வரலாறு

வரலாறு (ஆங்கிலம்: History) (கிரேக்கம்: ἱστορία, historia பொருள்: ஆய்வு மூலம் பெறப்பட்ட அறிவு) என்பது இறந்த காலத்தைப் பற்றி படிக்கின்ற ஒரு பாடப்பிரிவு என எழுதப்பட்ட ஆவணங்களில் விவரிக்கப்பட்டுள்ளது .

எழுதப்பட்ட பதிவுகளுக்கு முன்பாக நிகழ்ந்தவை அனைத்தும் வரலாற்றுக்கு முந்தைய நிகழ்வுகள் எனக் கருதப்படுகின்றன. இத்தலைப்பின்கீழ் கடந்த கால நிகழ்வுகள், நினைவுகள், கண்டுபிடிப்புகள், சேகரிப்புகள், அமைப்புகள், அன்பளிப்புகள், நிகழ்வுகள் பற்றிய தகவல்கள் ஆகியவை அனைத்தும் இடம் பெறுகின்றன. வரலாற்றைப் பற்றி ஆய்வு செய்கின்ற அறிஞர்கள் வரலாற்று அறிஞர்கள் எனப்படுகின்றனர்.

வரலாறு
நிக்கோலசு கைசிசுவின் வரலாறு குறித்த வரைபடம்

வரலாறு ஒரு பாடப் பிரிவாகக் கருதப்படுவது மட்டுமின்றி கடந்த கால நிகழ்வுகளின் வரிசை முறையை ஆய்வு செய்வதற்கும், அவற்றை விளக்குகின்ற ஒரு விரிவுரையாகவும் பயன்படுகிறது. கடந்தகால நிகழ்வுகளுக்கான காரணங்களையும், விளைவுகளையும் உய்த்துணரவும் அவற்றை உறுதிப்படுத்தவும் வரலாறு பயன்படுகிறது .

வரலாற்று வல்லுநர்கள் சில நேரங்களில் வரலாற்றின் இயல்பு மற்றும் அதன் பயன்பாடு பற்றி விவாதித்ததன் மூலம், வரலாறு என்பதற்கு அதுவே ஒரு முடிவு என்றும், தற்போதுள்ள பிரச்சினைகளைப் பற்றிய சரியான கண்ணோட்டத்தை வழங்குவதற்கான ஒரு வழிமுறையாகவும் வரலாற்றைக் கருதுகின்றனர்.

வெளிப்புற ஆதாரங்கள் ஏதுமில்லாத ஒரு குறிப்பிட்ட கலாச்சாரத்திற்குரிய ஆர்தர் அரசனைச் சேர்ந்த கதைகள் போன்ற சில பொதுவான கதைகள் வழக்கமாக கலாச்சார பாரம்பரியங்கள் அல்லது புனைவுகளாக வகைப்படுத்தப்படுகின்றன, ஏனென்றால் வரலாற்றின் ஒழுங்குமுறை இலக்கணத்திற்குத் தேவையான தேடல் இல்லாமல் அவை உள்ளன . மேற்கத்திய பாரம்பரியத்தில் இரோட்டோடசு என்ற 5-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கிரேக்க வரலாற்று வல்லுநர் வரலாற்றின் தந்தை என்று கருதப்படுகிறார். மேலும் சமகால வரலாற்று வல்லுநரான ஏதென்சின் துசைடைட்சும் இவரும் சேர்ந்து மனித வரலாற்றின் நவீன ஆய்வுக்கான அடித்தளங்களை உருவாக்க உதவினர். இவ்விருவரின் படைப்புக்கள் யாவும் இன்றும் வாசிக்கப்பட்டு வருகின்றன. மேலும் கலாச்சாரம் சார்ந்த இரோட்டோடசுக்கும், இராணுவத் தளமான துசைடைட்சுக்கும் இடையேயான இடைவெளி நவீன வரலாற்று எழுத்துக்களின் கருத்துக்கு அல்லது அணுகுமுறைக்கு ஒரு முக்கியமான புள்ளியாக உள்ளது. ஆசியாவில், சிபிரிங் அண்டு ஆட்டம் ஆனல்சு என்ற வரலாற்று கலைக்களஞ்சியம் கி.மு. 722 ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பிக்கப்பட்டதாக அறியப்படுகிறது. ஆனால் கி.மு 2 ஆம் நூற்றாண்டுக்குரிய நூல்கள் மட்டுமே எஞ்சியிருக்கின்றன.

