மடகாசுக்கரின் வரலாறு

மிகப் பழைய காலத்திலேயே ஆப்பிரிக்காவும் இந்தியாவும் இணைந்த கண்டத்தில் இருந்து தனியாக ஒரு நிலத்திணிவாக இருந்ததாலும், பிற்காலத்திலேயே கிமு 200 முதல் கிபி 500 வரையான காலப்பகுதியில் சிறு படகுகளில் சுண்டாத் தீவுகளில் இருந்து குடியேறியதாலும் மடகாசுக்கரின் வரலாறு தனித்துவமானதாக உள்ளது.

இவ்விரு காரணிகளும் இத்தீவில் இப்பகுதிக்கே உரிய தாவர, விலங்கு இனங்கள் உருவாகி நிலைத்திருக்க உதவின. இவைகளுட் சில தற்போது மக்கள்தொகை அதிகரிப்பினால் அழிந்துவிட்டன அல்லது அழியும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளன. கடந்த 2000 ஆண்டுகளில் ஆசுத்திரோனீசிய, பான்டு, அரபி, தென்னாசிய, சீன, ஐரோப்பிய மூலங்களைக் கொண்டோர் பல்வேறு அலைகளாக வந்து இத்தீவில் குடியேறியுள்ளனர். இன்றைய மடகாசுக்கரில் உள்ள பெரும்பான்மையான மக்கள் ஆசுத்திரோனீசிய, பான்டு, அரபி, வட இந்திய, சோமாலிக் குடியேறிகளின் கலப்பு ஆவர். பல நூற்றாண்டுகளாக நிகழ்ந்த கலப்பு மணங்களினால் மலகாசி மக்கள் உருவாயினர். இவர்கள், பான்டு, மலாய், அரபி, பிரெஞ்சு, ஆங்கிலம் ஆகிய மொழிகளின் செல்வாக்குகளுடன் கூடிய ஒரு ஆசுத்திரேனிய மொழியைப் பேசுகின்றனர். சராசரி மலகாசி ஒருவரின் மரபியல் அமைப்பு, சிறப்பாகக் கரையோரப் பகுதிகளில், ஆசுத்திரோனீசிய, பான்டு செல்வாக்குகளின் சம அளவான கலப்பு ஆகும். பிற மக்கள் பெரும்பாலும் வரையறுக்கப்பட்ட அளவுக்கே ஏற்கெனவே இருப்போருடன் கலந்துள்ளனர். இவர்கள் பெரும்பான்மை மலகாசி மக்களுக்குப் புறம்பாகத் தனியான சமூகமாக இருக்கவே விரும்புகின்றனர்.

ஐரோப்பிய மத்திய காலத்தை அண்டி, பன்னிரண்டுக்கும் மேற்பட்ட முக்கியமான இன அடையாளங்கள் இத்தீவில் உருவாகின. இவை உள்ளூர் தலைவர்களினால் ஆளப்பட்டன. சக்கலவா, மெரினா, பெட்சிமிசராக்கா போன்ற சில சமூகங்களில், தலைவர்கள் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திச் சமூகங்களை இணைத்து உண்மையான இராச்சியங்களைத் தமது தலைமையில் உருவாக்கினர். இவ்விராச்சியங்கள், சட்டப்படியான அல்லது கடற் கொள்ளையர் என்ற வேற்பாடுகள் இன்றி, ஐரோப்பிய. அரேபிய, மற்றும் பிற கலடோடி வணிகர்களுடன் பரிமாற்றங்களை ஏற்படுத்திக்கொண்டு தம்முடைய செல்வத்தையும், அதிகாரத்தையும் அதிகரித்துக்கொண்டன. 16 க்கும் 18 ஆம் நூற்றாண்டுக்கும் இடையில் மடகாசுக்கரின் கரையோரப் பகுதிகளில் கடற்கொள்ளைகள் அதிகமாக இருந்தன. பிரபலமான கடற்கொள்ளைக் குடியேற்றமான லிபேர்ட்டாலியா, முன்னர் மலகாசி மக்கள் வாழ்ந்த செயின்ட் மேரி தீவில் நிறுவப்பட்டிருந்தது. சக்கலாவா, மெரீனா இராச்சியங்கள் ஐரோப்பிய வணிகத்தைப் பயன்படுத்திக்கொண்டு, ஐரோப்பியச் சுடுகலன்களுக்கும் பிற பொருட்களுக்கும் மலகாசி அடிமைகளைப் பரிமாற்றம் செய்து, தமது அதிகாரத்தை வலுப்படுத்தின. இக்காலம் முழுதும், இந்துப் பெருங்கடற் பகுதியில் செயற்பட்ட ஐரோப்பிய, அரேபியக் கடலோடிகள் கரையோரச் சமூகங்களுடன் வணிகத்தில் ஈடுபட்டிருந்தனர். இத்தீவில் தமது குடியேற்றங்களை நிறுவுவதற்கு ஐரோப்பியர் எடுத்த பல முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை. 19 ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் பிரித்தானிய, பிரெஞ்சுக் குடியேற்றவாதப் பேரரசுகள் இத்தீவின் மீது செல்வாக்குச் செலுத்துவதற்காகப் போரிட்டன.

