தொழினுட்பம்

தொழினுட்பம் என்பது பொருட்கள் அல்லது சேவைகள் உற்பத்தி செய்ய பயன்படும் அறிவியல் நுட்பங்களின் தொகுப்பு.

தொழினுட்பம் கருவிகள், கைவினைகள் முதலியவற்றின் பயன்பாட்டுடனும், அவை எவ்வாறு அவற்றைப் பயன்படுத்துவோர் தமது சூழலைக் கட்டுப்படுத்தவும், அதனோடு இயைந்து வாழவும் கூடிய தகுதியில், தாக்கத்தை ஏற்படுத்துகின்றனர் என்பதுடனும் தொடர்புள்ள ஒரு பரந்த கருத்துரு ஆகும். எனினும் ஓர் இறுக்கமான வரைவிலக்கணம் இதற்குக் கொடுக்க முடியாது. தொழினுட்பம் பொறிகள், வன்பொருட்கள், பயன்பாட்டுப் பொருட்கள் போன்ற மனித இனத்துக்குப் பயன்படும் பொருள்களைக் குறிக்கக்கூடும். ஆனால் இது இன்னும் பரந்த முறைமைகள், அமைப்பு முறைகள், நுட்பங்கள் என்பவற்றையும் குறிக்கக்கூடும். இச் சொல்லைப் பொதுப் பொருளில் ஆள்வதுடன், குறிப்பிட்ட துறைகள் சார்பாகவும் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக, கட்டுமானத் தொழினுட்பம், உயிர்மருத்துவப் பொறியியல் போன்ற பயன்பாடுகள் குறிப்பிட்ட துறைகள் சார்ந்தவையாகும். இவை தவிர பல நன்மைகளும் உண்டு

தொழினுட்பம்
20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், மனிதன் புவியைவிட்டுக் கிளம்பி வான்வெளியில் உலாவரும் அளவுக்குத் தொழில்நுட்ப வளர்ச்சியைப் பெற்றான்.

அறிவியலும் பொறியியலும் தொழில்நுட்பமும்

அறிவியல், பொறியியல், தொழினுட்பம் ஆகிய இம்மூன்றும் ஒன்றுக்கொண்று நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தாலும், இம்மூன்றும் வெவ்வேறானவை. இவற்றிற்கிடையே வேறுபாட்டைத் தெளிவாக வரையறுக்கமுடியாது எனினும் தோராயமாக நாம் இவற்றிற்கிடையேயுள்ள வேறுபாட்டை அறியலாம்.தியோடர் வோன் கர்மான் கூற்றின்படி:'அறிவியல் என்பது இவ்வுலகம் எப்படி இருக்கிறது/உருவானது என்பதை விளக்குகிறது; பொறியியல் என்பது இதுவரை இல்லாத உலகை/பொருளை/செயல்முறையை உருவாக்குகிறது. தொழினுட்பம் என்பது பொறியியல் கருவிகள், ஆய்கருவிகள் போன்றவற்றை எப்படி செயல்படுத்துவது/பயன்படுத்துவது மற்றும் அதன் செயல்முறைகள் அனைத்தையும் உள்ளடக்கியது'.

அறிவியல் பொதுவான உண்மைகளையும் விதிகளையும் உள்ளடக்குகிறது, அறிவியல் என்பது உலகினைக் கவனித்தலின் மூலமாக பெறக்கூடிய அறிவாகும்; பொறியியல் என்பது அறிவியல் அறிவினை கொண்டு இதுவரை இல்லாத ஒரு பொருளினையோ/உலகினையோ வடிவமைத்து உருவாக்ககூடிய முறையாகும். தொழினுட்பம் என்ற சொற்றொடர் ஒப்புமை அளிக்கப்பட்ட அனைத்துவிதமான பொறியியல் கருவிகள்/செயல்முறைகளைத் திரும்ப திரும்ப பயன்படுத்தலின் மூலமாக உருவாகிறது.

அறிவியலாளர்கள் வழக்கத்திலிருக்கும் அறிவையும் ஆய்கருவிகளையும் கொண்டு மின்கடத்தியில் எதிர்மின்னியின் ஒட்டம் எவ்வாறு இருக்கிறது என்பதைக் கண்டறிந்தனர், இந்தப் புதிய அறிவை அடிப்படையாக வைத்து பொறியியலாளர்கள் புதிய கருவிகளான குறைக்கடத்தி, கணினியைக் கண்டுபிடித்தனர். தொழினுட்பம் புதிதாக கண்டறியப்பட்ட பொருளை அறிவியல், பொறியியல் நுட்பத்தின் உதவி கொண்டு பேரளவில் உற்பத்தி செய்கின்றனர்.

