மலாவி: தென்கிழக்கு ஆப்பிரிக்க நாடு

மலாவி (Malawi) தென்கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ளது.

வடகிழக்கே தான்சானியா, வடமேற்கே சாம்பியா, கிழக்கு, தெற்கு, மேற்குப் பகுதிகள் மொசாம்பிக், ஆகிய நாடுகளால் சூழப்பட்ட ஒரு நாடு ஆகும். இது 'ஆப்பிரிக்காவின் இதமான இதயம்' என்ற அடைபெயர் கொண்டு அழைக்கப்படுகின்றது. மலாவியின் மிகப் பெரிய நகரமான லிலொங்வே (Lilongwe) அதன் தலைநகரமாக இருக்கின்றது.

மலாவி குடியரசு
Dziko la Malaŵi, Chalo cha Malawi
த்சிகொ ல மலாவி, சலொ ச மலாவி
கொடி of மலாவி
கொடி
சின்னம் of மலாவி
சின்னம்
குறிக்கோள்: ஒன்றியமும் சுதந்திரமும்
நாட்டுப்பண்: Mulungu dalitsa Malaŵi  (சிச்செவா)
"கடவுள் நம்ம நாடு மலாவியுக்கு ஆசீர்வாதம் குடுங்கள்"
மலாவிஅமைவிடம்
தலைநகரம்லிலொங்வே
பெரிய நகர்பிளான்டயர்
ஆட்சி மொழி(கள்)ஆங்கிலம் (ஆட்சி)
சிச்செவா (தேசிய)
மக்கள்மலாவியர்
அரசாங்கம்பல-கட்சி மக்களாட்சி
• குடியரசுத் தலைவர்
ஜொய்சு பண்டா
விடுதலை 
• விடுதலை கூற்றம்
ஜூலை 6 1964
• குடியரசு
ஜூலை 6 1966
பரப்பு
• மொத்தம்
118,484 km2 (45,747 sq mi) (99வது)
• நீர் (%)
20.6%
மக்கள் தொகை
• ஜூலை 2005 மதிப்பிடு
12,884,000 (69வது)
• 1998 கணக்கெடுப்பு
9,933,868
• அடர்த்தி
109/km2 (282.3/sq mi) (91வது)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2005 மதிப்பீடு
• மொத்தம்
$ 7.67 பில்லியன் (143வது)
• தலைவிகிதம்
$596 (181வது)
ஜினி (1997)50.3
உயர்
மமேசு (2007)மலாவி: தென்கிழக்கு ஆப்பிரிக்க நாடு 0.437
Error: Invalid HDI value · 164வது
நாணயம்குவாச்சா (D) (MWK)
நேர வலயம்ஒ.அ.நே+2 (CAT)
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே+2 (பயன்படுத்தவில்லை)
அழைப்புக்குறி265
ஐ.எசு.ஓ 3166 குறியீடுMW
இணையக் குறி.mw
1 Estimates for this country explicitly take into account the effects of excess mortality due to AIDS; this can result in lower life expectancy, higher infant mortality and death rates, lower population and growth rates, and changes in the distribution of population by age and sex than would otherwise be expected.

2016 ஜனவரி 1 வப்பட்ட கணக்கீட்டின்படி, மலாவியில் ஏறக்குறைய 17.7 மில்லியன் மக்கள் தொகை இருக்கின்றது. இந்நாட்டின் தேசிய மொழியாக சிச்சேவா (Chichewa)வும், ஆட்சி மொழியாக ஆங்கிலமும் இருக்கின்றன.

இந்நாடு மிகவும் பின் தங்கிய, வறுமையான நாடுகளில் ஒன்று. விவசாயத்தையே பெரும்பாலும் நம்பி வாழும் இந்நாட்டு மக்களின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வது இன்னும் கேள்வி குறியாக இருக்கின்றது. மலாவியில் எயிட்ஸ் நோய் பரவும் தன்மை மிக அதிகமாக இருப்பதுடன், அதுவே இறப்பிற்கான முக்கிய காரணியாகவும் உள்ளது.

