கூகுள்

கூகுள் (Google) என்பது, அமெரிக்காவில் தலைமையிடத்தைக் கொண்டு செயற்படும் ஒரு பன்னாட்டு நிறுவனம் ஆகும்.

இணையத் தேடுபொறித் தொழில்நுட்பம், மேகக் கணிமை, இணைய விளம்பரத் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் இந்நிறுவனம் செயற்படுகிறது. கூகுள் தேடுபொறி, இதன் முதன்மையான சேவை ஆகும். 1998இல் லாரி பேஜ், சேர்ஜி பிரின் ஆகியோரால் துவங்கப்பட்ட இந்நிறுவனத்தின் முதல் பொதுப்பங்கு வெளியீடு, 2004இல் நடைபெற்றது.

கூகுள்
Google
வகைபொது (நாசுடாக்GOOG), (வார்ப்புரு:Lse)
நிறுவுகைமென்லோ பார்க், கலிபோர்னியா (செப்டம்பர் 7 1998)
தலைமையகம்மவுண்டன் வியூ, கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா
முதன்மை நபர்கள்சுந்தர் பிச்சை (முதன்மை செயல் அதிகாரி)
சேர்ஜி பிரின், தொழில்நுட்ப தலைவர்
எரிக் ஷ்மித் நிருவாகத் தலைவர்
தொழில்துறைஇணையம், மென்பொருள்
வருமானம்US$29.321 பில்லியன் (2010)
நிகர வருமானம்US$8.505 பில்லியன் (2010)
மொத்தச் சொத்துகள்US$57.851 பில்லியன் (2010)
மொத்த பங்குத்தொகைUS$46.241 பில்லியன் (2010)
பணியாளர்24,400 (செப்டம்பர் 30 2007)
இணையத்தளம்www.google.com

முழுமையாகப் பயன்படும் வகையில், உலகின் தகவல்களை ஒருங்கிணைப்பதே, கூகுளின் நோக்கமாகும். "தீமைத் தன்மை இல்லாதிருத்தல்" என்பது கூகுளின் அதிகாரப்பூர்வமற்ற நோக்காக அறியப்படுகிறது. இது அமீது பட்டேல் என்ற கூகுள் பொறியாளரின் கூற்றாகும்.

2006இல் இந்நிறுவனம், 1600, ஆம்பிதியேட்டர் பார்க்வே, மவுண்டன் வியூ, கலிபோர்னியா என்ற முகவரிக்கு தனது தலைமையகத்தை மாற்றம் செய்து கொண்டது.

உலகம் முழுதும், ஒரு மில்லியனுக்கும் மேலான தரவு மையங்களைக் கொண்டிருப்பதாக நம்பப்படும் கூகுள், ஒரு நாளில் ஒரு பில்லியனுக்கும் மேலான தேடல்களைக் கையாள்வதாகவும், இருபத்துநான்கு பெட்டா பைட்டு அளவுள்ள தகவல்களைச் சேமிப்பதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.

கூகுளின் மிக விரைவான வளர்ச்சியினூடே, பல புதிய மென்பொருள் சேவைகளின் தோற்றம் நிகழ்ந்துள்ளது. கூகுளின் முத்தாய்ப்பாக விளங்கும் கூகுள் இணையத் தேடலுடன், கூகுள் மெயில், கூகுள் டாக்குமெண்டுகள், கூகுள் பிளஸ், கூகுள் டாக், கூகுள் வரைபடம், கூகுள் நியூஸ், பிளாக்கர், யூ ட்யூப் போன்ற பல்வேறு சேவைகளை இந்நிறுவனம் வழங்குகிறது.

மேலும், கூகுள் குரோம், கூகுள் சந்திப்பு, கூகுள் தொடர்புகள், கூகுள் செய்திகள், கூகுள் புகைப்படங்கள், கூகுள் டிரைவ், கூகுள் கோப்புகள், கூகுள் தாள்கள், கூகுள் விசைப்பலகை, கூகுள் மொழிபெயர்ப்பு போன்ற கூகுள் பயன்பாடுகளும், பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளன.

