நீர்நில வாழ்வன

நிலநீர் வாழிகள் அல்லது ஈரூடக வாழிகள் (இருவாழ்விகள் அல்லது நீர்நிலவாழ்வன; இலங்கை வழக்கு - ஈரூடகவாழிகள்; Amphibian) எனப்படுபவை நீரிலும் நிலத்திலும் வாழவல்ல முதுகெலும்பி வகையைச் சேர்ந்த விலங்குகள் ஆகும்.

நீர்நில வாழ்வன
புதைப்படிவ காலம்:பிந்தை தெவோனிய ஊழி–முதல், 370–0 Ma
PreЄ
Pg
N
இருவாழ்விகளின் தொகுப்பு
மேலிருந்து, வலஞ்சுழியாக: செய்மவுரியா, மெக்சிகோவின் வளைவாழ் குருட்டுப் புழுக்கள், கீழை நியூட், இலைப்பச்சை நிற மரத்தவளை
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
உட்குழுக்கள்
    அழிந்த உள்வகுப்பு டெர்ம்னோசுபாண்டைலி
    உள்வகுப்பு இலிசாம்பிபியா (அண்மை இருவாழிகள்)

தவளை, தேரை, குருட்டுபுழு போன்றவை இருவாழ்விகள் ஆகும்.

இவை குளிர் குருதி வகையைச் சேர்ந்த முதுகெலும்புடைய நான்கு கால்கள் அமைந்த இருவாழி வகுப்பைச் சார்ந்த விலங்குகள். தற்பொழுது வாழும் இருவாழ்விகள் அனைத்தும் இலிசாம்பிபியா எனும் உள்வகுப்பைச் சார்ந்தனவாகும். இவற்றின் வாழிடங்கள் தரைச் சூழல், புதர்ச் சூழல், மரச் சூழல், நன்னீர்ச் சூழல் ஆகிய சூழல் அமைப்புகளில் அமைகின்றன. இருவாழ்விகள் தம் வாழ்க்கைச் சுழற்சியை நீரில் வாழும் இளவுயிரிகளாகத் தொடங்குகின்றன. சில இருவாழ்விகள் இக்கட்டத்தைத் தவிர்க்கும் தகவமைப்பைப் பெற்றுள்ளன.

செவுள்களால் மூச்சுயிர்க்கும் இந்த இளவுயிரிகள் நுரையீரலால் மூச்சுவிடும் வளருயிரி வடிவத்துக்கு உருமாற்றம் அடைகின்றன. இவை துணை மூச்சுயிர்க்கும் பரப்பாகத் தோலைப் பயன்படுத்துகின்றன. சில தரைவாழ் சலமாண்டர்களும் தவளைகளும் நுரையிரல் இல்லாமலே தம் தோலால் மட்டுமே மூச்சுயிர்க்கின்றன. இவை புறவடிவில் பல்லிகளைப் போலவுள்ளன என்றாலும், இவை பாலூட்டிகள், பறவைகள், ஊர்வன போல முட்டையிடும் விலங்குகளாகும். எனவே, இனப்பெருக்கத்துக்காக நீரூடகம் ஏதும் தேவையற்றவை. இவற்றின் சிக்கலான இனப்பெருக்கத் தேவையும் புரையுள்ள தோலும் இவற்றைச் சூழல்நிலைகாட்டிகளாக ஆக்குகின்றன; அண்மைப் பத்தாண்டுகளில் உலகெங்கும் இருவாழி இனங்களின் தொகை அருகிவருகிறது.

மிகப் பழைய தொடக்கநிலை இருவாழிகள் நுரையீரலும் என்புமுள்ளால் ஆன துடுப்பும் அமைந்த இதழ்த்துடுப்பு மீன்களில் இருந்து தோன்றிப் படிமலர்ந்தனவாகும். இந்தக் கூறுபாடுகள் நில வாழ்க்கைக்கு ஏற்ற தகவமைப்புக்கு உதவின. இருவாழிகள் கரியூழிக் காலத்திலும் பெர்மியக் காலத்திலும் பல்கிப் பெருகி உலகெங்கும் ஓங்கலான வீச்சுடன் வாழ்ந்தன; ஆனால், பின்னர் இவை ஊர்வனவற்றாலும் முதுகெலும்பிகளாலும் பதிலீடு செய்யப்பட்டன. கால அடைவில், இருவாழிகள் அளவில் சுருங்கி, பன்முக வளர்ச்சியையும் இழந்தன. இப்போது இலிசாம்பிபியா உள்வகுப்பு சார்ந்த இருவாழிகள் மட்டுமே தப்பிப் பிழைத்துள்ளன.

