உத்தரப் பிரதேசம்: இந்திய மாநிலம்

உத்தரப் பிரதேசம் (Uttar Pradesh) இந்தியாவின் மாநிலங்களுள் ஒன்றாகும்.

இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலம் இதுவே. லக்னோ இம்மாநிலத்தின் தலைநகராகும். அலகாபாத், கான்பூர், வாரணாசி, ஆக்ரா ஆகியவை மற்ற முக்கிய நகரங்கள். இந்தி, உருது ஆகியவை இம்மாநிலத்தில் பெரும்பான்மையாக பேசப்படும் மொழிகள். இந்தியாவின் ஆறு பிரதமர்கள் ஜவஹர்லால் நேரு, லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி, சரண் சிங், வி. பி. சிங், சந்திரசேகர் இம்மாநிலத்தில் பிறந்தவர்கள்.

உத்தரப் பிரதேசம்
மாநிலம்
உத்தரப் பிரதேசம்: புவியமைப்பு, வரலாறு, அரசியல்
உத்தரப் பிரதேசம்: புவியமைப்பு, வரலாறு, அரசியல்
உத்தரப் பிரதேசம்: புவியமைப்பு, வரலாறு, அரசியல்
உத்தரப் பிரதேசம்: புவியமைப்பு, வரலாறு, அரசியல்
உத்தரப் பிரதேசம்: புவியமைப்பு, வரலாறு, அரசியல்
உத்தரப் பிரதேசம்: புவியமைப்பு, வரலாறு, அரசியல்
மேலிருந்து கடிகாரச் சுற்றாக:
தாஜ் மகால், ஆக்ரா கோட்டை, பத்தேப்பூர் சிக்ரி,
சாரநாத், மணிகர்ணிகா படித்துறை, புதிய யமுனை பாலம்
உத்தரப் பிரதேசம்: புவியமைப்பு, வரலாறு, அரசியல்

சின்னம்
இந்தியாவில் உத்தரப் பிரதேசத்தின் அமைவிடம்
இந்தியாவில் உத்தரப் பிரதேசத்தின் அமைவிடம்
Location of உத்தரப் பிரதேசம்
ஆள்கூறுகள்: 26°51′N 80°55′E / 26.85°N 80.91°E / 26.85; 80.91
நாடுஉத்தரப் பிரதேசம்: புவியமைப்பு, வரலாறு, அரசியல் இந்தியா
மாநில அந்தஸ்து24 சனவரி 1950
தலைநகரம் மற்றும் பெரிய நகரம்லக்னோ
மாவட்டங்கள்75
அரசு
 • நிர்வாகம்உத்தரப் பிரதேச அரசு
 • ஆளுநர்ஆனந்திபென் படேல்
 • முதலமைச்சர்யோகி ஆதித்தியநாத் (பாஜக)
 • சட்டமன்றம்ஈரவை (404 + 100 இடங்கள்)
 • நாடாளுமன்ற தொகுதிகள்மாநிலங்களவை 31
மக்களவை 80
 • உயர் நீதிமன்றம்அலகாபாத் உயர் நீதிமன்றம்
பரப்பளவு
 • மொத்தம்2,43,290 km2 (93,930 sq mi)
பரப்பளவு தரவரிசை4வது
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்199,812,341
 • தரவரிசை1-வது
 • அடர்த்தி820/km2 (2,100/sq mi)
இனங்கள்உத்தரப் பிரதேசியர்
GDP (2018–19)
 • மொத்தம்14.89 இலட்சம் கோடி (US$190 பில்லியன்)
 • தனிநபர் வருமானம்55,339 (US$690)
மொழிகள்
 • அலுவல்முறைஇந்தி
 • கூடுதல் அலுவல்முறைஉருது
நேர வலயம்IST (ஒசநே+05:30)
UN/LOCODEIN-UP
வாகனப் பதிவுUP XX—XXXX
HDI (2017)உத்தரப் பிரதேசம்: புவியமைப்பு, வரலாறு, அரசியல் 0.583
medium · 35th
கல்வியறிவு (2011)67.68%
பாலின விகிதம் (2011)912 /1000
இணையதளம்Official Website

