ஆன்சு கிறித்தியன் ஆன்டர்சன்

டென்மார்க்கில் எச்.

சி ஆன்டர்சன் என அறியப்படும் ஆன்சு கிறித்தியன் ஆன்டர்சன் (ஹான்ஸ் கிரிஸ்டியன் ஆண்டர்சன், Hans Christian Andersen; ஏப்ரல் 2, 1805 – ஆகத்து 4, 1875) ஒரு டேனிய மொழி எழுத்தாளரும் கவிஞரும் ஆவார். இவர் குறிப்பாகச் சிறுவர்களுக்கான கதைகளை எழுதுவதன் மூலம் புகழ் பெற்றார். த இசுட்டெட்பாஸ்ட் டின் சோல்டியர் (The Steadfast Tin Soldier), த சினோ குயீன் (The Snow Queen), த லிட்டில் மேர்மெய்ட் (The Little Mermaid), தம்பெலினா (Thumbelina), த லிட்டில் மட்ச் கேர்ல் (The Little Match Girl), த அக்லி டக்ளிங் (The Ugly Duckling) போன்றவை இவ்வாறான கதைகளுள் குறிப்பிடத் தக்கவை. இவரது வாழ்நாளில் உலகம் முழுவதிலும் உள்ள குழந்தைகளைத் தனது ஆக்கங்கள் மூலம் இவர் மகிழ்வித்தார். இவருடைய கதைகள் 120 மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்படிருப்பதுடன், இக் கதைகளைத் தழுவிப் பல திரைப்படங்களும், நாடகங்களும், நடன நிகழ்ச்சிகளும் உருவாக்கப்பட்டுள்ளன.

ஆன்சு கிறித்தியன் ஆன்டர்சன்
1869il ஆன்சு கிறித்தியன் ஆன்டர்சன்
1869il ஆன்சு கிறித்தியன் ஆன்டர்சன்
பிறப்புஆன்சு கிறித்தியன் ஆன்டர்சன்
(1805-04-02)ஏப்ரல் 2, 1805
ஒடென்சு, டென்மார்க்
இறப்புஆகத்து 4, 1875(1875-08-04) (அகவை 70)
கோப்பன்கேகன், டென்மார்க்
தொழில்புதின எழுத்தாளர், சிறுகதை எழுத்தாளர், சிறுவர் கதை எழுத்தாளர்
தேசியம்டேனியர்
வகைசிறுவர் இலக்கியம், பயண இலக்கியம்
கையொப்பம்
ஆன்சு கிறித்தியன் ஆன்டர்சன்

இளமைப் பருவம்

ஆன்சு கிறித்தியன் ஆன்டர்சன், டென்மார்க்கில் உள்ள ஒடென்சு என்னும் நகரில் 1805 ஆம் ஆண்டு ஏப்ரல் 2 ஆம் தேதி பிறந்தார். "ஆன்சு" "கிறித்தியன்" என்பன டேனிய மரபுவழிப் பெயர்கள் ஆகும். இவரது தந்தையார் தாம் பிரபுக்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர் எனக் கருதியிருந்தார். ஆன்சு கிறித்தியன் ஆன்டர்சன் மையத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள், ஆன்சின் தந்தையின் தாயார், முற்காலத்தில் தமது குடும்பம் உயர்குடியைச் சேர்ந்தது என ஆன்சின் தந்தையாருக்குக் கூறியதாகக் கூறுகின்றனர். பிற ஆய்வுகள் இதற்குத் தகுந்த ஆதாரங்கள் இல்லை என்பதைக் காட்டுகின்றன. இவரது குடும்பத்தினர் அரச குடும்பத்தினரிடம் வேலை செய்ததன் மூலமும், வணிகம் செய்ததன் மூலமுமே அவர்களுடன் இவர்களுக்குத் தொடர்புகள் இருந்தன. ஆன்டர்சன் அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு முறையின்றிப் பிறந்த ஒருவராக இருக்கலாம் என்று தற்காலத்து ஆய்வாளர்கள் சிலர் கூறுகின்றனர். காரணம் எதுவாக இருப்பினும், அரசர் ஆறாம் பிரடெரிக், ஆன்டர்சன் மீது தனிப்பட்ட கவனம் வைத்திருந்ததோடு, அவரது கல்விக்கான செலவுகளில் ஒரு பகுதியையும் பொறுப்பேற்றிருந்ததாகத் தெரிகிறது.

