நாள்

நாள் (day) என்பது காலம் அல்லது நேரத்தின் ஓர் அலகாகும்.

பொது வழக்கில் இது 24 மணி நேர கால இடைவெளியை அல்லது வானியல் நாளை, அதாவது சூரியன் தொடுவானில் அடுத்தடுத்து தோன்றும் தொடர் கால இடைவெளியைக் குறிக்கும். புவி, சூரியனைச் சார்ந்து தன்னைத் தானே ஒரு முறை சுற்றிக் கொள்ளும் கால இடைவெளி சூரிய நாள் எனப்படும். இந்தப் பொதுக் கருத்துப்படிமத்துக்குச் சூழல், தேவை, வசதி என்பவற்றைப் பொறுத்து பல வரையறைகள் பயன்படுகின்றன. 1960 இல் நொடி மீள புவியின் வட்டணை இயக்கத்தை வைத்து வரையறுக்கப்பட்டது. இது காலத்துக்கான பன்னாட்டுச் செந்தர அலகுகள் முறையின் அடிப்படை அலகாகக் கொள்ளப்பட்டது. எனவே அப்போது "நாள்" எனும் கால அலகும் 86,400 (SI) நொடிகளாக வரையறுக்கப்பட்டது. நாளின் குறியீடு d என்பதாகும். ஆனாலும் இது பன்னாட்டுச் செந்தர அலகல்ல; என்றாலும் அம்முறை இதைத் தனது பயன்பாட்டில் மட்டும் ஏற்றுக்கொண்டது. ஒருங்கிணைந்த பொது நேரப்படி, ஒரு பொது நாள் என்பது வழக்கமாக 86,400 நொடிகளோடு ஒரு பாய்ச்சல் அல்லது நெடுநொடியைக் கூட்டி அல்லது கழித்துப் பெறும் கால இடைவெளி ஆகும். சில வேளைகளில், பகலொளி சேமிப்பு நேரம் பயனில் உள்ள இடங்களில், ஒரு மணி நேரம் இத்துடன் கூட்டப்படும் அல்லது கழிக்கப்படும். மேலும் நாள் என்பது வாரத்தின் கிழமைகளில் ஒன்றையும் குறிக்கலாம் அல்லது நாட்காட்டி நாட்களில் ஒன்றையும் குறிக்கலாம். மாந்தர் உட்பட அனைத்து புவிவாழ் உயிரினங்களின் வாழ்க்கைப் பாணிகள் புவியின் சூரிய நாளையும் பகல்-இரவு சுழற்சியையும் சார்ந்தமைகிறது.

அண்மைப் பத்தாண்டுகளாக புவியின் நிரல் (சராசரி) சூரிய நாள் 86,400.002 நொடிகளாகும் நிரல் வெப்ப மண்டல ஆண்டின் நாள் 24.0000006 மணிகள் ஆகவும், ஆண்டு 365.2422 சூரிய நாட்களாகவும் அமைகிறது. வான்பொருள் வட்டணைகள் துல்லியமான சீர் வட்டத்தில் அமையாததால், அவை வட்டணையின் வெவ்வேறு இருப்புகளில் வேறுபட்ட வேகங்களில் செல்கின்றன. எனவே சூரிய நாளும் வட்டணையின் பகுதிகளில் வெவ்வேறான கால இடைவெளியுடன் அமைகின்றன. ஒரு நாள் என்பது புவி தன்னைத் தானே ஒரு முழுச்சுற்று சுற்ற எடுத்துக்கொள்ளும் கால அளவாகப் புரிந்து கொள்ளப்படுகிறது

