மாலி

மாலி (Mali, மாலிக் குடியரசு, பிரெஞ்சு மொழி: République du Mali), மேற்கு ஆபிரிக்காவில் உள்ள ஒரு நாடாகும்.

ஆபிரிக்காவில் ஏழாவது பெரிய நாடு இதுவாகும். இதன் எல்லைகளாக வடக்கே அல்ஜீரியா, கிழக்கே நைஜர், தெற்கே புர்கினா பாசோ, மற்றும் ஐவரி கோஸ்ட் ஆகியனவும், தென்மேற்கே கினி, மேற்கே செனெகல், மற்றும் மௌரித்தானியா ஆகியனவும் அமைந்துள்ளன. மாலியின் வடக்கெல்லை சகாராப் பாலைவனம் வரை நீண்டுள்ளது. அதேவேளை மக்கள் அதிகம் வாழும் இதன் தெற்கெல்லை நைஜர் மற்றும் செனெகல் ஆற்றுப் படுகை வரை நீண்டுள்ளது.

மாலிக் குடியரசு
République du Mali
கொடி of மாலி
கொடி
சின்னம் of மாலி
சின்னம்
குறிக்கோள்: "Un peuple, un but, une foi"
"ஒரே மக்கள், ஒரே குறிக்கோள், ஒரே நம்பிக்கை"
நாட்டுப்பண்: Pour l'Afrique et pour toi, Mali
"ஆபிரிக்காவுக்காக மற்றும் உங்களுக்காக, மாலி"
மாலிஅமைவிடம்
தலைநகரம்
மற்றும் பெரிய நகரம்
பமாக்கோ
ஆட்சி மொழி(கள்)பிரெஞ்சு
மக்கள்மாலியன்
அரசாங்கம்குடியரசுத் தலைவர் கூட்டாட்சி முறைக் குடியரசு
• குடியரசுத் தலைவர் (சனாதிபதி)
அமடூ டுமானி டவுரே
• தலைமை அமைச்சர் (பிரதம மந்திரி)
உஸ்மான் இசௌஃபி மாயிகா
விடுதலை 
பிரான்சிடம் இருந்து
• அறிவிப்பு
செப்டம்பர் 22, 1960
பரப்பு
• மொத்தம்
1,240,192 km2 (478,841 sq mi) (24வது)
• நீர் (%)
1.6
மக்கள் தொகை
• ஜூலை 2005 மதிப்பிடு
13,518,000 (65வது)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2005 மதிப்பீடு
• மொத்தம்
$14.400 பில்லியன் (125வது)
• தலைவிகிதம்
$1,154 (166வது)
மமேசு (2004)மாலி 0.338
Error: Invalid HDI value · 175வது
நாணயம்மத்திய ஆபிரிக்க பிராங்க் (XOF)
அழைப்புக்குறி223
ஐ.எசு.ஓ 3166 குறியீடுML
இணையக் குறி.ml

பிரெஞ்சு சூடான் என முன்னர் அழைக்கப்பட்ட இந்நாடு மாலிப் பேரரசின் நினைவாக மாலி என்ற பெயரைப் பெற்றது. இப்பெயர் நீர்யானையின் பம்பாரா மொழிப் பெயரடியில் இருந்து மருவியது. மாலியின் தலைநகரம் பமாக்கோ என்பது பம்பாரா மொழியில் "முதலைகளின் இடம்" என்ற பொருள் கொண்டது்.

