யோகினி கோயில், ஒடிசா

64 யோகினி கோயில் அல்லது சௌசதி யோகினி கோயில் (Chausathi Jogini Mandir - 64 Joginis Temple)(ஒடியா: ଚଉଷଠି ଯୋଗିନୀ ମନ୍ଦିର, ହୀରାପୁର) இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் கோர்த்தா மாவட்டத்தின் ஹிராப்பூர் கிராமத்தில் அமைந்த பழைமையான சாக்த சமயக் கோயில் ஆகும்.

இக்கோயில் காளிக்கு அர்ப்பணிக்கப்பட்டதாகும்.

சௌசதி யோகினி கோயில்
யோகினி கோயில், ஒடிசா
சௌசதி யோகினி கோயில், ஹிராப்பூர் கிராமம், ஒடிசா
யோகினி கோயில், ஒடிசா is located in ஒடிசா
யோகினி கோயில், ஒடிசா
ஒடிசாவில் அமைவிடம்
பெயர்
வேறு பெயர்(கள்):யோகினி கோயில்
அமைவிடம்
நாடு:யோகினி கோயில், ஒடிசா இந்தியா
மாநிலம்:ஒடிசா
மாவட்டம்:கோர்த்தா
அமைவு:ஹிராப்பூர்
ஏற்றம்:17 m (56 அடி)
ஆள்கூறுகள்:20°13′35.454″N 85°52′32.141″E / 20.22651500°N 85.87559472°E / 20.22651500; 85.87559472
கோயில் தகவல்கள்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:கலிங்கக் கட்டிடக்கலை
யோகினி கோயில், ஒடிசா
மகாமாயா
யோகினி கோயில், ஒடிசா

இக்கோயிலின் உட்புறச் சுவரில் 64 கலைகள், 64 நோய்களுக்கு காரணமாக 64 யோகினி தேவதைகளின் சிற்பங்கள் உள்ளதால், இக்கோயிலை 64 யோகினி கோயில் என்றும் அழைப்பர். தற்போது இந்தியத் தொல்லியல் ஆய்வகம் இக்கோயிலை நிர்வகித்து, பராமரிக்கிறது.

அமைவிடம்

இக்கோயில் ஒடிசா மாநிலத் தலைநகரமான புவனேசுவரத்திலிருந்து 20 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

வரலாறு

யோகினி கோயில், பொ.ஊ. 9ம் நூற்றாண்டில் கலிங்க இராணி ஹிராவதியால் கட்டப்பட்டது.

கோயில் அமைப்பு

யோகினி கோயில் மணற்கல்லால் கட்டப்பட்டுள்ளது. யோனி அமைப்பில், வட்ட வடிவில் இக்கோயிலின் கட்டிட அமைப்பு உள்ளது. கோயிலின் மூலவரான காளி தேவி அரக்கனின் உடல் மீது ஏறி நின்ற கோலத்தில் உள்ள சிலை உள்ளது. கருவறையின் வெளிப்புறச் சுவர்களில் ஏகபாத மூர்த்தி, பார்வதி, பிள்ளையார், ரதி, சாமுண்டி, பைரவர், கிருஷ்ணர் சிற்பங்கள் உள்ளது. கோயிலின் உட்புறச் சுவர்களில் 64 யோகினி தேவதைகளின் கருங்கல் சிற்பங்கள் உள்ளது. இக்கோயில் சூரிய ஒளி படுமாறு அமைக்கப்பட்டுள்ளது. நுழைவாயிலில் துவாரபாலகர் வடிவங்கள் உள்ளன. வெளிச்சுவரில் ஒன்பது காத்யாயினி வடிவங்கள் உள்ளன. கோயிலின் மையப்பகுதியில் உள்ள மண்டபம் சண்டி மண்டபம் எனப்படுகிறது. முக்கியமாக சாக்த சமய தாந்திரீகர்கள் 64 யோகினி கோயிலில் தாந்திரீகச் சடங்குகள் செய்து வழிபட்டுள்ளனர்.

