ஆபாசத் திரைப்படம்

ஆபாசத் திரைப்படம் அல்லது பாலியல் திரைப்படம் (Pornographic film) என்பது பாலியல் ரீதியான விசயங்களை முன்வைத்து பார்வையாளர்களை புணர்ச்சிப் பரவசநிலைக்கு தூண்டுவதற்காக உருவாக்கப்படும் ஒரு திரைப்பட வகை ஆகும்.

ஆபாசத் திரைப்படங்கள் பாலியல் கற்பனைகளை முன்வைக்கின்றன. பொதுவாக நிர்வாணம் மற்றும் பாலியல் பாலுறவு போன்ற சிற்றின்பத் தூண்டுதல்களை உள்ளடக்குகின்றன.

ஆபாசத் திரைப்படம்
ஒரு ஆபாச படப்பிடிப்பின்போது

இந்த வகைத் திரைப்படம் மிகவும் வெளிப்படையான பாலுணர்வைக் கொண்டுள்ளது. கதைசொல்லலைக் காட்டிலும் பாலியல் காட்சிகளில் அதிக கவனம் செலுத்துகிறது. ஆபாசப் படங்கள் இலக்கமுறைப் பல்திறவாற்றல் வட்டு, இணையம், கம்பி வடத் தொலைக்காட்சி போன்ற பல்வேறு ஊடகங்களில் தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்படுகின்றன. தற்காலத்தில் ஆபாச படங்கள் டிவிடியில் விற்கப்படுகின்றன அல்லது வாடகைக்கு விடப்படுகின்றன. சிறப்பு அலைவரிசைகள், கம்பி வடத் தொலைக்காட்சி மற்றும் செயற்கைக்கோள் போன்றவற்றில் பார்வையாளர்கள் காட்சிக்கு-காசு. கட்டணமுறையில் பார்க்கலாம். அல்லது வயதுவந்த திரையரங்குகளில் பார்க்கப்படுகிறது. சட்டப்படி இந்தவகைத் திரைப்படம் பொதுவாக பிரதான திரையரங்குகளில் அல்லது இலவசமாக தொலைக்காட்சியில் காட்ட அனுமதிக்கப்படுவதில்லை.

சட்டரீதியான தகுதி

ஆபாசத் திரைப்படங்கள் பற்றிய சட்டம் ஒவ்வொரு நாட்டுக்கு ஏற்ற வேறுபடுகிறது. இந்தியா மற்றும் இலங்கை நாடுகளில் இந்த வகை திரைப்படங்கள் சட்டவிரோதமானது. ஆனாலும் பெரும்பாலான நாடுகள் இந்தத் துறைக்கு எதிராகத்தான் சட்டம் அமைத்துள்ளன.

1969 இல் ஐக்கிய அமெரிக்க உச்ச நீதிமன்றம் ஆபாசமான பொருட்களை தனிப்பட்ட முறையில் வைத்திருப்பதை குற்றமாக அறிவித்ததது. 1970 களில் அமெரிக்காவில் ஆபாசத் தொழிலை மூடுவதற்கு மேலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆபாசத் தொழில்துறையில் இருப்பவர்களை விபச்சாரக் குற்றச்சாட்டில் வழக்கு பதிவும் செய்யப்பட்டது.

பல நாடுகளில் ஆபாசப் படங்கள் விநியோகிப்பதற்கும் உற்பத்தி செய்வதற்கும் சட்டபூர்வமானது, ஆனால் சில கட்டுப்பாடுகள் உள்ளன. சில நாடுகளில் குறிப்பாக முஸ்லீம் நாடுகளிலும், சீனாவிலும் ஆபாசப் படங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன. ஆனால் இந்த நாடுகளில் சில இணைய வழியாக பார்க்க முடியும்.

இந்தியா

  • இந்தியாவில் ஆபாசப் பொருட்கள் விற்பனை மற்றும் விநியோகம் செய்வது பிரிவு 292 இன் கீழ் சட்டவிரோதமானது.
  • பிரிவு 293 மற்றும் ஐடி சட்டம் -67 பி ஆகியவற்றின் கீழ் ஆபாசப் பொருட்களின் விநியோகம், விற்பனை அல்லது 20 வயதிற்குட்பட்ட எந்தவொரு நபருக்கும் ஆபாச உள்ளடக்கங்களை விற்பனை செய்வது சட்டவிரோதமானது.
  • தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000 இன் பிரிவு 67 பி இன் கீழ் நாடு முழுவதும் சிறுவர் ஆபாசப் படங்கள் சட்டவிரோதமானது மற்றும் கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளன.
  • பிரிவு 292, 293 இன் கீழ் இந்தியாவில் ஆபாசத் திரைப்படங்களை தயாரித்தல், வெளியிடுதல் மற்றும் விநியோகித்தல் சட்டவிரோதமானது.

