எசுப்பானிய மொழி (español) அல்லது ஸ்பானிய மொழி' அல்லது எசுப்பான்யால் மொழி (ஆங்கிலம்: Spanish language) ரோமானிய மொழிகள் குடும்பத்தில் உள்ள ஒரு மொழியாகும்.
இது எசுப்பானியத்திலும் (ஸ்பெயினிலும்), தென்னமெரிக்க நாடுகளிலும் பெருவாரியாக பேசப்படும் மொழியாகும். ஐக்கிய அமெரிக்காவின் தென் மாநிலங்களிலும் பரவலாகப் பேசப்படுகின்றது. இம்மொழியை உலகில் ஏறத்தாழ 350 மில்லியன் மக்கள் பேசுகிறார்கள். உலகில் 21 நாடுகளில் அரச அலுவல் மொழியாக உள்ளது.
எசுப்பானியம், காசிட்டிலியன் (Castilian) | |
---|---|
español, castellano | |
உச்சரிப்பு | /espaˈɲol/, /kasteˈʎano/ - /kasteˈʝano/ |
பிராந்தியம் | எசுப்பானியம் பேசும் நாடுகளும் ஆட்சிப் பகுதிகளும்: அர்கெந்தீனா, பொலிவியா, சிலி, கொலம்பியா, கோஸ்ட்டா ரிக்கா, கியூபா, டொமினிக்கன் குடியரசு, எக்குவடோர், எல் சல்வடோர, எக்குவடோரியல் கினி, குவாத்தமாலா, ஒண்டுராசு, மெக்சிக்கோ, நிக்கராகுவா, பனாமா, பரகுவை, பெரு, புவேர்ட்டோ ரிக்கோ, எசுப்பானியா, உருகுவை, வெனிசுவேலா, இவை தவிர, குறிப்பிடக்கூடிய எண்ணிக்கையில் மக்கள் தொகை கொண்டவை: பெலீசு, கிப்ரல்டார், ஐக்கிய அமெரிக்கா, பிலிப்பீன்சு, அந்தோரா. |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | முதன் மொழியாகப் பேசுவோர்a: 350 million aஎல்லா தொகைகளும் அண்ணளவானவை. (date missing) |
இந்திய-ஐரோப்பிய மொழிக்குடும்பம்
| |
Latin (Spanish variant) | |
அலுவலக நிலை | |
அரச அலுவல் மொழி | 21 நாடுகள், ஐக்கிய நாடுகள், ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்க நாடுகள் அமைப்பு, ஐபீரோ-அமெரிக்க நாடுகள் அமைப்பு, ஆபிரிக்க ஒன்றியம், Latin Union, Caricom, North American Free Trade Agreement, அண்டார்டிக்கா ஒப்பந்தம், உலக வணிக அமைப்பு. |
Regulated by | எசுப்பானிய மொழி நிறுவனங்களின் கூட்டமைப்பு (Real Academia Española மட்டும் 21 ஏனைய தேசிய எசுப்பானிய மொழி நிறுவனங்கள்) |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-1 | es |
ISO 639-2 | spa |
ISO 639-3 | spa |
Information: எசுப்பானிய மொழி அரசகரும மொழியாகவுள்ள நாடுகள். அரசகரும மொழியாக அங்கீகரிக்கப்படாது பேசப்படு நாடுகளும் பிராந்தியங்களும் |
எசுப்பானிய மொழி இலத்தீன் மொழியில் இருந்து கிளைத்த ஒரு மொழியாகும். ரோமன் பேரரசு திளைத்து இருந்த காலத்தில் (கி.மு 200-கி.பி 150), ரோமானியர் படையெடுத்து ஐபீரிய மூவலந்தீவுப் பகுதிகளில் (இன்றைய எசுப்பானியாவும் போர்த்துகலும் ஆகும்) வென்ற நாடுகளில் அன்று பரவிய பேச்சு வழக்கு இலத்தீன் (Vulgar Lain) மொழிவழி இம்மொழி தோன்றியது. பேச்சு வழக்கு இலத்தீன் மொழியானது பெரும்பாலும் படையாட்களும், வணிகர்களும் மற்ற குடியேறிய பொதுமக்களும் பேசிய மொழியாகும். இது கற்றவர்களின் செம்மொழியாகிய இலத்தீனில் இருந்து மாறுபட்டது. எசுப்பானிய மொழி குடியேற்ற வாதக் காலத்தில் (~ கி.பி. 1500) அமெரிக்கக் கண்டங்களுக்குப் பரவியது. இன்று இம்மொழி 21 நாடுகளின் ஏற்பு பெற்ற அலுவல் மொழியாகப் பயன்படுகின்றது. ஏறத்தாழ 322 மில்லியன் முதல் 400 மில்லியன் மக்கள் இம்மொழியைப் பேசுவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. உலகில் அதிகம் பேசப்படும் மொழிகள் வரிசையில் இது ஐந்தாமிடத்தில் இருக்கிறது. ஐக்கிய நாடுகள் அவையின் ஏற்பு பெற்ற ஆறு மொழிகளில் இதுவும் ஒன்று. ஐரோப்பாவில் எசுப்பானியாவில் பேசப்படும் மொழி காஸ்ட்டில்லியன் என்றும் தென் அமெரிக்காவில் பேசப்படும் எசுப்பானிய மொழியை அமெரிக்க எசுப்பானிய மொழி என்றும் குறிப்பிடப்படுகின்றது.
