இசுலாத்தின் புனித நூல்கள்

இசுலாமிய புனித நூல்கள் என்பவை, முசுலிம்களின் நம்பிக்கையின் படி, இறைவனால் பல்வேறு காலகட்டங்களில் இறைத்தூதர்களுக்கு வஹியின் மூலம் இறக்கப்பட்ட இறைவனின் சொற்களாகும்.

இவ்வேதங்களில், மனித வாழ்க்கைக்குத் தேவையான சட்டங்கள் மற்றும் வாழ்க்கை முறைகள் கூறப்பட்டுள்ளன. குர்ஆன், அல்லாஹ்வால் அருளப்பட்ட இறுதி வேதமாகவும், முன்னர் அனுப்பப்பட்ட வேதங்களை உறுதிப்படுத்துவதாகவும் உள்ளது. குர்ஆன் அல்லாஹ்வால் அருளப்பட்ட இறுதி வேதமாக இருப்பினும், முன்னர் அனுப்பப்பட்ட வேதங்களை நம்புவதும் ஈமானில் ஒரு பகுதியாகும். குர்ஆனுக்கு முன் பல வேதங்கள் அருளப்பட்டு இருப்பினும், முக்கியமானவை மூன்றாகும்.தவ்ராத் (மூசா நபிக்கு அருளப்பட்டது), சபூர் (தாவூது நபிக்கு அருளப்பட்டது), இன்சீல் (விவிலியம்) (ஈசா நபிக்கு அருளப்பட்டது), மற்றும் இறுதியாக திருக்குரான்.

முந்தைய வேதங்கள்

குர்ஆனில், அதற்கு முன்பு அருளப்பட்ட மூன்று வேதங்களின் பெயர்கள் குறிப்பிடப்படுகின்றது.

  • தவ்ராத் (தோரா) (at-Taurāt): தவ்ராத் வேதம் மூசா நபிக்கு அருளப்பட்டதாக குர்ஆன் குறிப்பிடுகின்றது. மூசா மற்றும் அவரது சகோதரர் ஹாருன் (ஆரோன்) இருவரும் தவ்ராத் வேதத்தை பனூ இசுராயில் (இசுராயிலின் குழந்தைகள்) மக்களுக்கு போதித்து வந்தனர். யூதர்கள் தமது இறைத்தூதர்களின் அறிவுரைகளைப் பின்பற்றாமல் தம் மனம் போன போக்கில் தவ்ராத்தை திரித்ததாக குர்ஆன் குறிப்பிடுகிறது.
  • சபூர் (az-Zabur): குர்ஆன், சபூர் வேதம் தாவூது நபிக்கு அருளப்பட்டதாக குறிக்கின்றது. இது விவிலியத்தின் பழைய ஏற்பாட்டில் திருப்பாடல்கள் (நூல்) ஆக திரித்த வடிவில் உள்ளது என இசுலாமிய அறிஞர்கள் கூறுகின்றனர்.
  • இன்சீல் (al-Injeel): இன்சீல் வேதம் ஈசா நபிக்கு அருளப்பட்டதாக குர்ஆன் குறிப்பிடுகின்றது. இன்சீல் என்பது விவிலியத்தின் புதிய ஏற்பாடு முழுவதையும் குறிப்பதாக கருதுகின்றனர். ஆனால், இன்சீல் என்பது அல்லாஹ்வால் ஈசா நபிக்கு (இயேசு) அருளப்பட்ட நற்செய்தியை மட்டுமே குறிப்பிடுகின்றது. அது மட்டுமன்றி இசுலாமிய நம்பிக்கைகளின் படி, இன்சீல் வேதமானது குர்ஆனைப் போன்று உலக மக்கள் அனைவருக்கும் அருளப்படாமல் இசுராயிலின் மக்களுக்கு மட்டுமே அருளப்பட்டதாகும். தற்போதைய விவிலியத் திருமுறை நூல்கள், இயேசு மற்றும் சீடர்களின் வாழ்க்கை நிகழ்வுகளை மட்டுமே கூறுகின்றது. அது அல்லாஹ்வால் ஈசா நபிக்கு அருளப்பட்ட ஒற்றை நூலான இன்சீலில் இருந்து முற்றிலும் வேறானது என இசுலாமிய அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.

உசாத்துணைகள்

Tags:

இசுலாத்தில் கடவுள்இசுலாமில் இயேசுகுர்ஆன்சபூர்தவ்ராத்தாவூத் நபிநபிநம்பிக்கை அறிக்கைமுசுலிம்மூசாவிவிலியம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்பாரிபுவிநாடகம்மகாபாரதம்புவி சூடாதல்பகவத் கீதைதமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2019தகவல் தொழில்நுட்பம்சுபாஷ் சந்திர போஸ்ஹர்திக் பாண்டியாஅழகர் ஆற்றில் இறங்குதல் (விழா)ஒத்துழையாமை இயக்கம்மாதம்பட்டி ரங்கராஜ்எஸ். ஜானகிநீரிழிவு நோய் (இரண்டாவது வகை)நாற்கவிபாரத ஸ்டேட் வங்கிசிவபெருமானின் பெயர் பட்டியல்பி. காளியம்மாள்நிலச்சரிவுஇதயம்அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்மொழிகல்வி உரிமைஇந்திய நாடாளுமன்றம்காதல் (திரைப்படம்)கள்ளுநாலடியார்நிதி ஆயோக்சரண்யா துராடி சுந்தர்ராஜ்சூரியக் குடும்பம்காமராசர்இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்மனித உரிமைசோழர்திருமந்திரம்புதுப்பிக்கத்தக்க வளம்பெண்திருமூலர்ஆடுஜீவிதம் (திரைப்படம்)வே. செந்தில்பாலாஜிதிருப்பாவைகிராம ஊராட்சிஇந்தியத் தேர்தல்கள் 2024நீலகேசிதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்நேர்காணல்ராசாத்தி அம்மாள்ஐராவதேசுவரர் கோயில்பிரேமலுயாழ்சுற்றுச்சூழல்விலங்குகளின் பெயர்ப் பட்டியல்எலான் மசுக்யோனிஒற்றைத் தலைவலிஅரண்மனை (திரைப்படம்)ஊராட்சி ஒன்றியம்பௌர்ணமி பூஜைநடுகல்ஆளுமைபரிவுமத கஜ ராஜாமதுரைக் காஞ்சிபாலினப் பயில்வுகள்தமிழர் நெசவுக்கலைபஞ்சாயத்து ராஜ் சட்டம்சதயம் (பஞ்சாங்கம்)மக்களவை (இந்தியா)ஜிமெயில்சங்கம் (முச்சங்கம்)விஜயநகரப் பேரரசுதீரன் சின்னமலைதமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024புளிப்புஇணையம்பல்கலைக்கழக மானியக் குழு (இந்தியா)யுகம்🡆 More