வரலாற்றின் தன்மை பற்றிய பல மாறுபட்ட விளக்கங்கள் பல நூற்றாண்டுகளாக உருவாகியுள்ளன மற்றும்

பெயர்க்காரணம்

வரலாறு 
பிரெடரிக் டையில்மான்(1896) எழுதிய வரலாறு

பண்டைய கிரேக்க மொழியிலிருந்து வரலாறு என்ற பொருள் கொண்ட ἱστορία, historia என்ற சொல் வரப்பெற்றுள்ளது. அரிசுடாட்டிலும் இதே பொருளில் விலங்குகள் குறித்த தேடல் என்ற பொருள் கொண்ட Περὶ Τὰ Ζῷα Ἱστορίαι என்ற படைப்பில் பயன்படுத்தியுள்ளார் . முன்னுரை சொல்லான ἵστωρ என்ற சொல் எராக்ளிப்டசின் பண்டைய சில வழிபாட்டுப் பாடல்களில், சில கல்வெட்டுகளில் இடம் பெற்று சான்றாக உள்ளது.

கிரேக்கச் சொல்லானது பாரம்பரிய இலத்தீன் மொழியிலிருந்து பெறப்பட்ட சொல்லாகும். கடந்த கால நிகழ்வுகள் தொடர்பான தேடல், விசாரணை, ஆய்வு, கணக்கு, விளக்கம், நிகழ்வுகளை எழுதுதல், கடந்தகால நிகழ்வுகளின் பதிவு செய்யப்பட்ட அறிவு என பல்வேறு பொருளையும் இச்சொல் தாங்கியுள்ளதாகக் கருதப்படுகிறது. History என்ற சொல் பண்டைய அயர்லாந்து அல்லது வேல்சு மொழியிலிருந்து ஆங்கிலந்திற்குள் வந்து பயன்படுத்தப்பட்டிருக்கிறது .

இதற்கிடையில் இலத்தீன் மொழியில் பண்டைய பிரெஞ்சு (ஆங்கிலோ-நார்மன்) மொழியில் வரலாற்றின் தன்மையானது ஒரு தனி நபரின் வாழ்க்கை நிகழ்வுகள் (12 ஆம் நூற்றாண்டின் தொடக்கம்), ஒரு குழு அல்லது மக்களின் புதிய முன்னேற்றங்கள், வரலாற்று நிகழ்வுகளின் வியத்தகு விளக்கம் அல்லது சித்தரிப்பு, மனித பரிணாம வளர்ச்சியுடன் தொடர்புடைய அறிவியல் அறிவு, உண்மையான அல்லது கற்பனை நிகழ்வுகளின் கதை போன்ற மேலும் பல பொருள்களைக் கொண்ட சொல்லாகவும் உருவானது ,

ஆங்கிலோ நார்மன் மொழியில் இருந்து வந்த history என்ற இச்சொல் மத்திய ஆங்கிலத்திற்கும் கடனாகப் பெறப்பட்டது. 13 ஆம் நூற்றாண்டில் காணப்படும் இச்சொல் பிற்கால 14 ஆம் நூற்றாண்டில் ஒரு பொதுச் சொல்லாகப் பயன்பாட்டில் இருந்துள்ளது. மத்திய கால ஆங்கிலத்தில் வரலாற்றின் பொருள் பொதுவாக கதை என்று கருதப்பட்டது. கடந்த நிகழ்வுகள் பற்றி அறியும் அறிவின் கிளை, கடந்தகால நிகழ்வுகள் மற்றும் கடந்த மனித நிகழ்வுகளை ஆய்வு செய்தல் போன்ற அர்த்தம் பதினைந்தாம் நூற்றாண்டின் மத்தியில் எழுந்தது

பதினாறாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிரான்சிசு பேகன் "இயற்கை வரலாறு" என்று எழுதியபோது இந்த சொல்லின் பயன்பாடு கிரேக்க மொழிச் சொல்லின் அர்த்தத்தை எட்டியது. இச்சொல்லின் பல்வேறு அர்த்தங்கள் மறுமலர்ச்சியால் புத்துயிர் பெற்றன. அவரைப் பொறுத்தவரை வரலாறு என்பது விண்வெளி மற்றும் காலத்தினால் தீர்மானிக்கப்பட்ட பொருள்களின் அறிவு என்று கருதப்பட்டது . மனித வரலாறு மற்றும் கதைசொல்லல் ஆகியவற்றிற்கான தனி வார்த்தைகள் மொழியியல் சிந்தனையுடன் பகுப்பாய்வு அல்லது தனிமைப்படுத்தல் அல்லது இருமை வெளிப்பாடு போன்றவை ஆங்கில சொல்லுக்கு நிகராக சீன சொற்களும் உருவாகியுள்ளன. நவீன செருமன், பிரஞ்சு மற்றும் பெரும்பாலான செருமானிய மொழிகளிலும் இதே சொல்லே உறுதியாகவும் செல்வாக்குடனும் வரலாறு மற்றும் கதை ஆகிய இரண்டிற்கும் பயன்படுத்தப்படுகிறது.

1661 களில் ஒரு பெயர் சொல்லாக இது மாற்றம் கண்டது . வரலாற்றை ஆய்வு செய்பவர் வரலாற்று ஆய்வாளர் என்ற பொருள் 1531 ஆம் ஆண்டில் அங்கீகாரம் பெற்றுள்ளது. உண்மையான மனிதனின் வரலாறு, கடந்தகால நிகழ்வுகளின் ஆய்வு என்ற இரு நோக்குகளிலும் வரலாறு பொருள் கொள்ளப்படுகிறது.

வரலாற்றின் விளக்கம்

வரலாறு 
வரலாற்றாளர்களின், உலக வரலாறு நூலின் தலைப்புப் பக்கம்

வரலாற்றாசிரியர்கள் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். மற்றும் சில சமயங்களில் தங்களின் சொந்த சமுதாயத்திற்கான பாடங்களாகவும் இவர்கள் வரலாற்றை எழுதுகின்றனர். பெனிதெட்டோவின் வார்த்தைகளில் சொல்வதென்றால், அனைத்து வரலாறும் சமகால வரலாறு எனலாம். மனித இனம் தொடர்பான முந்தைய நிகழ்வுகளின் கதை மற்றும் பகுப்பாய்வை உண்மையான விளக்கத்தை உருவாக்குவதன் மூலம் வரலாறு எளிதாக்கப்படுகிறது. வரலாற்றின் நவீன விளக்கமானது இவ்விளக்கத்தின் அடிப்படையில் பல புதிய கோணங்களை உருவாக்குகிறது.

சில உண்மையான நினைவில் வைத்து பாதுகாக்கப்படுகிற அனைத்து நிகழ்வுகளும் வரலாற்றுப் பதிவுகள் எனப்படுகின்றன. கடந்த காலத்தின் துல்லியத்திற்கு மிகவும் பயனுள்ள வகையில் பங்களிப்பு செய்யும் ஆதாரங்களை அடையாளம் காண்பதே வரலாற்று ஆய்வின் பணியாகும். எனவே, வரலாற்றாளரின் காப்பகம் சில நூல்கள் மற்றும் ஆவணங்கள் ஆகியவற்றை மிகச் சாதாரணமாகப் பயன்படுத்துவதை செல்லாததாக்குதல் மூலம் உருவாக்கப்படுகிறது. வரலாற்று ஆய்வு சில நேரங்களில் சமூக அறிவியல் பகுதியாகவும் மற்ற நேரங்களில் மானுடவியலின் ஒரு பகுதியாகவும் வகைப்படுத்தப்படுகிறது . இந்த இரு பரந்த துறைகளுக்கும் இடையே ஒரு பாலமாகவும், இரண்டின் வழிமுறைகளையும் உள்ளடக்கியும் வரலாற்று ஆய்வு காணப்படுகிறது. சில தனிப்பட்ட வரலாற்றாசிரியர்கள் ஒன்று அல்லது மற்றொரு வகைப்பாட்டை மட்டும் ஆதரிக்கிறார்கள். 20 ஆம் நூற்றாண்டில், பிரெஞ்சு வரலாற்றாசிரியரான பெர்னாண்ட் பிரேடால் உலக வரலாறு பற்றிய ஆய்வுகளில் பொருளாதாரம், மானுடவியல் மற்றும் புவியியல் போன்ற வெளிப்புற துறைகளைப் பயன்படுத்தி வரலாற்றை ஆய்வில் ஒரு புரட்சியை உண்டாக்கினார்.

