ஓர்க்கா திமிங்கலம்

Orca gladiator

ஓர்க்கா திமிங்கலம்
Two killer whales jump above the sea surface, showing their black, white and grey coloration. The closer whale is upright and viewed from the side, while the other whale is arching backwards to display its underside.
ஓர்க்கா திமிங்கலங்கள்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
உள்வரிசை:
குடும்பம்:
பேரினம்:
Orcinus

Fitzinger, 1860 
இனம்:
O. orca
இருசொற் பெயரீடு
Orcinus orca
(லின்னேயஸ், 1758
ஓர்க்கா திமிங்கிலத்தின் வாழ்விடங்கள்
Orcinus orca range (in blue)
வேறு பெயர்கள்

ஓர்க்கா திமிங்கலம் (Orcinus orca) என்பது கடல் ஓங்கில் குடும்பத்தைச் சேர்ந்த கடற்பாலூட்டி இனம் ஆகும். இது ஓர்க்கா எனவும் கொலைகாரக் திமிங்கலம் எனவும் அழைக்கப்படுகிறது. இதுவே ஓங்கில் இனங்களில் மிகப்பெரிய அளவுடைய இனம் ஆகும். இந்த ‘ஓர்க்கா’ திமிங்கலங்கள் உயிரினங்களில் மிக வேகமாக நீந்தக்கூடியதும், கடல் வாழ் உயிரினங்களுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியதும் ஆகும். இவை உலகின் அனைத்து கடல் பகுதிகளிலும் காணப்படுகின்றன.இவை சுமார் 30 ஆண்டுகளுக்கு மேல் உயிர் வாழ்கின்றன.

உடலமைப்பு

ஆண் ஓர்கா திமிங்கலம் 30 அடி நீளமும், பெண் ஓர்கா திமிங்கலம் 26 அடி நீளமும் இருக்கும். ஆண் திமிங்கலத்தின் எடை 16,000 பவுண்டும், பெண் திமிங்கலத்தின் எடை 12,000 பவுண்டும் இருக்கும். இவை அதிகபட்சமாக மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் நீந்தும் ஆற்றல் கொண்டவை. சாதாரணமாக மணிக்கு 10 முதல் 16 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும்.

நீந்தும்போது உடலை சமன் செய்து கொள்ள முதுகிலுள்ள துடுப்பு பயன்படுகிறது. இவற்றின் நீளம் சுமார் 6 அடி வரை காணப்படுகிறது. பெண் திமிங்கலங்களின் துடுப்பு பின்நோக்கி வளைந்து ஆணின் துடுப்பின் நீளத்தில் பாதியளவே காணப்படுகிறது. ஒவ்வொரு தாடையிலும் 20 முதல் 26 கூர்மையான பின்னோக்கி வளைந்த பற்கள் காணப்படுகின்றன. இவை பெரிய இரைகளைக் கடித்து உண்பதற்கு வசதியாக உள்ளன.

வாழ்க்கை

இந்த ஓர்கா திமிங்கலங்கள் குழுக்களாக வாழ்கின்றன. ஒவ்வொரு குழுவிலும் 5 முதல் 30 திமிங்கலங்கள் வரை இருக்கும். அதில் ஒரு பெரிய ஆண் திமிங்கலமும், பல பெரிய பெண் திமிங்கலங்களும், பல குட்டித் திமிங்கலங்களும் இருக்கும். பெரிய குழுக்களில் இரண்டோ, மூன்றோ பெரிய ஆண் திமிங்கலங்கள் இருக்கும், சில சமயம் பெரிய குழுக்களிலுள்ள திமிங்கலங்கள் தனி குழுக்களை உருவாக்கிக் கொண்டு பிரிந்து செல்வதும் உண்டு. எல்லா பெண் திமிங்கலங்களும் வாழ்நாள் முழுவதும் ஒரே குழுவிலேயே இருக்கும். ஆனால், ஆண் திமிங்கலங்கள் குழு விட்டு குழு மாறிக்கொண்டே இருக்கும்.

இனப்பெருக்கம்

இவை 12 முதல் 16 வயதுக்குள் இணை சேரும் பருவத்தை அடைகின்றன. தென் துருவ கடல்களில் வாழ்பவை திசம்பர் முதல் சூன் வரையிலான பருவகாலங்களிலும், வடதுருவ கடல் பகுதிகளில் வாழ்பவை மே முதல் சூலை வரையிலான பருவ காலங்களிலும் இணை சேருகின்றன. பின்னர் 12 மாத கர்ப்ப கால முடிவில் ஒரு குட்டியை ஈன்றெடுக்கிறது. சுமார் இரண்டு வயது வரை குட்டிக்குப் பால் கொடுக்கின்றன. குட்டி பல ஆண்டுகள் தன் தாயின் பாதுகாப்பிலேயே வாழ்கின்றது. எனவே, இவை 3 முதல் 6 ஆண்டுகள் இடைவெளி விட்டே அடுத்த குட்டியினைப் போடுகின்றன.