மாலி
மாலி
ஜென்னே மசூதி
மாலி
பமாக்கோவில் மசூதி அமைக்கப்படுகிறது

வரலாறு

1880இல் மாலி பிரான்சின் முற்றுகைக்குள்ளாகி அதன் குடியேற்ற நாடாகியது. இது பிரெஞ்சு சூடான் அல்லது சூடானியக் குடியரசு என அழைக்கப்பட்டது. 1959இன் துவக்கத்தில், மாலி, செனெகல் ஆகியன மாலிக் கூட்டமைப்பு என்ற பெயரில் இணைந்தன. இக்கூட்டமைப்பு ஜூன் 20, 1960இல் பிரான்சிடம் இருந்து விடுதலை அடைந்தது. சில மாதங்களில் இக்கூட்டமைப்பில் இருந்து செனெகல் விலகியது. மாலிக் குடியரசு, மொடீபோ கெயிட்டா தலைமையில் செப்டம்பர் 22, 1960இல் பிரான்சிடம் இருந்து விலகியது.

1968இல் இடம்பெற்ற இராணுவப் (படைத்துறைப்) புரட்சியில் மொடீபோ கெயிட்டா சிறைப்பிடிக்கப்பட்டார். அதன் பின்னர் "மவுசா ட்ர்றோரே" என்பவர் 1991 வரை ஆட்சியில் இருந்தார். அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை அடுத்து 1991இல் மீண்டும் இராணுவப் (படைமுகப்) புரட்சி இடம்பெற்றது. 1992இல் "அல்ஃபா ஔமார் கொனாரே" என்பவர் மாலியின் முதலாவது தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்தார். 1997இல் மீண்டும் இவர் அதிபரானார் (தலைவரானார்). 2002இல் இடம்பெற்ற தேர்தலில் அமடூ டுமானி டவுரே அதிபராகி இன்று வரை ஆட்சியில் உள்ளார். இன்று மாலி ஆப்பிரிக்காவில் ஒரு நிலையான ஆட்சியுள்ள நாடாகத் திகழ்கிறது.

இனக்குழு

மாண்டே (Mande) 50% (பம்பாரா, மாலின்கே, சோனின்கே), பெயூல் (Peul) 17%, வோல்ட்டாயிக் (Voltaic) 12%, சொங்காய் (Songhai) 6%, டுவாரெக் மற்றும் மூர் (Moor) 10%, ஏனையோர் 5%

மதம்/சமயம்

இஸ்லாம் 90%, பழங்குடிகளின் மதம் 9%, கிறிஸ்தவம் 1%

பொருளாதாரம்

மாலி நாட்டின் பொருளாதார விவகாரங்களை மத்திய மேற்கு ஆப்பிரிக்க வங்கியும், மேற்காப்பிரிக்க நாடுகளின் பொருளாதார சமூகமும் ஒன்றாக இணைந்து கவனித்துக் கொள்ளுகின்றன. உலகிலேயே மிகவும் ஏழ்மையான நாடு இது. ஒரு தொழிலாளியின் ஆண்டு வரிமானம் 97,500 ரூபாய் ($ 1,500 டாலர்கள்) மட்டுமே.

விவசாயம்

இந்நாட்டின் முக்கிய தொழிலே விவசாயம் ஆகும். இங்கு உற்பத்தி செய்யப்படும் பருத்தியானது மேற்கத்திய நாடுகளான செனகல், ஐவரி கோஸ்ட் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. 2002 ஆம் ஆண்டில் மட்டும் 620,000 டன் பருத்தி உற்பத்தி செய்யப்பட்டது, ஆனாலும் 2003 ஆம் ஆண்டில் விலையில் முன்னேற்றம் எதுவுமில்லாமல் வீழ்ச்சியையே சந்தித்தது. பருத்தியைத் தவிர்த்து நெல், பருப்பு வகைகள், மக்காச்சோழம், காய்கறிகள், மரச்சாமான்கள், தங்கம், விலங்கினங்கள் என்பனவையும் சேர்த்து 80% அளவுக்கு ஏற்றுமதி செய்கிறது. இங்கு 80% மக்கள் விவசாயத்தையே நம்பி வாழுகிறார்கள். மேலும் 15% மக்கள் தான் வேறு பொது பணியில் ஈடுபடுகிறார்கள். இது போக மேலும் உள்ளவர்கள் வேலையற்றவர்களாக ஏதும் கிடைத்த வேலையைப் பார்த்துக்கொண்டு வாழுகிறார்கள். மாலி பருத்தி உற்பத்தியில் சிறந்து விளங்கினாலும் சரியான விலை கிடைப்பதற்கு அமெரிக்காவின் கொள்கையும் ஒரு காரணம் ஆகும். அமெரிக்கா அவர்களின் பருத்தி விவசாயிகளுக்கு அதிகமான மானியம் வளங்குகிறது. இதனால் உலக சந்தையில் மாலி நாட்டு பருத்திக்கு முக்கியத்துவம் கிடைக்காமல் விலை விழ்ச்சியை சந்திக்க வேண்டியுள்ளது.

