இசுடான்லி குப்ரிக்கு

இசுடான்லி குப்ரிக்கு (Stanley Kubrick) சூலை 26, 1928 முதல் மார்ச் 7, 1999 வரையிலான காலகட்டத்தில் வாழ்ந்த ஒர் அமெரிக்கத் திரைப்பட இயக்குனர், திரைக்கதை ஆசிரியர், தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர் என்ற பன்முகத்தன்மைக்கு சொந்தக்காரர் ஆவார்.

சினிமா வரலாற்றில் மிகப்பெரிய மற்றும் மிகவும் செல்வாக்குமிக்க இயக்குநர்களில் ஒருவராக இவர் அடிக்கடி குறிப்பிடப்படுகிறார். இவருடைய திரைப்படங்கள் பெரும்பாலும் நாவல்கள் அல்லது சிறுகதைகளைத் தழுவி எடுக்கப்பட்டவையாக இருக்கும். பரவலான பல்வேறு வகையிலான திரைப்பட வகைகளை உள்ளடக்கியவையாகவும் காணப்படும். உண்மைத்தன்மை, இருண்ட நகைச்சுவை, தனித்துவமான ஒளிப்பதிவு, விரிவான படத்தொகுப்பு வடிவமைப்பு மற்றும் சிறப்பான இசைத்தொகுப்பு ஆகியவற்றில் குறிப்பிடத்தக்கமை மிகுந்திருக்கும்.

இசுடான்லி குப்ரிக்கு
பிறப்பு சூலை 26, 1928
நியூ யார்க் நகரம், நியூ யார்க், ஐக்கிய அமெரிக்கா
இறப்பு மார்ச்சு 7, 1999(1999-03-07) (அகவை 70)
ஆர்ப்பெண்டென், ஏர்ட்போர்ட்சையர், இங்கிலாந்து
தொழில் திரைப்படம் இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், திரைப்படப்பிடிப்பாளர் மற்றும் தொகுப்பாளர்
நடிப்புக் காலம் 1951 — 1999
துணைவர் டோபா மெட்சு (1948–1951) (மணமுறிவு)
ருத் சோபோட்கா (1954–1957) (மணமுறிவு)
கிறித்தியன் ஆர்லன் (1958-1999) (அவரது இறப்பு)
பிள்ளைகள் அன்யா குப்பிரிக்கு (b.1959)
விவியன் குப்பிரிக்கு (b.1960)

நியூயார்க் நகரின் மன்காட்டன் பரோவிற்கு வடக்கிலுள்ள பிராங்சு பரோவில் பிறந்தார் 1928 ஆம் ஆண்டு சூலை 26 ஆம் நாள் பிறந்தார். வில்லியம் ஓவார்டு தாப்ட் உயர்நிலைப் பள்ளியில் 1941 முதல் 1945 வரை கல்வி கற்றார். பள்ளிக்கூடத்தில் சராசரி மதிப்பெண்களைப் பெறுபவராக இருந்தாலும் குப்ரிக் இளம் வயதிலேயே இலக்கியம், புகைப்படம் எடுத்தல் மற்றும் திரைப்படங்களில் மிகுந்த அக்கறையைக் காட்டினார், மேலும் உயர்நிலைப் பள்ளியிலிருந்து பட்டம் பெற்ற பிறகு திரைப்படத் தயாரிப்பு மற்றும் இயக்குனரின் அனைத்து அம்சங்களையும் தானே கற்றுக் கொண்டார். 1940 களின் பிற்பகுதியிலும் 1950 களின் முற்பகுதியிலும் லுக் பத்திரிகையில் ஒரு புகைப்படக் கலைஞராக பணியாற்றிய பின்னர், அவர் குறுகிய வரவுசெலவுத் திட்டத்தில் குறும்படங்களை எடுக்கத் தொடங்கினார்.1956 இல் தி கில்லிங் என்ற முதல் ஆலிவுட் திரைப்படத்தை ஒருங்கிணைந்த கலைஞர்கள் நிறுவனத்திற்காகத் தயாரித்தார். இதைத் தொடர்ந்து நடிகரும் இயக்குனருமான கிர்க் டக்ளசுடன் இணைந்து பாத்சு ஆப் குளோரி என்ற போர் தொடர்பான ஒரு திரைப்படத்தை1957 ஆம் ஆண்டிலும், வரலாற்று காவியமான சிபார்டகசு என்ற திரப்படத்தை 1960 ஆம் ஆண்டிலும் எடுத்தார். ஒரு திரைப்படத் தயாரிப்பாளராக இவரது நற்பெயர் ஆலிவுட்டில் அதிகரித்தது, மேலும் இவர் மார்லன் பிராண்டோவை ஒன்-ஐடு யாக்சு என்ற திரைப்படத்திற்காக அணுகினார். (1961) என்ற படத்தை அணுகினார், பிராண்டோ இப்படத்தை தானே இயக்குவதற்கு முடிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