வரலாறு

பழைய கற்காலம் (இமு2.5 மிஆ– இமு10,000 ஆ)

தொழினுட்பம் 
முதல் வெட்டி (துணிப்பி)

பழைய கற்காலத்தில் மனிதர் கருவிகள் பயன்பாடு, ஓரளவு கண்டுபிடிப்பு படிமலர்ச்சி இரண்டின் இணைநிகழ்வின் அடிப்படையிலேயே அமைந்தது.பண்டைய மாந்தர் கிடைத்ததை உண்டு வாழ்ந்த, ஏற்கெனவே இருகால் நடை வாய்த்திருந்த முன்மாந்தவினத்தில் இருந்து தோன்றியவரே. அப்போது மனித மூளை இன்றைய மனித் மூளையைப் போல மூன்றில் ஒருபங்காக அமைந்திருந்த்து. மிக் முந்திய மாந்த வரலாறு முழுவ்தும் கருவிப் பயன்பாடு ஓரளவு மாறாமலே இருந்தது. தோராயமாக இமு 50,000 ஆண்டளவில் புதிய கருவிப் பயன்பாடும் புதிய நடத்தைத் தொகுதியும் மாந்தரினத்தில் முகிழ்த்தன. தொல்லியலாளர்கள் இதை மொழியின் தோற்றத்தோடு இணைக்கின்றனர்.

கற்கருவிகள்

தொழினுட்பம் 
அசூலியத் தொழில்நுட்பக் கட்டத்தின் கைக்கோடரிகள்
தொழினுட்பம் 
அழுத்தமுறைப் பிளப்பல் உருவாக்கிய கூர்முனை

பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே முன்மாந்தவினம் (hominids) முதனிலைக் கற்கருவிகளைப் பயன்கொள்ளத் தொடஙிவிட்டது. மிக முந்திய கருவிகள் பிளவுண்ட பாறைத்துண்டுகள் போலவே அமைந்தன, but approximately 75,000 ஆண்டுகளுக்கு முன்பு உருவாகிய அழுத்தமுறைப் பிளப்பு கூரிய முனை வாய்ந்த திறமை கூடிய கோடரிகளை உருவாக்க வழிவகுத்தது.

தீயின் கையாளல்

தீயின் கண்டுபிடிப்பும் பயன்பாடும் பல அரிய பணிகளுக்கான ஆற்றலாக ம்ட்டுமன்றி, மாந்தரினத் தொழில்நுட்ப்ப் படிமலர்ச்சியில் மாபெரும் திருப்புமுனையாகவும் அமைந்தது. தீக்கண்டுபிடிப்பின் நாள் அரியப்படவில்லை; இது ஒரு மில்லியன் ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்திருக்கலாமென, மனிதகுலத் தொட்டிலாக்க் கருதப்படும் தொன்மாந்தர் வாழ்ந்த இடங்களின் அகழ்வாராய்ச்சிகளில் கிடைத்த எரிந்த விலங்கு எலும்புச் சான்றுகளில் இருந்து அறியப்பட்டுள்ளது; நிமிர்நடை மாந்தன் வாழ்ந்த ஐந்நூறாயிரம் முதல் நானூறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தீயைக் கட்டுபடுத்தியதாக தொல்லியல் அறிஞர்களின் பொதுக் கருத்தேற்பு அமைந்துள்ளது. மரம், கரி எரித்து உருவாக்கிய தீ மனிதர் உணவு சமைக்க உதவியது. இதனால் செரிமானத் திறனும் ஊட்டச்சத்துகளும் கூடியதோடு பலவகை உணவுகளை உண்ண வாய்ப்பளித்தது.

உடையும் உறையுளும்

பழைய கற்கால ஊழியில் நிகழ்ந்த அடுத்த தொழில்நுட்ப முன்னேற்றங்களாக உடையும் உறையுளும் அமைகின்றன; இவற்றை உருவாக்கிய சரியான நாளைக் குறிப்பிட முடியவில்லை. ஆனால், இவை மாந்த முன்னேற்றத்துக்கு மிகவும் இன்றியமையாதனவாகும். பழைய கற்காலம் முன்னேற முன்னேற வாழிடங்கள் நுட்பமாகவும் விரிவாகவும் அமையலாயின; இமு 3.8 இலட்சம் ஆண்டுகள் அளவிலேயே தற்கலிக மரக்குடில்களை கட்டியுள்ளனர். விலங்குகளின் மென்முடிகளிலும் வேட்டை விலங்குகளின் தோலிலும் செய்த உடைகள் மாந்தனுக்கு கடுங்குளிரிலும் வாழும் வாய்ப்புகளை உருவாக்கித் தந்தன; உலகின் பலபகுதிகளுக்கு மாந்தர் புலம்பெயர தொடங்கினர்.