புவியமைப்பு

இந்தியாவின் வட பகுதியில் அமைந்த மாநிலமான உத்தரப் பிரதேசம், இந்தியாவில் அதிக பரப்பளவு கொண்ட மாநிலங்களில் ஐந்தாம் இடம் வகிக்கிறது. உத்தரப் பிரதேசத்தின் அண்மையில் அமைந்த மாநிலங்கள் உத்தராகண்டம், இமாசலப் பிரதேசம், அரியானா, தில்லி, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சட்டிஸ்கர், ஜார்க்கண்ட், மற்றும் பீகார் ஆகியவை. உத்திரப் பிரதேசத்தின் வடக்கில் நேபாள நாடு அமைந்துள்ளது. கங்கை, யமுனை, கோமதி ஆறு ஆகிய பெரு நதிகள் உத்தரப் பிரதேசத்தின் வழியாக ஓடுவதால் இம்மாநிலம் செழிப்பாக உள்ளது.

2000ஆம் ஆண்டு உத்தராகண்டம் மாநிலம், உத்தரப் பிரதேசத்திலிருந்து பிரிக்கப்பட்டது. மாநிலத்தின் தெற்கு பகுதிகளில் புந்தேலி மொழி பேசும் வறண்ட வானிலை கொண்ட புந்தேல்கண்ட் மேட்டு நிலங்கள் அமைந்துள்ளது.

வேத காலத்தில் உத்தரப் பிரதேசம் குரு நாடு, பாஞ்சாலம் மற்றும் கோசல நாடு என மூன்று பகுதிகளாக இருந்தது.

வரலாற்றுக் காலத்தில் உத்தரப் பிரதேசம் புந்தேல்கண்ட், அவத், ரோகில்கண்ட், பூர்வாஞ்சல் மேல், நடு மற்றும் கீழ் தோப் பகுதிகள் என ஐந்து பகுதிகளாக உள்ளது.

வரலாறு

பண்டைய வேத காலத்தில் உத்தரப் பிரதேசப் பகுதிகளை குருக்கள், பாஞ்சாலர்கள் மற்றும் கோசலர்கள் என மூன்று அரச குலங்கள் ஆண்டனர்.

வரலாற்றுக் காலத்தில் இம்மாநிலத்தின் வளமான அவத், தோவாப், பூர்வாஞ்சல், புந்தேல்கண்ட் மற்றும் ரோகில்கண்ட் பகுதிகளை தில்லி சுல்தானகம் மற்றும் மொகலாயர்களாலும்; பின்னர் பாரசீக சியா இசுலாமிய நவாப்புகள் மற்றும் ஆப்கானிய பஷ்தூன் அரச குலம் 1719 முதல் 1858 முடிய தனியுரிமையுடனும்; பின்னர் சிப்பாய்க் கிளர்ச்சிக்குப் பின்னர் 1858 முதல் 1947 முடிய ஆங்கிலேயர்களுக்கு கட்டுப்பட்டு, ஆண்டுதோறும் கப்பம் செலுத்தி சுதேச சமஸ்தான மன்னர்களாக ஆட்சி செய்தனர். பின்னர் இந்திய விடுதலைக்குப் பின்னர் 1948-ஆம் ஆண்டில் அவத் இராச்சியம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. அவத் பகுதிகளில் சமசுகிருதம் – பாரசீகம் கலந்த அவதி மொழி பேசப்படுகிறது.

அரசியல்

உத்தரப் பிரதேச மாநிலத்தின் தற்போதைய முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்.

