பன்னாட்டு செஞ்சிலுவை மற்றும் செம்பிறை இயக்கம்

பன்னாட்டு செஞ்சிலுவை மற்றும் செம்பிறை இயக்கம் (International Red Cross and Red Crescent Movement) ஒரு பன்னாட்டு மனிதாபிமான அமைப்பு.

இவ்வியக்கத்தில்; நாடு, இனம், மதம், வகுப்பு, அரசியல் கருத்து என்பவற்றின் அடிப்படையில் வேறுபாடு காட்டாமல்; மனித உயிர்களையும், உடல் நலத்தையும் பாதுகாத்தல்; மனிதர்களுக்கு மதிப்பு அளித்தலை உறுதிப்படுத்துதல்; மனிதர்களின் துன்பங்களைத் தடுத்தலும் அவற்றை நீக்குதலும் ஆகிய கொள்கைகளை ஏற்றுக்கொண்டு 97 மில்லியன் தன்னார்வலர்கள் உலகம் முழுதும் பணிபுரிகின்றனர்.

பன்னாட்டு செஞ்சிலுவை, மற்றும் செம்பிறை இயக்கம்
International Red Cross and Red Crescent Movement
சுருக்கம்ICRC மற்றும் IFRC
உருவாக்கம்
  • 9 பெப்ரவரி 1863; 161 ஆண்டுகள் முன்னர் (1863-02-09) (செஞ்சிலுவைச் சங்க பன்னாட்டு குழு)
    5 மே 1919; 104 ஆண்டுகள் முன்னர் (1919-05-05) (செஞ்சிலுவை மற்றும் செம்பிறை சங்கங்களின் பன்னாட்டு கூட்டமைப்பு)
நிறுவனர்கள்
  • ஹென்றி டியூனாண்ட்
  • குஸ்டாவ் மொய்னியர்
  • தியோடர் மௌனோயர்
  • குய்லூம் ஹென்றி டுஃபோர்
  • லூயிஸ் அப்பியா
வகைஅ.சா.அ., இ.நோ.அ.
நோக்கம்மனித நேயம்
தலைமையகம்
மூலம்ஜெனீவா
சேவைப் பகுதி
உலகம் முழுவதும்
முறைஉதவி
உறுப்பினர்கள்
பன்னாட்டு செஞ்சிலுவை மற்றும் செம்பிறை இயக்கம் ஐக்கிய நாடுகள் (ஐக்கிய நாடுகள் பொதுச் சபை) CICR மற்றும் FICR
முக்கிய நபர்கள்
பீட்டர் மாரர்
ஊழியர்கள்
அண். 180,000
தன்னார்வலர்கள்
அண். 16.4 மில்லியன்
விருது(கள்)
வலைத்தளம்www.icrc.org இதை விக்கித்தரவில் தொகுக்கவும்

இவ்வியக்கம், பல தனித்தனியான அமைப்புக்களை உள்ளடக்கிய ஒன்றாகும். இவ்வமைப்புக்கள், பொது அடிப்படைக் கொள்கை, நோக்கம், சின்னம், சட்டவிதிகள், ஆட்சி உறுப்புக்கள் என்பவற்றால் ஒன்றிணைந்துள்ளன. இயக்கத்தின் பகுதிகளாவன:

இளம் செஞ்சிலுவைச் சங்கம்

பன்னாட்டு செஞ்சிலுவை மற்றும் செம்பிறை இயக்கம் 
கூடலூர் என்.எஸ்.கே.பி. மேல்நிலைப்பள்ளி இளம் செஞ்சிலுவைக் குழு படம்

பள்ளிகளில் படிக்கும் மாணவர்களிடையே செஞ்சிலுவைச் சங்கத்தின் சேவை நோக்கத்தைக் கொண்டு வருவதற்காக இளம் செஞ்சிலுவைச் சங்கம் அமைக்கப்படுகிறது. பள்ளித் தலைமையாசிரியர் மேற்பார்வையில் செஞ்சிலுவைச் சங்கத்தில் ஈடுபாடுடைய பள்ளியாசிரியர் ஒருவரைக் கொண்டு இக்குழுக்கள் அமைக்கப்படுகின்றன. இக்குழுக்களில் ஈடுபாடு கொண்ட பள்ளி மாணவர்கள் உறுப்பினர்களாகச் சேர்க்கப்படுகின்றனர்.