உணவு

இந்த ஓர்கா திமிங்கலங்கள் மீன்கள், சீல்கள், கடல் சிங்கங்கள் மற்றும் திமிங்கலங்களை வேட்டையாடி உண்கின்றன. தனது இரையின் இருப்பிடத்தைத் தெரிந்து கொள்ள இவை எதிரொலியைப் பயன்படுத்துகின்றன. இவை எழுப்பும் ஒலியானது எதிரே செல்லும் மற்ற மீன்கள் மற்றும் திமிங்கலங்களின் மீது பட்டு ஒலி அலைகளாக எதிரொலிக்கின்றன. அந்த ஒலி அலைகளை படவடிவத்தில் கிரகித்துக்கொண்டு அது எந்த வகையான இரை எந்த திசையில், எவ்வளவு தூரத்தில் இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டு தனது வேட்டையைத் துவக்குகின்றன. பல நேரங்களில் தனது இரையைத் துரத்திக்கொண்டு கரையை ஒட்டிய பகுதிகளுக்கும் இவை வருவதுண்டு.

உசாத்துணை

மேற்கோள்கள்

வெளி இணைப்புக்கள்

Tags:

ஓர்க்கா திமிங்கலம் உடலமைப்புஓர்க்கா திமிங்கலம் வாழ்க்கைஓர்க்கா திமிங்கலம் இனப்பெருக்கம்ஓர்க்கா திமிங்கலம் உணவுஓர்க்கா திமிங்கலம் உசாத்துணைஓர்க்கா திமிங்கலம் மேற்கோள்கள்ஓர்க்கா திமிங்கலம் வெளி இணைப்புக்கள்ஓர்க்கா திமிங்கலம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஈ. வெ. இராமசாமிகிரியாட்டினைன்ஆரணி மக்களவைத் தொகுதிபாவக்காய் மண்டபம்இந்தியத் தேர்தல் ஆணையம்பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிகர்நாடகப் போர்கள்கட்டுவிரியன்சன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்பள்ளுஇந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்பத்து தலவல்லினம்ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்பிரபுதேவாசுப்பிரமணிய பாரதியோகம் (பஞ்சாங்கம்)இந்திய மாநிலங்களின் தலைநகரங்களும் ஒன்றியப் பகுதிகளின் தலைநகரங்களும்தாலாட்டுப் பாடல்மாநிலங்களவைபுதுமைப்பித்தன்ஒன்றியப் பகுதி (இந்தியா)புறநானூறுஔவையார்வேற்றுமை (தமிழ் இலக்கணம்)கர்மாசீர் (யாப்பிலக்கணம்)சுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)அகத்தியர்சென்னை சூப்பர் கிங்ஸ்வாட்சப்உத்தரகோசமங்கைதமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம்ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்மூவலூர் இராமாமிர்தம்வினைச்சொல்முன்னின்பம்பௌத்தம்பொது ஊழிவேதம்புரோஜெஸ்டிரோன்சமூகம்நாச்சியார் திருமொழிஇந்தியப் பொதுத் தேர்தல்கள்புவிசார் குறியீடு பெற்றுள்ள தமிழ்நாடு பொருட்களின் பட்டியல்நிலாதமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்தொல்காப்பியர்கண்ணகிதிருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்இசைசிறுபாணாற்றுப்படைசேலம் மக்களவைத் தொகுதிசாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்அறுபது ஆண்டுகள்வே. செந்தில்பாலாஜிபழமொழி நானூறுமயங்கொலிச் சொற்கள்புறப்பொருள்இரா. ஜெயராமன்சீவக சிந்தாமணிகொடுக்காய்ப்புளிஅறுசுவைபிரேமலதா விஜயகாந்த்இதய துடிப்பலைஅளவிஆர். இந்திரகுமாரிதேம்பாவணிகாதல் தேசம்அரவிந்த் கெஜ்ரிவால்ஐஞ்சிறு காப்பியங்கள்அரண்மனை (திரைப்படம்)கருப்பைசாரைப்பாம்புமனித உரிமைமாத்திரை (தமிழ் இலக்கணம்)ஆங்கிலம்🡆 More