முதலாம் கான்ஸ்டன்டைன்

முதலாம் கான்ஸ்டன்டைன் என்று பொதுவாக அழைக்கப்படும் பிளேவியஸ் வலேரியஸ் ஒரேலியஸ் கான்ஸ்டன்டினஸ் (27 பிப்ரவரி 272 – 22 மே 337) உரோமப் பேரரசர் ஆவார்.

இவர் கிழக்கத்திய மரபுவாதத் திருச்சபையினர், பைசாந்தியக் கத்தோலிக்கர் ஆகியோர் மத்தியில் புனிதர் கான்ஸ்டன்டைன் எனவும் அறியப்படுபவர். இவர் கி.பி 324 ஆம் ஆண்டு முதல் இறக்கும்வரை ஆட்சியில் இருந்தார். முதல் கிறிஸ்தவ ரோமப் பேரரசரான இவர், தனக்கு முன்னிருந்த அரசனான டியோகிளீசியனால் கிறிஸ்தவர்களுக்கு விதிக்கப்பட்ட துன்புறுத்தல்களை இல்லாமல் செய்ததுடன், அவரது இணைப் பேரரசரான லிசினியசுடன் சேர்ந்து 313 ஆம் ஆண்டில் மிலான் ஆணை எனப்படும் சமய நல்லிணக்க ஆணையை வெளியிட்டார்.

முதலாம் கான்ஸ்டன்டைன்
உரோமப் பேரரசு
முதலாம் கான்ஸ்டன்டைன்
கப்பிட்டோலீன் அருங்காட்சியகத்தில் உள்ள முதலாம் கான்ஸ்டன்டைன் சிலை.
ஆட்சி25 சூலை 306 – 29 அக்டோபர் 312
29 அக்டோபர் 312 – 19 செப்டெம்பர் 324
19 September 324 – 22 மே 337 (ஒருங்கிணைந்த பேரரசின் பேரரசன்)
முன்னிருந்தவர்கான்ஸ்டன்டியஸ் குளோரஸ்
பின்வந்தவர்இரண்டாம் கான்ஸ்டன்டைன், கான்ஸ்டன்ஸ்
மனைவிகள்
  • மினேர்வினா, 307 க்கு முன் இறந்துவிட்டார் அல்லது மண முறிவு ஏற்பட்டது.
  • பவுஸ்தா
முழுப்பெயர்
பிளேவியஸ் வலேரியஸ் ஒரேலியஸ் கான்ஸ்டன்டினஸ்
அரச குலம்கான்ஸ்டன்டிய வம்சம்
தந்தைகான்ஸ்டன்டியஸ் குளோரஸ்
தாய்கான்ஸ்டண்டினோப்பிளின் ஹெலெனா
சமயம்பல கடவுள், பின்னர் கிறிஸ்தவம்

கிழக்கத்திய மரபுவாதத் திருச்சபையினரால் பயன்படுத்தப்படும் பைசண்டியப் பொது வழிபாட்டு நாட்காட்டிப்படியும், கிழக்கத்திய கத்தோலிக்கத் திருச்சபை வழக்கப்படியும் கான்ஸ்டண்டைனும், அவரது தாயாரான ஹெலெனாவும் புனிதர்களாகக் குறிப்பிடப்படுகின்றனர். ஆனால், இலத்தீன் திருச்சபை இவரைப் புனிதராகக் காட்டவில்லை. எனினும், கிறிஸ்தவ மதத்துக்கு இவர் செய்த பணிகளுக்காக ஒரு பெரியவராக அவர்களால் மதிக்கப்படுகிறார்.