இயக்கத்தின் வரலாறு

பன்னாட்டு செஞ்சிலுவைச் சங்க நிறுவுனர் ஜீன் என்றி டியூனன்ட்

பன்னாட்டு செஞ்சிலுவை மற்றும் செம்பிறை இயக்கம் 
ஜீன் ஹென்றி டியூனாண்ட்.

19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதிவரை சமர்க் களங்களில் காயமுற்ற படைவீரர்களை முறைப்படி மருத்துவ பராமரிப்புச் செய்ய நிறுவன மயப்பட்ட அமைப்பு காணப்படவில்லை. சூன்1859, சுவுச்சர்லாந்து வர்த்தகரான ஹென்றி டியூனாண்ட் இத்தாலிக்குப் பயணம் செய்திருந்த வேளையிலே அங்கு சோல்பரினோ சமர் நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஆஸ்திரிய, பிரான்சிய, இத்தாலியப் படைகளைச் சேர்ந்த மூன்று இலட்சம் படை வீரர்கள் தொடர்ந்து 16 மணித்தியாலங்களாகப் போரிட்டிருந்தனர். இதன் விளைவாக 40000 பேர் போர்க்களத்தில் குற்றுயிராய்க் கிடந்த்தனர். இவ்வாறு பாத்திக்கப்பட்டவர்களை யாரும் கவனமெடுக்கவில்லை. இச்சந்தர்ப்பம் ஹென்றி டியூனாண்ட்டை வெகுவாகப் பாதித்தது. ஊரவர்களின் உதவியுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்தவொரு பேதமுமின்றிச் சிகிச்சை அளித்தார்.

பன்னாட்டு செஞ்சிலுவை மற்றும் செம்பிறை இயக்கம் 
முதலாவது ஜெனிவா உடன்படிக்கையின் மூல ஆவணம்,1864

ஜெனிவா திரும்பிய டியூனாண்ட் சோல்பரினோ நினைவுகள் எனும் நூலை எழுதினார். இந்நூல் அவரது சொந்த செலவில் 1862 இல் பிரசுரமானது. இந்நூலின் பிரதிகளை ஐரோப்பாவில் காணப்பட்ட முன்னணி அரசியல் மற்றும் இராணுவப் பிரதிநிதிகளுக்கெல்லாம் அனுப்பினார். இதற்கெல்லாம் மேலாக 1959 தனது சோல்பரினோ அனுபவங்களை முக்கியமானவர்களுடன் பகர்ந்து கொண்டதுடன் இத்தகைய பாதிக்கப்படும் இராணுவத்தினருக்கு உதவக்கூடிய தொண்டர் அமைப்பின் ஆக்கம் குறித்தும் கலந்துரையாடினார். சமர்க்களைங்களில் இராணுவ மருத்துவம்னிகள் மிக்கப்படுவதன் முக்கியத்துவம் பற்றியும் எடுத்துக்கூறினார்.

1863இல் டியூனாண்டின் நூல் பிரதி ஒன்று ஜெனிவா சட்டத்தரணியும் ஜெனிவா பொதுநலன்புரி அமைப்பின் தலைவரும் ஆன கஸ்டாவா மொய்னியர் அவர்களுக்குக் கிடைத்தது. இவர் இதனை ஜெனிவா பொதுநலன்புரி அமைப்பின் கூட்டத்தில் ஆரம்ப கலந்துரையாடலுக்கு எடுத்துக் கொண்டார். பின்னர் டியூனாண்டின் ஆலோசனைகளுக்கு அமிய அமைப்பொன்றைத் தாபிப்பதற்கான் ஆலோசனைகள் பரிசீலிக்கப்பட்டன. இதன் விளைவாக இதன் நடைமுறைப் படுத்தல் பற்றி நாடளவிலான மாநாட்டில் எடுத்தாடப்பட்டது. இதன் விளைவாக பன்னாட்டு செஞ்சிலுவை இயக்கம் எனும் தனியார் மனிதபிமான நிறுவனம் 1863 இல் ஜெனிவாவில் அமைக்கப்பட்டது.