பிற கோயில்கள்

உத்திரப்பிரதேசம், மத்தியப்பிரதசம் போன்ற மாநிலங்களில் யோகினி கோயில்கள் காணப்படுகின்றன. ஒடிசா மாநிலத்தில் ராணிப்பூர் மற்றும கஜுராஹோ, கொனார்க், ஜபல்பூர் அருகில் இருக்கும் மிடௌலி, லலித்பூர் அருகில் (மத்தியப்பிரதேசம்), துதாஹி, வாரணாசி போன்ற ஊர்களிலும் மோகினி வழிபாடு சிறந்திருந்தது. ஜபல்பூர் அருகில் உள்ள பேடேகாட் என்ற இடத்தில் உள்ள யோகினி கோயில் மிகவும் பெரியதாகும். யோகினி பெண் தெய்வங்களின் பெயர்கள் அவற்றின் பீடத்தில் பொறிக்கப்பட்டுள்ளது சிறப்பம்சமாகக் கருதப்படுகிறது.

படக்காட்சிகள்

இதனையும் காண்க

  • ஒடிசா கோயில்கள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

யோகினி கோயில்

Tags:

யோகினி கோயில், ஒடிசா அமைவிடம்யோகினி கோயில், ஒடிசா வரலாறுயோகினி கோயில், ஒடிசா கோயில் அமைப்புயோகினி கோயில், ஒடிசா பிற கோயில்கள்யோகினி கோயில், ஒடிசா படக்காட்சிகள்யோகினி கோயில், ஒடிசா இதனையும் காண்கயோகினி கோயில், ஒடிசா மேற்கோள்கள்யோகினி கோயில், ஒடிசா வெளி இணைப்புகள்யோகினி கோயில், ஒடிசாor:ଚଉଷଠି ଯୋଗିନୀ ମନ୍ଦିର, ହୀରାପୁରஒடிசாஒடியாகாளிகோர்த்தா மாவட்டம்சாக்தம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

சிறுதானியம்அகரவரிசைஇலக்கியம்செவ்வாய்க்கிழமை (திரைப்படம்)மு. அ. சிதம்பரம் அரங்கம்திருவேட்களம் பாசுபதேசுவரர் கோயில்திறன்பேசிநாகப்பட்டினம் மக்களவைத் தொகுதிமெய்யெழுத்துசென்னைசரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)காற்று வெளியிடைதமிழ்நாடுகரூர் மக்களவைத் தொகுதிகாப்பியம்கௌதம புத்தர்தமிழர் அளவை முறைகள்தேவநேயப் பாவாணர்புதுச்சேரிஅலீபொன்னுக்கு வீங்கிபிரேமலதா விஜயகாந்த்திராவிட மொழிக் குடும்பம்மலேசியாசு. வெங்கடேசன்குற்றாலக் குறவஞ்சிஅகமுடையார்திருநங்கைஹோலிஅகத்தியர்சித்த மருத்துவம்கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிசுப்பிரமணிய பாரதிசங்க காலப் பெண்பாற் புலவர்கள்புதினம் (இலக்கியம்)இலட்சம்மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுகுற்றியலுகரம்கிருட்டிணன்உருவக அணிஐயப்பன்பகவத் கீதைபரிபாடல்முதலாம் உலகப் போர்கிராம நத்தம் (நிலம்)நீக்ரோகுண்டூர் காரம்தொழிற்பெயர்ஹதீஸ்முகம்மது நபி நிகழ்த்திய அற்புதங்கள்தன்னுடல் தாக்குநோய்மதுரைக் காஞ்சிஇரட்டைக்கிளவிபால்வினை நோய்கள்தேனீரமலான்தமிழ் தேசம் (திரைப்படம்)பண்ணாரி மாரியம்மன் கோயில்முல்லை (திணை)உரைநடைதிருவண்ணாமலைதட்டம்மைஇயேசு காவியம்ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்அல்லாஹ்தென்காசி மக்களவைத் தொகுதிவாரணம் ஆயிரம் (திரைப்படம்)ஔரங்கசீப்நாடாளுமன்ற உறுப்பினர்பிட்காயின்சிவம் துபேமட்பாண்டம்கங்கைகொண்ட சோழபுரம்தமிழ் இலக்கணம்இந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள்பத்துப்பாட்டுஜெ. இராபர்ட் ஓப்பன்கைமர்பழமுதிர்சோலை முருகன் கோயில்🡆 More