மலாவி: தென்கிழக்கு ஆப்பிரிக்க நாடு
ஏரி மலாவி

மலாவியின் கிழக்குப் பகுதியில் ஏரி மலாவி என்று அழைக்கப்படும் ஒரு பாரிய ஏரி அமைந்துள்ளது. இது மலாவி நாட்டின் கிழக்குக் கரையின் முக்கால்வாசி தூரத்தை ஆக்கிரமித்துள்ளது. இந்த ஏரி மொசாம்பிக், தான்சானியா நாடுகளின் நிலப் பகுதிகளின் சில பகுதிகளை மலாவியிலிருந்து பிரிக்கின்றது. இது தன்சானியாவின் தெற்குப் பகுதியிலும், மொசாம்பிக்கின் மேற்குப் பகுதியிலும் அமைந்துள்ளதுடன், தன்சானியாவிலும், மொசாம்பிக்கிலும் ஏரி நியாசா என்றும் அழைக்கப்படுகின்றது. இந்த ஏரியானது உலகிலுள்ள ஏரிகளில் பரப்பளவில், 9 ஆவது பெரிய ஏரியாகவும், உலகிலுள்ள நன்னீர் ஏரிகளில் 3 ஆவது ஆழமான ஏரியாகவும் இருக்கின்றது. உயிரியல் பல்வகைமையில், முக்கியமாக நன்னீர் மீன் வகைகளில், மிக முக்கியத்துவம் பெற்றிருப்பதனால் இந்த ஏரி ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் தெரிவு செய்திருக்கும் உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாகவும் இருக்கின்றது. இந்த ஏரியின் உயிரியல் பல்வகைமையைப் பேணிப் பாதுகாப்பதற்கான திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நாட்டின் ஊடே ஷயர் ஆறும் ஓடுகின்றது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

ஆப்பிரிக்காசாம்பியாதான்சானியாநாடுமொசாம்பிக்

🔥 Trending searches on Wiki தமிழ்:

கூகுள்வியாசர்பழனி முருகன் கோவில்2019 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்பூக்கள் பட்டியல்சூரரைப் போற்று (திரைப்படம்)அக்கி அம்மைசிறுதானியம்வாணியர்மதீச பத்திரனஇந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370திராவிட மொழிக் குடும்பம்தமிழ்நாட்டின் மக்கள்தொகை பரம்பல்தொழினுட்பம்கம்பராமாயணத்தின் அமைப்புசிறுபஞ்சமூலம்கட்டபொம்மன்நீர்தமிழ்ப் பருவப்பெயர்கள்சுந்தர காண்டம்சுற்றுச்சூழல் மாசுபாடுஞானபீட விருதுஇந்திய அரசியலமைப்புஉத்தரப் பிரதேச மக்களவைத் தொகுதிகள்பெரும்பாணாற்றுப்படைசாருக் கான்திருவண்ணாமலைதமிழர் நெசவுக்கலைகண்ணனின் 108 பெயர் பட்டியல்பாரதிய ஜனதா கட்சிதிருவண்ணாமலை மக்களவைத் தொகுதிஉணவுவிலங்குகளின் பெயர்ப் பட்டியல்மீனா (நடிகை)ரியல் மாட்ரிட் காற்பந்தாட்டக் கழகம்ஆய்த எழுத்துகல்லணைஅண்ணாமலையார் கோயில்அரக்கோணம் (சட்டமன்றத் தொகுதி)தேவேந்திரகுல வேளாளர்இந்தியத் தேர்தல் ஆணையம்காற்றுபூப்புனித நீராட்டு விழாகீழடி அகழாய்வு மையம்இராகுல் காந்திபால் (இலக்கணம்)விழுப்புரம் மக்களவைத் தொகுதிகன்னத்தில் முத்தமிட்டால்தேனி மக்களவைத் தொகுதிபம்மல் சம்பந்த முதலியார்பாரத ரத்னாபாவலரேறு பெருஞ்சித்திரனார்கர்மாஅனுமன்சீமான் (அரசியல்வாதி)இலங்கையின் மாவட்டங்கள்பழமுதிர்சோலை முருகன் கோயில்தென்காசி மக்களவைத் தொகுதிதிருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதிஇந்தியக் குடியியல் பணிகள் தேர்வுதமிழர் பருவ காலங்கள்பிள்ளையார்பிரேமலதா விஜயகாந்த்திரு. வி. கலியாணசுந்தரனார்இயற்கையாவரும் நலம்டெல்லி கேபிடல்ஸ்சித்தர்காடுவெட்டி குருபொது ஊழிதிருமணம்ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்செயற்கை நுண்ணறிவுகலம்பகம் (இலக்கியம்)மாதம்பட்டி ரங்கராஜ்இஸ்ரேல்கருப்பைமனித உரிமை🡆 More