அப்துல்ரசாக் குர்னா

அப்துல்ரசாக் குர்னா (Abdulrazak Gurnah; பிறப்பு: 20 திசம்பர் 1948) ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த புதின எழுத்தாளர் ஆவார்.

இவர் 1960களில் சான்சிபார் நாட்டில் இருந்து சான்சிபார் புரட்சியின் போது வெளியேறி அகதியாக ஐக்கிய இராச்சியத்தில் குடியேறினார். இவர் 1994 இல் எழுதிய சொர்க்கம் என்ற புதினம் மான் புக்கர் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்டது. இவருக்கு 2021 ஆம் ஆண்டுக்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

அப்துல்ரசாக் குர்னா
Abdulrazak Gurnah
குர்னா (மே 2009)
குர்னா (மே 2009)
பிறப்புஅப்துல்ரசாக்
20 திசம்பர் 1948 (1948-12-20) (அகவை 75)
சான்சிபார் (இன்றைய தான்சானியா)
கல்விகான்டர்பரி கிறைஸ்ட் சர்ச் பல்கலைக்கழகம் (இளங்கலை)
கெண்ட் பல்கலைக்கழகம் (முதுநிலை, முனைவர்)
வகைபுதினம்
குறிப்பிடத்தக்க படைப்புகள்
  • சொர்க்கம் (1994)
  • கைவிடல் (2005)
குறிப்பிடத்தக்க விருதுகள்இலக்கியத்திற்கான நோபல் பரிசு (2021)

வாழ்க்கைக் குறிப்பு

அப்துல்ரசாக் குர்னா 1948 திசம்பர் 20 இல் இன்றைய தான்சானியாவில் உள்ள சான்சிபார் சுல்தானகத்தில் பிறந்தார். சான்சிபார் புரட்சியின் போது அரபு மக்களுக்கெதிரான துன்புறுத்தலை அடுத்து, இவர் தனது 18-வது அகவையில் நாட்டை விட்டு வெளியேறினார். 1968 இல் இவர் ஏதிலியாக இங்கிலாந்து வந்து சேர்ந்தார்.

இங்கிலாந்து கான்டர்பரி கிறைஸ்ட் சர்ச் கல்லூரியில் கல்வி கற்று இலண்டன் பல்கலைக்கழகத்தின் பட்டத்தைப் பெற்றுக் கொண்டார்.. பின்னர் கெண்ட் பல்கலைக்கழகத்தில் 1982 இல் மேற்கு ஆப்பிரிக்கப் புதினங்களின் விமர்சனத்தின் அளவுகோல் என்பதில் ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டத்தைப் பெற்றார். 1980 முதல் 1983 வரை நைஜீரியாவில் உள்ள பயேரோ பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். பின்னர் இளைப்பாறும் வரை கெண்ட் பல்கலைக்கழகத்தின் ஆங்கில மொழித் துறையில் பேராசிரியராகப் பணியாற்றினார்.

விருதுகளும் சிறப்புகளும்

கருப்பொருள்

குர்னாவின் பெரும்பாலான படைப்புகள் கிழக்கு ஆப்பிரிக்காவின் கரையோரப் பகுதிகளை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ளன. இவரது புதினங்களில் ஒருவரைத் தவிர கதாநாயகர்கள் அனைவரும் சான்சிபாரில் பிறந்தவர்கள். குர்னாவின் புதினங்கள் கிழக்கு ஆப்பிரிக்க கதாநாயகர்களை அவர்களின் பரந்த சர்வதேச சூழலில் வைக்கின்றன என்று இலக்கிய விமர்சகர் புரூஸ் கிங் வாதிடுகிறார். எழுத்தாளர் ஐ. சாந்தன் தனது 'உள்ளங்கையில் உலக இலக்கியம்' (2010) என்ற நூலில் "குர்ணாவின் 'அமைதியை நாடுதல்' என்ற புதினம் இடப்பெயர்வு, பண்பாட்டு அடையாளங்கள் போன்றவற்றைப் பேசுகிறது," என்று குறிப்பிட்டுள்ளார்.

மேற்கோள்கள்

உசாத்துணைகள்

வெளி இணைப்புகள்

Tags:

அப்துல்ரசாக் குர்னா வாழ்க்கைக் குறிப்புஅப்துல்ரசாக் குர்னா விருதுகளும் சிறப்புகளும்அப்துல்ரசாக் குர்னா கருப்பொருள்அப்துல்ரசாக் குர்னா மேற்கோள்கள்அப்துல்ரசாக் குர்னா உசாத்துணைகள்அப்துல்ரசாக் குர்னா வெளி இணைப்புகள்அப்துல்ரசாக் குர்னாஇலக்கியத்திற்கான நோபல் பரிசுஐக்கிய இராச்சியம்சான்சிபார்மான் புக்கர் பரிசு

🔥 Trending searches on Wiki தமிழ்:

கலைமக்களவைதிருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதிநாட்டு நலப்பணித் திட்டம்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்சேக்கிழார்சிவம் துபேமதுரை வீரன்வெண்குருதியணுவீரப்பன்வாதுமைக் கொட்டைவிலங்குகளின் பெயர்ப் பட்டியல்இன்னா நாற்பதுசூரரைப் போற்று (திரைப்படம்)உ. வே. சாமிநாதையர்தஞ்சைப் பெருவுடையார் கோயில்கட்டுரைசித்தார்த்அருந்ததியர்கள்ளழகர் கோயில், மதுரைமுதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்மரகத நாணயம் (திரைப்படம்)சுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2014அத்தி (தாவரம்)காவிரி ஆறுஅளபெடைவௌவால்தமிழ்ப் பருவப்பெயர்கள்தைராய்டு சுரப்புக் குறைகேரளம்நீதி இலக்கியம்மாணிக்கவாசகர்பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்வீரன் சுந்தரலிங்கம்கலித்தொகைவிநாயகர் அகவல்தமிழ்ப் புத்தாண்டுஇராம நவமிஆண் தமிழ்ப் பெயர்கள்ஔவையார் (சங்ககாலப் புலவர்)குருதிச்சோகைஇந்திய தேசிய காங்கிரஸ் கட்சி தலைவர்கள் பட்டியல்அறிவு மேலாண்மைஇலங்கைஅகரவரிசைமலைபடுகடாம்வானிலைதேவேந்திரகுல வேளாளர்அம்பேத்கர்ஹாட் ஸ்டார்மங்காத்தா (திரைப்படம்)இந்திய அரசியலமைப்பிலுள்ள நீதிப் பேராணைகள்சிற்பி பாலசுப்ரமணியம்கூகுள்பிள்ளையார்நரேந்திர மோதிதமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2019மோகன்தாசு கரம்சந்த் காந்திகவுண்டர்சுந்தரமூர்த்தி நாயனார்நயன்தாராசுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்மயங்கொலிச் சொற்கள்கொன்றைபாண்டியர்மக்களாட்சிந. பிச்சமூர்த்திபி. காளியம்மாள்டெல்லி கேபிடல்ஸ்திருப்பரங்குன்றம் முருகன் கோவில்பாரதிதாசன்நந்திவர்மன் (திரைப்படம்)மூவேந்தர்அகத்தியர்காதலுக்கு மரியாதை (திரைப்படம்)திருமுருகாற்றுப்படைவேலூர் மக்களவைத் தொகுதி🡆 More