எசுப்பானிய மொழி உலகிலேயே ஒலிப்பொழுக்கம் (phonetic) மிக்க மொழிகளில் ஒன்றாகும். எழுத்துக்கூட்டல்களைக் கொண்டு சொற்களை எளிதாகவும் துல்லியமாகவும் ஒலிக்கலாம்.
எசுப்பானிய மொழியில் மொத்தம் 29 எழுத்துக்கள் உள்ளன. அவையாவன:
a, b, c, ch, d, e, f, g, h, i, j, k, l, ll, m, n, ñ, o, p, q, r, s, t, u, v, w, x, y, z.
அகர வரிசையில் உள்ள எழுத்துக்களும் அவைகளின் பெயர்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. தலைப்பு எழுத்துவகை, சிறிய எழுத்துவகை ஆகிய இரண்டும் காட்டப்பட்டுள்ளன. பிறைக்குறிகளுக்கிடையே கொடுக்கப்பட்டுள்ளவை அனைத்துலக ஒலியன் குறிகள் ஆகும். k, w ஆகிய இரண்டும் வேற்றுமொழிகளில் இருந்து கடனாகப் பெற்ற சொற்களில் மட்டும் வழங்குவன.
A a | a ['äˑ]| அ | J j | jota ['xo̞ˑ.t̪ä], ['χo̞ˑ.t̪ä], ['ho̞ˑ.t̪ä]| ஹோத்தா | R r | ere,erre ['e̞ˑ.r͈e̞]| எர்ரே | ||||
B b | be ['be̞ˑ] 'பே be alta [ˌbe̞ 'äl̪.t̪ä] 'பே ஆல்ட்டா be grande [ˌbe̞ 'ɰɾän̪.d̪e̞] 'பே 'கிராண்டே be larga [ˌbe̞ 'läɾ.ɰä] 'பே லார்கா | K k | க | S s | எஸெ | ||||
C c | ce ['s̻e̞ˑ] ஸே, ['θe̞ˑ] ஸ்தே | L l | ele ['e̞ˑ.le̞] எலெ | T t | te ['t̪e̞ˑ] தெ | ||||
Ch ch | செ | Ll ll | doble ele 'டோ'ப்லெ எலெ elle எயெ | D d | de ['d̪e̞ˑ] 'டெ | M m | eme ['e̞ˑ.me̞] எமெ | U u | u ['uˑ] ஊ |
E e | e ['e̞ˑ] எ | N n | ene ['e̞ˑ.ne̞] எனெ | V v | uve ['uˑ.β̞e̞] உபெ ve ['be̞ˑ] 'பெ ve baja [ˌbe̞ 'β̞äˑ.hä] 'பெ பஹா, [ˌbe̞ 'β̞äˑ.xä] ve chica 'பெ சிக்கா [ˌbe̞ 'ʧiˑ.kä] ve corta [ˌbe̞ 'ko̞ɾ.t̪ä] 'பெ கோர்த்தா | ||||
F f | efe ['e̞ˑ.fe̞] எஃவெ | Ñ ñ | eñe ['e̞ˑ.ɲe̞] என்யெ | W w | uve doble [ˌu.β̞e̞ 'ð̞o̞ˑ.β̞le̞] ஊபெ 'டோப்லெ doble ve 'டோ'ப்லெ வே ['do̞ˑ.β̞le̞ ˌβ̞e̞] doble u ['do̞ˑ.β̞le̞ ˌu] 'டோப்லே உ ve doble ['ˌβ̞e̞ do̞ˑ.β̞le̞] வே 'டோப்லெ, 'பெ 'டோப்லெ | ||||
G g | ge ['xe̞ˑ] ஃஎ, ['çe̞ˑ] ஸெ, ['he̞ˑ] ஹெ | O o | o ['o̞ˑ] ஓ | X x | equis ['e̞ˑ.kis̻] எக்கிஸ், ['e̞ˑ.kis̺]எக்கிஸ் | ||||
H h | hache ['äˑ.ʧe̞] ஹாச்செ, ['äˑ.ʨe̞] | P p | pe ['pe̞ˑ] பே | Y y | ye ['ʝe̞ˑ] யெ, ['ʒe̞ˑ], ['ʃe̞ˑ] இ கிரியேகா [ˌi 'ɰɾje̞ˑ.ɰä] | ||||
I i | i ['iˑ] இ i latina [ˌi lä't̪iˑ.nä] இ லத்தினா | Q q | cu ['kuˑ] கு | Z z | zeta, ceta ['θe̞ˑ.t̪ä] த்ஸேத்தா, ['s̻e̞ˑ.t̪ä] ஸேத்தா zeda, ceda ['s̻e̞ˑ.ð̞ä] ஸேதா, ['θe̞ˑ.ð̞ä] த்ஸேதா |
இம்மொழியில் ஐந்து உயிரொலிகள் (உயிரெழுத்துக்கள்) உள்ளன.
அவை: a (அ), e (எ), i or y (இ), o (ஒ), u (உ).