இமு 2 இலட்சம் ஆண்டுகள் அளவில் மாந்தர் ஆப்பிரிக்காவில் இருந்து வெளியேறி ஐரோப்பாசியா போன்ற பிற கண்டங்களுக்குச் செல்லத் தொடங்கினர்.

புதிய கற்காலத்தின் ஊடாக செவ்வியல் பழங்காலத்துக்கு (கிமு 8,000– கிபி 300)

தொழினுட்பம் 
புதிய கற்கால கைவினைப் பொருட்கள் தொகுப்பு; கங்கணங்கள் (கைவலயங்கள்), கோடரித்தலைகள், உளிகள், மெருகூட்டும் கருவிகள்

மாந்தத் தொழில்நுடப எழுச்சி உண்மையாக புதிய கற்காலத்தில் தான் களம்கண்டது. மெருகூட்டிய கற்கோடரி உருவாக்கம் மாபெரும் முண்ணேற்றமாகும். இது காடழித்து வேளாண் நிலத்தை விரிவாக்கியது. இந்த மெருகூட்டிய கற்கோடரி புதிய கற்காலத்தில் பேறளவில் செய்யப்பட்டாலும் இதுஇடைக்கலத்தில் அயர்லாந்து போன்ற தொல்லியற் களங்களில் தோன்றியதாகும். வேளாண்மை பெருந்திரளான மக்கள்தொகைக்கு உணவூட்டி, ஓய்வு வாழ்க்கையையும் உருவாக்கியது. மக்கள் நாடோடி வாழ்க்கையைப் போல தோளில் தூக்கிச் செல்லவேண்டிய தேவை மறைந்தது. இளஞ்சிறார்களின் எண்ணிக்கை பெருகியது. வேட்டை-திர்ட்டல் பொருளியல் குழந்தைகள் வேட்டையிலோ உணவு திரட்டலிலோ ஈடுபட முடியாது. ஆனால், வேளாண் கட்டத்தில் பயிரிடுவதில் அவர்கள் எளிதாக உழைக்க முடிந்தது.

மக்கள் தொகை கூடி, உழைப்பில் ஈடுபடுவோர் எண்ணிக்கை கூடியதால். உழைப்பில் வேலைப்பிரிவினை உருவாகியது. புதிய கற்காலத்தில் இருந்து தொடக்கநிலை புதிய கற்கால உரூக் போன்ற ஊர்களும் பிறகு நகரங்களும் ஏற்பட்டு, சுமேர் போன்ற முதல் நாகரிகங்கள் தோன்றியதற்கான காரணங்கள் இதுவரை அறியப்படவில்லை; என்றாலும் சமூக்க் கட்டமைப்பில் படிநிலை ஒழுங்கும் சிறப்புவகை உழைப்பும் வணிகமும் அருகில் நிலவிய பண்பாடுகள் உடனான போரும், நீர்பாசனம் போன்ற சுற்றுச்சூழலை வெற்றிகொள்ள தேவையான கூட்டுழைப்பும் ஆகிய அனைத்துமே முதன்மைப் பங்காற்றியுள்லன எனலாம்.

பொன்மக் (உலோகக்) கருவிகள்

உலைகளிலும் துருத்திகளிலும் ஏற்பட்ட தொடர்மேம்பாடு, பொன்னையும் செம்பையும் வெள்ளியையும் காரீயத்தையும் தாயகத்தில் தூய வடிவில் தனிமமாகவே கிடைத்த பொன்மங்களையும் உருக்கி வடிக்க வேண்டிய திறமையை உருவாக்கியது. கல், எலும்பு, மரத்தால் ஆன கருவிகளைவிட செம்புக் கருகளின் மேம்பாட்டை தொடக்கநிலை மாந்தர் உணரலாயினர். இவ்வாறு தயகத்திலேயே செம்பு புதிய கற்காலத் தொடக்கத்தில் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பயன்படலானது. தூய செம்பு பேரளவில் கிடைக்கவில்லை. ஆனால், செம்புக் கனிமங்கள் எங்கும் கிடைத்தன். அவற்ரை மரம், கரி கொண்டு எரித்து எளிதாக தூய செம்பு பெறமுடிந்தது. படிபடியாக, பொன்மங்களுடனான பணிகள் விரைவில் வெண்கலம், பித்தளை போன்ற பொன்மக் கலவைகளை உருவாக்க, கிமு 4000 ஆண்டளவில், வழிவகுத்தது . எஃகு போன்ற இரும்புக்கலவைகளின் பயன்பாடு கிமு 1800 ஆண்டளவில் இயன்றது.