டக்ளசு மற்றும் திரைப்பட படப்பிடிப்பகங்களுடன் குப்ரிக்கின் ஆக்கப்பூர்வமான படைப்பு உருவாக்கங்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. ஆலிவுட்டின் மீதும் வெறுப்பு தோன்றியது. அமெரிக்காவில் குற்றங்களின் எண்ணிக்கை பெருகிய வண்ணம் இருந்தது. இத்தகைய எண்ணங்களால் குப்ரிக் 1961 ஆம் ஆண்டில் ஐக்கிய இராச்சியத்திற்கு இடம்பெயர்ந்தார். எஞ்சிய காலத்தின் பெரும்பாலான வாழ்நாளையும், வாழ்க்கையையும் இங்கேயே கழித்தார். எர்ட்ஃபோர்டுசையர் நகரிலுள்ள சைல்டுவிக்பரி மேனரில் இவரது வீடு அமைந்திருந்தது. மனைவி கிறிசுடியேன் உடன் இவ்வீட்டை குப்ரிக் பகிர்ந்துகொண்டார். எழுதுதல், ஆராய்ச்சி, படத்தொகுப்பு, திரைப்பட உற்பத்தி விவரங்களை மேலாண்மை செய்தல் போன்ற தன்னுடைய பணி சார்ந்த தேவைகளுக்கும் இவ்வீட்டையே பயன்படுத்திக் கொண்டார். இது அவருடைய திரைப்படங்களின் கட்டுப்பாடு கிட்டத்தட்ட முழுமையாக அவரையே சார்ந்திருக்க அனுமதித்தது, ஆலிவுட் படப்பிடிப்புத் தளங்களில் படம் பிடிக்க கிடைத்த நிதி ஆதாரம் இங்கு கிடைக்கவில்லை என்பது மட்டுமே இங்கு குறையாக இருந்தது. பீட்டர் செல்லர்சு, லொலிடா (1962) மற்றும் டாக்டர் சிட்ரேஞ்லவ் (1964) ஆகிய இரண்டு திரைப்படங்களும் பிரிட்டனில் இவர் தயாரித்த முதல் இரண்டு திரைப்படங்களாகும்.