வான்கோளப் பின்னணியில் அல்லது தொலைவாக அமையும் (நிலையானதாகக் கொள்ளப்படும்) விண்மீன் சார்ந்த ஆண்டு விண்மீன் ஆண்டு எனப்படுகிறது. இதன்படி ஒரு நாளின் கால இடைவெளி 24 மணி நேரத்தில் இருந்து 4 மணித்துளிகள் குறைவாக, அதாவது 23 மணிகளும் 56 மணித்துளிகளும் 4.1 நொடிகளுமாக அமையும். ஒரு வெப்ப மண்டல ஆண்டில் ஏறத்தாழ 366.2422 விண்மீன் நாட்கள் அமையும். இது சூரிய நாட்களின் எண்ணிக்கையை விட ஒரு விண்மீன் நாள் கூடுதலானதாகும். மேலும் ஓத முடுக்க விளைவுகளால், புவியின் சுழற்சிக் காலமும் நிலையாக அமைவதில்லை என்பதால் சூரிய நாட்களும் விண்மீன் நாட்களும் மேலும் வேறுபடுகின்றன. மற்ற கோள்களும் நிலாக்களும் புவியில் இருந்து வேறுபட்ட சூரிய, விண்மீன் நாட்களைக் கொண்டிருக்கும்.

அறிமுகம்

நாள் 
தாகர் (Dagr) எனும் நாளின் நோர்சு கடவுள் குதிரையேற்றம், 19 ஆம் நூற்றாண்டு சார்ந்த பீட்டர் நிகோலாய் ஆர்போ வரைந்த ஓவியம்.

தற்காலத்தில் உலகம் முழுதும் பரவலாகப் பயன்படுத்தப்படும் நாள் என்பது புவி சூரியனைச் சார்ந்து தனது அச்சில் ஒரு முறை சுழல்வதற்கு எடுக்கும் நேரமாகும். நாள் என்பது அனைத்துப் பண்பாடுகளிலும் ஒரே சொல்லால் குறிப்பிடப்பட்டாலும், அப்பண்பாடுகளில் பின்பற்றப்படும் வெவ்வேறு காலக் கணிப்பு முறைகளுக்கு இடையில் இது சில கூறுபாடுகளிலும் அளவிலும் வேறுபட்டுக் காணப்படுகிறது.

  • நாள் கணிப்பதற்கான அடிப்படைகள்,
  • நாளுக்குரிய கால அளவு,
  • நாளின் தொடக்கமும் முடிவும்,
  • நாளுக்கான பகுப்புசார் அலகுகள்
  • நாட் பெயர்கள்

என்பன, இவ்வாறு வேறுபடுகின்ற கூறுபாடுகளில் குறிப்பிடத்தக்கவை.

நாள் 24 மணி (86 400 நொடி) கால அளவைத் தவிர, புவியின் தன் அச்சில் சுழல்வதைக் கொண்டு வேறு பல கால அளவுகளையும் குறிக்கப் பயன்படுகிறது. இதில் முதன்மையானது சூரிய நாளாகும். சூரிய நாள் என்பது அடுத்தடுத்து வான் உச்சிக்கு வர எடுத்துக் கொள்ளும் கால அளவாகும். ஏனெனில், புவி தன்னைத் தானே சுற்றிக் கொள்வதோடு சூரியனையும் நீள்வட்ட வட்டணையில் சுற்றிவருவதால், இந்தக் கால அளவு ஆண்டின் நிரல் நேரமாகிய 24 மணி (86 400 நொடி) நேரத்தை விட 7.9 நொடி கூடுதலாகவோ குறைவாகவோ அமையும்.

பகல் நேரம் இரவு நேரத்தில் இருந்து பிரித்து, பொதுவாக சூரிய ஒளி நேரடியாக தரையை அடைகிற கால இடைவெளியாக வரையறுக்கப்படுகிறது. பகல்நேர நிரல் அளவு 24 மணி நேர அளவில் பாதியினும் கூடுதலாக அமைகிறது. இரு விளைவுகள் பகல் நேரத்தை இரவு நேரத்தை விட கூடுதலாக அமையும்படி மாற்றுகின்றன. சூரியன் ஒரு புள்ளியல்ல; மாற்றாக, அதன் தோற்ற உருவளவு ஏறத்தாழ 32 வட்டவில் துளிகள் ஆகும். மேலும், வளிமண்டலம் சூரிய ஒளியை ஒளிவிலகல் அடையச் செய்கிறது. இதனால் சூரிய ஒளியின் ஒரு பகுதி 34 வட்டவில் துளிகளுக்கு முன்னரே, சூரியன் தொடுவனத்துக்கு அடியில் இருக்கும்போதே, பவித் தரையை வந்தடைகிறது. எனவே முதல் ஒளி சூரிய மையம் தொடுவான அடியில் உள்ளபோதே 50 வட்டவில் துளிகளுக்கு முன்னமே புவித்தரையை அடைகிறது. இந்த நேர வேறுபாடு சூரியன் எழும்/விழும் கோண அலவைச் சார்ந்தமைகிறது. இந்தக் கோணம் புவியின் அகலாங்கைச் சார்ந்த்தாகும். என்றாலும் இந்நேர வேறுபாடு ஏழு மணித்துளிகள் ஆகும்.