ஆற்றலும் போக்குவரத்தும்

தொழினுட்பம் 
சக்கரம் கிமு 4000 ஆண்டளவில் இயற்றப்பட்டது.

மனிதர்கள் பிற ஆற்றல்களைத் தங்களது பயன்பாட்டிற்கு ஏற்ப மாற்றக் கற்கத்தொடங்கியிருந்தனர், காற்றின் ஆற்றலை அறிந்து பாய்மரக் கப்பலை செலுத்த தொடங்கியிருந்தனர். நைல் நதியில் பாய்மரக் கப்பல் சென்றதற்கான சான்று கி.மு 8-ஆம் நூற்றாண்டு சார்ந்த கல்வெட்டில் காணலாம். வரலாற்றுக்கு முந்திய காலத்தில் எகுபதியர்கள் ஒவ்வோராண்டும் நைல்நதியில் ஏற்படும் வெள்ளப்பெருக்கைத் தங்கள் நிலங்களின் நீர்பாசனத்துக்குப் பயன்படுத்த முயன்றனர். நாளடைவில் ஆற்றில் இருந்து நீர்க்கால்வய்களைக் கட்டியும் நீர்பிடிப்புப் படுகைகளில் தேக்கியும் பசனம் செய்ய அறிந்தனர். பண்டைய சுமேரியர்களும் மெசபட்டோமியாவில் டைக்ரிசு, யூப்ரட்டீசு ஆறுகளில் இருந்து நீரைக் கால்வாய்களும் காயல்களும் பயன்படுத்தி பாசனத்துக்கு அறுவடை செய்துள்ளனர்.

சக்கரம் ஒருங்கே தனித்தனியாக மெசபட்டோமியாவிலும் (இன்றைய ஈராக்) வடக்கு காகாசசிலும் (மேக்கோப் பண்பாட்டில்) நடுவண் ஐரோப்பாவிலும் கிமு 4000 அளவில் கண்டுபிடிக்கப்பட்டதாக தொல்லியலாளர்கள் கூறுகின்றனர். Estimates on when this may have occurred range from 5500 to 3000 BCE with most experts putting it closer to 4000 BCE. சக்கரம் வரைந்து மிகப் பழைய கைவினைப்பொருள்கள் கிமு 3500 ஆம் ஆண்டளவில் இருந்து கிடைக்கின்றன; என்றாலும் இந்த வரைபடங்கள் கிடைப்பதற்கு முன் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக சக்கரங்கள் பயன்பாட்டில் இருந்திருக்கலாம். அண்மையில் மிகப் பழைய மரச்சக்கரம் சுலோவேனியாவின் இலியூப்ளினியா சதுப்பு நிலங்களில் கிடைத்துள்ளது.

சக்கரத்தின் வடிவமைப்பும் பயன்பாடும் வணிகத்தையும் போரையும் புரட்சிகரமாக மாற்றியது. விரிவில் சக்கரம் பூட்டிய வண்டிகள், ஊர்திகள் (தேர்கள்) வடிவமைக்கப்பட்டன. சக்கர வண்டிகளில் பளுவான பொருட்களை வேண்டிய இடங்களுக்குக் கொண்டு செல்ல முடிந்தது. பண்டைய சுமேரியர்கள் குயவர் சக்கரத்தைப் பயன்படுத்தியுள்ளனர். எனவே, சக்கரத்தை அவர்கள் முதலில் புதிதாக புனைந்திருக்கலாம். A stone pottery wheel found in the city-state of ஊர் (மெசொப்பொத்தேமியா) dates to around 3429 BCE, அதற்கும் பழைய சக்கர இடிபாட்டு பானையோடுகளும் அதே இடத்தில் கிடைத்துள்ளன. Fast (rotary) potters' wheels enabled early பெரும் உற்பத்தி of pottery, but it was the use of the wheel as a transformer of energy (through water wheels, windmills, and even treadmills) that revolutionized the application of nonhuman power sources. முதல் இரண்டு சக்கர வண்டிகள் திரவாயிசில் கிடைத்தன. இவை முதலில் மெசபட்டோமியவிலும் ஈரானிலும் கிமு 3000 ஆண்டளவில் பயன்படுத்தப்பட்டுள்ளன 3000 BCE.

