எபிரேய நாட்காட்டி

எபிரேய நாட்காட்டி (Hebrew Calendar) அல்லது யூத நாட்காட்டி யூதர்களால் சமய சடங்குகளுக்காக பயன்படுத்தப்படும் ஓர் சூரியசந்திர நாட்காட்டி ஆகும்.

அண்மைய காலங்களில் சில கிறித்தவர்களும் இதனை பாஸ்கா விழாவை குறிக்க பயன்படுத்தி வருகின்றனர். இந்நாட்காட்டி முதன்மையாக சமய சடங்குகளுக்கே பயன்படுத்தப்பட்டு வந்தாலும், இசுரேலில் யூத விவசாயிகளால் விவசாய கால கணிப்பிற்கும் இது பயன்படுகின்றது.

யூத நாட்காட்டியில் 29 அல்லது 30 நாட்கள் கொண்ட 12 மாதங்கள் உள்ளன. மற்றும் சூரிய நாட்காட்டியுடன் ஒருங்கிணைக்க பத்தொன்பது ஆண்டுகளில் ஏழுமுறை ஓர் இடைச்செருகல் மாதம்(intercalary) சேர்க்கப்படுகிறது. ஒவ்வொரு அமாவாசையன்றும் புதிய மாதம் துவங்கும்.

பன்னிரு வழமையான மாதங்கள்:நிசன் (30 நாட்கள்), இயார் (29நாட்கள்), சிவன் (30 நாட்கள்), தம்முஸ் (29 நாட்கள்), அவ் (30 நாட்கள்), எலுல் (29 நாட்கள்), தீஸ்ரே (30 நாட்கள்), செஷ்வன் (29 அல்லது 30 நாட்கள்), கிஸ்லெவ் (29 அல்லது 30 நாட்கள்), தெவேத் (29 நாட்கள்), சேவத் (30 நாட்கள்) மற்றும் அதார் (29 நாட்கள்). நெட்டாண்டுகளில் இம்மாதம் அதார் II என வழங்கப்பட்டு இதற்கு முன்னர் (சேவத் மாதத்தின் பின்னர்) அதார் I (30 நாட்கள்) மாதம் சேர்க்கப்படுகிறது.

ஆண்டு நிசன் மாதத்தில் துவங்குகிறது. நிசன் 15 அன்று வரும் முழுநிலவு அன்று பார்லி அறுவடை பண்டிகை (நமது அறுவடை பண்டிகை பொங்கல் போன்று)ஆண்டு துவக்கத்தை வரவேற்கிறது. இந்த பண்டிகை எப்போதும் இளவேனில் காலத்தில் அமையுமாறு நெட்டாண்டுகளில் இடைச்செருகல் மாதம் சேர்க்கப்படுகிறது.

வெளியிணைப்புகள்

நாள் மாற்றிகள்

Tags:

இசுரேல்கிறித்தவம்சூரியசந்திர நாட்காட்டியூத சமயம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

என் ஆசை மச்சான்திருமலை நாயக்கர்இந்திவாணிதாசன்அத்தி (தாவரம்)தேவேந்திரகுல வேளாளர்பஞ்சதந்திரம் (திரைப்படம்)தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024மலேசியாமுதுமொழிக்காஞ்சி (நூல்)சங்க இலக்கியம் தொகுப்புப் பாடல்கார்கி (திரைப்படம்)சென்னைமணிரத்னம் திரைப்படப் பட்டியல்அகத்தியர்பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிஅறிவியல்பெயர்ச்சொல்கருப்பைஇராமாயணம்பனைஇந்தியத் தேர்தல்கள் 2024காஞ்சிபுரம்இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்மருதம் (திணை)செயற்கை நுண்ணறிவுஇலங்கையின் மாவட்டங்கள்நரேந்திர மோதிஈமானின் கிளைகள்நாணயம்எலிதிருயிந்தளூர் பரிமள ரங்கநாதர் கோயில்நெருப்புமஞ்சும்மல் பாய்ஸ்முத்துராமலிங்கத் தேவர்நாணயம் இல்லாத நாணயம்செக் மொழிமுல்லைப்பாட்டுதிராவிசு கெட்நாலாயிர திவ்வியப் பிரபந்தம்தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்காச நோய்நாழிகைஇராமர்ஜே பேபிகட்டுவிரியன்முத்தரையர்ஆடு ஜீவிதம்சேக்கிழார்லக்ன பொருத்தம்வறுமையின் நிறம் சிவப்புமுகம்மது நபிவிளாதிமிர் லெனின்அண்ணாமலை குப்புசாமிசாகித்திய அகாதமி விருதுதிருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்சிவாஜி (பேரரசர்)தமிழக வரலாறுதமிழர் பருவ காலங்கள்மதுரை முத்து (நகைச்சுவையாளர்)சரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)சார்பெழுத்துசுடலை மாடன்திருவள்ளுவர்பொது ஊழிமுல்லை (திணை)அன்பே ஆருயிரே (2005 திரைப்படம்)மதுரை வீரன்திருநங்கைதிருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்தாவரம்திருப்பரங்குன்றம் முருகன் கோவில்பாரத ஸ்டேட் வங்கிவளி மாசடைதல்வெள்ளியங்கிரி மலையானைமகாபாரதம்விபுலாநந்தர்🡆 More