எசுப்பானிய மொழியின் அகரவரிசையில் உள்ள 29 எழுத்துக்களுள் 5 உயிரொலிகளும், வேற்றுமொழி சொற்களில் மட்டும் பயன்படும் w என்னும் எழுத்தும் நீங்கலாக மொத்தம் 23 மெய்யொலி எழுத்துக்கள் உள்ளன (y என்னும் எழுத்தை மெய்யெழுத்தாகக் கொண்டால்). அவற்றுள் ஈரெழுத்து கூட்டங்களாகிய ch மற்றும் ll ஆகிய இரண்டும் எசுப்பானிய மொழியில் தனி மெய்யெழுத்துக்களாகக் கருதப்படுகின்றன. மெய்யெழுத்துக்களில் n என்னும் எழுத்து வேறு ñ என்னும் எழுத்து வேறு.
மெய்யொலிகளில் ஆங்கிலத்தில் இல்லாத 4 ஒலிகள் உண்டு.
அவையாவன:
எசுப்பானிய மொழி ஒலியன்களை கீழ்க்காணும் அட்டவணையில் காணலாம்.
ஈரிதழ் | இதழ்- பல்லுறழ் | பல்லுறழ் | நுனிஅண்ணம் | நுனிஅண்ணம் | மேலண்ணம் | தொண்டை | ||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மூக்கொலி | m | n | ɲ | |||||||||||
Plosive | p | b | t | d | k | g | ||||||||
Fricative | f | θ | s | ʝ | x | |||||||||
Affricate | ʧ | |||||||||||||
Trill | r | |||||||||||||
Tap | ɾ | |||||||||||||
Lateral | l | ʎ | ||||||||||||
Approximant | j |
ஒலியன் | முக்கிய இணையொலிகள் | எழுத்துக்கூட்டல் | Distribution and quality of allophones |
/p/ | ஈரிதழ் வல்லினம் | "p" (pipa) | |
/b/ | [b], ஈரிதழ் வெடிப்பொலி [β̞], ஈரிதழ் வெடிப்பொலி அண்மியம் | "b" (burro) or "v" (vaca) | [b] appears initially (in some accents) and after nasals (bomba, envidia), [β̞] elsewhere (nube, la bodega). In rapid speech, [β̞] can replace [b] in the initial position. After /l/, there is variation among speakers (el burro can be either [elˈburo] or [elˈβ̞uro]). |
/t/ | பல்லுறழ் வல்லினம் | "t" (tomate) | எசுப்பானிய மொழியில் [t̪] என்னும் ஒலி நுனிநாக்குத் துடிப்பான ஒலியாக இல்லாமல் சற்று மென்மையாக (தகரம் கலந்ததாக) இருக்கும். |
/d/ | [d̪], பல்-அண்ண வெடிப்பொலி [ð̞], பல்-அண்ண வெடிப்பொலி அண்மியம் | "d" (dedo) | [d̪] முதலொலி , மூக்கொலிகளுக்குப் பிறகு (donde), /l/க்குப் பிறகு (maldito), [ð̞] பிற இடங்களில் (nido, la deuda). In most or all of Spain and the கரிபியன் it is usually omitted in the endings -ado and -ados, in Southern Spain also in the endings -ada and -adas (manadas: [maˈnaːs]), and less frequently in endings -ido and -idos. In வெனிசுவேலா it is omitted in intervocalic position in a final syllable: peludo is pronounced as [peˈl̪uo]. In Latin America and Spain it is often omitted in final position: usted = [usˈt̪e] or [usˈt̪eð̞]. In Madrid this phoneme may undergo devoicing in final position, merging with /θ/. |
/k/ | தொண்டை ஒலி வல்லினம் | "c" (casa), "qu" (queso), "k" (kiosko) | |