செஞ்சிலுவை இயக்கமும் முதலாம் உலகப் போரும்

முதல் உலகப் போர் இன் போது செஞ்சிலுவைச் சங்க தாதிகளின் பணியைக் குறிப்பிடும் பிரான்சிய தபால் அட்டை, 1915
ஏர்னெஸ்ட் ஹெமிங்வே செஞ்சிலுவைச் சங்க அம்புலன்சு சாரதியாக]

முதல் உலகப் போர், ஏற்படுத்திய தாக்கங்கள் செஞ்சிலுவைச் சங்கத்தை தேசிய அமைப்புகளுடன் நெருக்கமாக பணியாற்றி சவால்களுடனான முன்னெடுப்புகளில் உட்படுத்தியது. அமெரிக்க, சப்பான் உள்ளிட்ட பல் நாடுகளில் இருந்தும் தாதியர்கள் சண்டையில் ஈடுபட்ட ஐரொப்பிய நாடுகளில் பாதிக்கப்பட்ட படையினருக்குப் பணியாற்ற அனுப்பியது. அக்டோபர் 15, 1914, சண்டை ஆரம்பித்து சில நாட்களில் செஞ்சிலுவைச் சங்கம் அதன் பன்னாட்டு போர்க் கைதிகள் முகவரகத்தினைத் தாபித்தது. இது 1914 முடிவில்1,200 தொண்டர்களைக் கொண்டிருந்தது. உலகப் போரின் முடிவில் முகவரகம் 20 மில்லியன் கடிதங்களையும் செய்திகளையும் , 1.9 மில்லியன் பொதிகளையும் மற்றும் 18 மில்லியன் சுவிசு பிராங்க் பெறுமதியான பண நன்கொடைகளைகளையும் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்த போர்க் கைதிகளுக்குப் பரிமாறியது. மேலும் இம்முகவரகத்தின் தலையீடுகள் காரணமாக ஏறக்குறைய 200,000 கைதிகள் யுத்தக் குழுக்களுக்கிடையில் பரிமாறப்பட்டதுடன் தமது தாய்நாடுகளுக்கு விடுதலை செய்யப்பட்டார்கள்.

French war casualty wearing a prosthetic mask provided by the American Red Cross, 1918
The same man without his mask

செஞ்சிலுவை இயக்கமும் இரண்டாம் உலகப் போரும்

பன்னாட்டு செஞ்சிலுவை மற்றும் செம்பிறை இயக்கம் 
Łódź இனால் விடுக்கப்பட்ட செஞ்சிலுவிச் சங்கச் செய்தி, போலந்து, 1940.

ஜெனீவா உடன்படிக்கையின் 1929ஆம் ஆண்டின் திருத்ததின் படி பன்னாட்டு செஞ்சிலுவை இயக்கத்தின் இரண்டாம் உலகப் போர் காலப்பகுதியிலான பணிகள் சட்ட அடிப்படைகளைப் பெற்றன. இயக்கத்தின் பணிகள் முதல் உலகப் போர் காலப் பணிகளை ஒத்ததாகக் காணப்பட்டது. அதாவது: போர்க் கைதிகளின் முகாங்களைத் தரிசித்தலும் மதிப்பிடலும், பொதுமக்களுக்கு உதவிகளையும் நிவாரணங்களையும் ஒழுங்குபடுத்துதல், காணாமல் போனோர் மற்றும் கைதிகள் தொடர்பான தகவல்களை பரிமாற்றலும் முறைமைப்படுத்தலும் முதலானவை. போரின் முடிவில் 179 பணிக்குழுக்கள் 41 நாடுகளைச் சேர்ந்த போர்க் கைதிகளின் முகாம்களுக்கு 12,750 தரிசிப்புகளிளை மேற்கொண்டிருந்தனர். ஆயினும் செருமனியில் நாசிசம் செருமானிய செஞ்சிலுவைச்ச்சங்கத்தின் செயற்பாடுகளை ஜெனீவா உடன்படிக்கைய மீறும் வகையில் தடைப்படுத்தினர்.யூதர்களின் நாசி அரசியல் கைதிகளின் முகாம்கள்களில் பெரும் இன அழிப்பு கள் நடைபெற்றன. யுத்தம் நடைபெற்ற போது பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ சேவை செய்வது தொடர்பான எந்தவொரு உடன்படிக்கைகளையும் நாசிகளுடன் செய்துகொள்ள முடியவில்லை.

இரண்டாம் உலகப் போரின் போது சுவிட்சர்லாந்து தரைப்படை அலுவலகர் மோறிசு ரொசோல் செஞ்சிலுவைச் சங்கப் பிரதிநிதியாக பெர்லின் நகருக்கு அனுப்பட்டார். அதன் பிரகாரம் அவர் 1943 ஓச்சுவிச்சுவுக்கும் (Auschwitz) 1943 இல் திரெசிஎன்டாட்சுவுக்கும் (Theresienstadt) அனுப்பட்டார். குளொட் லான்சுமான் த்னது அனுபவங்களைப் பதிவுசெய்து 1979இல் Visitor from the living எனும் பெயரில் வெளியிட்டார்..

