சமூகவியல்

சமூகவியல் (Sociology) என்பது மனித சமூகம், சமூக உறவுகள், சமூக நடத்தைகள், சமூக அமைப்பு முறை, சமூக வாழ்க்கை முறை ஆகியவற்றை அறிவியல் நோக்கில் ஆயும் ஓர் இயல் ஆகும்.

இது சமூக ஒழுங்கு, ஒழுங்கின்மை, மாற்றங்கள் ஆகியவை பற்றிய அறிவுத் தொகுதியை உருவாக்கும் நோக்கில் செயல்முறை ஆய்வுகளையும், பகுப்பாய்வு முறைகளையும் பயன்படுத்தும் ஒரு சமூக அறிவியல் ஆகும். மனிதர்கள் சமூக விலங்குகள். அதாவது மனிதர்களின் அனேக செயல்பாடுகள் பிற மனிதருடன் சேர்ந்தே அமைகின்றன. ஆகையால் சமூகவியலின் முக்கிய ஆய்வுப் பொருளாக சமூகம் அல்லது மக்கள் குழு அமைகின்றது. சமூகம் தனிமனிதனை எப்படி பாதிக்கின்றது, தனிமனிதன் சமூகத்தை எப்படி பாதிக்கின்றான் என்பதும் சமூகவியலின் ஆய்வுக் களமே. சமூகவியலின் தந்தை ஆகஸ்ட் கோம்ட் (Auguste Comte) என்ற பிரெஞ்சு மெய்யியலாளர் ஆவார்.

சமூகவியல்
சமூகவியல்

வரலாறு

சமூகவியலின் தோற்றம் மேற்கத்திய தத்துவத்திலிருந்து தொடங்குகிறது. கிரேக்கத் தத்துவஞானி பிளேட்டோவின் காலம் முதல் சமூகவியல் உருவாகியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. கன்பூசியஸ் வகுத்த வாழ்க்கை முறை பற்றிய கொள்கைகள் சமூகவியல் வளரத் தொடங்கியதை காட்டுகிறது. மேலும் இடைக்கால இஸ்லாத்திலும் சமூகவியல் தோன்றியதற்கான ஆதாரங்களைக் காணலாம். இப்னு கல்துன் எனும் மெய்யியலாளர் தான் உலகின் முதல் சமூகவியலாளர் என்று சிலர் கருதுகின்றனர். அவர் எழுதிய முகத்திமா (அறபு மூலம) (Muqaddimah) எனும் நூலில் சமூக இணைப்பு மற்றும் சமூக முரண்பாடு பற்றி குறிப்பிடுகிறார். எனினும் முறையாக சமூகவியலை முதன் முதலாக விளக்கியவர் ஆகஸ்ட் கோம்ட் என்ற பிரெஞ்சு மெய்யியலாளர் ஆவார்.

மேற்கோள்கள்

Tags:

அறிவியல்ஆகஸ்ட் கோம்ட்சமூகம்பிரெஞ்சுமனிதன்மெய்யியல்விலங்கு

🔥 Trending searches on Wiki தமிழ்:

சேரர்வெண்பாநெடுநல்வாடைபாரதிதாசன்முத்துராஜாகன்னியாகுமரி மாவட்டம்கில்லி (திரைப்படம்)வெ. இராமலிங்கம் பிள்ளைமுதலுதவிதமிழ் இலக்கணம்செம்மொழிமகாவீரர்ஊதியம்இந்து சமயம்ஜவகர்லால் நேருஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடுமருது பாண்டியர்நாட்டு நலப்பணித் திட்டம்கண்ணாடி விரியன்கலிங்கத்துப்பரணிதென்காசி மக்களவைத் தொகுதிதாவரம்ஊமை விழிகள் (1986 திரைப்படம்)கூத்தாண்டவர் திருவிழார. பிரக்ஞானந்தாஆடு ஜீவிதம்திருமுருகாற்றுப்படைதிருமூலர்சுப்பிரமணியசுவாமி கோயில், எட்டுக்குடிகாதல் கொண்டேன்தமிழர் நெசவுக்கலைமாசாணியம்மன் கோயில்ஐக்கிய நாடுகள் அவைசித்தர்இராகுல் காந்திநள்ளிவாரணம் ஆயிரம் (திரைப்படம்)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்திராவிட இயக்கம்உவமையணிசே குவேராஎடப்பாடி க. பழனிசாமிமக்களவை (இந்தியா)நானும் ரௌடி தான் (திரைப்படம்)பூப்புனித நீராட்டு விழாபெண்களின் உரிமைகள்செண்டிமீட்டர்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்சீவக சிந்தாமணிவெந்து தணிந்தது காடுகருப்பைதமிழ் மாதங்கள்கணினிகுமரிக்கண்டம்மொழிபெயர்ப்புபுற்றுநோய்ஏலகிரி மலைஆடுஜீவிதம் (திரைப்படம்)சிட்டுக்குருவிஐந்திணைகளும் உரிப்பொருளும்திராவிட முன்னேற்றக் கழகம்நீரிழிவு நோய்நீர் மாசுபாடுசென்னைகாடுவெட்டி குருமூலம் (நோய்)அக்கி அம்மைதமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019வெள்ளை வாவல்முதலாம் இராஜராஜ சோழன்மனித மூளைதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை)பாட்டாளி மக்கள் கட்சிநிலாஅகநானூறுயானையின் தமிழ்ப்பெயர்கள்பட்டினப் பாலைசெவ்வாய்க்கிழமை (திரைப்படம்)🡆 More