கபச் சுரப்பி

கபச் சுரப்பி (Pituitary gland, பிட்யூட்டரி சுரப்பி), அல்லது hypophysis, ஹைப்போபைசிஸ்), என்பது ஓர் அகஞ் சுரக்கும் சுரப்பி ஆகும்.

இது ஒரு பட்டாணி அளவிலும், 0.5 கி (0.02 அவுன்ஸ்) எடையைக் கொண்டதாகவும் இருக்கிறது. மூளையின் அடியில் பரிவக கீழ் பகுதியின் கீழாக ஒரு நீட்சியாக இது உள்ளது, அதில் ஒரு சிறிய எலும்பு குழியில் (செல்லா டர்சிகா) அமைந்துள்ளது, இதனை ஒரு ட்யூரல் மடிப்பு (டயஃப்ரக்மா செல்லே) மூடியிருக்கிறது. பிட்யூட்டரி சுரப்பி அமைந்துள்ள பிட்யூட்டரி (கபச் சுரப்பி) ஃபோஸ்ஸா என்ற பகுதியானது, மூளையின் தரைப்பகுதியில் உள்ள மத்திய கிரானியல் ஃபோஸ்ஸாவின் ஸ்பெனாய்டு எலும்பில் அமைந்துள்ளது. இதுவே முதன்மையான சுரப்பி என்று கருதப்படுகிறது. பிட்யூட்டரி சுரப்பியானது,உடல்சமநிலையை (ஹோமியோஸ்டாஸிஸ்) ஒழுங்குப்படுத்தும் ஹார்மோன்களைச் சுரக்கிறது. இதில் பிற நாளமில்லா சுரப்பிகளைத் தூண்டும் ட்ரோபிக் ஹார்மோன்களும் அடங்கும். இதனுடைய செயல்பாடு ஹைப்போதலாமசுடன் மைய நரம்பு மண்டலம் மூலம் இணைக்கப்படுகிறது.

Pituitary gland
கபச் சுரப்பி
Located at the base of the மனித மூளை, the pituitary gland is protected by a bony structure called the sella turcica (also known as turkish saddle) of the sphenoid bone.
கபச் சுரப்பி
Median sagittal through the hypophysis of an adult monkey. Semidiagrammatic.
இலத்தீன் hypophysis, glandula pituitaria
கிரேயின்

subject #275 1275

தமனி superior hypophyseal artery, infundibular artery, prechiasmal artery, inferior hypophyseal artery, capsular artery, artery of the inferior cavernous sinus
முன்னோடி neural and oral ectoderm, including Rathke's pouch
ம.பா.தலைப்பு Pituitary+Gland

பிரிவுகள்

மூளையின் கீழ்ப்பகுதியில் அமைந்துள்ள பிட்யூட்டரியானது, இரண்டு மடல்களைக் (இரண்டு சோனைகளை)கொண்டது: வெளிப்புற பிட்யூட்டரி (முற்பக்கச் சோனை) (அடெனொஹைபோபைசிஸ்) மற்றும் உட்புற பிட்யூட்டரி(பிற்பக்க சோனை) (நியூரோஹைப்போபைசிஸ்). பிட்யூட்டரி தண்டின் (கபச்சுரப்பி காம்பின்) மூலமாக பிட்யூட்டரி ஹைப்போதலாமஸுடன் செயல்பாட்டு ரீதியாக இணைந்துள்ளது, அதாவது பரிவக்கீழின் ஓமோன்களினால் கபச்சுரபியினால் ஓமோன்கள் வெளியிடப்படுவது கட்டுப்படுத்தப்படுகிறது. பிட்யூட்டரி சுரப்பியானது முதன்மை நாளமில்லா சுரப்பி என்று அழைக்கப்பட்டாலும், இதனுடைய இரண்டு மடல்களும் ஹைப்போதலாமஸின் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றன.

