ரிக்டர் அளவு

ரிக்டர் அளவு (Richter magnitude scale) என்பது நில அதிர்வுகளை அளவிடப் பயன்படுத்தப்படும் ஓர் அளவுத்திட்டம் ஆகும்.

அமெரிக்க நிலஅதிர்வுவியலாளர் சார்லஸ் ரிக்டர் 1935 ஆம் ஆண்டில் முதன்முதலாக நில அதிர்வுகளுக்கு நில அளவுகளை வரையறுத்தார். இது தரையில் ஏற்படும் நில அதிர்வின் அலை உயரத்தைக் கணிக்கும். இதன் ஓர் அலகு அதற்கு முந்தைய அலகு அளவை விடப் பத்து மடங்கு அதிக அதிர்வுகளைக் கொண்டதாக இருக்கும். நில அதிர்வுகள் ஒரு மில்லிமீட்டருக்கும் குறைவான அளவிலிருந்து பல மீட்டர்கள் வரை மிக அதிக மாறுபாடுகளைக் கொண்டதாக இருப்பதால், அவர் அளவுகளை இவ்வாறு வரையறுக்க வேண்டியிருந்தது. ஆகவே ரிக்டர் அளவில் 5 என்ற அளவு நான்கை விட பத்து மடங்கு அதிக அதிர்வுகளைக் கொண்டதாக இருக்கும். மூன்றை விட 10x10 அல்லது 100 மடங்கு அதிக அதிர்வுகளைக் கொண்டதாக இருக்கும்.

ரிக்டர் அளவில் 2.0க்கு குறைவானவற்றை சாதாரண மனிதர்களால் அறிய முடியாது. இவை மைக்ரோ நிலநடுக்கம் எனப்படும். இவை சாதாரணமாகத் தொடர்ந்து நடைபெறும். 6.0 க்கு மேல் பதிவாகும் நிலநடுக்கங்கள் மோசமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை. ரிக்டர் அளவை உருவான பிறகு அதிகபட்சமாக 8.9 வரை பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் நில அதிர்வு நிகழும் இடத்தைப் பொறுத்து ஒரே ரிக்டர் அளவைக்கு மாறுபட்ட பாதிப்புகள் ஏற்படலாம். மக்கள் நெருக்கியடித்து வாழும் நகரின் மையத்தில் நிகழும் நில அதிர்வு அளவிட முடியாத நாசத்தையும், உயிர் சேதத்தையும் ஏற்படுத்தலாம். ஆனால் அதே அளவு நில அதிர்வு ஒரு தட்டையான வனப்பிரதேசத்தில் ஏற்பட்டால் அங்குள்ள வனவிலங்குகளைச் சற்று சிதறி ஓடுவதைத் தவிர வேறு பாதிப்புகளை உண்டாக்காமலும் இருக்க முடியும்.

இவற்றையும் பார்க்கவும்

Tags:

1935அமெரிக்க ஐக்கிய நாடுசார்லஸ் ரிக்டர்நிலநடுக்கம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

உலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)ம. பொ. சிவஞானம்சிவாஜி (பேரரசர்)விபுலாநந்தர்சுற்றுலாஇந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்நாமக்கல் மக்களவைத் தொகுதிபொன்னியின் செல்வன்விசயகாந்துஜெயம் ரவிமருதமலை முருகன் கோயில்ராஜஸ்தான் ராயல்ஸ்அயோத்தியாபட்டினம் கோதண்டபாணி ராமர் திருக்கோயில்மைதாஅகமுடையார்வீரப்பன்வேலு நாச்சியார்சுற்றுச்சூழல்மதுரை வீரன்இராமநாதபுரம் மக்களவைத் தொகுதிஇந்தியாவின் மக்கள் தொகையியல்பனிக்குட நீர்ராசாத்தி அம்மாள்அருணகிரிநாதர்பனைதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)சிவம் துபேபுங்கைமலேசியாஇந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்இலவச மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடுதிருமந்திரம்சாகித்திய அகாதமி விருதுதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்அணி இலக்கணம்நயன்தாராமதுரைதாயுமானவர்கில்லி (திரைப்படம்)மத கஜ ராஜாகாடுவெட்டி குருமதீச பத்திரனபிரசாந்த்அஞ்சல் வாக்குச் சீட்டு (இந்தியா)தமிழ்த்தாய் வாழ்த்துவியாசர்உருவக அணிதென்காசி மக்களவைத் தொகுதிபிரேமலுபீனிக்ஸ் (பறவை)சிதம்பரம் நடராசர் கோயில்சித்த மருத்துவம்தலைவாசல் விஜய்செங்குந்தர்விலங்குகளின் பெயர்ப் பட்டியல்பொருநராற்றுப்படைநாடாளுமன்ற உறுப்பினர்கே. என். நேருகலாநிதி மாறன்திருமூலர்இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)மருதம் (திணை)இந்திய தேசிய சின்னங்கள்இராவணன்அண்ணாமலையார் கோயில்பறவைபழமுதிர்சோலை முருகன் கோயில்இடைச்சொல்மூவேந்தர்சின்ன வீடுயாதவர்காமம்டெல்லி கேபிடல்ஸ்கலித்தொகைபால் கனகராஜ்தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019நஞ்சுக்கொடி தகர்வு🡆 More