ஆதாரங்கள்

கான்ஸ்டன்டைன் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு ஆட்சியாளராகவும் சர்ச்சைக்குரிய நபராகவும் இருந்தார். கான்ஸ்டன்டைனின் நற்பெயரின் ஏற்றத்தாழ்வுகள் அவருடைய ஆட்சியின் பண்டைய ஆதாரங்களின் தன்மையை பிரதிபலிக்கின்றன. இவை ஏராளமானதாகவும் மற்றும் விரிவானவையாகவும் உள்ளன. இவரது காலத்தில் அலுவல்பூர்வமான பிரச்சாரங்களாலும் அது வலுவாக பாதிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் இவை ஒருபக்கச்சார்பாக உள்ளன. கான்ஸ்டன்டைனின் வாழ்க்கை மற்றும் ஆட்சியை பற்றி விவரிக்கக்கூடிய எந்த எஞ்சியிருக்கின்ற ஆதாரங்களோ அல்லது வாழ்க்கை வரலாறுகளோ இல்லை. இருப்பினும் கி.மு. 335 மற்றும் கி.மு. 339 இடையே எழுதப்பட்ட யூசீபியஸின் விட்டா கான்ஸ்டன்டினி என்பது மிக நெருக்கமான மாற்று ஆதாரமாக பார்க்கப்படுகிறது. இந்நூல் புகழுரை மற்றும் திருக்தொண்டர் வாழ்க்கை வரலாற்றுக் கலவையாகும். இது கான்ஸ்டன்டைனின் ஒழுக்க மற்றும் மத நல்லொழுக்கங்களை விவரிக்கிறது. கான்ஸ்டன்டைனின் ஒரு விவாதத்திற்குரிய நேர்மறை தோற்றத்தை இந்நூல் உருவாக்குகிறது. and modern historians have frequently challenged its reliability. மேலும் நவீன வரலாற்றாசிரியர்கள் அதன் நம்பகத்தன்மையை அடிக்கடி கேள்விக்குள்ளாக்குகின்றனர். கான்ஸ்டன்டைன் முழுமையான மதச்சார்பற்ற வாழ்க்கை உறுதிப்படுத்தப்படாத நாளிடப்பட்ட அநாமதேய ஓரிகோ கான்ஸ்டன்டினி என்ற நூலில் கலாச்சார மற்றும் மத விஷயங்களின் புறக்கணித்து, இராணுவ மற்றும் அரசியல் நிகழ்வுகளில் கவனம் செலுத்துகிறது.

டோகொலட்டியன் மற்றும் டெட்ரார்க்கி ஆகியோரின் ஆட்சியில் லாக்டானியஸ் 'டி மார்டிபஸ் பெர்க்சிக்யூட்டோரம் என்ற அரசியல் கிறித்துவ துண்டுப்பிரசுரம் கான்ஸ்டன்டைனின் முன்னோடிகள் மற்றும் ஆரம்ப வாழ்க்கையின் மதிப்புமிக்க மற்றும் துல்லியமான விவரங்களை அளிக்கிறது. சாக்ரடீஸ், சோஸோமன் மற்றும் தியோடார்ட்டின் திருச்சபை வரலாற்றுகள், கான்ஸ்டன்டைனின் பிந்தைய ஆட்சியில் நடைபெற்ற திருச்சபை பிரச்சினைகளை விவரிக்கின்றன. கான்ஸ்டன்டைன் ஆட்சிக்கு ஒரு நூற்றாண்டுக்கு பின் தியோடோசியஸ் II (408-50 AD) ஆட்சியின் போது எழுதப்பட்ட இந்த திருச்சபை வரலாற்றாளர்கள் கான்ஸ்டன்டினினுடைய காலத்தின் நிகழ்வுகள் மற்றும் கொள்கைகள் தவறான வழிகாட்டுதல், தவறான விளக்கம் மற்றும் வேண்டுமென்றே தெளிவற்ற விளக்கங்களும் உள்ளன.

ஆட்சி

பேரரசர் கான்ஸ்டன்டைன் காலத்தில் ரோமானிய பேரரசின் பல நிர்வாக , நிதி , சமூக , மற்றும் இராணுவ சீர்திருத்தங்கள் இயற்றப்பட்டது.மேலும் அரசு,குடிமையில் மற்றும் இராணுவ அதிகாரங்கள் தனித்தனியே பிரித்து மறு சீரமைக்கப்பட்டது.மேலும் அப்போதே பணவீக்கத்தை கட்டுப்படுத்த சொலிடுஸ் என்ற ஒரு புதிய தங்க நாணயத்தை அறிமுகப்படுத்தினார். இது ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக பைசண்டைன் மற்றும் ஐரோப்பிய நாணயங்களின் பொதுவான நாணயமாகபயன்பட்டது.உள்நாட்டு அச்சுறுத்தல்கள் மற்றும் காட்டுமிராண்டிகளின் படையெடுப்புகளை எதிர்கொள்வதற்காக ரோமானிய இராணுவதில் தரவரிசை முறையில் வகைபடுத்தி படைகளை பலப்படுத்தினர். கான்ஸ்டன்டைன் முந்தைய நூற்றாண்டின் உள்நாட்டு கலகத்தின் கைவிடப்பட்ட ரோமன் எல்லைகளை பழங்குடியினரிடமிருந்து வெற்றிகரமாக மீட்டார்.கான்ஸ்டன்டைன் 324-ல் பேரரசர்கள் மசேந்தியஸ் மற்றும் லிசினுஸ் எதிரான உள்நாட்டு போர்களை வென்றதன் காரணமாக மேற்கு மற்றும் கிழக்கு ரோமின் ஒரே ஆட்சியாளரானார்.