/g/ | [g], தொண்டை வெடிப்பொலி [ɰ], தொண்டை வெடிப்பொலி அண்மியம் | "g" (gato), "gu" (guerra). | [g] appears after nasals (ganga), and, very frequently but not always, at the beginning (gato), where /ɰ/ is also used, though it is less common. [ɰ] occurs elsewhere (lago, la garganta). After /l/, there is variation among speakers (el gato can be either [el ˈgat̪o] or [el ˈɰat̪o]). |
Fricatives | |||
---|---|---|---|
/s/ | [s], voiceless alveolar fricative [ɹ], alveolar approximant [h], voiceless glottal fricative | "s" (sapo) | In Northern/Central Spain and Antioquia, Colombia it is apicoalveolar; in Southern Spain and most of Latin America it is lamino-alveolar (often called "dental") [s]. [s] may become the approximant [ɹ] before a rhotic (israelita: [iɹraeˈlit̪a]). In many places it debuccalizes to [h] in final position (niños), or before another consonant (fósforo) – in other words, the change occurs in the coda position in a syllable. In the Colombian Caribe gemination may occur before /k/ or /f/ consonants (pescado: [peˈkːað̞o] or [peˈkːao], fósforo: [ˈfofːoro]). Before voiced consonants, /s/ is sometimes lightly voiced or a fully voiced [z] (desde). |
பின்வரும் அட்டவணை பல்வேறு நாடுகளிலுள்ள எசுப்பானிய மொழி பேசுவோரின் எண்ணிக்கையைக் காட்டுகிறது.
நாடு | மக்கள்தொகை | தாய்மொழியாகப் பேசுவோர் | இரண்டாம் மொழியாகப் பேசுவோர் | மொத்த எண்ணிக்கை | மக்கள்தொகையின் சதவீதமாக எசுப்பானிய மொழி பேசுவோர் |
---|---|---|---|---|---|
மெக்சிக்கோ | 118,395,054 | 10,97,52,215 | 11,66,19,128 | 98.5% | |
ஐக்கிய அமெரிக்கா | 316,005,000 | 37,579,787 | 43,700,000 | 51,500,000 | 16.3% |
கொலம்பியா | 47,133,000 | Expression error: Unrecognized punctuation character "–". | 4,67,55,936 | 99.2% | |
எசுப்பானியா | 47,059,533 | 3,85,88,817 | 4,64,94,819 | 98.8% | |
அர்கெந்தீனா | 41,660,417 | 39,500,000 | 4,14,10,454 | 99.4% | |
வெனிசுவேலா | 30,341,000 | Expression error: Unrecognized punctuation character "–". | 2,99,76,908 | 98.8% | |
பெரு | 30,475,144 | 2,56,29,596 | 2,63,91,475 | 86.6% | |
சிலி | 17,556,815 | 17,275,215 | 1,74,33,917 | 99.3% | |
எக்குவடோர் | 15,460,000 | 13,200,000 | 1,51,66,260 | 98.1% | |
குவாத்தமாலா | 15,438,384 | 92,63,030 | 1,33,38,764 | 86.4% | |
பிரேசில் | 193,946,886 | 483,547 | 483,547 | 12,483,547 | 6.4% |
கியூபா | 11,244,000 | 11,244,000 | 1,11,76,536 | 99.4% | |
டொமினிக்கன் குடியரசு | 10,309,000 | 9,300,000 | 1,02,67,764 | 99.6% | |