மிகவும் பழைய கற்சாலை கிமு 4000 ஆண்டளவில் ஊர் எனும் நகர அரசு தெருக்களில் போடப்பட்டுள்ளமை அறியப்பட்டுள்ளது. அதே கால கட்ட்த்தில் இங்கிலாந்தில் கிளாசுட்டன்பரி சதுப்பு நிலங்களுக்குச் செல்லும் சாலைகள் அமைந்தமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முதல் நெடுந்தொலைவு சாலை கிமு 3500 ஆண்டளவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது பாரசீக வளைகுடாவில் இருந்து நடுத்தரைக்கடல் வரை அமைந்ததாகும். இதில் பாவுதளம் அமையாமல் ஓர்ளவே பேணப்பட்டுள்ளது. கிரேக்கத் தீவின் கிரீட் நகரத்தில் கிமு2000 ஆண்டளவில், மினோவர்கள் (மினோவர் நாகரிகம்) அந்தத் தீவின் தெற்கில் அமைந்த கோர்த்தின் அரண்மனைக்கும் வடக்கில் அமைந்த நோசோசு அரண்மனைக்கும் (மலைகளின் ஊடாக) செல்லும் 50 கிமீ நீளச் சாலையை வேய்ந்துள்ளனர். முதிய சாலைகளைப் போல்ல்லாமல் இந்த மினோவர் சாலை பாவுதளம் கொண்டதாகும்.

நீர்க்குழாய் அமைத்தல்

இடைக்கால, புத்தியற்கால வரலாறு (கிபி 300 முதல் அண்மைக்காலம் வரை)

இடைக்காலத்திலும் புதிய கண்டுபிடிப்புகள் தொடர்ந்தன, உரோமப் பேரரசுவின் வீழ்ச்சிக்குப் பிறகு பட்டு, குதிரைச்சேணம் போன்றவையும் பின்பு தனி எந்திரங்களான நெம்புகோல், திருகாணி மற்றும் கப்பி போன்றவை வடிவமைக்கப்பட்டன பின்பு சிக்கலான அமைப்புகளான ஒற்றைச் சில்லு வண்டி, காற்றாலை, கடிகாரம் போன்றவை யும் வடிவமைக்கப்படலாயின. 14ஆம் நூற்றாண்டு முதல் 17ஆம் நூற்றாண்டு வரையிலான மறுமலர்ச்சி காலத்தில் அச்சு இயந்திரம் போன்ற பல புதிய கண்டுபிடிப்புகள் உருவாகின

தொழினுட்பம் 
தானூர்தி தனியர்களின் போக்குவரத்தில் புரட்சி செய்தது.

18ஆம் நூற்றாண்டு இங்கிலாந்தில் தொடங்கிய தொழிற்புரட்சி, வேளாண்மை, உற்பத்தி, சுரங்க, உலோகவியல்,போக்குவரத்து ஆகியவற்றில், நீராவி ஆற்றலின் கண்டுபிடிப்பால் உந்தப்பட்ட பெரும்பாலான தொழில்நுட்ப வடிவமைப்புகளின் காலமாகும். இரண்டாம் தொழிற்துறைப் புரட்சியில் மின் ஆற்றல் பயன்பாட்டால் மின்னோடி, ஒளி விளக்கு போன்ற எண்ணற்ற புதுமைகளை உருவாகின. வளரும் தொழினுட்பம் வானளாவிய கட்டிடங்கள், பரந்த நகர்ப்புறப் பகுதிகள் உருவாக வழிவகுத்தது, இங்கு வசிக்கும் மக்கள் தங்கள் போக்குவரத்துக்கும் உணவு பகிர்வுக்கும் விசைப்பொறிகள் சார்ந்திருக்கின்றனர். தொலைவரி, தொலைபேசி, வானொலி,தொலைக்காட்சி ஆகியவற்றின் கண்டுபிடிப்புடன் தொடர்பாடல் மிகவும் பெரிதும் மேம்படுத்தப்பட்டது. 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியும் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கமும் விமானப் போக்குவரத்து, தானூர்திக் கண்டுபிடிப்புகளால் போக்குவரத்தில் ஒரு புரட்சியைக் கண்டன.