ஆன்சு கிறித்தியன் இளம் வயதிலேயே தன்னைத்தானே கவனித்துக் கொள்ள வேண்டிய நிலையில் இருந்தார். தொடக்கத்தில் ஒரு நெசவாளரிடம் வேலை பழகுபவராகச் சேர்ந்தார். பின்னர் ஒரு தையல்காரரிடம் சேர்ந்து வேலை பழகினார். 14 ஆவது வயதில் ஒரு நடிகராகும் எண்ணத்துடன் கோப்பன்கேகனுக்குச் சென்றார். இவரது சிற்ந்த குரல் வளத்துக்காக, அரச டேனிய நாடகக் குழுவில் இவரைச் சேர்ந்த்துக்கொண்டனர். இவரது குரல் விரைவிலேயே மாற்றம் அடைந்து விட்டது. இவருடன் நாடகக் குழுவில் இருந்த ஒருவர், ஆன்சை ஒரு கவிஞராகக் கருதுவதாகக் கூறினார். இதைத் தொடர்ந்து ஆன்சு எழுதுவதில் கவனம் செலுத்தலானார்.

ஆன்சு கிறித்தியன் ஆன்டர்சன் 
ஒடென்சில் இருந்தபோது ஆன்டர்சன் வாழ்ந்த வீடு.

ஜோனாசு கொலின் என்பவர் ஆன்சைத் தற்செயலாகச் சந்தித்தபோது, அவரால் பெரிதும் கவரப்பட்டார். தொடர்ந்து அவர் ஆன்சை சிலகெல்சு என்னும் இடத்தில் இருந்த பள்ளிக்கு அனுப்பிப் படிக்க வைத்ததுடன் அதற்கான முழுச் செலவையும் தானே பொறுப்பேற்றார்.. ஆன்டர்சன் 1822 ல் தனது முதல் கதையை வெளியிட்டிருந்தார். இவருக்குப் பள்ளிக்கல்வியில் ஆதிகம் ஆர்வம் இல்லாதிருந்த போதும் எல்சினோர் என்னும் இடத்தில் இருந்த இன்னொரு பள்ளியிலும் 1827 ஆம் ஆண்டு வரை கல்வி கற்றார்.

பள்ளியில் படித்த காலமே மிகவும் இருண்ட காலம் எனவும், தனது வாழ்க்கையின் மிகவும் கசப்பான காலம் அது எனவும் பிற்காலத்தில் அவர் கூறினார். ஒரு பள்ளியில் படித்தபோது அவரது பள்ளி ஆசிரியரின் வீட்டிலேயே தங்கியிருந்தார். அங்கே அவரது ஆளுமையை மேம்படுத்துவது என்ற போர்வையில் மிகவும் கொடுமைகளுக்கு உள்ளானர். உடன் படித்தவர்களில் பலரையும் விட இவர் வயதில் மூத்தவராக இருந்ததனால் இவர் பெரும்பாலும் தனித்துவிடப்பட்டார். இவர் கவர்ச்சி இல்லாதவராகவும், புரிந்து கொண்டு கற்க முடியாதவராக இருந்ததாகவும் கருதப்பட்டது. இவரது ஆசிரியர்கள் இவர் எழுதுவதை விரும்பவில்லை என்றும் அதனால், தான் பெரும் மனச்சோர்வுக்கு உள்ளானதாகவும் ஆன்சு கூறியிருந்தார்.

