போர்னியோ

போர்னியோ (மலாய்: Borneo; ஆங்கிலம்: Borneo சாவி: ; بورنيو; சீனம்: 婆罗洲) என்பது உலகின் மூன்றாவது பெரிய தீவு; அதே வேளையில் ஆசியாவின் மிகப் பெரிய தீவாகும்.

கடல்சார் தென்கிழக்காசியா புவியியல் மையத்தில் அமைந்துள்ளது. தெற்கே சாவா, சுமத்திரா, சுலாவெசி தீவுகள் உள்ளன.

போர்னியோ
போர்னியோ
போர்னியோவின் நிலப்பரப்பு
புவியியல்
அமைவிடம்தென்கிழக்கு ஆசியா
ஆள்கூறுகள்1°00′N 114°00′E / 1.000°N 114.000°E / 1.000; 114.000
தீவுக்கூட்டம்சுந்தா பெருந் தீவுகள்
உயர்ந்த புள்ளிகினபாலு மலை
நிர்வாகம்
மாவட்டங்கள்பெலாயிட்
புரூணை-முவாரா
டெம்புரோங்
டூடொங்
பெரிய குடியிருப்புசமாரிண்டா (pop. 842,691)
மாநிலங்கள்மேற்கு கலிமந்தான்
மத்திய கலிமந்தான்
தெற்கு கலிமந்தான்
வடக்கு கலிமந்தான்
கிழக்கு கலிமந்தான்
மாநிலங்கள்சபா
சரவாக்
மக்கள்
மக்கள்தொகை16 மில்லியன் (2000)

மலாய் தீவுக் கூட்டங்களுக்கும், இந்தோனேசியாவுக்கும் நடுவில் அமைந்து இருக்கிறது. இந்தத் தீவு இந்தோனேசியா, மலேசியா, புரூணை ஆகிய நாடுகளின் ஆளுமைகளில் உள்ளது.

இந்தத் தீவின் இந்தோனேசியாவின் ஆளுமைக்கு உட்பட்ட பகுதியை கலிமந்தான் என்று அழைக்கிறார்கள். வடக்குப் பகுதியில் மலேசியாவின் சபா மற்றும் சரவாக் மாநிலங்கள் உள்ளன. அவற்றைக் கிழக்கு மலேசியா அல்லது மலேசிய போர்னியோ என்று அழைக்கிறார்கள்.

அமேசான் காடுகளைப் போன்று போர்னியோ தீவுக் காடுகளும் உலகின் மிகப் பழமையான மழைக்காடுகள் ஆகும்.

புவியியல்

போர்னியோ 
போர்னியோவின் அரசியல் பிரிவுகள்
போர்னியோ 
மலேசியாவில் உள்ள கினபாலு மலை. போர்னியோ தீவின் மிக உயரமான மலை.
போர்னியோ 
ஆபத்தான நிலையில் உள்ள போர்னியோ ஒராங் ஊத்தான் மனிதக்குரங்கு.
போர்னியோ 
இந்தோனேசிய போர்னியோவில் உள்ள காப்புவாசு ஆறு. போர்னியோவின் மிக நீளமான ஆறு.

இந்தத் தீவின் 73% இந்தோனேசியப் பிரதேசமாகும். வடக்கில், கிழக்கு மலேசிய மாநிலங்களான சபா மற்றும் சரவாக் தீவின் 26% ஆகும். மலேசிய கூட்டாட்சி பிரதேசமான லபுவான் தீவு, போர்னியோ கடற்கரையில் ஒரு சிறிய தீவில் அமைந்துள்ளது.

போர்னியோ தீவின் வடக்கு கடற்கரையில் அமைந்துள்ள புரூணை நாடு போர்னியோவின் நிலப்பரப்பில் சுமார் 1% ஆகும்.

உலகின் பழமையான மழைக்காடுகள்

போர்னியோ தீவின் வடக்கு, வடமேற்குப் பகுதிகளில் தென் சீனக் கடல் உள்ளது. வடகிழக்கே சுலு கடல், கிழக்கே சுலாவெசி கடல், மக்கசார் நீரிணை உள்ளன. தெற்கே சாவகக் கடல் மற்றும் கரிமட்டா நீரிணை உள்ளன.