தொழினுட்பம் 
1991 இல் நடைபெற்ற குவைத்போரில் பங்குபெற்ற எப்-15 மற்றும் எப்-16 போர் விமானங்கள்

இயற்பியலில் அணுக்கரு பிளவின் கண்டுபிடிப்பானது அணு ஆயுதங்கள் மற்றும் அணு சக்தி ஆகிய இரண்டிற்கும் வழிவகுத்தது. திரிதடையம்(ஆங்:Transistor) மற்றும் தொகுசுற்று (ஆங்: Integrated circuits) ஆகியவற்றின் சிறியதாக்கபட்ட பின்பு கணினி கண்டுபிடிக்கப்பட்டது. தகவல் தொழினுட்பம் பின்னர் இணைய உருவாக்கத்திற்கு இட்டுச்சென்றது, இது தற்போதைய தகவல் காலத்தினை அறிமுகப்படுத்தியது. மனிதர்கள் செயற்கைகோள்கள் கொண்டு விண்வெளியை ஆராய முடிந்தது(பின்னர் தொலைத்தொடர்புக்கு பயன்படுத்தப்பட்டது) மற்றும் சந்திரனுக்கான மனிதப் பயணங்கள் அனைத்து வழிகளிலும் மேற்கொள்ளப்பட்டன. மருத்துவத்தில், இந்த சகாப்தம் புதிய் கண்டுபிடிப்புகளை கண்டறிந்தது அவை, திறந்த இதய அறுவை சிகிச்சை, ஸ்டெம் செல் சிகிச்சை மற்றும் புதிய மருந்துகள் மற்றும் சிகிச்சைகள் ஆகும்.

பயன்பாடுகள்

மனித இனத்தின் தொழினுட்பப் பயன்பாடு, இயற்கை வளங்களை எளிமையான கருவிகளைச் செய்வதற்குப் பயன்படுத்தியதுடன் தொடங்குகிறது. வரலாற்றுக்கு முந்திய கண்டுபிடிப்புக்களான, தீயைக் கட்டுப்படுத்திப் பயன்படுத்தல், உணவு வளங்களைப் பெருக்கிக் கொள்ளவும், சில்லின் கண்டுபிடிப்பு போக்குவரத்துச் செய்வதற்கும், சூழலைக் கட்டுப்படுத்துவதற்கும் உதவின. பிந்திய காலக் கண்டுபிடிப்புக்களான, அச்சியந்திரம், தொலைபேசி, இணையம் என்பன தொடர்புகளுக்கான புறநிலைத் தடைகளைக் களைந்ததுடன், மனிதர்கள் உலக அளவில் எளிதாக தொடர்பு கொள்ள வழி வகுத்தன.

அறைகூவல்கள்

தொழில் நுட்பங்கள் அனைத்தும் ஒட்டுமொத்த மனித இனத்தின் நலனுக்காகவோ அல்லது உலக அமைதிக்காகவோ பயன்பட வேண்டும் என்பதில்லை. படை ஆயுதங்களின் வளர்ச்சிக்கு வரலாறு முழுவதும் தொழினுட்பம் பயன்பட்டிருக்கிறது. எளிமையான கத்தி முதல், அணுவாயுதங்கள் வரை கூடிக்கொண்டேவரும் அழிப்பு ஆற்றலுடன் கூடிய ஆயுதங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. தொழினுட்பம் சமூகத்தையும், அதன் சுற்றாடலையும் பல வழிகளில் பாதித்துள்ளது. பல சமுதாயங்களில், உயர்ந்த பொருளாதாரத்தை வளர்த்துக் கொள்வதற்குத் தொழினுட்பம் உதவியுள்ளது. பல தொழில்நுட்பச் செயல்முறைகள், மாசுறுதல் போன்ற தேவையற்ற பக்க விளைவுகளை உருவாக்குவதுடன், இயற்கை வளங்களையும் அளவு மீறிச் சுரண்டுகின்றன.

பிற விலங்கினங்கள்

தொழினுட்பம் 
கொரில்லா குரங்கு ஊன்று கோல் கொண்டு நீரின் ஆழத்தை அளவீடுகிறது; இது தொழினுட்பத்தை மற்ற உயிரினங்களும் பயன்படுத்துவதற்கு எடுத்துகாட்டாகும்.

அடிப்படை தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல், மனித இனத்தைத் தவிர, சில விலங்கினங்களிலும் அமைகிறது. இவற்றுள் சிம்பஞ்சிகள், , சில ஓங்கில் இனங்கள், காகங்கள் போன்ற உயிரினங்களும் அடங்கும்.

தற்காலத் தொழினுட்பம்

தொழில் நுட்பம் வளர்ச்சி என்பது மனிதனின் வேகத்திற்கும் திறனுக்கும் ஈடுகொடுக்கும்படி மேம்படுவதே. வளர்ந்து வரும் புதிய தலைமுறைகள் தகவல் கருவிகள் இல்லாமல் இருப்பது இல்லை. எனவே, தங்களுக்குத் தேவையான அத்தனை தகவல்களும் விரல் நுனியில் தேடி படித்துக்கொள்கிறார்கள்.