பயண நூல்கள்

1981 ல் நீண்ட பயண ஓவியங்களின் தொகுப்பு நூல்களை சுவீடனில் வெளியிட்டாா். ஆர்வம் மிகுந்த பிரயானியான ஆன்டர்சன் வேறு பல நீண்ட பயண நூல்களையும் வெளியிட்டுள்ளார்.அவற்றுள் ஹார்சின் பயணத்தின் நிழல் ஓவியங்கள், சுவிஸ் சாக்சோனி (Swiss Saxony) முதலியன குறிப்பிடத்தக்கதாகும். 1831 ல் கோடை காலம் (in the Summer of 1831) , ஒரு கவிஞனின் கடைவீதி (A Poet's Bazaar) , ஸ்பெயினில் (In Spain) , மற்றும் 1866 ல் போர்ச்சுகல் பயணம் (Visit to Portugal in 1866) போன்றவை இவர் எழுதிய வேறு சில பயண நூல்களாகும். (கடைசியாக குறிப்பிடப்பட்ட பயண நூலானது ஆன்டர்சனுடன் கோப்பென்ஹாகெனில் 1820 களின் மத்தியில் தன்னுடன் வசித்த போர்த்துகீசிய பால்ய நண்பர்களான ஜார்ஜ் மற்றும் ஜோஸ் ஓ' நெயில் (Jorge and Jose O'Neill) ஆகியோர்களைக் கானச்சென்ற பயண அனுபவங்களை அதில் விளக்கியுள்ளார்) ஆண்டெர்சன் அவருடைய பயண நூல்களில் பயணங்களை பற்றி எழுதுதலுக்கான சமகால மரபுகள் சிலவற்றை கவனத்தில் எடுத்துக் கொண்டார், ஆனால் அவருடைய சொந்த நோக்கங்களுக்காகவும் சில புது வகையான பாணியிலும் எழுதினார். அவரது பயண நூல்கள் ஒவ்வொன்றும் ஆவணமாகவும் மற்றும் விளக்கமான தொகுப்பாகவும் ஒருங்கினைத்து தான் கண்டதை தலைப்புகளை ஒட்டி அதிக தத்துவார்த்த பத்திகளைக் கொண்டிருக்குமாறு எழுதுவார். ஒரு எழுத்தாளராக அழியாமை மற்றும் கற்பனையின் தன்மை போன்றவை அவருடைய இலக்கிய பயண அறிக்கையில் கட்டாயம் இடம்பெற்றிருக்கும். “சுவீடனில்” (In Sweden) போன்ற சில பயண நூல்களில் அதிக கற்பனைக்கதைகள் (fairy-tales) இடம்பெற்றுள்ளது.

1840 களில், ஆண்டர்சனின் கவனம் மேடை நாடகங்களின் மீது திரும்பியது. ஆனால் இது சிறிதளவே வெற்றியைக் கொடுத்தது. 1840 ல் இவரது படப்பத்தகம் (Picture-Book) என்ற படங்கள் இடம்பெறாத படைப்பு இவருக்கு நல்ல அதிர்ஷ்டமாக அமைந்தது. இரண்டாவது தொடர் புணைவுக் கதைகளின் தொகுப்பு 1838 ஆம் ஆண்டிலும் மூன்றாவது 1845 ஆம் ஆண்டிலும் வெளிவந்தது.சொந்த நாடான டென்மார்க்கில் அவரது சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்கு எதி்ர்ப்புகள் இருந்த போதிலும் இப்போது ஆண்டர்சன் ஐரோப்பா முழுவதும் கொண்டாடப்பட்டார்.

தற்பொழுது 67, நெய்ஹான், கோப்பென்ஹாகெனில் இருக்கும் நினைவிடத்தில் 1845 மற்றும் 1864 க்கு இடைப்பட்ட காலத்தில் ஆன்சு கிறித்தியன் ஆன்டர்சன் வாழ்ந்தார்.

தொலைக்காட்சி கார்ட்டூன்கள்

ஆன்சு கிறித்தியன் ஆன்டர்சனின் கதைகளைத் தழுவி பெருமளவில் கார்ட்டூன்கள் தயாரிக்கப்பட்டன. இவ்வகையான கார்ட்டூன்கள் தொலைக்காட்சிகளில் வெற்றிகரமாக ஒளிபரப்புச் செய்யப்பட்டன. இலங்கையில் தேசிய தொலைக்காட்சியான ரூபவாகினியில் ஆன்சு கிறித்தியன் ஆன்டர்சனின் கார்ட்டூன்கள் சிங்கள மொழியில் மொழிபெயர்ப்புச் செய்யபட்டு ஒளிபரப்புச் செய்யப்பட்டது.