பாரம்பரியமாக, கடந்த கால நிகழ்வுகளை எழுதி வைத்து அல்லது வாய்வழியாக ஒருவரிடமிருந்து மற்றவருக்கு கடத்திவந்து வரலாற்று கேள்விகளுக்கு பதிலளிக்க வரலாற்றாசிரியர்கள் முயன்றனர். தொடக்கத்தில் இருந்தே வரலாற்று வல்லுனர்கள் நினைவுச்சின்னங்கள், கல்வெட்டுக்கள் மற்றும் படங்கள் போன்ற ஆதாரங்களையும் பயன்படுத்தினர். பொதுவாக வரலாற்று அறிவின் ஆதாரங்கள் மூன்று வகைகளாக பிரிக்கப்படுகின்றன: என்ன எழுதப்பட்டுள்ளது, எனன சொல்லப்படுகிறது, என்ன பாதுகாக்கப்பட்டுள்ளது என்பன அம்மூன்று வகைபாடுகளாகும் . வரலாற்றாளர்கள் பெரும்பாலும் இம்மூன்றையும் கணக்கில் கொள்கின்றனர். ஆனால் எழுத்து கடந்தகாலத்திலிருந்து என்னவெல்லாம் இருந்து வருகிறது என்பதைக் குறிப்பிட்டு வரலாற்றைச் சிறப்பாக்குகிறது.

புதையுண்ட தளங்கள் மற்றும் பொருள்களைக் கையாள்வதில் தொல்பொருளியல் துறை குறிப்பாக பயனுள்ளதாக இருக்கும் ஒரு துறையாகும் தொல்பொருளியல் தளங்களும் பொருட்களும் ஒருமுறை கண்டுபிடிக்கப்பட்டால் அவை வரலாற்றின் ஆய்வுக்கு பங்களிப்புச் செய்கின்றன. அரிதாக சில சமயங்களில் அதன் கண்டுபிடிப்பை நிறைவு செய்வதற்காக கதை மூலங்களைப் பயன்படுத்தி தொல்பொருளியல் ஒரு தனித்துறையாகவும் சிறப்படைகிறது. இருப்பினும் வரலாற்றில் இருந்து பிரிக்கப்பட்ட சில பகுப்பாய்வு முறைகள் மற்றும் அணுகுமுறைகளை தொல்பொருளியல் கொண்டுள்ளது. அதாவது, தொல்பொருளியல் என்பது உரை ஆதாரங்களில் இடைவெளிகளை நிரப்பும் என்று சொல்ல இயலாது. உண்மையில், "வரலாற்று தொல்லியல்" என்பது தொல்பொருளியலின் ஒரு குறிப்பிட்ட கிளையாகும், இத்துறை பெரும்பாலும் சமகால உரைகளின் ஆதாரங்களுக்கு எதிராக அதன் முடிவுகளுடன் வேறுபடுத்துகிறது. உதாரணமாக, அமெரிக்காவின் மேரிலாந்து மாநிலத்தின் அனாபொலிசு நகரத்தைச் சேர்ந்த அகழ்வாராய்ச்சியாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளரான மார்க் லியோன் அவர்களின் ஆய்வினைக் குறிப்பிடலாம். உரை ஆவணங்கள் மற்றும் பொருட் பதிவுகள் ஆகியவற்றிற்கு இடையே உள்ள முரண்பாட்டை புரிந்து கொள்ள இவர் முயற்சித்தார். அந்த நேரத்தில் கிடைக்கப்பெற்ற எழுதப்பட்ட ஆவணங்களுக்கு அப்பாற்பட்டு ஒட்டுமொத்த வரலாற்றுச் சூழலையும் கணக்கில் கொண்டு அடிமைகள் தொடர்பான ஆய்வுக்கு இவர் பயன்படுத்தினார்.