போர்னியோவின் மேற்கே மலாய் தீபகற்பம், மற்றும் சுமாத்திரா தீவு உள்ளன. தெற்கே சாவாவும், வடகிழக்கே பிலிப்பீன்சு ஆகியன உள்ளன. போர்னியோ என்பது மிகவும் பழமையான மழைக் காடுகளைக் கொண்ட தீவு ஆகும்.

உலகின் நீளமான நிலத்தடி ஆறு

கினபாலு மலை என்பது இந்தத் தீவின் உயரமான மலை ஆகும். உலகின் மிக அரிதான தாவரங்களும், விலங்குகளும் கினபாலு மலையில் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. 1000 கி.மீ நீளமுள்ள கப்புவாசு ஆறு (Kapuas River) இத்தீவின் இந்தோனேசியப் பகுதியில் உள்ளது. இதுவே இத்தீவின் மிக நீளமான ஆறு.

இந்தத் தீவில் குறிப்பிட்டத்தக்க குகை அமைப்புகளும் கோமந்தோங் குகைகள் உள்ளன. உலகின் நீளமான நிலத்தடி ஆறுகளுள் ஒன்று இங்குள்ளது. மான் குகை (Deer Cave) என்று அறியப்படும் குகையில் 30 இலட்சம் வௌவால்கள் இருப்பதாகவும்; கரப்பான் பூச்சிக் குகை (Cockroach Cave) என்னும் குகையில் பல இலட்சக் கணக்கான கரப்பான் பூச்சிகள் இருப்பதாகவும் கணிக்கப்பட்டு உள்ளது.

சூழலியல்

போர்னியோ மழைக் காடுகள் சுமார் 140 மில்லியன் ஆண்டுகள் பழமையானவை என மதிப்பிடப்பட்டு உள்ளது. இது உலகின் மிகப் பழமையான மழைக்காடுகளில் ஒன்றாகும். இந்தத் தீவு பல தாவரங்கள் மற்றும் பல விலங்குகளின் பரிணாமமையமாக உள்ளது.

மேலும் அழிந்து வரும் போர்னியோ ஒராங் ஊத்தான் மனிதக் குரங்குகள் (Bornean orangutan); எஞ்சியிருக்கும் சில இயற்கை வாழ்விடங்களில் இந்தப் போர்னியோ மழைக்காடும் ஒன்றாகும்.

போர்னியோ யானை, கிழக்கு சுமத்திரா காண்டாமிருகம் (Sumatran rhinoceros), போர்னியோ மேகச் சிறுத்தை (Bornean clouded leopard), டயாக் பழ வௌவால் உள்ளிட்ட பல உள்ளூர் வன இனங்களுக்கு இது முக்கியமான புகலிடமாக உள்ளது.

போர்னியோ ஆற்றுச் சுறா மீன்கள்

போர்னியோ காடுகளில் சுமார் 15,000 வகையான பூக்கும் தாவரங்கள் உள்ளன. 3,000 வகையான மரங்கள்; 267 சுனை இலை தாவரங்கள் (dipterocarps), 221 வகையான பாலூட்டிகள் மற்றும் 420 வகையான பறவைகள் உள்ளன.

போர்னியோவில் சுமார் 440 நன்னீர் மீன் இனங்கள் உள்ளன.[31] போர்னியோ ஆற்றுச் சுறா மீன்கள் (Borneo river shark) கினாபாத்தாங்கான் ஆற்றில் மட்டுமே இருப்பதாக அறியப் படுகிறது.

நிலவியல்

போர்னியோவில் உள்ள உயரமான சிகரங்களின் பட்டியல்

  • கினபாலு மலை (Mount Kinabalu) 13,435 அடி (4,095 m)
  • துருசுமாடி மலை (Mount Trusmadi) 8,668 அடி (2,642 m)
  • முரூக் மியாவ் மலை (Muruk Miau) 6,837 அடி (2,084 m)
  • வாக்கிட் மலை (Mount Wakid) 6,778 அடி (2,066 m)
  • மொன்கபோ மலை (Monkobo Hill) 5,866 அடி (1,788 m)
  • லொத்துங் மலை (Mount Lotung) 5,843 அடி (1,781 m)
  • மக்டலேனா மலை (Mount Magdalena) 4,288 அடி (1,307 m)
  • தலிபூ மலை (Talibu Hill) 4,144 அடி (1,263 m)

நதி அமைப்புகள்

நீளத்தின் அடிப்படையில் போர்னியோவில் உள்ள மிக நீளமான நதிகளின் பட்டியல்.