சுகாதாரப் பிரச்சினைகள்

ஆபாசப் படங்களில் பாலியல் செயல்களில் நடிப்பவர்கள் பாதுகாப்பான முறையில் கருத்தடை உறை பயன்படுத்தாமல் செய்யப்படுகின்றன இதனால் நடிகர்களிடையே பால்வினை நோய்கள் பரவும் ஆபத்து உள்ளது. 1986 ஆம் ஆண்டில் எச்.ஐ.வி தொற்று உருவாகி பல நடிகர்கள் மற்றும் நடிகைகளின் எயிட்சு மூலம் இறப்புகளுக்கு வழிவகுத்தது.

மேற்கோள்கள்

Tags:

ஆபாசத் திரைப்படம் சட்டரீதியான தகுதிஆபாசத் திரைப்படம் சுகாதாரப் பிரச்சினைகள்ஆபாசத் திரைப்படம் மேற்கோள்கள்ஆபாசத் திரைப்படம்திரைப்படம்பாலுணர்வுக் கிளர்ச்சியம்பாலுறவுபுணர்ச்சிப் பரவசநிலை

🔥 Trending searches on Wiki தமிழ்:

சமணம்சித்தர்கள் பட்டியல்எஸ். ஜானகிமும்பை இந்தியன்ஸ்பெண் தமிழ்ப் பெயர்கள்இசைஞானியார் நாயனார்விலங்குகளின் பெயர்ப் பட்டியல்குணங்குடி மஸ்தான் சாகிபுஎ. வ. வேலுபஞ்சதந்திரம் (திரைப்படம்)சுற்றுலாதிணை விளக்கம்தோஸ்த்பி. காளியம்மாள்பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்பூப்புனித நீராட்டு விழாஆய்த எழுத்துநாயக்கர்சங்க காலப் பெண்பாற் புலவர்கள்உலக சுற்றுச்சூழல் நாள்சிங்கப்பூர்வ. உ. சிதம்பரம்பிள்ளைபுணர்ச்சி (இலக்கணம்)பழமுதிர்சோலை முருகன் கோயில்தற்குறிப்பேற்ற அணிதமிழ்நாடு சட்டப் பேரவைசெக் மொழிவண்ணம் (யாப்பு)அளபெடைபறையர்அன்னை தெரேசாதிருமந்திரம்இலங்கைகூலி (1995 திரைப்படம்)கடையெழு வள்ளல்கள்முத்துராஜாசாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்காரைக்கால் அம்மையார்ஒற்றைத் தலைவலிநாலாயிர திவ்வியப் பிரபந்தம்சூர்யா (நடிகர்)தமிழர் கலைகள்புனித ஜார்ஜ்ஜலியான்வாலா பாக் படுகொலைமுக்கூடற் பள்ளுவெப்பநிலைசீர் (யாப்பிலக்கணம்)அணி இலக்கணம்முகம்மது நபிவானிலைஇந்தியன் பிரீமியர் லீக்பைரவர்அரச மரம்தரங்கம்பாடியோகக் கலைஐந்திணைகளும் உரிப்பொருளும்திருப்போரூர் கந்தசாமி கோயில்ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்சுப்பிரமணிய பாரதிபாசிப் பயறுஅங்குலம்இந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்திருமலை (திரைப்படம்)ஆங்கிலம்தேர்அரிப்புத் தோலழற்சிமுத்துராமலிங்கத் தேவர்திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்சிவாஜி (பேரரசர்)நஞ்சுக்கொடி தகர்வுஆறுமுக நாவலர்கம்பராமாயணத்தின் அமைப்புமோகன்தாசு கரம்சந்த் காந்திமொரோக்கோவிண்ணைத்தாண்டி வருவாயாதேசிய மகளிர் ஆணையம் (இந்தியா)பெருஞ்சீரகம்வசுதைவ குடும்பகம்அக்பர்🡆 More