19 ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில், ஆன்ட்ரியனிம்பொயின்மெரினா, மத்திய உயர் நிலப்பகுதியில் அமைந்திருந்ததும், அன்டனானரிவோவைத் தலைநகரமாகக் கொண்டதுமான, அதிக மக்கள்தொகையைக் கொண்டிருந்த இமெரீனா இராச்சியத்தை ஒன்றிணைத்தார். இவரது மகன் முதலாம் ரடாமா தீவிலிருந்த பிற சமூகங்களின் மீதும் தனது அதிகாரத்தை விரிவாக்கினார். வெளிநாட்டு வல்லரசு ஒன்றினால் பெரிய மெரீனாவின் அரசர் என ஏற்றுக்கொள்ளப்பட்ட முதல் மலகாசி அரசர் இவரே. 19 ஆம் நூற்றாண்டில், மெரீனா அரசர்கள் பிரித்தானியருடன் நெருக்கமான தொடர்புகளைப் பேணியதன் மூலம் நவீனமயப்படுத்தலில் ஈடுபட்டனர். இதன் மூலம், ஐரோப்பியப் பாணிப் பள்ளிகளும், அரச நிறுவனங்களும், உட்கட்டமைப்பு வசதிகளும் உருவாகின. அரசி இரண்டாம் ரணவலோனா, செல்வாக்குள்ள அரசியற் தலைவரும் முதலமைச்சருமான ரைனிலையாரிவோனி ஆகியோரின் கீழ் இலண்டன் மதப் பிரசாரச் சபையால் அறிமுகப்படுத்தப்பட்ட கிறித்தவம் அரச மதம் ஆக்கப்பட்டது.

மேற்கோள்கள்

Tags:

ஆப்பிரிக்காஇந்தியாதாவரம்மலகாசி மக்கள்மலாய் மொழிவிலங்கு

🔥 Trending searches on Wiki தமிழ்:

திருக்குறள்ஜெயகாந்தன்செண்டிமீட்டர்யோகம் (பஞ்சாங்கம்)இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370தேவநேயப் பாவாணர்பாலுறவுதிருநெல்வேலி மக்களவைத் தொகுதிசங்ககால மலர்கள்கர்மாநீரிழிவு நோய்பெண்தேவாரம்ஆந்திரப் பிரதேசம்இங்கிலீஷ் பிரீமியர் லீக்திருவண்ணாமலைநிர்மலா சீதாராமன்இந்தியத் தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணிஐந்திணைகளும் உரிப்பொருளும்பிள்ளைத்தமிழ்நெசவுத் தொழில்நுட்பம்பகவத் கீதைகாச நோய்மதீச பத்திரனதிருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்மீனாட்சிசைமன் குழுசிவன்மு. மேத்தாதமிழர் பண்பாடுநல்லெண்ணெய்ஆற்றுப்படைநஞ்சுக்கொடி தகர்வுவிபுலாநந்தர்லொக்கி பெர்கசன்கஞ்சாஊராட்சி ஒன்றியம்இந்திய தேசிய சின்னங்கள்வைரமுத்துநவக்கிரகம்நாளிதழ்திராவிசு கெட்கருப்பை நார்த்திசுக் கட்டிதமிழ்ஏப்ரல் 16தஞ்சைப் பெருவுடையார் கோயில்உரைநடைதமிழிசை சௌந்தரராஜன்நா. காமராசன்குண்டலகேசிநாலடியார்இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படைக் கடமைகள்விழுப்புரம் மக்களவைத் தொகுதிதமிழ் மாதங்கள்மக்களவை (இந்தியா)தனித் தொகுதிகள், தமிழ்நாடு சட்டமன்றம்இந்தியன் பிரீமியர் லீக்இந்தியச் சிறுத்தைவெள்ளியங்கிரி மலைமுத்துராமலிங்கத் தேவர்பாம்புதிருப்பூர் மக்களவைத் தொகுதிஅயலான்சீவக சிந்தாமணிசுயமரியாதை இயக்கம்கனிமொழி கருணாநிதிவீரன் சுந்தரலிங்கம்கடலூர் மக்களவைத் தொகுதிபுனர்பூசம் (நட்சத்திரம்)அங்குலம்அபியும் நானும் (திரைப்படம்)லியொனார்டோ டா வின்சிகணியன் பூங்குன்றனார்தமிழர் பருவ காலங்கள்மயக்கம் என்னவிடுதலை பகுதி 1மரகத நாணயம் (திரைப்படம்)🡆 More