வெளிப்புற பிட்யூட்டரி

வெளிப்புற பிட்யூட்டரி பின்வரும் முக்கிய நாளமில்லா ஹார்மோன்களை உருவாக்குகிறது மற்றும் சுரக்கிறது, அவை ACTH, TSH, PRL, GH, எண்டோஃபின்கள், FSH, மற்றும் LH. இந்த ஹார்மோன்கள் வெளிப்புற பிட்யூட்டரியிலிருந்து ஹைப்போதலாமஸின் தூண்டுதலால் சுரக்கப்பட்டு வெளிவிடப்படுகின்றன. ஹைப்போதலாமிக் ஹார்மோன்கள், ஒரு வகை சிறப்பு தந்துகி அமைப்பின் மூலமாக வெளிப்புற மடலில் சுரக்கப்படுகின்றன, இந்த அமைப்பிற்கு ஹைப்போதலாமில்-ஹைப்போபைசீல் போர்ட்டல் அமைப்பு என்று பெயர். வெளிப்புற பிட்யூட்டரியானது, மூன்று பகுதிகளாக அமைந்துள்ளது, அவை பார்ஸ் ட்யூபெராலிஸ், பார்ஸ் இன்டர்மீடியா மற்றும் பார்ஸ் டிஸ்டாலிஸ் ஆகியவை ஆகும். இது பார்ன்க்ஸின் ராத்கேஸ் பவுச் என்றழைக்கப்படும் டோர்சல் சுவரில் உள்ள குழிகளில் உருவாக்கப்படுகிறது (ஸ்டோமோடியல் பகுதி).

உட்புற பிட்யூட்டரி

உட்புற பிட்யூட்டரி பின்வருவனவற்றை சேகரித்து வெளியிடுகிறது:

  • ஆக்ஸிடோசின், இதன் பெரும்பகுதி ஹைப்போதலாமஸின் பராவென்ட்ரிகுலர் உட்கருவில் வெளியிடப்படுகிறது
  • ஆன்டிடையூரிடிக் ஹார்மோன் (ADH, வாஸ்ப்ரஸின் என்றும் AVP, அர்ஜின் வாஸோப்ரஸின் என்றும் அழைக்கப்படுகிறது), இதன் பெரும்பகுதி ஹைப்போதலாமஸின் சுப்ரவுப்டிக் உட்கருவிலிருந்து வெளியிடப்படுகிறது

நேர்மறை பின்னூட்ட சுழற்சியை உருவாக்கக்கூடிய ஒருசில ஹார்மோன்களில் ஆக்ஸிடோசினும் ஒன்று. எடுத்துக்காட்டாக, கருப்பையில் ஏற்படும் சுருக்கம் ஆக்ஸிடோசின் வெளியிடப்படுவதைத் தூண்டுகிறது, இதன் வெளியீடு மீண்டும் கருப்பை சுருக்கத்தை அதிகமாக்குகிறது. இந்த நேர்மறை பின்னூட்ட சுழற்சி பிரசவ காலம் முழுவதும் தொடர்கிறது.

இடைநிலை மடல்

பல விலங்குகளில் ஓர் இடைநிலை மடலையும் காணப்படுகிறது. எடுத்துக்காட்டாக, மீன்களில், உடல்நிலை வண்ண மாற்றத்துக்கு, இதுயே காரணமாகும். வளர்ந்த மனிதர்களில், இது வெளிப்புற மற்றும் உட்பற பிட்யூட்டரிகளுக்கு இடையே மெல்லிய செல்களிலான லேயராக மட்டுமே காணப்படுகிறது. இந்த இடைநிலை மடலானது, மெலனோசைட் தூண்டுதல் ஹார்மோனை (MSH) சுரக்கிறது, ஆனாலும் இந்த செயல்பாடு வெளிப்புற பிட்யூட்டரியால் (ஓரளவுக்கு) செயல்படுத்தப்படுகிறது.

முதுகெலும்பு உள்ள உயிரினங்களுக்கு இடையே காணப்படும் வேறுபாடுகள்

எல்லா முதுகெலும்பு உள்ள உயிரினங்களிலும், பிட்யூட்டரி சுரப்பி காணப்படுகிறது, ஆனால் அதன் அமைப்பு பல்வேறு குழுக்களுக்கு இடையே வேறுபடுகிறது.

மேலே விவரிக்கப்பட்ட, பிட்யூட்டரி சுரப்பியின் பிரிவுகள், பொதுவாக எல்லா பாலூட்டிகளிலும் காணப்படுகிற ஒரு அமைப்பாகும், மேலும் இது எல்லா நான்கு கால் உயிரிகளுக்கும் பலநிலைகளில் வேறுபடக்கூடியது. ஆனாலும், பாலூட்டிகளில் மட்டுமே, உட்புற பிட்யூட்டரி ஒரு சிறிய வடிவத்தில் காணப்படுகிறது. லங்ஃபிஷ்களில் இது கிட்டத்தட்ட ஒரு தட்டையான பரப்பில் திசுக்களின் தொகுப்பாக, வெளிப்புற பிட்யூட்டரிக்கு மேலே காணப்படுகிறது, நீர்நில வாழ்வன, ஊர்வன மற்றும் பறவைகளில், இது இன்னும் வளர்ச்சியடைந்த நிலையில் காணப்படுகிறது. மேலும் இடைநிலை மடலானது, நான்குகால் உயிரினங்களில் முழுமையாக வளர்ச்சியடைந்திருப்பதில்லை, மேலும் இது பறவைகளில் முழுவதுமே இல்லாமலிருக்கிறது.