புத்தியல்கால இருவாழிகள் மூன்று வரிசைகளில் அடங்குகின்றன; அவை தவளைகளும் தலைப்பிரட்டைகளும் அடங்கிய அனுரா வரிசை, சலமாண்டர்கள் அடங்கிய உரோடெலா வரிசை குருட்டுப்புழுக்கள் அடங்கிய அப்போடா வரிசை என்பனவாகும். இருவாழ்விகளில் தோராயமாக 7,000 இனங்கள் அமைந்துள்ளன. இவற்றில் தவளை இனங்கள் மட்டுமே 90% அளவுக்கு அமைந்துள்ளன. உலகிலேயே மிகச் சிறிய இருவாழியும் முதுகெலும்பியுமான பயெடோபிரிய்னே அமுவென்சிசு (Paedophryne amauensis) எனும் தவளை இனம் நியூகினியாவில் வாழ்கிறது. இதன் நீளம் 7.7 மிமீ ஆகும். மிக நீண்ட வாழும் இருவாழ்வியாக ஆந்திரியாசு தேவிதியானசு (Andrias davidianus) எனும் சீனப் பெருஞ்சலமாண்டர் அமைகிறது. இதன் நீளம் 1.8 மீ ஆகும். இதுவும் 9 மீ நீளமுள்ள அழிந்துவிட்ட பிரியோனோசச்சசு (Prionosuchus) எனும் பிரேசில் நாட்டில் இடைநிலைப் பெர்மியக் காலத்தில் வாழ்ந்த இருவாழியின் குறுவடிவமே ஆகும்.

இருவாழிகளின் உடல், தலை, உடம்பு எனும் இரு பகுதிகளைக் கொண்டுள்ளது. இவை வழுவழுப்பான ஈரமான தோலைக் கொண்டிருக்கும். இவற்றின் இதயம் மூன்று அறைகளைக் (இரு மேலறைகளும் ஒரு கீழறை யும்) கொண்டுள்ளது.

வகைபாடு

நீர்நில வாழ்வன 
பயடோபிரிய்னே அமவென்சிசு (Paedophryne amanuensis), 17.9 மிமீ விட்ட அமெரிக்க திமே நாணயத்தில் அமர்ந்துள்ள உலகின் மிகச் சிறிய முதுகெலும்பி

பண்டைய கிரேக்க வார்த்தையான ἀμφίβιος (amphíbios) என்ற சொல்லிலிருந்து "ஆம்ஃபிபியன்" என்ற ஆங்கிலச் சொல் வந்தது. "இதன் பொருள் இரு வகையான வாழ்க்கை" என்பதாகும். முதலில் நிலத்திலும் அல்லது தண்ணீரிலும் வாழக்கூடிய விலங்குகளுக்கு ஒரு பொதுவான பெயர்ச்சொல்லாக நிலநீர் வாழ்விகள் எனும் சொல் பயன்படுத்தப்பட்டது. இவற்றில் சீல்களும் நீர் நாய்களும் அடங்கும். இவற்றில் நான்கு கால்கள் கொண்ட முட்டையிடாத விலங்குகள் எல்லாம் அடங்கும். அதன் பரந்த பொருளில் (சன்சு லாடோ) எனப்பட்ட, நிலநீர் வாழிகள் மூன்று உட்பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அவற்றில் இரண்டு உட்பிரிவுகள் அழிந்துவிட்டன..