பண்டைய வழக்கப்படி, புதிய நாள் களத் தொடுவானில் நிகழும் கதிரெழுச்சியிலோ கதிர்மறைவிலோ தொடங்குவதாகும் (நாள் கதிர்மறைவில் தொடங்கி 24 மணி நேரம் வரை நீடிப்பது இத்தாலிய மரபாகும். இது ஒரு மிகப்பழைய பாணியாகும்). இரு கதிரெழுச்சிகளும் இருகதிர்மறைவுகளும் தோன்றும் கணமும் அவற்ரிடையே அமையும் கால இடைவெளியும் புவிப்பரப்பு இருப்பிடத்தையும் அவ்விடத்தின் நெட்டாங்கையும் அகலாங்கையும் பண்டைய அரைக்கோள சூரியக் கடிகை காடும் ஆண்டினிருப்பு நேரத்தையும் பொறுத்ததாகும்.

மேலும் நிலையான நாளை, சூரியன் கள நெட்டாங்கைக் கடந்து செல்லும் கணத்தைச் சார்ந்து வரையறுக்கலாம். இது கள மதியம் அல்லது மேற்புற உச்சிவேளையாகவோ நள்ளிரவாகவோ (அடிப்புற உச்சிவேளையாகவோ) அமைகிறது. அப்படி சூரியன் கடக்கும் சரியான கணம் புவிப்பரப்பு இருப்பிட்த்தின் நெட்டாங்கையும் ஓரளவுக்கு ஆண்டின் நிகழிருப்பையும் பொறுத்தது. இத்தகைய நாளின் கால இடைவெளி, ஏறக்குறைய 30 நொடிகள் கூட்டிய அல்லது கழித்த 24 மணியாக மாறாமல் நிலையாக அமையும். இது நிகழ்கால சூரியக் கடிகைகள் காட்டும் நேரமே ஆகும்.

மேலும் துல்லியமான வரையறைக்கு, புனைவான நிரல் சூரியன், வான்கோள நடுவரை ஊடாக நிலையான உண்மைச் சூரிய வேகத்தோடு இயங்குவதாகக் கொள்ளப்படுகிறது; இக்கருதுகோளில் சூரியனைச் சுற்றித் தன் வட்டணையில் புவி சுற்றும்போது அதன் விரைவாலும் அச்சு சாய்வாலும் உருவாகும் வேறுபாடுகள் நீக்கப்படுகின்றன.

கால அடைவில், புவி நாள் அளவு நீண்டுகொண்டே வருகிறது. இது புவியை ஒரே முகத்துடன் சுற்றிவரும் நிலாவின் ஓத ஈர்ப்பால் புவியின் சுழற்சி வேகம் குறைவதால் ஏற்படுகிறது. நொடியின் வரையறைப்படி, இன்றைய புவி நாளின் கால இடைவெளி ஏறத்தாழ 86 400.002 நொடிகளாகும்; இது ஒரு நூற்றாண்டுக்கு 1.7 மில்லிநொடிகள் வீதத்தில் கூடிவருகிறது (இம்மதிப்பீடு கடந்த 2 700 ஆண்டுகளின் நிரல் மதிப்பாகும்). (விவரங்களுக்கு காண்க, ஓத முடுக்கம்.) 320 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய நாளின் அளவு, மணற்கல்லின் அடுத்தடுத்துவரும் அடுக்குப்படி, ஏறத்தாழ 21.9 மணிகளாக மதிப்பிடப்பட்டுள்ளது. நிலாவின் தோற்றத்துக்கு முந்தைய புவி நாளின் அளவு இன்னமும் அறியப்படாததாகவே உள்ளது.[சான்று தேவை]

சொற்பிறப்பியல்

என்ற தமிழ்க் குறியீடு நாள் என்பதை குறிக்கப் பயன்படுத்தப்பட்டது.