லங்ஃபிஷ்களைத் தவிர, பிற மீன்களில் பிட்யூட்டரியின் அமைப்பு நான்கு கால் உயிரினங்களை விட பொதுவாக வேறுபட்டதாகவே காணப்படுகிறது. பொதுவாக, இடைநிலை மடல் நன்றாக வளர்ந்து, மீதமுள்ள வெளிப்புற பிட்யூட்டரியின் அளவில் இருக்கக்கூடும். உட்புற மடலானது, பிட்யூட்டரி தண்டின் அடிப்பகுதியில் திசுக்களின் தொகுப்பின் மூலமாக பொதுவாக உருவாக்கப்படுகிறது, மேலும் பெரும்பாலான சூழல்களில், இதற்கு நேர் கீழே உள்ள, வெளிப்புற பிட்யூட்டரி திசுக்களை நோக்கி, சீரற்ற விரல் போன்ற நீட்சிகளை அனுப்புகிறது. வெளிப்புற பிட்யூட்டரி, பொதுவாக இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது, அதிகம் உள்ளே காணப்படும் ரோஸ்ட்ரால் பகுதி மற்றும் உள்ளே காணப்படும் ப்ரோக்ஸிமல் பகுதி ஆகியவை, ஆனாலும் இவை இரண்டுக்குமான எல்லைகள் பெரும்பாலும் தெளிவாக இருப்பதில்லை. எலாஸ்மோப்ராஞ்ச்களில், வெளிப்புற பிட்யூட்டரிக்கு கீழே கூடுதலாக ஒரு வென்ட்ரல் லோப் காணப்படுகிறது.

எல்லா மீன்களுக்கும் முன்னோடி உயிரினமான லேம்ப்ரைகளில், முன்னோடி விலங்குகளிலிருந்து எவ்வாறு பிட்யூட்டரி உருவாகியிருக்கும் என்பதை சுட்டிக்காட்டும் அமைப்பு காணப்படுகிறது. இதில் உட்புற பிட்யூட்டரியானது, மூளையின் அடிப்பகுதியில் காணப்படும் ஒரு எளிய திசுக்களான தொகுதி மட்டுமே, மேலும் இதில் பிட்யூட்டரி தண்டு எதுவும் காணப்படுவதில்லை. ராத்கேஸ் பவுச் ஆனது, வெளிப்புறத்தில் திறந்தும், நாசித் துவாரங்களுக்கு அருகே மூடியும் காணப்படுகிறது. இந்த பவுச்சுடன் மிகவும் நெருக்கமாக இணைந்துள்ள மூன்று தனிப்பட்ட கிளாண்டுலார் திசு தொகுதிகள் உள்ளன, இவை உட்புற பிட்யூட்டரியின் இடைநிலை மடல், ரோஸ்ட்ரால் மற்றும் ப்ரோக்ஸிமல் பகுதிகள் ஆகியவற்றைச் சார்ந்தவையாகும். இந்த பகுதிகள் ஒன்றிடமிருந்து ஒன்று மெனின்கியல் இதழ்களால் பிரிக்கப்பட்டுள்ளன, இதிலிருந்து, பிற முதுகெலும்புள்ள உயிரிகளில், பிட்யூட்டரியானது, பல தனித்தனியான ஆனால் நெருக்கமான தொடர்பு கொண்ட சுரப்பிகள் இணைந்து உருவாகியிருக்கக் கூடும் என்பதைச் சுட்டிக்காட்டுகின்றன.

பல மீன்களில் யூரோஃபைசிஸ் என்ற நியூரல் சுரப்பு சுரப்பியும் உள்ளன, இவை உட்புற பிட்யூட்டரியைப் போன்றே உள்ளவை ஆகும், ஆனால் முதுகு தண்டு உடன் இணைந்து வால்பகுதிகளில் காணப்படுகிறது. இது ஆஸ்மோரெகுலேஷன் போன்ற பணிகளை செய்யக்கூடும்.