இறப்பு

ஆன்சு கிறித்தியன் ஆன்டர்சன் 
Andersen at Rolighed (சுமார். 1867)
ஆன்சு கிறித்தியன் ஆன்டர்சன் 
ஆன்டர்சன் கல்லறை, கோபனாவன்.

1872 வசந்தகாலத்தில், ஆண்டர்சன் தனது படுக்கையிலிருந்து விழுந்து கடுமையாக பாதிகப்பட்டார். இதிலிருந்து அவர் முழுமையாக குணமடைய வில்லை. இதன் பின் இவருக்கு கல்லீரல் புற்றுநோய்க்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கியது. இதனால் இவர் ஆகஸ்ட் 4, 1875 அன்று கோபனாவனில் உள்ள இவரின் நண்பரின் இல்லத்தில் இறந்தார். கோபனாவனில் உள்ள ஒரு கல்லறைத்தோட்டத்தில் இவர் அடக்கம் செய்யப்பட்டார். இவரின் இறுதி நாட்களில் இவர் உலகலாவியப்புகழினை ஏய்தியிருந்தார். டேனிஷ் அரசு இவரை ஒரு தேசிய பொக்கிஷமாகக் (national treasure) கருதி இவருக்கு ஆண்டுதோறும் ஊக்கத்தொகை அளித்துவந்தது. இவர் இறப்பதற்கு முன்பே இவருக்கு ஒரு நினைவுச்சிலை எழுப்புன் பணிகள் ஆகஸ்ட் சேபி என்னும் சிற்பியால் மேற்கொல்லப்பட்டிருந்தன.

தாக்கங்கள்

இவரின் பிறப்பின் 200ஆம் ஆண்டு நினைவாக 2005ஆம் ஆண்டினை ஆன்டர்சன் ஆண்டு என டென்மார்க் அரசு சிறப்பித்தது.. 13 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் இவரின் வாழ்வையும் படைப்புகளையும் புகழும் வண்ணம் ஒரு பூங்கா சாங்காயில் 2006 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. சப்பானின் ஃபுனாபாசி நகரிலும் இவரின் பெயரால் ஒரு சிறுவர் பூங்கா உள்ளது.

அமெரிக்காவில், நியூயார்க் உட்பட பல நகரங்களில் இவருக்கு சிலைகள் உள்ளன. அமெரிக்கக் காங்கிரசு நூலகத்தில் அரிய புத்தகம் மற்றும் சிறப்பு தொகுப்புகள் பிரிவில் (Rare Book and Special Collections Division) இவரின் புத்தகங்கள் காட்சிப்படுத்தப்படுள்ளது.

பன்னாட்டுக் குழந்தைகளின் புத்தக நாள்

1967 ஆம் ஆண்டு முதல் இளம் மக்களுக்கான புத்தகங்களின் பன்னாட்டு வாரியம் (International Board on Books for Young People - IBBY) என்னும் பன்னாட்டு ஆதாய நோக்கற்ற அமைப்பு (International Non–Profit Organization) இவர் பிறந்த ஏப்ரல் 2-ஆம் நாளை பன்னாட்டுக் குழந்தைகளின் புத்தக நாள் (International Children’s Book Day - ICBD) என அறிவித்து உலகம் முழுவதும் கொண்டாடி வருகிறது.

திரைப்படங்கள்

1952இல் இவரின் வாழ்வை தழுவிய கற்பனைத்திரைப்படம் இவரின் பெயராலேயே வெளியிடப்பட்டது. Hans Christian Andersen: My Life as a Fairytale என்னும் பெயரில் இவரின் வாழ்க்கைவரலாற்றுப்படம் 2003இல் வெளியானது. வால்ட் டிஸ்னி தொலைக்காட்சித் தொடர்களில் இவர் சிறு கற்பனைக் கதை மாந்தராக இடப்பெற்றுள்ளார்.

தொலைபேசி செயலி

  • கிவ்விங்டேல்ஸ் GivingTales என்ற குழந்தைகளுக்கான கதை சொல்லும் செல்பேசி செயலி ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் நிதி ஒத்துழைப்புடன் 2015 ல் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் வரும் கதைகள் ரோஜர் மூரி (Roger Moore),ஸ்டீபன் பிரை Stephen Fry, இவான் மெக்ரிகர் Ewan McGregor, ஜோன் கொலின்ஸ் Joan Collins மற்றும் ஜோனா லும்ரி Joanna Lumley ஆகியோரின் குரல்பதிவுகளால் சொல்லப்பட்டுள்ளது .