கான்ஸ்டன்டைன் பண்டைக் கிரேக்கக் குடியேற்றமான பைசன்டியத்தை பேரரசின் தலைநகரமாக ஆக்கினார்,அவர் களத்தில் புதிய ரோம் என பெயரிடப்பட்ட இது பின்னர், அவர் பெயரால் கான்ஸ்டன்டினோப்பிள் என்று அழைக்கப்பட்டது. இது பைசன்டைன் பேரரசின் தலைநகரமாக ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நீடித்திருந்தது.இதன் காரணமாக, அவர் பைசண்டைன் பேரரசின் நிறுவனர் என்று அழைக்கபடுகின்றார்.அவரது அரசு அவருக்கு பின் வந்தவர்களால் தழைத்தோங்கியது.

அவரை மதச்சார்பற்ற ஆட்சியாளர்களின் ஒரு முன்மாதிரி மற்றும் சட்டப்பூர்வ பேரரசின் முன்னோடி என்று கூறப்பட்டார்.ஆனால் சில விமர்சகர்கள் அவரை ஒரு கொடுங்கோல் அரசனாகவும்அவர் தன ஆட்சியை தக்கவைத்து கொள்வதர்க்காக நடித்தார் என்றும் கூறுகின்றனர்.

சாதனைகள்

அவர் இறந்த பிறகு நீண்ட கிறிஸ்துவர் வரலாற்றாசிரியர்களிடம் இருந்து ("Μέγας") "கிரேட்" என்ற தனது மரியாதைக்குரிய பெயரை பெற்றார் என்றாலும் அவர் தனது இராணுவ சாதனைகள் மற்றும் வெற்றிகளுக்காகவே அப்பெயர் பெற்றார்.கான்ஸ்டன்டைன் 313-14 மீண்டும் 306-8 உள்ள பிராங்க்ஸ் மற்றும் அலாம்னி மீது படையெடுத்து பெரு வெற்றி பெற்றார்.334 ல் பிராங்க்ஸ் வெற்றி மற்றும் 332-ன் சர்மடியன்ஸ் வெற்றி ஆகியவை மூலம் வரலாற்றில் ஒரு பெரிய பெயரை பெற்றார்.

மத கொள்கை

கிறித்துவம் வரலாற்றில் கான்ஸ்டன்டைன் - முதல் கிரிஸ்துவ பேரரசர் ஆவர். இயேசுவின் கல்லறைஉள்ளதாக நம்பப்படும் ஜெருசலேத்தில் அவரது உத்தரவின் பேரில் புனித செபுல்ச்ரே திருச்சபை கட்டப்பட்டது. போப்கள் கான்ஸ்டன்டைன் மூலம் பெரிய அளவில் அதிகாரத்தை பெற்றனர்.

பிப்ரவரி 313 இல் , கான்ஸ்டன்டைன் அவர்கள் மிலனின் லிசினயுஸ் மன்னரை சந்தித்து மிலன் என்ற அரசாணை உருவாக்கினார்.இந்த அரசாணை கிரிஸ்துவர் மெது எந்த அடக்குமுறையும் இல்லாமல் அவர்களை சுதந்திரமாக அவர்களின் மதத்தை பின்பற்ற அனுமதிக்க வேண்டும் என்று கூறினார். அதுவரை துன்புறுத்தப்பட்டு வந்த பல கிரிஸ்துவர்கல் விடுதலை செய்யப்பட்டனர் மேலும் அபராதமாக பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்கள் திரும்பி தரப்பட்டன.இந்த அரசாணை யாரையும் அவர்கள் விரும்பும் எந்த தெய்வத்தையும் வழிபாட அனுமதித்தது. கான்ஸ்டன்டைன் மற்றும் அவரது தாயார் செயின்ட் ஹெலினா படிப்படியாக கிறிஸ்தவ மதத்தை ஏற்றுகொண்டார். அவர் இறுதியாக தன்னை அறிவித்தார்.கிறிஸ்தவ எழுத்தாளர்களின் படி , கான்ஸ்டன்டைன் தனது 40வது வயதில் தன்னை ஒரு கிறிஸ்தவராக அறிவித்தார்.தனது ஆட்சியல் பல தேவாலயங்களை கட்டினார்.அவற்றுள் மிக பிரபல கட்டிடங்கள் புனித செபுல்ச்ரே திருச்சபை, மற்றும் பழைய புனித பீட்டர் பசிலிக்கா போன்றவையாகும்.

