளை எடுத்து உரைத்து சிவனை விட பெரியவன் விசுணு தான் என்று வாதமிட்டனர். இதனை ஏற்றுக் கொள்ள இயலாத குலோத்துங்கன் ஆழ்வானையும் ஆண்டானையும் அவையை விட்டு உடனே விலகுமாறுக் உத்தரவிட்டான் ஆனால் அதையும் கேளாமல் விசுணுவைப் பற்றி பாடிய ஆழ்வான் மற்றும் ஆண்டின் கண்களை சிதைக்குமாறு உத்தரவிட்டான். சிவனே உயர்ந்தவன் என்பதை ஒத்துக்கொள்ளாத ராமனுசத்திற்கு சோழ தேசத்தில் இருக்க இடம் கிடையாது என்று உத்தரவிட்டான் சோழன். இத்தனை உணர்ந்த ராமானுசர் தனது அடிகளார்கள் உடன் ஹோய்சால தேசம் சென்றான். ராமானுசர் திருவரங்கத்தினை விட்டு அகன்றார், சோழனும் தில்லையில் இருந்த விசுணு சிலைதனை, தில்லை கோவிலில் இருந்து அகற்றினார். இதனால்இவனை கிருமி கண்ட சோழன் என பிற்கால திவ்ய சூரிசரிதம் மற்றும் கோயிலொழுகு முதலியவை குறிப்பிடுகின்றன.

அமைதியான ஆட்சி

குலோத்துங்கனின் ஆட்சி அமைதியாகவும் நல்ல நிர்வாகத்துடனும் வளமாகவும் இருந்ததாகத் தெரிகிறது. எந்தவிதமான போரும் நடந்ததற்கு ஆதாரம் இல்லை. சிதம்பரம் நடராசர் கோவிலில் உள்ள கோவிந்தராசர் சிலையை கோவில் புதுப்பிப்பு பணிகளுக்காக இடம் மாற்றும் போது வைணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தாகவும், பின் குலோத்துங்கன் வற்புறுத்தி மராமரத்துப் பணி பார்த்ததாக தெரிகிறது. பின் வந்த வைணவர்கள், இதை குலோத்துங்கன் கோவிந்தராசர் சிலையை கோவிலில் இருந்து அகற்றியதாக திரித்துள்ளது ஒட்டக்கூத்தர் எழுதிய குலோத்துங்க சோழ உலா மூலம் அறியலாம். பேரரசின் நிலப்பரப்பு, விக்கிரம சோழனின் ஆட்சியின் இறுதியில் இருந்தவாரே நிலைநாட்டப்பட்டது.இவன் மக்களுக்கு உவப்பான பல பணிகளைச் செய்ததாக அறிய வருகிறது. கலைத் துறைகளின் வளர்ச்சிக்கும் பொருளுதவிகள் புரிந்துள்ளது பற்றிச் சாசனங்களில் குறிப்புகள் காணப்படுகின்றன.

மேற்கோள்கள்

Tags:

இரண்டாம் குலோத்துங்க சோழன் சிறப்புப் பெயர்கள்இரண்டாம் குலோத்துங்க சோழன் சிதம்பரத்தில் மன்னனின் பணிகள்இரண்டாம் குலோத்துங்க சோழன் அமைதியான ஆட்சிஇரண்டாம் குலோத்துங்க சோழன் மேற்கோள்கள்இரண்டாம் குலோத்துங்க சோழன்கம்பர்பொது ஊழிவிக்கிரம சோழன்

🔥 Trending searches on Wiki தமிழ்:

சரண்யா துராடி சுந்தர்ராஜ்வல்லினம் மிகும் இடங்கள்போக்கிரி (திரைப்படம்)முக்குலத்தோர்புரோஜெஸ்டிரோன்மனித வள மேலாண்மைநாடார்ஆறுமுக நாவலர்உரிச்சொல்இளங்கோவடிகள்டுவிட்டர்வினையெச்சம்ரமலான்தமிழ்ஒளிதிருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்குற்றாலக் குறவஞ்சிசவூதி அரேபியாமருத்துவம்காப்பியம்பங்குனி உத்தரம்தேவாங்குஸ்ரீலீலாமீனா (நடிகை)சுருதி ஹாசன்அஜின்கியா ரகானேகுருதி வகைகள்ளர் (இனக் குழுமம்)ஐந்தாம் பத்து (பதிற்றுப்பத்து)கொங்கு வேளாளர்விவேகானந்தர்ஜன கண மனவட்டாட்சியர்இந்திய நிதி ஆணையம்நெசவுத் தொழில்நுட்பம்சிற்பி பாலசுப்ரமணியம்உத்தம புத்திரன் (2010 திரைப்படம்)பஞ்சபூதத் தலங்கள்பரிதிமாற் கலைஞர்கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதிபரதநாட்டியம்நற்கருணை ஆராதனைஅருந்ததியர்கருக்காலம்ஈகையானைஜவகர்லால் நேருதேசிக விநாயகம் பிள்ளைபுதுக்கோட்டைதமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2024மருது பாண்டியர்நாளிதழ்சன் மைக்ரோசிஸ்டம்ஸ்கொல்லி மலைஆ. ப. ஜெ. அப்துல் கலாம்கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிதிருவண்ணாமலை108 வைணவத் திருத்தலங்கள்நருடோரஷீத் கான்சுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)ஆரணி மக்களவைத் தொகுதிஇந்திய தேசிய சின்னங்கள்வாசெக்டமிதங்கர் பச்சான்அங்குலம்சூரைமுனிவர்களின் பட்டியல்அஇஅதிமுக தலைமையிலான கூட்டணிபழமுதிர்சோலை முருகன் கோயில்சைவ சமயம்உயிர்மெய் எழுத்துகள்அகநானூறுதுரை வையாபுரிஅ. கணேசமூர்த்திஜெயம் ரவிநாகப்பட்டினம் மக்களவைத் தொகுதிசெம்மொழி🡆 More