நினைவிடங்கள் மற்றும் சிலைகள்

மேலும் காண்க

குறிப்புகள்

வெளியிணைப்புக்கள்

Tags:

ஆன்சு கிறித்தியன் ஆன்டர்சன் இளமைப் பருவம்ஆன்சு கிறித்தியன் ஆன்டர்சன் பயண நூல்கள்ஆன்சு கிறித்தியன் ஆன்டர்சன் தொலைக்காட்சி கார்ட்டூன்கள்ஆன்சு கிறித்தியன் ஆன்டர்சன் இறப்புஆன்சு கிறித்தியன் ஆன்டர்சன் தாக்கங்கள்ஆன்சு கிறித்தியன் ஆன்டர்சன் தொலைபேசி செயலிஆன்சு கிறித்தியன் ஆன்டர்சன் மேலும் காண்கஆன்சு கிறித்தியன் ஆன்டர்சன் குறிப்புகள்ஆன்சு கிறித்தியன் ஆன்டர்சன் வெளியிணைப்புக்கள்ஆன்சு கிறித்தியன் ஆன்டர்சன்எழுத்தாளர்கவிஞர்குட்டிக் கடற்கன்னிகுழந்தைடென்மார்க்டேனிய மொழிதம்பெலினாதிரைப்படம்நடனம்நாடகம்மொழி

🔥 Trending searches on Wiki தமிழ்:

பெயர்ச்சொல்ஏற்காடுஅன்னை தெரேசாவினோத் காம்ப்ளிகுறை ஒன்றும் இல்லை (பாடல்)அகத்திணைவிஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்நீக்ரோதிருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்தீபிகா பள்ளிக்கல்பூலித்தேவன்சூரரைப் போற்று (திரைப்படம்)சுற்றுச்சூழல்தேவாங்குமு. அ. சிதம்பரம் அரங்கம்வே. செந்தில்பாலாஜிஆண்டு வட்டம் அட்டவணைவிடுதலை பகுதி 1குண்டலகேசிவிரை வீக்கம்சுபாஷ் சந்திர போஸ்உடுமலை நாராயணகவிஜெயம் ரவிவாரணம் ஆயிரம் (திரைப்படம்)கண்ணனின் 108 பெயர் பட்டியல்கார்த்திக் (தமிழ் நடிகர்)தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்கபிலர் (சங்ககாலம்)தூது (பாட்டியல்)பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்பரிதிமாற் கலைஞர்இயேசுதமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்தமிழ் நாடக வரலாறுவிஷ்ணுசிறுநீர்ப்பாதைத் தொற்றுமகரம்உலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)மதுரகவி ஆழ்வார்வட்டாட்சியர்கடையெழு வள்ளல்கள்பசுமைப் புரட்சிமதுரைக் காஞ்சிகாடுஉயர் இரத்த அழுத்தம்பரதநாட்டியம்வராகிநிலாவிவேகானந்தர்உலா (இலக்கியம்)இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்களின் பட்டியல்காதல் கொண்டேன்தமிழ் விக்கிப்பீடியாஉணவுச் சங்கிலிசுற்றுச்சூழல் கல்விஆ. ப. ஜெ. அப்துல் கலாம்பஞ்சாயத்து ராஜ் சட்டம்இந்திய ரிசர்வ் வங்கிதமிழ் எண்கள்திருவண்ணாமலைதேர்தல் மைதமிழர் கலைகள்திருவாசகம்செவ்வாய்க்கிழமை (திரைப்படம்)தேவேந்திரகுல வேளாளர்விண்டோசு எக்சு. பி.கல்லுக்குள் ஈரம்ரோசுமேரிவி.ஐ.பி (திரைப்படம்)இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்நரேந்திர மோதிகொடுக்காய்ப்புளிதினமலர்அரங்குசுப்பிரமணிய பாரதிகார்லசு புச்திமோன்திருவள்ளுவர்அக்பர்சதுரங்க வேட்டை 2 (திரைப்படம்)🡆 More