மக்கள் தொகையியல்

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 199,812,341 ஆக உள்ளது. நகர்புறங்களில் 22.27% மக்களும், கிராமப்புறங்களில் 77.73% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001–2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 20.23% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 104,480,510 ஆண்களும் மற்றும் 95,331,831 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு பெண்கள் 912 வீதம் உள்ளனர். 240,928 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாநிலத்தில் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 829 ஆக உள்ளது. இம்மாநிலத்தின் சராசரி படிப்பறிவு 67.68% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 77.28% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 57.18% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 30,791,331 ஆக உள்ளது.

சமயம்

இம்மாநிலத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 159,312,654 (79.73 %) ஆகவும் இசுலாமிய சமய மக்கள் தொகை 38,483,967 (19.26%) ஆகவும், சீக்கிய சமயத்தவரின் மக்கள் தொகை 643,500 (0.32%) ஆகவும் கிறித்தவ சமயத்தினரின் மக்கள் தொகை 356,448 (0.18%) ஆகவும், சமண சமய மக்கள் தொகை 213,267 (0.11%) ஆகவும், பௌத்த சமய மக்கள் தொகை 206,285 (0.10%) ஆகவும், பிற சமயத்து மக்கள் தொகை 13,598 (0.01%) ஆகவும் மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள் தொகை 582,622 (0.29%) ஆகவும் உள்ளது.

மொழிகள்

இம்மாநிலத்தின் ஆட்சி மொழியான இந்தி மொழியுடன், உருது, பஞ்சாபி மற்றும் வட்டார மொழிகளும் பேசப்படுகிறது.

மாவட்டங்கள்

உத்தரப் பிரதேசம்: புவியமைப்பு, வரலாறு, அரசியல் 
உத்தரப் பிரதேச மாநிலத்தின் 18 நிர்வாகக் கோட்டங்கள்

உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் பதினெட்டு நிர்வாகக் கோட்டங்களின் கீழ், எழுபது வருவாய் மாவட்டங்கள் அமைந்துள்ளன. அவைகள் பின்வருமாறு;

சுற்றுலா

உத்தரப் பிரதேசம்: புவியமைப்பு, வரலாறு, அரசியல் 
தாஜ் மகால்

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களும், ஆன்மிக வழிபாட்டுத் தலங்களும்; தாஜ்மகால், பத்தேப்பூர் சிக்ரி , ஆக்ரா, பிரயாகை, வாரணாசி, அயோத்தி, ராம ஜென்மபூமி, மதுரா, பிருந்தாவனம், கிருஷ்ண ஜென்மபூமி, கயை, புத்தகயா, சாரநாத் மற்றும் குசிநகர் ஆகும்.

முக்கிய கல்வி நிலையங்கள்

இந்திய தொழில்நுட்பக் கழகம் கான்பூர், பனாரசு இந்து பல்கலைக்கழகம், அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம், அலகாபாத் பல்கலைக்கழகம், இந்திய மேலாண்மை கழகம் லக்னோ, இராஜிவ் காந்தி பெட்ரேலிய தொழில் நுட்ப நிறுவனம் மற்றும் மோதிலால் நேரு தேசிய தொழில் நுட்பக் கழகம் ஆகும்.

பொருளாதாரம்

மாநிலத்தின் பொருளாதாரம் வேளாண்மைத் தொழிலையே சார்ந்து உள்ளது. முக்கிய விளைபொருட்கள் கோதுமை, நெல், கரும்பு ஆகும். புதிய நொய்டா பெருநகர் ஆசியாவில் மிக விரைவாக வளர்ந்துவரும் தொழில் நகரங்களில் ஒன்றாக உள்ளது.

