அணிகலன்

அணிகலன் (ⓘ) என்பது, அழகுக்காக மனிதர் தமது பல்வேறு உறுப்புக்களில் அணிந்துகொள்ளும் பொருட்கள் ஆகும்.

இது நகை, ஆபரணம் போன்ற பெயர்களாலும் குறிக்கப்படுவது உண்டு. அணிகலன்கள் பல்வேறு பொருட்களைப் பயன்படுத்திச் செய்யப்படுகின்றன. தொடக்கத்தில் இயற்கையாகக் கிடைக்கும் விதைகளில் துளையிட்டு மெல்லிய கயிறுகளில் கோர்த்து அணிகலன்கள் செய்யப்பட்டன. பின்னர் படிப்படியாக பல்வேறு விலையுயர்ந்த பொருட்களைப் பயன்படுத்தி அணிகலன்கள் செய்யப்பட்டன. முத்து, பவளம், வைரம் போன்ற பொருட்களும், பொன், வெள்ளி, பிளாட்டினம் முதலிய விலையுயர்ந்த உலோகங்களும் அணிகலன்கள் செய்வதற்குப் பயன்பட்டன. இன்றும் பயன்படுகின்றன. அணிகலன்கள் தொல்லியலில் மிகப்பழைய தொல்பொருட்களுள் ஒரு வகை. 100,000 ஆண்டுகள் பழைமையான ஊரி (Nassarius) ஓட்டில் செய்யப்பட்ட மணிகளே இதுவரை கிடைத்தவற்றுள் மிகப் பழையவை எனக் கருதப்படுகிறது.

அணிகலன்
அம்பரினால் செய்யப்பட்ட பதக்கம்
அணிகலன்
கணிநி உதவியுடன் வடிவமைக்கப்பட்ட ஒரு அணிகலன்.
அணிகலன்
தற்கால அணிகலன் ஒன்று.

அணிகலன்கள் அழகுக்காகவே பெரும்பாலும் அணியப்படுகின்றன எனினும், சமூக மதிப்பு, பல்வேறு வகையான நம்பிக்கைகள் என்பனவும் அணிகலன்கள் அணியப்படுவதற்கான காரணங்களாக அமைகின்றன. சில சமுதாயங்களில் இன்னின்ன சாதியைச் சேர்ந்தவர்கள் இந்த இந்த அணிகலன்களையே அணிய முடியும் என்ற கட்டுப்பாடுகளும் இருந்ததாகத் தெரிகிறது. ஆண்களுக்கு உரியவை, பெண்களுக்கு உரியவை என்ற அடிப்படையில் அணிகலன்கள் வேறுபாடாக அமைவது ஒருபுறம் இருக்க, வயதுக்கு ஏற்றபடியும் அணிகலன்கள் வேறுபட்டு அமைவதைக் காணலாம். திருமணம் போன்ற நிகழ்வுகளில் மணப்பெண்ணையும், மாப்பிள்ளையையும் சிறப்பு அணிகலன்களைக் கொண்டு அழகுபடுத்துவது வழக்கம். நாடகங்கள், நடனங்கள் போன்றவற்றில் பங்கு பெறுகின்றவர்களும் பலவகையான சிறப்பு அணிகலன்களை அணிகிறார்கள்.

இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் அணிகலன்கள் மக்களின் வாழ்க்கையோடு சிறப்பாகப் பெண்களின் வாழ்க்கையோடு நெருக்கமான தொடர்புகளைக் கொண்டுள்ளன. பிறந்தது முதல் வாழ்வில் பல்வேறு கட்டங்களிலும் இடம்பெறக்கூடிய சடங்குகளில் அணிகலன்கள் பெரும்பங்கு வகிக்கின்றன.

தொல்பழங் காலத்திலிருந்தே மனிதர்கள் அணிகலன்களை அணிந்தமைக்கான தொல்லியல் சான்றுகள் ஏராளமாக உள்ளன. பெண்களே கூடுதலாக அணிகலன்களின்பால் கவரப்படுகின்றனர் என நம்பப்படினும் ஆண்கள், பெண்கள் இருபாலாருமே அணிகலன்களை அணிந்திருக்கிறார்கள் இப்பொழுதும் அணிகிறார்கள். உடலின் பல்வேறு உறுப்புக்களிலும் அணிகலன்கள் அணியப்படுவதோடு அவை ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு பெயர்களும் உள்ளன.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

படிமம்:Ta-அணிகலன்.oggபவளம்பிளாட்டினம்பொன்முத்துவெள்ளி (தனிமம்)வைரம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

பிரபுதேவாஉவமையணிஎட்டுத்தொகை தொகுப்புஅன்புமணி ராமதாஸ்பச்சைக்கிளி முத்துச்சரம்திருமந்திரம்விண்டோசு எக்சு. பி.ஔவையார் (சங்ககாலப் புலவர்)நயினார் நாகேந்திரன்சிறுவாபுரி முருகன் கோவில்ஐந்தாம் பத்து (பதிற்றுப்பத்து)தங்கர் பச்சான்கட்டுரைதிருவாரூர் தியாகராஜர் கோயில்வாழைகும்பம் (இராசி)ஆழ்வார்கள்உத்தம புத்திரன் (2010 திரைப்படம்)இந்திய தேசிய காங்கிரசுதேவாங்குதமிழ்நாட்டின் மாநகராட்சிகள்பிரதாப முதலியார் சரித்திரம் (நூல்)பட்டினப் பாலைபூ. சா. கோ. தொழில்நுட்பக் கல்லூரிபாவலரேறு பெருஞ்சித்திரனார்பாரிபுதிய ஏழு உலக அதிசயங்கள்தேர்தல்மெய்யெழுத்துரோசுமேரிவிநாயகர் அகவல்சேலம் மக்களவைத் தொகுதிஇரச்சின் இரவீந்திராதொகாநிலைத்தொடர்முதுமொழிக்காஞ்சி (நூல்)உரிச்சொல்சொல்கருப்பைஆனந்தம் விளையாடும் வீடுஅஸ்ஸலாமு அலைக்கும்முடக்கு வாதம்காதல் மன்னன் (திரைப்படம்)மக்காபதினெண்மேற்கணக்குரஷீத் கான்தமிழிசை சௌந்தரராஜன்முகம்மது நபியின் சிறப்பு பட்டங்கள் மற்றும் பெயர்கள்சனீஸ்வரன்மதுரை மக்களவைத் தொகுதிமுன்னின்பம்நவரத்தினங்கள்சட்டமன்ற உறுப்பினர் (இந்தியா)திருப்பதிஅன்மொழித் தொகைதிருவாரூர்சிறுபஞ்சமூலம்சிறுகதைகௌதம புத்தர்பிரேமலுகுலசேகர ஆழ்வார்பித்தப்பைபதினெண் கீழ்க்கணக்குஅப்துல் ரகுமான்மாதேசுவரன் மலைபணவீக்கம்தமிழ்த்தாய் வாழ்த்துபெண்களின் உரிமைகள்சிவகங்கை மக்களவைத் தொகுதிதுள்ளுவதோ இளமைதிராவிட மொழிக் குடும்பம்விஜயநகரப் பேரரசுதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்கூத்துஐ (திரைப்படம்)விஜய் சங்கர்புதுச்சேரிதருமபுரி மக்களவைத் தொகுதிதிராவிட முன்னேற்றக் கழகம்🡆 More