திரையுலகில் எதையும் செம்மையாக செய்து முடிக்கின்ற குப்ரிக் திரைப்படத் தயாரிப்பின் பெரும்பாலான அம்சங்களைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார், திரைப்படம் இயக்குவதில் தொடங்கி திரைக்கதை எழுதுதல், படம் தொகுத்தல், படங்களை ஆய்வு செய்தல், காட்சிகள் அமைத்தல் என அனைத்துப் பிரிவுகளிலும் இவர் பங்கேற்றார். நடிகர்களுடனும் மற்ற ஒத்துழைப்பாளர்களுடனும் நெருங்கிய நட்புடன் பணிபுரிந்தார். திரைப்படத்தில் வரும் ஒரே காட்சியை பல முறை மீண்டும் மீண்டும் படமாக்கும்படி குப்ரிக் அடிக்கடி கேட்பார். இதனால் பல முரண்பாடுகள் ஏற்பட்டன. நடிகர்களின் நடிப்பு குறித்து இழிவான கருத்துக்கள் இருந்தபோதிலும், குப்ரிக்கின் திரைப் படங்களில் ஒளிப்பதிவு பல புதிய பரிமாணங்களை உண்டாக்கியது. அறிவியல்பூர்வமான யதார்த்தமும் புதுமையான சிறப்பு ஒலி, ஒளி விளைவுகளும் சினிமா உலகில் தோன்றின. 1968 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட திரைப்படமான எ சிபேசு ஒடிசி என்ற திரைப்படம் சினிமா வரலாற்றில் எந்தவொரு முன்னுதாரணமும் இல்லாமல் எடுக்கப்பட்ட ஒரு திரைப்படமாகும். சிறந்த காட்சியொளி விளைவுகளுக்காக விருதும் இப்படத்திற்குக் கிடைத்தது. அந்த தலைமுறையில் எடுக்கப்பட்ட மிகச்சிறந்த திரைப்படம் என சிடீவன் சிபீல்பெர்க் பரிந்துரைக்கிறார். 18 ஆம் நூற்றாண்டு கால திரைப்படமான பேரி லிண்டன் என்ற 1975 ஆம் ஆண்டு திரைப்படத்திற்காக நாசாவிற்காக செசிசால் தயாரிக்கப்பட்ட வில்லைகள் குப்ரிக்கிற்கும் கிடைத்தது. இயற்கையான மெழுகுவர்த்தி ஒளியின்யின் கீழ் காட்சிகளை படமாக்க இவ்வில்லைகள் பயனாகும் என்பது தனிச்சிறப்பாகும். சிடெடிகேம் எனப்படும் நிலைமாறா படப்பிடிப்புக் கருவியை பயன்படுத்திய முதல் இயக்குநர் என்ற பெருமையை குப்ரிக் பெற்றார். 1980 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட தி ஃசைனிங்கு என்ற திரைப்படத்தில் இக்கருவியை குப்ரிக் பயன்படுத்தினார். குப்ரிக் திரைபடங்களில் பல சர்ச்சைக்குரியவைகளாக இருந்தன, ஆரம்பத்தில் வெளியான போது கலவையான விமர்சனங்கள் பெற்றன-குறிப்பாக எ கிளாக்வொர்க் ஆரஞ்சு (1971), என்ற திரைப்படத்தைக் கூறலாம். பெரும்பாலான குப்ரிக்கின் திரைப்படங்கள் ஆசுகார், கோல்டன் குளோப்சு அல்லது பாஃப்டா விருதுகளுக்காகப் பரிந்துரைக்கப்பட்டன, மற்றும் விமர்சன மறுமதிப்பீட்டிற்கும் உட்பட்டன. 1999 இல் எடுக்கப்பட்ட ஐசு வைடு சட் என்ற திரைப்படம் குறுகிய காலத்தில் எடுக்கப்பட்ட இவருடைய கடைசி திரைப்படமாகும். அப்போது குப்ரிக்கிற்கு வயது 70 ஆகும்.