பொலிவியா | 10,426,154 | 60,47,169 | 91,64,589 | 87.9% | |
ஒண்டுராசு | 8,215,313 | 8,007,563 | 81,33,160 | 99.0% | |
பிரான்சு | 65,635,000 | 477,564 | 1,910,258 | 6,685,901 | 10.2% |
எல் சல்வடோர | 6,183,002 | 6,168,902 | 61,64,453 | 99.7% | |
நிக்கராகுவா | 6,042,000 | 5,551,876 | 58,60,740 | 97.0% | |
இத்தாலி | 60,820,696 | 467,015 | 1,037,248 | 5,704,863 | 9.4% |
மொரோக்கோ | 31,759,997 | 7,405 | 7,405 | 5,500,000 | 17.3% |
பரகுவை | 6,798,000 | 3,874,860 | 47,24,610 | 69.5% | |
கோஸ்ட்டா ரிக்கா | 4,301,712 | 4,216,294 | 42,67,298 | 99.2% | |
புவேர்ட்டோ ரிக்கோ | 3,667,084 | 34,87,397 | 36,23,079 | 98.8% | |
பனாமா | 3,678,000 | 3,176,957 | 34,24,218 | 93.1% | |
ஐக்கிய இராச்சியம் | 63,181,775 | 194,487 | 518,480 | 3,110,880 | 4.9% |
உருகுவை | 3,286,314 | 3,136,114 | 32,50,165 | 98.9% | |
பிலிப்பீன்சு | 97,866,000 | 3,325 | 438,882 | 3,016,773 | 3.1% |
செருமனி | 80,327,900 | 187,036 | 644,091 | 2,576,366 | 3.1% |
எக்குவடோரியல் கினி | 1,170,308 | 1,683 | 164,662 | 10,59,129 | 90.5% |
கனடா | 34,605,346 | 439,000 | 839,000 | 1,001,853 | 2.9% |
உருமேனியா | 21,355,849 | 182,467 | 912,337 | 4.3% | |
போர்த்துகல் | 10,636,888 | 10,635 | 323,237 | 808,091 | 7.6% |
நெதர்லாந்து | 16,665,900 | 61,666 | 133,719 | 668,599 | 4% |
சுவீடன் | 9,555,893 | 101,472 | 101,472 | 467,474 | 4.9% |
ஆத்திரேலியா | 21,507,717 | 111,400 | 111,400 | 447,175 | 2.1% |
பெல்ஜியம் | 10,918,405 | 67,024 | 89,395 | 446,977 | 4.1% |
போலந்து | 38,092,000 | 324,137 | 324,137 | 0.9% | |
ஆஸ்திரியா | 8,205,533 | 280,393 | 3.4% | ||
ஐவரி கோஸ்ட் | 20,179,602 | 235,806 | 1.2% | ||
அல்ஜீரியா | 33,769,669 | 223,000 | 0.7% | ||
பெலீசு | 333,200 | 173,597 | 173,597 | 209,250 | 62.8% |
டென்மார்க் | 5,484,723 | 45,613 | 182,450 | 3.3% | |
இசுரேல் | 7,112,359 | 95,000 | 95,000 | 175,231 | 2.5% |
சப்பான் | 127,288,419 | 107,514 | 107,514 | 167,514 | 0.1% |
அயர்லாந்து | 4,581,269 | 5,325 | 35,220 | 140,880 | 3.1% |
சுவிட்சர்லாந்து | 7,581,520 | 123,000 | 123,000 | 137,420 | 1.7% |
பின்லாந்து | 5,244,749 | 133200 | 2.5% | ||
பல்கேரியா | 7,262,675 | 130,750 | 130,750 | 1.8% | |
நெதர்லாந்து அண்டிலிசு | 223,652 | 10,699 | 10,699 | 125,534 | 56.1% |
செனிகல் | 12,853,259 | 101,455 | 0.8% | ||
செக் குடியரசு | 10,513,209 | 90,124 | 0.9% | ||
கமரூன் | 21,599,100 | 1,377 | 1,377 | 87,077 | 0.4% |