ஜார்ஜிய முறையில் நாள்

சூரியனுடைய இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட இம்முறையில் எல்லா நாட்களுமே சம அளவுள்ளவையாக எடுத்துக் கொள்ளப்படுகின்றன. நாள் மணி, மணித்துளி, நொடி என உட்பிரிவுகளாக வகுக்கப்பட்டுள்ளது. இம்முறை சார்ந்த கால அளவை வாய்ப்பாடு கீழே தரப்பட்டுள்ளது.

ஜார்ஜியன் முறையில் நாள் நள்ளிரவுக்குப் பின் தொடங்குகிறது. எனவே ஒரு நாள் என்பது நள்ளிரவிலிருந்து அடுத்த நள்ளிரவு வரையான காலமாகும். ஒவ்வொரு நாளும் ஓர் எண்ணாலும், ஒரு பெயராலும் குறிக்கப்படுகின்றது. ஒரு குறிப்பிட்ட நாள் அது அடங்கியுள்ள மாதத்தின் எத்தனையாவது நாள் என்பதைக் குறிக்க, ஒன்றுக்கும் 31 க்கும் இடையில் அமைந்த ஓர் எண் பயன்படுகிறது. வாரமொன்றில் உள்ள ஏழு நாட்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பெயரிட்டு அழைக்கப்படுகின்றன. எனவே ஒவ்வொரு நாளும் மேற்படி வாரக் கிழமைப் பெயர்களில் ஒன்றைத் தாங்கியிருக்கும்.

இந்துக் கணிய (சோதிட) முறையில் நாள்

நமது பண்டைய இந்துக் (கணிய) முறையில் சூரியன் தொடுவானில் தோன்றியது முதல் மறு நாள் சூரியன் தொடுவானில் தோன்றும் வரையிலான கால இடைவெளி ஒரு நாள் ஆகும். எடுத்துக்காட்டாக, இன்று காலை 6.40க்குச் சூரியன் தொடுவானில் தோன்றினால், அடுத்த நாள் காலை 6.39க்குச் சூரியன் தொடுவானில் தோன்றினால், இந்த இடைப்பட்ட காலம் தான் ஒரு நாள் எனப்படும். அதாவது, அடுத்தடுத்த கதிரெழுச்சிகளுக்கு இடைஅயில் அமைந்த கால நெடுக்கம் நாள் எனப்படுகிறது.

முழுநாளும் (24 மணிநேரமும்) பகலும் குறித்த சொல்வளம்

முழுநாளையும் பகலையும் வேறுபடுத்த, ஆங்கிலத்தில் கிரேக்கச் சொல்லான நிச்தெமெரான் (nychthemeron) முழுநாளைக் குறிக்க பயன்படுகிறது. இச்சொல்லின் பொருள் அல்லும் பகலும் என்பதாகும். ஆனால், மக்கள் வழக்கில் முழுநாள் 24 மணியாலேயே கூறப்படுகிறது. சில மொழிகளில் பகல் எனும் சொல்லே முழுநாளையும் குறிக்கப் பய்ன்படுவதுண்டு. வேறு சில மொழிகளில் முழுநாலைக் குறிக்க தனிச் சொல் வழங்குவதுண்டு; எடுத்துகாட்டாக. பின்னிய மொழியில் vuorokausi எனும்சொல்லும் எசுதோனிய மொழியில் ööpäev எனும் சொல்லும் சுவீடிய மொழியில் dygn எனும் சொல்லும் டேனிய மொழியில் døgn எனும் சொல்லும் நார்வேயர் மொழியில் døgn எனும் சொல்லும் ஐசுலாந்து மொழியில் sólarhringurஎனும் சொல்லும் டச்சு மொழியில் etmaal எனும் சொல்லும் போலிசிய மொழியில் doba எனும் சொல்லும் உருசிய மொழியில் сутки (sutki) எனும் சொல்லும் பேலோருசிய மொழியில் суткі (sutki) எனும் சொல்லும் உக்கிரைனிய மொழியில் доба́ (doba) எனும்சொல்லும் பல்கேரிய மொழியில் денонощие எனும் சொல்லும் எபிரேய மொழியில் יממה எனும் சொல்லும் தாழிக் மொழியில்шабонарӯз எனும் சொல்லும் தமிழில் நாள் எனும் சொல்லும் பயன்பாட்டில் உள்ளன. இத்தாலிய மொழியில், கியோர்னோ (giorno) எனும் சொல் முழுநாளையும் தி (dì) எனும் சொல் பகலையும் குறிக்கப் பயன்படுகிறது.[சான்று தேவை] பண்டைய இந்தியாவில் முழுநாளைக் குறிக்க, அகோரத்ரா (Ahoratra) எனும் சொல் பயன்பட்டது.