செயல்பாடுகள்

பிட்யூட்டரி ஹார்மோன்கள் பின்வரும் உடல் செயல்களைக் கட்டுப்படுத்த உதவுகின்றன:

  • வளர்ச்சி
  • இரத்த அழுத்தம்
  • கர்ப்பம் மற்றும் குழந்தைப்பேற்றின்போது, கருப்பையைச் சுருக்குவது போன்ற குழந்தைப்பேறு ஆகியவற்றின் சில கூறுகள்
  • மார்பக பால் உற்பத்தி
  • ஆண் மற்றும் பெண்களிடைய பாலியல் உறுப்பு செயல்பாடுகள்
  • தைராய்டு சுரப்பியின் செயல்பாடு
  • உணவை சக்தியாக மாற்றுதல் (வளர்சிதைமாற்றம்)
  • உடலில் நீர் மற்றும் சவ்வூடுபரவல் ஒழுங்குப்படுத்தல்
  • சிறுநீரகங்களில் நீர் உறிஞ்சப்படுவதைக் கட்டுப்படுத்தும் ADH (ஆன்டிடையூரிடிக் ஹார்மோன்) சுரப்பு
  • வெப்பநிலை ஒழுங்குப்படுத்தல்

கூடுதல் படங்கள்

குறிப்புதவிகள்

புற இணைப்புகள்

Tags:

கபச் சுரப்பி பிரிவுகள்கபச் சுரப்பி செயல்பாடுகள்கபச் சுரப்பி கூடுதல் படங்கள்கபச் சுரப்பி குறிப்புதவிகள்கபச் சுரப்பி புற இணைப்புகள்கபச் சுரப்பிமூளை

🔥 Trending searches on Wiki தமிழ்:

நெருப்புஸ்ரீலீலாஐக்கூதேசிய ஜனநாயகக் கூட்டணிதிராவிட முன்னேற்றக் கழகம்பேயர்ன் மியூனிக் கால்பந்துக் கழகம்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்ராஜஸ்தான் ராயல்ஸ்திரு. வி. கலியாணசுந்தரனார்வேற்றுமை (தமிழ் இலக்கணம்)சத்ய பிரதா சாகுவிருந்தோம்பல்கிராம சபைக் கூட்டம்இராமலிங்க அடிகள்கண்ணனின் 108 பெயர் பட்டியல்குருதி வகைபத்துப்பாட்டுஇந்திய ரூபாய்தூது (பாட்டியல்)ஸ்ரீ ராம ராஜ்யம்நாம் தமிழர் கட்சிபிரேமலதா விஜயகாந்த்அளபெடைதமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2014நரேந்திர மோதிதமிழ்நாடு மாநிலங்களவை உறுப்பினர்களின் பட்டியல்சுற்றுலாஐஞ்சிறு காப்பியங்கள்இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்தீபிகா பள்ளிக்கல்60 வயது மாநிறம்கருணாநிதி குடும்பம்கண் கண்ட தெய்வம்யாதவர்நாளந்தா பல்கலைக்கழகம்ஷங்கர் (திரைப்பட இயக்குநர்)இளையராஜா இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள்கல்லீரல் இழைநார் வளர்ச்சிசிறுத்தைசிறுநீரகம்அணி இலக்கணம்கல்வெட்டுசிலம்பம்சாருக் கான்சிவன்பனைசேரர்தமிழ்க் கல்வெட்டுகள்நான்மணிக்கடிகைபெரும்பாணாற்றுப்படைராசாத்தி அம்மாள்எடப்பாடி க. பழனிசாமிதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்சரண்யா துராடி சுந்தர்ராஜ்பட்டினப் பாலைதிரைப்படம்இந்திய அரசியலமைப்பின் முகப்புரைபால காண்டம்உன்னை நினைத்துவிளையாட்டுநக்சலைட்டுஆய்த எழுத்து (திரைப்படம்)உத்தரகோசமங்கைஇந்திய உச்ச நீதிமன்றம்இந்திரா காந்திஆங்கிலம்கங்கைகொண்ட சோழபுரம்துரைமுருகன்காதல் தேசம்நாட்டு நலப்பணித் திட்டம்சனீஸ்வரன்அன்னி பெசண்ட்காதல் கொண்டேன்மகாபாரதம்முதற் பக்கம்அயோத்தி தாசர்தமிழர் கலைகள்கருமுட்டை வெளிப்பாடுஞானபீட விருது🡆 More