கிரேக்க நாடு | 10,787,690 | 86,936 | 0.8% | ||
அங்கேரி | 9,957,731 | 83,206 | 0.8% | ||
அரூபா | 101,484 | 6,800 | 75,402 | 75,402 | 74.3% |
குரோவாசியா | 4,491,543 | 73,656 | 1.6% | ||
டிரினிடாட் மற்றும் டொபாகோ | 1,317,714 | 4,100 | 4,100 | 65,886 | 5% |
அந்தோரா | 84,484 | 29,907 | 58,040 | 58,040 | 68.7% |
சிலவாக்கியா | 5,455,407 | 45,500 | 45,500 | 0.8% | |
நோர்வே | 4,644,457 | 12,573 | 12,573 | 36,250 | 0.8% |
சீனா | 1,339,724,852 | 5,209 | 5,209 | 35,209 | 0% |
லித்துவேனியா | 2,972,949 | 28,297 | 1% | ||
லக்சம்பர்க் | 524,853 | 4,049 | 20,245 | 24,294 | 4.6% |
உருசியா | 140,702,094 | 3,320 | 3,320 | 23,320 | 0% |
நியூசிலாந்து | 4,173,460 | 21,645 | 21,645 | 21,645 | 0.5% |
குவாம் | 154,805 | 19,092 | 12.3% | ||
அமெரிக்க கன்னித் தீவுகள் | 108,612 | 16,788 | 16,788 | 16,788 | 15.5% |
கிப்ரல்டார் | 27,967 | 13,857 | 13,857 | 13,857 | 49.5% |
லாத்வியா | 2,209,000 | 13,943 | 0.6% | ||
துருக்கி | 73,722,988 | 1,134 | 1,134 | 13,480 | 0% |
சைப்பிரசு | 838,897 | 13,208 | 1.6% | ||
இந்தியா | 1,210,193,422 | 695 | 695 | 10,445 | 0% |
எசுத்தோனியா | 1,294,455 | 9,457 | 0.7% | ||
ஜமேக்கா | 2,804,322 | 8,000 | 8,000 | 8,000 | 0.3% |
நமீபியா | 2,104,900 | 3,870 | 3,870 | 3,969 | 0.2% |
எகிப்து | 82,950,332 | 3,500 | 0% | ||
மால்ட்டா | 417,617 | 3,354 | 0.8% | ||
மேற்கு சகாரா | 513,000 | n.a. | n.a. | n.a. | n.a. |
மொத்தம் | 7,103,788,000 (மொத்த உலக சனத்தொகை) | 43,41,39,933 | 47,58,98,586 | 52,35,18,179 | 7.37% |
தமிழ் எண்கள் | எசுபானிய எண்கள் | உச்சரிப்பு |
---|---|---|
ஒன்று | uno (m)/una (f) | ஊனோ/ஊனா |
இரண்டு | dos | தோஸ் |
மூன்று | tres | த்ரேஸ் |
நான்கு | cuatro | குவாத்ரோ |
ஐந்து | cinco | ஸிங்க்கோ |
ஆறு | seis | சேஇஸ் |
ஏழு | siete | ஸியத்தெ |
எட்டு | ocho | ஓச்சோ |
ஒன்பது | nueve | நுயவே |
பத்து | diez | தியஸ் |
ஆங்கிலத்தில் இன்று வழங்கும் பல சொற்கள் எசுப்பானிய மொழிவழி பெற்றவையாகும் . எடுத்துக்காட்டாக aligator (முதலை), cargo (ஏற்றுபொருள்), cork (தக்கை), ranch (வயல்/கள வீடு), mosquito (கொசு), tornado (குழல் காற்று) முதலியவற்றைச் சுட்டலாம். அமெரிக்காவில் பல இடப்பெயர்களும் எசுப்பானிய மொழியில் இருந்து பெற்றவை. லாஸ் ஏஞ்சலஸ் (Los Angles), சான் ஃவிரான்சிஸ்க்கோ (San Francisco), ஃவுளோரிடா (Florida), நெவாடா (Neveda) முதலியவற்றைச் சுட்டலாம்.
This article uses material from the Wikipedia தமிழ் article எசுப்பானியம், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.