இளமைப்பருவம்

நியூயார்க் நகரத்திற்கருகிலுள்ள மன்காட்டனில் இருக்கும் 307 இரண்டாவது அவென்யூ, லையிங்-இன் மருத்துவமனையில் ஒரு யூத குடும்பத்தில் குப்ரிக் பிறந்தார் .இவரது தந்தையான யாக்கசு லியொனார்டு குப்பிரிக்குக்கும் (மே 21, 1902 – அக்டோபர் 19, 1985), தாய், சதி கெர்ட்ரூட் குப்ரிக் (அக்டோபர் 28, 1903 – ஏப்ரல்l 23, 1985) என்பவருக்கும் பிறந்த இரண்டு பிள்ளைகளில் இசுடான்லி குப்பிரிக்கு மூத்தவர் ஆவார். இவரது தங்கை பார்பரா 1934 ஆம் ஆண்டில் பிறந்தார் . யாக் குப்ரிக்கினுடைய பெற்றோரும் தாத்தா, பாட்டியும் போலந்து , ஆசுத்திரிய, ரோமானிய யூதமரபில் வந்தவர்களாவர் . குப்ரிக்கின் தந்தை ஒரு மருத்துவர் ஆவார் . 1927 ஆம் ஆண்டில் நியூயார்க் ஓமியோபதி மருத்துவக் கல்லூரியில் அவர் பட்டம் பெற்றார், அதே வருடத்தில் ஆசுத்திரிய யூத குடியேற்றவாதிகளின் குழந்தையான குப்ரிக்கின் தாயை திருமணம் செய்து கொண்டார் . குப்ரிக்கின் தாத்தாவுக்கு தாத்தா லிவர்பூல் வழியாக கப்பலில் எல்லிசு தீவுக்கு டிசம்பர் 27, 1899 அன்று வந்தவர் என்று கூறப்படுகிறது. 47 வயதில், தனது மனைவி மற்றும் இரண்டு வளர்ந்த குழந்தைகளை அங்கேயே விட்டுவிட்டு அவர் எல்லீசு தீவுக்கு வந்திருக்கிறார். அவர்களில் ஒருவர்தான் இசுடான்லி குப்ரிக்கின் தாத்தாவான எலியாசு என்பவர். ஓர் இளைய பெண்ணுடன் புதிய வாழ்க்கையைத் இவர் தொடங்கி வாழ்ந்தார் . 1902 இல் இசுடான்லி குப்ரிக் பிறந்தவுடன் பிராங்சிலுள்ள 2160 2160 கிளிண்டன் குடியிருப்புப் ப் பகுதியில் இவர்கள் வாழ்ந்தனர் . ஒரு யூத முறைப்படி குப்ரிக்கின் பெற்றோர் திருமணம் செய்துகொண்ட போதிலும், குப்ரிக்கு மதம் சார்ந்த வளர்ப்பு முறையைக் கொண்டிருக்கவில்லை, பிற்காலத்தில் பிரபஞ்சத்தில் ஒரு நாத்திகவாத பார்வையைப் கொண்டவராக இருந்தார் . மேற்கு பிராங்சு பகுதியின் சமூக மதிப்புகளைக் கொண்டு பார்த்தால் குப்ரிக்கின் குடும்பம் ஒரு பணக்காரக் குடும்பமாக இருந்துள்ளது. ஒரு மருத்துவராக குப்பிக்கின் தந்தை நல்ல வருவாயை ஈட்டியிருந்துள்ளார் .