காலவரிசைப்படியும், கலாச்சார ரீதியாகவும், பிராந்திய ரீதியாகவும், ஆய்வுப்பொருள் சார்ந்தும் வரலாறு பல்வேறு விதமான ஒழுங்கமைக்கப்பட்ட வழிகளால் ஆக்கப்படுகிறது. இந்தப் பிரிவுகள் அனைத்தும் முற்றிலும் தனிதன்மை கொண்டவையாக இல்லாமல் இவற்றினிடைல் குறிப்பிடத்தக்க கலப்பும் கொண்டுள்ளன. சில நடைமுறை அல்லது கோட்பாட்டு நோக்கத்துடன் வரலாறு பெரும்பாலும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது, ஆனாலும் எளிமையான அறிவார்ந்த ஆர்வம் இதில் முக்கியப்பங்கு வகிக்கிறது .

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

உசாத்துணை

புற இணைப்புகள்

Tags:

வரலாறு பெயர்க்காரணம்வரலாறு வரலாற்றின் விளக்கம்வரலாறு இவற்றையும் பார்க்கவும்வரலாறு மேற்கோள்கள்வரலாறு உசாத்துணைவரலாறு புற இணைப்புகள்வரலாறு

🔥 Trending searches on Wiki தமிழ்:

தனுஷ் (நடிகர்)ஒரு கல் ஒரு கண்ணாடி (திரைப்படம்)வேளாண்மைதனுசு (சோதிடம்)பாண்டியர்நாலாயிர திவ்வியப் பிரபந்தம்மெய்ப்பாடு (தொல்காப்பிய நெறி)நான்மணிக்கடிகைசத்திமுத்தப் புலவர்மாத்திரை (தமிழ் இலக்கணம்)திதி, பஞ்சாங்கம்தெலுங்கு மொழிநிணநீர்க்கணுஇராவணன்பத்து தலதிருமலை நாயக்கர்ஈ. வெ. இராமசாமிஅறுபடைவீடுகள்பித்தப்பைநாயன்மார்குற்றியலுகரம்தீரன் சின்னமலைமருதம் (திணை)வேதம்முன்னின்பம்காம சூத்திரம்வெப்பம் குளிர் மழைசித்திரைத் திருவிழாபுலிஇந்திய வரலாற்றுக் காலக்கோடுகணையம்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை)காதலுக்கு மரியாதை (திரைப்படம்)கொன்றைபரிவுசிறுபாணாற்றுப்படைஅணி இலக்கணம்சீரடி சாயி பாபாஇளையராஜாதேம்பாவணிஅத்தி (தாவரம்)சூரியக் குடும்பம்விண்ணைத்தாண்டி வருவாயாதமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019பஞ்சாங்கம்ராக்கி மலைத்தொடர்அஜித் குமார்பாரதிதாசன்திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்புனித ஜார்ஜ்கீர்த்தி சுரேஷ்கண்ணதாசன்தூது (பாட்டியல்)களப்பிரர்பாலை (திணை)தமிழக சுற்றுலாத் தலங்களின் பட்டியல்ஏப்ரல் 23திராவிட முன்னேற்றக் கழகம்இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்தமிழ் எண்கள்பறையர்பதினெண் கீழ்க்கணக்குதூத்துக்குடிசச்சின் டெண்டுல்கர்திருக்குறள் பகுப்புக்கள்தங்க மகன் (1983 திரைப்படம்)உடுமலைப்பேட்டைவிஜயநகரப் பேரரசுபஞ்சபூதத் தலங்கள்செம்மொழிநாயக்கர்அரவான்தமிழர் நிலத்திணைகள்நாட்டு நலப்பணித் திட்டம்மெட்பார்மின்வேதாத்திரி மகரிசிபறவைக் காய்ச்சல்2024 இந்தியப் பொதுத் தேர்தல்🡆 More