கடைசி காலம்

கான்ஸ்டன்டைன் அவரது மரணத்தருவாயில் புனித அப்போஸ்தலர் சர்ச் அருகே ரகசியமாக கல்லறை கட்டி தயாராக வைக்கப்பட்ட சொன்னார். அவர் மரணம் அவர் எதிர்பார்த்ததை விட விரைவிலேயே வந்தது. 337 அன்று ஈஸ்டர் விருந்திற்கு பின்னர் கான்ஸ்டன்டைன் தீவிரமாக நோய்வாய்ப்பட்டார்.அவர் பின்னர் கான்ஸ்டான்டினோபிள் திரும்ப முயற்சித்தார். அவர் தனக்கு ஞானஸ்நானம் செய்யப்பட வேண்டும் என கேட்தார் அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டாலும் அவர் ஏரியஸ் பாதிரியார் நிகோமீடிய ஈசுபியசுவை தன்னை கிடத்துமிடத்தில் அவருக்கு ஞானஸ்தானம் செய்பவராகத் தேர்வு செய்தார். சிறுவயதிலேயே ஞானஸ்தானத்தை தள்ளிப் போட்ட சமயத்திலிருந்தே ஒரு பழக்கத்தைத் தொடர்ந்தார். கான்ஸ்டன்டைன் தனது பாவங்களை எவ்வளவு முடிந்தவரை முழுமையாக்கிக் கொள்ளும் வரை, ஞானஸ்தானம் எடுப்பதைத் தள்ளிப் போட்டதாகக் கருதப்பட்டது. அதற்கு முன்பே அச்சிரோனில் 337 ஆம் ஆண்டு மே 22, பஸ்கா பண்டிகையை தொடர்ந்து பெண்டேகோஸ்ட் ஐம்பது நாள் திருவிழாவின் கடைசி நாளில் கான்ஸ்டன்டைன் இறந்தார்.

மேற்கோள்கள்

Tags:

முதலாம் கான்ஸ்டன்டைன் ஆதாரங்கள்முதலாம் கான்ஸ்டன்டைன் ஆட்சிமுதலாம் கான்ஸ்டன்டைன் சாதனைகள்முதலாம் கான்ஸ்டன்டைன் மத கொள்கைமுதலாம் கான்ஸ்டன்டைன் கடைசி காலம்முதலாம் கான்ஸ்டன்டைன் மேற்கோள்கள்முதலாம் கான்ஸ்டன்டைன்கிறித்தவர்

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஊதியம்இரசினிகாந்துஅறுபடைவீடுகள்நானும் ரௌடி தான் (திரைப்படம்)முத்துராஜாபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்திருக்காளத்தி காளத்தியப்பர் கோயில்நாணயம் இல்லாத நாணயம்மதுரைவினைச்சொல்பஞ்சபூதத் தலங்கள்மதீச பத்திரனசப்தகன்னியர்தமிழிசை சௌந்தரராஜன்மாணிக்கவாசகர்முடியரசன்அம்மனின் பெயர்களின் பட்டியல்கள்ளுகாஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில்கடல்முதுமொழிக்காஞ்சி (நூல்)நெய்தல் (திணை)சௌராட்டிரர்களின் கோத்திரங்களும் குடும்பப் பெயர்களும்சிறுகதைபுழக்கத்திலுள்ள நாணயங்களின் பட்டியல்பரதநாட்டியம்சரசுவதிதமன்னா பாட்டியாஅம்பேத்கர்உரோமைப் பேரரசுகாற்றுஅழகர் கோவில்பகுஜன் சமாஜ் கட்சிநாயக்கர்என் ஆசை மச்சான்எட்டுத்தொகை தொகுப்புசைவத் திருமுறைகள்காரைக்கால் அம்மையார்வெள்ளியங்கிரி மலைசிறுநீர்ப்பாதைத் தொற்றுதூது (பாட்டியல்)செம்பிவானிலைகாரி (வள்ளல்)நிலம்நள்ளிஇந்திய மக்களவைத் தொகுதிகள்திருத்தணி முருகன் கோயில்இயற்கைதிரு. வி. கலியாணசுந்தரனார்தேவாரம்ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்திருக்குர்ஆன்ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்பால் (இலக்கணம்)மழைவறுமையின் நிறம் சிவப்புமாதம்பட்டி ரங்கராஜ்காளிப்பட்டி கந்தசாமி கோயில்சங்க இலக்கியம்திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்புணர்ச்சி (இலக்கணம்)பெயர்ச்சொல்நிர்மலா சீதாராமன்சித்திரைமாரியம்மன்பனைகண்ணதாசன்சைவத் திருமணச் சடங்குசுய இன்பம்ஆண் தமிழ்ப் பெயர்கள்முகலாயப் பேரரசுஆடு ஜீவிதம்வ. உ. சிதம்பரம்பிள்ளைஆந்திரப் பிரதேசம்தனுசு (சோதிடம்)காதல் கோட்டை🡆 More