கலை பண்பாடு

90% வீதமானோர் சுன்னி இஸ்லாமியப் பிரிவைப் பின்பற்றுகின்றனர்.

வெளி இணைப்புகள்

Tags:

மாலி வரலாறுமாலி இனக்குழுமாலி மதம்சமயம்மாலி பொருளாதாரம்மாலி கலை பண்பாடுமாலி வெளி இணைப்புகள்மாலிஅல்ஜீரியாஆபிரிக்காஐவரி கோஸ்ட்கினிகிழக்குசகாராப் பாலைவனம்செனெகல்தெற்குநைஜர்நைஜர் ஆறுபிரெஞ்சு மொழிபுர்கினா பாசோமேற்குமௌரித்தானியாவடக்கு

🔥 Trending searches on Wiki தமிழ்:

திரைப்படம்உவமையணிதிருத்தணி முருகன் கோயில்மழைநீர் சேகரிப்புஆயுள் தண்டனைசைவ சமயம்ஆகு பெயர்ஊராட்சி ஒன்றியம்தூது (பாட்டியல்)நயன்தாராசிட்டுக்குருவிபாலினப் பயில்வுகள்சுந்தரமூர்த்தி நாயனார்அம்மனின் பெயர்களின் பட்டியல்மனோன்மணீயம்புதுப்பிக்கத்தக்க வளம்கருக்கலைப்புஉலக சுற்றுச்சூழல் நாள்நீரிழிவு நோய் (இரண்டாவது வகை)சிலப்பதிகாரம்மயக்கம் என்னஉணவுச் சங்கிலிஇந்திய அரசியலமைப்புபூரான்பதினெண் கீழ்க்கணக்குகர்மாகுற்றியலுகரம்மத கஜ ராஜாபௌர்ணமி பூஜைபெரியபுராணம்ஆளுமைதமிழ் நீதி நூல்கள்புதன் (கோள்)தேனீசெரால்டு கோட்சீசித்திரகுப்தர் கோயில்அக்கி அம்மைசென்னையூடியூப்இந்தியத் தேர்தல்கள் 2024ஆதிமந்திசிவவாக்கியர்வெள்ளி (கோள்)தங்கம்நாடார்திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்உத்தரகோசமங்கைஸ்ரீலீலாமதுரைக் காஞ்சிநரேந்திர மோதிகாய்கறிகண்டம்நாயன்மார் பட்டியல்சித்திரகுப்தர்பனிக்குட நீர்ஒற்றைத் தலைவலிசித்திரா பௌர்ணமிசிதம்பரம் மக்களவைத் தொகுதிசிறுநீரகம்தமிழ் எண் கணித சோதிடம்நம்மாழ்வார் (ஆழ்வார்)தமிழக மக்களவைத் தொகுதிகள்அன்னி பெசண்ட்தமிழ் மாதங்கள்தனுசு (சோதிடம்)கலாநிதி மாறன்நாட்டு நலப்பணித் திட்டம்செண்டிமீட்டர்இளங்கோவடிகள்இடைச்சொல்மங்கலதேவி கண்ணகி கோவில்கொடைக்கானல்திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்மறைமலை அடிகள்சேக்கிழார்தேவாரம்இந்து சமயம்🡆 More