நள்ளிரவு சூரியன்

சூரியன் உதிக்கும் நேரத்தை வைத்து நாள் கணக்கிடப்படும்போது, நள்ளிரவுச் சூரியன் தெரியும் புவிமுனைசார் இடங்களில், ஒரு நாளின் கால இடைவெளி 24 மணிகளையும் விஞ்சி, பல மாதங்கள் கூட எடுத்துக்கொள்ளும்.

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

நாள் அறிமுகம்நாள் சொற்பிறப்பியல்நாள் ஜார்ஜிய முறையில் நாள் இந்துக் கணிய (சோதிட) முறையில் நாள் முழுநாளும் (24 மணிநேரமும்) பகலும் குறித்த சொல்வளம்நாள் நள்ளிரவு சூரியன்நாள் மேலும் காண்கநாள் மேற்கோள்கள்நாள் வெளி இணைப்புகள்நாள்அனைத்துலக முறை அலகுகள்பகலொளி சேமிப்பு நேரம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்நந்திக் கலம்பகம்அத்தி (தாவரம்)ஜெயகாந்தன்இந்தியாவில் இட ஒதுக்கீடுஇந்தியக் குடியரசுத் தலைவர்திராவிட மொழிக் குடும்பம்செக் மொழிமண் பானைஇலட்சம்அனுமன் ஜெயந்திசூர்யா (நடிகர்)சன்ரைசர்ஸ் ஐதராபாத்சினைப்பை நோய்க்குறிபோயர்கார்த்திக் (தமிழ் நடிகர்)கன்னத்தில் முத்தமிட்டால்சிறுபாணாற்றுப்படைசுடலை மாடன்காதல் கோட்டைபாண்டி கோயில்பரிவுதமிழக வெற்றிக் கழகம்தேரோட்டம்உயிர் உள்ளவரை காதல்பள்ளிக்கரணைசங்க காலம்பெரியபுராணம்சிறுபஞ்சமூலம்சிறுத்தைஎஸ். ஜானகிகள்ளழகர் கோயில், மதுரைஅருணகிரிநாதர்இல்லுமினாட்டிதமிழ் எண் கணித சோதிடம்திருப்பாவைதொழினுட்பம்தொழிற்பெயர்வாலி (கவிஞர்)பறவைகட்டபொம்மன்ஔவையார் (சங்ககாலப் புலவர்)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்வெள்ளி (கோள்)108 வைணவத் திருத்தலங்கள்இந்திதமிழக மக்களவைத் தொகுதிகள்தட்டம்மைதிருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்வல்லபாய் பட்டேல்மாதேசுவரன் மலைரெட் (2002 திரைப்படம்)சித்திரைவருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)முகலாயப் பேரரசுபாவலரேறு பெருஞ்சித்திரனார்கலித்தொகைஅழகர் கோவில்கலாநிதி மாறன்வளையாபதிபெயர்ச்சொல்திரௌபதி முர்முசைவத் திருமுறைகள்கேள்விமு. வரதராசன்உலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)காயத்திரி ரேமாமரபுச்சொற்கள்கட்டுரைஸ்ரீகுறிஞ்சிப்பாட்டுஅம்மனின் பெயர்களின் பட்டியல்இலட்டுதமிழ் நாடக வரலாறுபுரோஜெஸ்டிரோன்சாத்துகுடிதிருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்வினையெச்சம்தளபதி (திரைப்படம்)🡆 More