முக்கிய விழாக்கள்

உத்தரப் பிரதேசம்: புவியமைப்பு, வரலாறு, அரசியல் 
உத்தரப் பிரதேசத்தின் ரோகில்கண்ட், தோவாப், புந்தேல்கண்ட், அவத், பகேல்கண்ட் மற்றும் பூர்வாஞ்சல் பிராந்தியங்கள்

படங்கள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

உத்தரப் பிரதேசம் புவியமைப்புஉத்தரப் பிரதேசம் வரலாறுஉத்தரப் பிரதேசம் அரசியல்உத்தரப் பிரதேசம் மக்கள் தொகையியல்உத்தரப் பிரதேசம் மாவட்டங்கள்உத்தரப் பிரதேசம் சுற்றுலாஉத்தரப் பிரதேசம் முக்கிய கல்வி நிலையங்கள்உத்தரப் பிரதேசம் பொருளாதாரம்உத்தரப் பிரதேசம் முக்கிய விழாக்கள்உத்தரப் பிரதேசம் படங்கள்உத்தரப் பிரதேசம் இதனையும் காண்கஉத்தரப் பிரதேசம் மேற்கோள்கள்உத்தரப் பிரதேசம் வெளி இணைப்புகள்உத்தரப் பிரதேசம்அலகாபாத்ஆக்ராஇந்திஇந்தியாஇந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்இந்திரா காந்திஉருதுகான்பூர்சந்திரசேகர்சரண் சிங்ஜவஹர்லால் நேருலக்னோலால் பகதூர் சாஸ்திரிவாரணாசிவி. பி. சிங்

🔥 Trending searches on Wiki தமிழ்:

மாணிக்கம் தாகூர்மலேசியாதிருச்சிராப்பள்ளிதேவாரம்திராவிட மொழிக் குடும்பம்சிவன்ரோகித் சர்மாதீபிகா பள்ளிக்கல்விழுப்புரம் மக்களவைத் தொகுதிசன்ரைசர்ஸ் ஐதராபாத்பாலுறவுமுடியரசன்வடிவேலு (நடிகர்)அயோத்தி இராமர் கோயில்ஜெயம் ரவிமுன்மார்பு குத்தல்கும்பகோணம்கருணீகர்ஆயுள் தண்டனைமயங்கொலிச் சொற்கள்ஐயப்பன்சினேகாஇந்தியத் தேர்தல்கள்மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுகுறவஞ்சிவேற்றுமையுருபுதமிழ்நாட்டின் மாவட்டங்கள்தேசிய முற்போக்குத் திராவிடக் கழகம்தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021தாலாட்டுப் பாடல்சப்ஜா விதைவிளக்கெண்ணெய்மண் பானைதேனி மக்களவைத் தொகுதிகொன்றை வேந்தன்பால கங்காதர திலகர்காவிரிப்பூம்பட்டினம்சென்னை மாநகர பேருந்து வழித்தடங்கள்சோழர் காலக் கல்வெட்டுகள்பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்ஔவையார் (சங்ககாலப் புலவர்)இந்தியாவில் இட ஒதுக்கீடுவானிலைவெ. இறையன்புபூரான்சொல்முதுமொழிக்காஞ்சி (நூல்)தமிழ் எண் கணித சோதிடம்இந்தியாவின் பொருளாதாரம்காமராசர்சூரரைப் போற்று (திரைப்படம்)ஊராட்சி ஒன்றியம்தமிழ்விடு தூதுநாளிதழ்பால் (இலக்கணம்)சமூகம்அருந்ததியர்வராகிதமிழ்க் கல்வெட்டுகள்இந்தியச் சிறுத்தைதிருக்குறள்உப்புச் சத்தியாகிரகம்தேசிய ஜனநாயகக் கூட்டணிதிருப்பாவைமுகலாயப் பேரரசுதமிழ்ப் புத்தாண்டுகாளமேகம்டி. டி. வி. தினகரன்சூரைதிருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்திருமந்திரம்விண்டோசு எக்சு. பி.மதராசபட்டினம் (திரைப்படம்)ஆசாரக்கோவைசிதம்பரம் மக்களவைத் தொகுதிதாராபாரதிமும்பை இந்தியன்ஸ்நாச்சியார் திருமொழி🡆 More