  • உள்வகுப்பு இலெபோசுபாண்டிலி (Lepospondyli) (சிறிய தொல்லுயிரிக் குழு, இவை தற்கால இருவாழ்விகளை விட அம்னியோட்டுகளுக்கு மிகவும் நெருங்கியவை)
  • உள்வகுப்பு டெர்ம்னோசுபாண்டிலி (Temnospondyli) (பல்வகை தொல்லுயிரி, இடையுயிரித் தரவகையின)
  • உள்வகுப்பு இலிசாம்பிபியா (Lissamphibia) (தவளைகள், தேரைகல், சலமாண்டர்கள், நியூட்டுகள், குருட்டுப்புழுக்கள் அடங்கிய அனைத்து தற்கால இருவாழிகள்)
    • வாலிலிகள் (Salientia) (தவளைகள், தேரைகள் அவற்றின் உறவினங்களும்): சுராசிக் முதல் அண்மைவரை—6,200 நடப்பு இனங்கள், 53 குடும்பங்கள்
    • வாலமைவிகள் (Caudata) (சலமாண்டர்கள், நியூட்டுகள் அவற்றின் உறவினங்கள்): சுராசிக் முதல் அண்மைவரை—652 நடப்பு உயிரினங்கள், 9 குடும்பங்கள்
    • காலிலிகள் (Gymnophiona) (குருட்டுப்புழுகளும் அவற்றின் உறவினங்களும்): சுராசிக் முதல் அண்மைவரை—192 நடப்பு உயிரினங்கள், 10 குடும்பங்கள்
நீர்நில வாழ்வன 
டிரையாடோபட்டிராக்கசு மாசினோட்டி (Triadobatrachus massinoti), மடகாசுகர் சார்ந்த தொடக்க டிரையாசிக் கால முதனிலைத் தவளை

இருவாழ்விகளின் ஒவ்வொரு குழுவிலும் அமையும் இனங்களின் எண்ணிக்கை பின்பற்றும் வகைபாட்டுமுறையைச் சார்ந்துள்ளது. மிகப் பரவலாகப் பின்பற்றும் இரண்டு பொது வகைபாட்டு முறைகளாக பெர்க்கேலி கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் இருவாழ்வி வலைத்தளம் ஏற்றுள்ள வகைபாட்டு முறையும் நீர்நில வாழ்வன, ஊர்வன உயிரியலாளராகிய டேரல் பிராசுட்டின் வகைபாட்டு முறையும் ஆகும். பின்னது அமெரிக்க இயற்கை வரலாற்று அருங்காட்சியக முறையும் ஆகும். இம்முறை "உலகின் இருவாழ்வி இனங்கள்" எனும் இணையத் தரவுத்தளத்தில் உள்ளது. பிராசுட்டு வகைபாட்டின்படியான இருவாழ்விகளின் இனங்கள் 7000 ஆகும். இவற்றில் தவளைசார் இனங்கள் மட்டுமே 90% ஆக அமைகின்றன.

தொகுதி மரபியல் வகைபாட்டின்படி, இலேபிரிந்தொடோன்சியா (Labyrinthodontia) எனும் வகையன் (taxon) இணைதொகுதி மரபுக் குழுவாதலாலும் தொடக்கநிலைப் பான்மைகளைப் பகிர்தல் அன்றி, தனித்த வரையறைக்குட்பட்ட கூறுபாடுகள் ஏதும் கொண்டிராததாலும் நீக்கப்படுகிறது. ஆசிரியரின் தன்விருப்பம். கவைபிரிவியலின் மூன்று வரையறைகளில் கணுசார்ந்ததைப் பின்பற்றுகிறாரா அல்லது தண்டுசார்ந்ததைப் பின்பற்றுகிறாரா என்பதைப் பொறுத்து வகைபாடு மாறுபடும். மரபாக, இருவாழ்விகள் எனும் வகுப்பு, நான்குகாலும் இளவுயிரிக் கட்டமும் அமைந்தனவாகவும், வாழும் தவளைகள், சலமாண்டர்கள், குருட்டுப்புழுக்கள் ஆகிய அனைத்து இருவாழ்விகளின் பொது மூதாதையர்களை உள்ளடக்கும் குழுவாகவும் வரையறுக்கப்படுகிறது. இவற்றின் அனைத்து கால்வழி உயிரிகளும் இலிசாம்பிபியா (Lissamphibia) வகுப்பில் அமைகின்றன. தொல்லுயிரிக் கட்ட இருவாழ்விகளின் தொகுதி மரபியல் இன்னமும் உறுதிபடுத்தப்படவில்லை; இலிசாம்பிபிய வகுப்பு, அழிந்துவிட்ட இருவாழ்விக் குழுக்களையும் உள்ளடக்கலாம். அதாவது, மரபாக இலேபிரிந்தோடோன்சியா உள்வகுப்பாக அமைந்த டெர்ம்னோசுபாண்டிலி அல்லது இலெபோசுபாண்டிலி குழுக்களையும் உள்ளடக்கலாம். சில பகுப்பாய்வுகள் பனிக்குடமுடையனவற்றையும் (அம்னியோட்டுகளையும்) உள்ளடக்குகின்றன. இலின்னேய வகைபாட்டில் முன்பு வைக்கப்பட்டிருந்த தெவோனிய, கரியூழிக் கால இருவாழ்விகள் சார்ந்த நான்குகால் குழுக்களில் பலவற்றை தொகுதிமரபு வகைபாட்டியலாளர்கள் நீக்கிவிடுகின்றனர்; அவற்றை கவைபிரிவு வகைபாட்டில் வேறு இடத்தில் வைக்கின்றனர். இருவாழ்வி வகுப்பில் இருவாழ்விகளுக்கும் பனிக்குடமுடையனவற்றுக்கும் பொதுவாக அமையும் மூதாதையர்களை உள்ளடக்கினால், அக்குழு இணைதொகுதி மரபுக் குழுவாகி விடுகிறது.