அவருடைய சகோதரியின் பிறப்புக்குப் பின்னர், குப்ரிக் பிராங்க்சு பொது பள்ளி 3-ம் வகுப்பில் சேர்க்கப்பட்டு சூன் 1938 இல் பொது பள்ளி 90-க்கு சென்றார். அவரது நுண்ணறிவுத்திறன் சராசரியை விட அதிகமாக இருப்பதாகக் கண்டறியப்பட்டாலும், பள்ளிக்கூடத்திற்கான அவரது வருகைப் பதிவு மோசமாக இருந்தது. முதல் பருவத்தில் அவர் 56 நாட்கள் பள்ளிக்குச் செல்லாமல் இருந்திருக்கிறார். இளம் வயதிலிருந்தே இலக்கியத்தில் ஆர்வம் காட்டினார், கிரேம் மற்றும் ரோமன் தொன்மங்களைப் படித்தார், கிரிம் சகோதரர்களின் கதைகளைப் படித்ததால் இவர் பிற்காலத்தில் ஐரோப்பாவுடன் இணைந்தார். ஏராளமான சனிக்கிழமைகளை நியூயார் யாங்கீசு என்ற அணியின் மென்பந்தாட்டத்தைப் பார்ப்பதில் கழித்தார். பின்னர் லுக் பத்திரிகையில், தனது குழந்தைப்பருவ உற்சாகத்தை நிருபிப்பதற்காக போட்டியிடும் இரண்டு சிறுவர்களை விளையாட்டாகப் பார்த்தார். 12 ஆவது வயதில் இசுடான்லிக்கு அவரது தந்தை சதுரங்கம் விளையாட்டுக் கற்றுக் கொடுத்தார். வாழ்நாள் முழுவதும் இசுடான்லி சதுரங்கத்தில் ஈடுபாடுள்ளவராக இருந்தார் . குப்ரிக் பிற்காலத்தில் எடுத்த திரைப்படங்கள் பலவற்றில் சதுரங்கம் தொடர்பான காட்சிகள் நிறைய இடம்பெறுவதுண்டு . பிற்காலத்தில் குப்ரிக் அமெரிக்க சதுரங்கக் கழகத்தின் உறுப்பினரானார். சதுரங்கம் தனக்கு முடிவுகள் எடுப்பத்தில் அமைதியையும் ஒழுக்கத்தையும் கற்றுத்தந்தது என்று அவரே பின்னாளில் கூறியுள்ளார் . 13 ஆவது வயதில் இவரது தந்தையார் வாங்கிக் கொடுத்த ஒளிப்படக்கருவி அவருக்கு படம்பிடித்தலில் ஆர்வத்தை உண்டாக்கியது. இளம் வயதில் இசுடான்லி யாசு இசையில் ஆர்வம் கொண்டிருந்ததோடு, தோல் கருவியை இசைப்பதிலும் சிலகாலம் ஈடுபட்டிருந்தார்.

1941 முதல் 1945 வரை வில்லியம் ஓவர்டு தஃப்ட் உயர்நிலைப் பள்ளியில் குப்ரிக் கல்வி பயின்றார். க்யுப்ரிக் கலந்துகொண்டார். அவருடைய வகுப்பு தோழர்களில் ஒருவரான எடித் கர்மெசானோ பின்னாளில் பாடகர் ஈய்டே கோர்மே என்ற பெயரால் அறியப்பட்டார் . பள்ளிக்கூடத்தின் புகைப்படக் கலைஞர்கள் கழகத்தில் உறுப்பினராக இருந்ததால், பத்திரிகைகளுக்காக பள்ளி நிகழ்வுகளை புகைப்படம் எடுக்க அனுமதிக்கப்பட்டார். ஒரு சராசரி மாணவராக இருந்த காரணத்தால் 67 மதிப்பெண்கள் பெறும் சராசரியைக் கொண்டிருந்தார் . அகமுகனாகவும் வெட்கத்துடனும் இருந்த காரணத்தால் குப்ரிக்கின் வருகைச் சராசரி குறைவாகவே இருக்கும். பெரும்பாலும் வகுப்புகளை புறக்கணித்துவிட்டு திரைபடங்களைப் பார்க்கச் சென்றுவிடுவது இவரது வழக்கமாக இருந்தது . அவர் 1945 ஆம் ஆண்டில் பட்டம் பெற்றார், ஆனால் அவருடைய குறைந்த மதிப்பெண்கள் காரணமாகவும், இரண்டாம் உலகப் போரிலிருந்து திரும்பிய வீரர்களிடமிருந்து கல்லூரியில் சேரும் சேறும் அனுமதி கோரிக்கைகள் இணைந்ததாலும் குப்ரிக்கின் உயர் கல்விக்கான நம்பிக்கையை தகர்ந்தன. குப்ரிக் தனது வாழ்க்கையின் பிற்பகுதியில் கல்வி மற்றும் சமகால அமெரிக்க கல்வி முறை பற்றி வெறுப்படைந்து பேசினார், விமர்சன சிந்தனை மற்றும் மாணவர் நலன்களை ஊக்குவிப்பதில் பள்ளிகள் பயனற்றதாக இருந்தன என்று அமெரிக்கக் கல்விமுறையை விமர்சித்தார் பள்ளியில் சிறந்த மாணவனாக வெளிவராத குப்ரிக்கின் நிலையை அவரது தந்தை ஒரு தோல்வியாக நினைத்து ஏமாற்றமடைந்தார், இசுடான்லி முழுமையாகத் திறமை வாய்ந்தவராக இருந்தும் வெற்றிபெறவில்லை என்பதை உணர்ந்தார். வீட்டிலுள்ள முன்னோர் நூலகத்திலுள்ள புத்தகங்களைப் படிக்கவும், அதே நேரத்தில் ஒரு தீவிர பொழுதுபோக்காக குப்ரின் புகைப்படங்கள் எடுக்கவும் அனுமதித்தார் .