தற்காலத் தொழினுட்பத்தில் இன்றியமையாதது அணிந்து கொள்ளும் கருவிகளே. அவை கைக்கடிகாரமாகவோ கண்ணாடியாகவோ காலணியாகவோ அமையலாம். இவை எல்லாவற்றிலும் தொழினுட்பம் தன் அடையாளத்தைப் பதித்து உள்ளது. உடற்பயிற்சி முதன்மை தந்து தற்காலத் தொழினுட்பம் வடிவமைக்கப் படுகிறது. தற்காலத் தொழில்னுட்பம், எளிய தொழில்னுட்பத்தைக் கடந்து வாழ்க்கை முறையை மாற்றி, வரும் தலைமுறைகளுக்கு ஏற்றாற்போல மாற்றமடைந்து கொண்டே இருக்கிறது.

இன்றைய தொழில்னுட்பம் பாதுகாப்பை மேம்படுத்துவதையே முக்கிய குறிக்கோளாகக் கொண்டு, புதிய கண்டுபிடிப்புகளைத் தங்கள் தொழில்னுட்பத்தில் இணைத்து பழைய கருவிகளை எளிதில் இயக்கவும், புதிய கருவிகளை உருவாக்கவும் முனைகிறார்கள். ஒவ்வொரு முறை தங்கள் தொழில்னுட்பம் பாதுகாப்பை நழுவவிடும் போதும், புதிய தொழில் நுட்பம் கண்டுபிடிக்க வித்தாக அமைகிறது.

சில தொழில்னுட்பங்கள் மனிதன் மகிழ்ச்சியாக வைக்கவும், சில அவன் பாதுகாப்பை மேம்படுத்தவும், சில வாழ்க்கைக்கான அரிய பங்காற்றவும் பயன்படுகின்றன. தொலைக்காட்சியாகட்டும், மெய்நிகர் பயன்கருவிகள் ஆகட்டும் அல்லது புதிய ஏவூர்தி ஆகட்டும் எல்லாமே தற்காலத் தொழினுட்பங்களே ஆகும்.

இத்தகைய சிறப்பு மிக்க தொழினுட்பங்கள் முதியவர்கள் எளிமையாக பயன்படுத்தும்படியும் சில கண்டுபிடிப்புகள் அவர்களது உயிர்காக்கும் கருவியாகவும் உள்ளன. மேலும், இரத்த அழுத்தம், இரத்தச் சர்க்கரை அளவு கண்டுகொள்ளவும் ஊட்டச்சத்து விகிதப்படி உணவு பரிந்துரைத்தல் என உடல்நலத்தை மேம்படுத்துவதற்கும் பயன்படுகின்றன.

தற்கால தொழினுட்பம்-வேளாண்மை

இயற்கை வளங்களைப் பயன்படுத்தி வேளாண்மை செய்ய முயலும் தற்கால உழவர்களுக்கு தொழினுட்பம் பெரிய வளமும் பேறும் ஆகும். மண்வளப்படுத்தவும் வயலிலுக்கு நீரைப் பாய்ச்சவும் பயிரிடவும் களைநீக்கவும் தீங்குயிர்களில் இருந்து காக்கவும் அறுவடை முடிக்கவும் எல்லா வகைகளிலும் தொழில்னுட்பம் பயன்படுகிறது. வேளாண்மையில் காலமும், விளைச்சலும் மிக மிக முதன்மையானது. தற்காலத் தொழில்னுட்பம் சரியான நேரத்தில் விதைக்கவும், களையெடுக்கவும், அறுவடை செய்யவும் பக்க பலமாக உள்ளது. புதிய தொழில்னுட்பங்கள், பழைய தொழில்னுட்பத்தை விட மேம்பட்டு உள்ளன.

பயிர் செடிகளை அழிக்கும் பூச்சிகளை, கட்டுப் படுத்தவும், விரைவாக பூச்சிகளை அழிக்கவும் இன்றைய தொழில்னுட்பம் இன்றியமையாததாக உள்ளது. புதிய மரபணு மாற்றிய விதைகள் இயற்கையாகவே பூச்சிகளை எதிர்க்கவும், நீர்வளத்தைக் குறைவாக பயன்படுத்தும்படி மாற்றி அமைக்கவும் தொழில்னுட்பம் பயன்படுகிறது.

நீர் மேலாண்மையை மனதில் கொண்டு பயிர்களுக்குத் தேவையான நீரைப் பாய்ச்ச, சொட்டு நீர் பாசனத்திற்குத் தானியங்கிவழி தேவையறிந்து நீரைக் கொடுக்கவும் உரிய தகவல்கள் திட்டமிட்டு முன்னரே பதியப்படுவதால் உழவர்களுக்கு வேலைப்பளுவை குறைத்துள்ளது.