  • காப்புவாசு ஆறு (Kapuas River) 1,143 km (710 mi)
  • பரித்தோ ஆறு (Barito River) 1,090 km (680 mi)
  • மக்காம் ஆறு (Mahakam River) 980 km (610 mi)
  • இராச்சாங்கு ஆறு (Rajang River) 760 km (470 mi)
  • ககாயான் ஆறு (Kahayan River) 658 km (409 mi)
  • மெண்டாவாய் ஆறு (Mendawai River) 616 km (383 mi)
  • காயான் ஆறு (Kayan River) 576 km (358 mi)
  • கினாபாத்தங்கான் ஆறு (Kinabatangan River) 560 km (350 mi)
  • பாராம் ஆறு (Baram River) 400 km (250 mi)
  • செம்பாக்குங் ஆறு (Sembakung River) 352 km (219 mi)
  • செசாயாப் ஆறு (Sesayap River) 279 km (173 mi)
  • பாவான் ஆறு (Pawan River) 197 km (122 mi)

மேற்கோள்

வெளி இணைப்புகள்

Tags:

போர்னியோ புவியியல்போர்னியோ சூழலியல்போர்னியோ மேற்கோள்போர்னியோ வெளி இணைப்புகள்போர்னியோஆங்கிலம்கடல்சார் தென்கிழக்காசியாசாவகம் (தீவு)சாவி எழுத்துமுறைசீனம்சுமத்திராசுலாவெசிமலாய் மொழி

🔥 Trending searches on Wiki தமிழ்:

மாத்திரை (தமிழ் இலக்கணம்)பால்வினை நோய்கள்லோகேஷ் கனகராஜ்அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரிதமிழ்நாடு சட்டப் பேரவைதனுஷ்கோடிதிருப்புகழ் (அருணகிரிநாதர்)முதலாம் இராஜராஜ சோழன்அக்கி அம்மைஆடுஜீவிதம் (திரைப்படம்)இந்தியப் பொதுத் தேர்தல்கள்என் ஆசை மச்சான்கடல்நுரையீரல் அழற்சிகட்டபொம்மன்திருப்பாவைஅயோத்தி இராமர் கோயில்ஜன கண மனநா. முத்துக்குமார்மாநிலங்களவைஏலாதிகொரோனா வைரசுபொதியம்நாச்சியார் திருமொழிமுடக்கு வாதம்நவரத்தினங்கள்மகாபாரதம்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)மயிலாடுதுறைபர்வத மலையானைதங்கர் பச்சான்சிலம்பம்பதினெண்மேற்கணக்குகுருவாயூர் குருவாயூரப்பன் கோயில்சித்தர்பொது ஊழிமலேசியாதிரிகடுகம்விராட் கோலிசிறுவாபுரி முருகன் கோவில்ருதுராஜ் கெயிக்வாட்இரசினிகாந்துகர்ணன் (மகாபாரதம்)பொருநராற்றுப்படைவிண்டோசு எக்சு. பி.உ. வே. சாமிநாதையர்மொழிபெயர்ப்புவாழைப்பழம்கடலூர் மக்களவைத் தொகுதிதிருப்பதிஇந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் 2019கட்டுரைதாயே நீயே துணைநாயன்மார் பட்டியல்கருப்பைகுருத்து ஞாயிறுகாளமேகம்சுற்றுச்சூழல் மாசுபாடுநீலகிரி மாவட்டம்துள்ளுவதோ இளமைபரிதிமாற் கலைஞர்காரைக்கால் அம்மையார்கேழ்வரகுதிருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்போக்கிரி (திரைப்படம்)சுற்றுச்சூழல்புனித வெள்ளிஇந்திரா காந்திமாதவிடாய்வட சென்னை மக்களவைத் தொகுதிபாண்டியர்முருகன்சிற்பி பாலசுப்ரமணியம்உயிர்ச்சத்து டிமாநகரசபை (இலங்கை)திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிநேர்பாலீர்ப்பு பெண்பஞ்சதந்திரம் (திரைப்படம்)🡆 More