மேற்கோள்கள்

புற இணைப்புகள்

இசுடான்லி குப்ரிக்கு பற்றிய மேலதிக தகவல்களைப் பார்க்க தொடர்புடையத் திட்டங்கள்:

இசுடான்லி குப்ரிக்கு  விக்சனரி விக்சனரி
இசுடான்லி குப்ரிக்கு  நூல்கள் விக்கிநூல்
இசுடான்லி குப்ரிக்கு  மேற்கோள் விக்கிமேற்கோள்
இசுடான்லி குப்ரிக்கு  மூலங்கள் விக்கிமூலம்
இசுடான்லி குப்ரிக்கு  விக்கிபொது
இசுடான்லி குப்ரிக்கு  செய்திகள் விக்கிசெய்தி

Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

எதுகைஇந்திய உச்ச நீதிமன்றம்தற்கொலை முறைகள்மோகன்தாசு கரம்சந்த் காந்தி108 வைணவத் திருத்தலங்கள்அபூபக்கர்கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிதமிழ்நாட்டின் மாநகராட்சிகள்கடல்திணையும் காலமும்மக்காவிடுதலைச் சிறுத்தைகள் கட்சிபிரகாஷ் ராஜ்ஆடுமனித வள மேலாண்மைகார்லசு புச்திமோன்குமரிக்கண்டம்தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்தொலைக்காட்சிகர்மாபி. காளியம்மாள்பெரிய வியாழன்குருவாயூர் குருவாயூரப்பன் கோயில்இசுலாம்நிலக்கடலைகல்பனா சாவ்லாஎழுவாய்பண்புத்தொகைதருமபுரி மக்களவைத் தொகுதிசூல்பை நீர்க்கட்டிதேவநேயப் பாவாணர்மூலம் (நோய்)அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரிநாய்முந்தானை முடிச்சுபண்ணாரி மாரியம்மன் கோயில்பதுருப் போர்பித்தப்பைஆ. ராசாகலைச்சொல்ஆழ்வார்கள்69 (பாலியல் நிலை)மாவட்டம் (இந்தியா)காதல் மன்னன் (திரைப்படம்)சித்தர்கள் பட்டியல்பச்சைக்கிளி முத்துச்சரம்மலக்குகள்சினைப்பை நோய்க்குறிவிஜய் சங்கர்வேதம்பத்துப்பாட்டுஆங்கிலம்துரைமுருகன்குலசேகர ஆழ்வார்திருவள்ளூர் மக்களவைத் தொகுதிவேதநாயகம் பிள்ளைஐ (திரைப்படம்)முகம்மது நபியின் இறுதிப் பேருரைவெண்குருதியணுஅகரவரிசைநரேந்திர மோதிவிளையாட்டுஇரசினிகாந்துஜி. யு. போப்த. ரா. பாலுஇராமர்மு. மேத்தாஇமயமலைநெடுநல்வாடை (திரைப்படம்)இசைதைப்பொங்கல்புனித வெள்ளிமதுரை மக்களவைத் தொகுதிஹோலிதமிழர் கட்டிடக்கலைஇங்கிலாந்து🡆 More