மறுசுழற்சிக்கு ஏற்றபடி தொழினுட்பம் வளைந்து கொடுக்கும்படி வடிவமைத்து இயற்கை வளத்தைப் பாதுகாக்கவும் பயன்படுகிறது. வேளாண் கழிவுகளை மறுசுழற்சிக்கு உட்படுத்தி, மீண்டும் உரமாக எளிதில் மாற்றவும், அறுவடை செய்த பயிர்களைப் பாதுகாக்கவும், சிப்பங் கட்டிச் சந்தைக்கு அனுப்பவும் உதவுகிறது.

எதிர்காலத் தொழினுட்பம்

தொழில்நுட்பத்தின் கோட்பாடுகள் பெரும்பாலும் தொழில்நுட்பத்தின் எதிர்காலத்தை முன்கூட்டியே கணிக்கின்றன, இருப்பினும் எதிர்காலத்தின் அனைத்துக் கணிப்புகளையும் போல தொழில்நுட்பமும் உறுதியற்றதே.

எதிர்காலவாதியான இரே கர்வெயில் எதிர்காலத்தில் மரபியலும் மீநுண் (நானோ) தொழில்நுட்பமும் எந்திரனியலும் முதன்மை வாய்ந்தனவாக அமையும் எனக் கணித்துள்ளார்.

மேற்கோள்கள்

மேலும் படிக்க

Tags:

தொழினுட்பம் அறிவியலும் பொறியியலும் தொழில்நுட்பமும்தொழினுட்பம் வரலாறுதொழினுட்பம் பயன்பாடுகள்தொழினுட்பம் அறைகூவல்கள்தொழினுட்பம் பிற விலங்கினங்கள்தொழினுட்பம் தற்காலத் தொழினுட்பம் தற்கால -வேளாண்மைதொழினுட்பம் எதிர்காலத் தொழினுட்பம் மேற்கோள்கள்தொழினுட்பம் மேலும் படிக்கதொழினுட்பம்உயிர்மருத்துவப் பொறியியல்கருத்துருகருவிபொறிவன்பொருள்

🔥 Trending searches on Wiki தமிழ்:

சைமன் குழுதேம்பாவணிசிறுபாணாற்றுப்படைபரதநாட்டியம்இந்திய அரசியலமைப்பின் முகப்புரைசீமான் (அரசியல்வாதி)குப்தப் பேரரசுதிணைஅப்துல் ரகுமான்சூல்பை நீர்க்கட்டிசே குவேராமிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுதிராவிட இயக்கம்பஞ்சாயத்து ராஜ் சட்டம்வேலு நாச்சியார்நரேந்திர மோதிஜெ. ஜெயலலிதாஊராட்சி ஒன்றியம்திரு. வி. கலியாணசுந்தரனார்ஜே பேபிபால காண்டம்ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்இரண்டாம் உலகப் போர்சுந்தர காண்டம்விராட் கோலிவல்லினம் மிகும் இடங்கள்கா. ந. அண்ணாதுரைமூலம் (நோய்)வேற்றுமை (தமிழ் இலக்கணம்)விசயகாந்துநயினார் நாகேந்திரன்வாட்சப்மீனாட்சிஹர்திக் பாண்டியாபழமொழி நானூறுஇந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படைக் கடமைகள்இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்களின் பட்டியல்ஐக்கிய அரபு அமீரகம்கொல்லி மலைஎட்டுத்தொகைஉணவு பதப்படுத்தல்ஜெயம் ரவிதொழில் நிறுவனங்கள்அகரவரிசைகடையெழு வள்ளல்கள்கீர்த்தி சுரேஷ்தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்அகநானூறுமுதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்தேனீவ. உ. சிதம்பரம்பிள்ளைஉணவுமுக்கூடற் பள்ளுதிராவிசு கெட்கண்ணகிநோட்டா (இந்தியா)சமூகம்ஆடுஜீவிதம் (திரைப்படம்)உலகம் சுற்றும் வாலிபன்தாலாட்டுப் பாடல்இந்திரா காந்திநாயன்மார் பட்டியல்தொகைநிலைத் தொடர்ஸ்ரீதிணை விளக்கம்பட்டினப் பாலைஉலகத் தமிழாராய்ச்சி மாநாடுநீர்முத்தொள்ளாயிரம்ஆபிரகாம் லிங்கன்பெண்திருமந்திரம்தேர்தல் நடத்தை நெறிகள்முத்துராஜாசென்னை மாநகர பேருந்து வழித்தடங்கள்அறுபடைவீடுகள்புவிதமிழ்த்தாய் வாழ்த்துபதினெண் கீழ்க்கணக்கு🡆 More