அனைத்து தற்கால இருவாழ்விகளும் இலிசாம்பிபியா உள்வகுப்பில் அடக்கப்படுகின்றன. இது பொது மூதாதையரில் இருந்து படிமலர்ந்த இன்ங்களின் குழுவாக அதாவது கவையாக வழக்கமாகக் கொள்ளப்படுகிறது. இவற்றின் தற்கால வரிசைகளாக, வாலிலிகள் (Anura)(தவளைகளும் தேரைகளும்), வாலமைவிகள் (Caudata அல்லது Urodela) (சலமாண்டர்கள்), காலிலிகள் (Gymnophiona அல்லது Apoda) (குருட்டுப்புழுக்கள்) ஆகியன அமைகின்றன. சலமாண்டர்கள் டெர்ம்னோசுபாண்டில் வகை முதாதையில் இருந்து தனியாகத் தோன்றியதாகவும், குருட்டுப்புழுக்கள் மிக முன்னேறிய ஊர்வன வடிவ இருவாழ்விகளின் இருந்து தோன்றிய துணைக்குழுவாகவும் முன்மொழியப்படுகிறது. எனவே இவை பனிக்குடமுடையனவாகவும் கருதப்படுகின்றன. தொடக்கநிலைப் பான்மைகளைக் கொண்ட பலவகை மிகப் பழைய முதனிலைத் தவளைகளின் புதைபடிவங்கள் கிடைத்திருந்தாலும், மிகப் பழைய உண்மையான தவளையாக அரிசோனாவில் தொடக்க சுராசிக் காலம் சார்ந்த கயெண்டா உருவாக்கத்தில் கிடைத்த புரோசாலிரசு பிட்டிசு (Prosalirus bitis) தான் கருதப்படுகிறது. இது உடற்கூற்றியலாக தற்காலத் தவளைகளை ஒத்துள்ளது. மிகப் பழைய குருட்டுப்புழுவாக, அரிசோனாவில் கிடைத்த தொடக்க சுராசிக் கால உயிரியான யோக்கெசிலியா மைக்ரோபீடியா (Eocaecilia micropodia) கருதப்படுகிறது. மிகப் பழைய சலமாண்டராக, வடகிழக்குச் சீனாவில்கிடைத்த பிந்தைய சுராசிக் கால பெயானெர்பெட்டான் சியான்பிஞ்செனிசிசு (Beiyanerpeton jianpingensis) கருதப்படுகிறது.