இணையத்தைப் பற்றிய புள்ளிவிவரங்களை அளிக்கும் அலெக்சா டாட் காம் நிறுவனம், கூகுளின் அனைத்துலக முகப்புப் பக்கமான கூகுள் டாட் காமை, உலகின் மிக அதிகமான வரவுகளைப் பெற்ற வலைத் தளமாக அடையாளப்படுத்தி உள்ளது.

கூகுள் குரோம் என்னும் உலவியை, கூகுள் வெளியிடுகிறது. சமீப காலத்தில் அண்ட்ராய்டு என்னும் கைபேசி இயக்கு மென்பொருள், அத்துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அண்ட்ராய்டு மென்பொருளை, கூகுள் தலைமையிலான ஓபன் ஹான்டுசெட்டு அலயன்சு தயாரித்து வெளியிடுகின்றது.

சர்ச்சைகள்

  • 2013 ஆம் ஆண்டு தமிழகத்தைச் சேர்ந்த கூகுள் பயனரால் கூகுள் நிறுவனத்தின் மீது வழக்கு தொடரப்பட்டது. ஹாட் மெயிலை கூகுளில் தேட முயன்றால் தரக்குறைவான தகவல்களைப் பார்க்க கூகுள் பரிந்துரைப்பதாகக் கூறியும் சிறுகுழந்தைகள் உள்ள தன் வீட்டில் இது கண்டிக்கத்தக்கது என்றும் கூறி கூகுள் மீது வழக்கு பதியப்பட்டது.

மேலும் காண்க

மேற்கோள்கள்

Tags:

ஐக்கிய அமெரிக்காசேர்ஜி பிரின்தேடுபொறிமேகக் கணிமைலாரி பேஜ்

🔥 Trending searches on Wiki தமிழ்:

விபுலாநந்தர்பெண்திட்டக் குழு (இந்தியா)குறிஞ்சிக்கலிசாக்கிரட்டீசுஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்இந்திய செஞ்சிலுவைச் சங்கம்கம்பர்தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019நாயன்மார் பட்டியல்வேளாண்மைஅஸ்ஸலாமு அலைக்கும்வானம்பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்குலசேகர ஆழ்வார்கருக்கலைப்புநவதானியம்அறுபது ஆண்டுகள்தமிழ் எழுத்து முறைஆகு பெயர்காயத்ரி மந்திரம்மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்தொல்காப்பியர்சட்டமன்ற உறுப்பினர் (இந்தியா)உருவக அணிமுலாம் பழம்தமிழ் இலக்கியம்கருக்காலம்இளங்கோவடிகள்அன்புமணி ராமதாஸ்அறுசுவைமுடியரசன்அரண்மனை (திரைப்படம்)மொழிபெயர்ப்புதேவாரம்நாம் தமிழர் கட்சிஅங்குலம்சித்தர்கள் பட்டியல்திராவிட முன்னேற்றக் கழகம்பரிபாடல்தமிழ்முல்லைக்கலிஇனியவை நாற்பதுராசாத்தி அம்மாள்சப்ஜா விதைதிருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்திரிகடுகம்திருமலை நாயக்கர்சக்க போடு போடு ராஜாதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021விஜய் வர்மாபெருஞ்சீரகம்ஏப்ரல் 22ஜெ. ஜெயலலிதாதமிழ்நாட்டின் மாநகராட்சிகள்தாஜ் மகால்தேவேந்திரகுல வேளாளர்கண் பாவைதிருமலை நாயக்கர் அரண்மனைதானியம்எங்கேயும் காதல்சாத்துகுடிஏப்ரல் 23புவி சூடாதல்கிராம சபைக் கூட்டம்சிவவாக்கியர்தரணிமாதேசுவரன் மலைஇட்லர்பெண் தமிழ்ப் பெயர்கள்தூத்துக்குடிதமிழர் பண்பாடுநயன்தாராசன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்ஆயுள் தண்டனைதமிழச்சி தங்கப்பாண்டியன்குகேஷ்மகாபாரதம்🡆 More