சாலியென்சியா, வாலிலி வகுப்பை உள்ளடக்கும் உயர்வரிசையா அல்லது சாலியென்சியா வகுப்பில் வாலிலி உள்வகுப்பாகுமா என்பதில் கருத்தொருமை ஏற்படாமலே உள்ளது. மரபாக, இலிசாம்பிபியா மூன்று வரிசைகளாகப் பிரிக்கப்படுகின்றன; ஆனால், இப்போது அழிந்துவிட்ட சலமாண்டர்வகைக் குடும்பமாகிய அல்பனெர்பெட்டோண்டிடே (Albanerpetontidae) குடும்பமும் இலிசாம்பிபியா (Lissamphibia)வில் உயர்வரிசையான சாலியென்சியாவும் பகுதிகளாகச் சேர்க்கப்படுகின்றன. மேலும், சாலியென்சியாவில், அண்மைய மூன்று வரிசைகளும் டிரையாசிக் முதனிலைத் தவளையான டிரையாடோபட்ராச்சசு (Triadobatrachus) வும் சேர்க்கப்படுகின்றன.

படிமலர்ச்சி வரலாறு

மேலே: யூசுதெனோப்ட்ரான் (Eusthenopteron) மீளாக்கம், முற்றிலும் நீரில் வாழும் இதழ்த்துடுப்பு மீன் கீழே: திக்தாலிக் (Tiktaalik) மீளாக்கம் மிக முன்னேறிய நான்குகால் வடிவ மீன்

மேற்கோள்கள்

பாடநூல்கள்

மேலும் படிக்க

வெளி இணைப்புகள்

நீர்நில வாழ்வன 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Amphibia
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
நீர்நில வாழ்வன 
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:

Tags:

நீர்நில வாழ்வன வகைபாடுநீர்நில வாழ்வன படிமலர்ச்சி வரலாறுநீர்நில வாழ்வன மேற்கோள்கள்நீர்நில வாழ்வன மேலும் படிக்கநீர்நில வாழ்வன வெளி இணைப்புகள்நீர்நில வாழ்வனதவளைதேரைமுதுகெலும்பிவிலங்கு

🔥 Trending searches on Wiki தமிழ்:

தேம்பாவணிபெரியபுராணம்தாஜ் மகால்இயேசுநடுகல்அளபெடைதிரிகடுகம்பஞ்சாங்கம்நெசவுத் தொழில்நுட்பம்இந்திய வரலாறுகரூர் மக்களவைத் தொகுதிகருப்பை நார்த்திசுக் கட்டிஇசைசெம்மொழிஇராமாயணம்அகத்திணைசங்க காலப் பெண்பாற் புலவர்கள்நற்றிணைஆந்திரப் பிரதேசம்பெண்பரணி (இலக்கியம்)மாநிலங்களவைமாணிக்கம் தாகூர்முதலாம் இராஜராஜ சோழன்மதுரை வீரன்வல்லினம்விடுதலை பகுதி 1திருவள்ளூர் மக்களவைத் தொகுதிஜி. யு. போப்தென் சென்னை மக்களவைத் தொகுதிராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்பனைபொருநராற்றுப்படைதமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்தமிழ் எழுத்துகளின் தோற்றமும் வளர்ச்சியும்தூத்துக்குடி மக்களவைத் தொகுதிஇதயம்ஐந்திணைகளும் உரிப்பொருளும்சித்த மருத்துவம்தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்வசுதைவ குடும்பகம்திருப்புகழ் (அருணகிரிநாதர்)அக்கி அம்மைசிலப்பதிகாரம்மருது பாண்டியர்கருணீகர்ஹாட் ஸ்டார்பிசிராந்தையார்கஞ்சாஇலவச மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடுகாவிரிப்பூம்பட்டினம்தொல்காப்பியம்சிதம்பரம் மக்களவைத் தொகுதிமஞ்சள் காமாலைசுற்றுச்சூழல்அயோத்தி தாசர்மெய்யெழுத்துமியா காலிஃபாஇந்திய அரசியலமைப்பின் முகப்புரைநாம் தமிழர் கட்சிசிவவாக்கியர்சாகித்திய அகாதமி விருதுபூக்கள் பட்டியல்தினகரன் (இந்தியா)பிள்ளைத்தமிழ்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024கலைஞர் மகளிர் உரிமைத் தொகைவிந்துவைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில்குறுந்தொகைகன்னத்தில் முத்தமிட்டால்விருதுநகர் மக்களவைத் தொகுதிசார்லி சாப்ளின்தமிழ்தமிழர் அளவை முறைகள்பாலுறவுபுவிவெ. இராமலிங்கம் பிள்ளைநான்மணிக்கடிகை🡆 More