பன்னாட்டு செஞ்சிலுவை மற்றும் செம்பிறை இயக்கம் 
பன்னாட்டு செஞ்சிலுவைச் சங்கப் பிரதிநிதி மார்சல் ஜுனோட்டு சேர்மனி போர்க் கைதிகளைப் பார்வையிடுவது.
(© Benoit Junod, Switzerland)

ஆப்கானிஸ்தான்

ஆப்கானித்தான் மோதல்களில் ICRC செயலில் உள்ளது மற்றும் நிலக்கண்ணியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய ஆறு மறுவாழ்வு மையங்களை அமைத்துள்ளது. அவர்களின் ஆதரவு தேசிய மற்றும் சர்வதேச ஆயுதப்படை, பொதுமக்கள் மற்றும் ஆயுதமேந்திய எதிர்ப்பிற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தொடர்ந்து ஆப்கானிய அரசாங்க மற்றும் சர்வதேச ஆயுதப் படைகளின் காவலில் வைக்கப்பட்டுள்ள கைதிகளை சந்திக்கின்றனர், ஆனால் 2009 ஆம் ஆண்டு முதல் தலிபான்னால் தடுத்து வைக்கப்பட்ட மக்களுக்கு அவ்வப்போது அணுக அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆப்கான் பாதுகாப்புப் படைகளும் தலிபான் உறுப்பினர்களும் இருவருக்கும் அடிப்படை முதலுதவி பயிற்சி மற்றும் உதவி கருவிகள் வழங்கப்படுகின்றன. ஏன்னென்றால் ICRC விதிகளின் படி அரசியலமைப்பு யுத்தத்தால் பாதிக்கப்பட்ட அனைத்துக் தரப்பினரும் முடிந்த அளவிற்கு நியாயமாக நடத்தப்பட வேண்டும் என்கிறது.

செஞ்சிலுவை சங்கம் மற்றும் செம்பிறை சங்கங்களின் (IFRC) சர்வதேச கூட்டமைப்பு

வரலாறு

பன்னாட்டு செஞ்சிலுவை மற்றும் செம்பிறை இயக்கம் 
ஹென்றி டேவிசன், செஞ்சிலுவை சங்கங்களின் கூட்டமைப்பின் தந்தை.

1919 ல், பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான் மற்றும் அமெரிக்காவின் தேசிய செஞ்சிலுவைச் சங்கங்களின் பிரதிநிதிகள் பாரிசில் "செஞ்சிலுவை சங்கங்களின் கூட்டமைப்பு" என்பதைக் தொடங்கினர். அமெரிக்கா செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவரான ஹென்றி டேவிசன் இந்த நடவடிக்கை, அமெரிக்க செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைமையில், செஞ்சிலுவைச் சங்கத்தின் கடுமையான பணிக்கு அப்பால் செஞ்சிலுவைச் சங்கத்தின் சர்வதேச நடவடிக்கைகளை விரிவுபடுத்தியது. அவசரகாலச் சூழ்நிலைகளுக்கு விடையளித்த நிவாரண உதவி (மனிதனால் உருவாக்கப்பட்ட அல்லது இயற்கை பேரழிவுகள் போன்றவை) ). ARC ஏற்கனவே அதன் அடித்தளத்திற்கு மீண்டும் விரிவடைந்து பெரும் பேரழிவு நிவாரண பணி அனுபவம் பெற்றதாக உறுமாறியது.

ICRC உடன் இணைந்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்கங்களின் கூட்டமைப்பு உருவாக்கம் சர்ச்சைகள் இல்லாமல் இல்லை.ICRC இரு தரப்பினருக்கும் இடையில் சாத்தியமான போட்டியைப் பற்றி சரியான அளவு அக்கறை கொண்டுள்ளது. கூட்டமைப்பின் அஸ்திவாரம் இயக்கத்தின் கீழ் ICRC தலைமையின் கீழ்ப்பகுதியை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் முயற்சியாகவும் அதன் பணிகளை மற்றும் திறமைகளை பல பன்முக நிறுவனங்களுக்கு மாற்றவும் முயற்சிக்கிறது.

மே 1919 ல் இருந்து செஞ்சிலுவை சங்கங்களின் கூட்டமைப்பை உருவாக்கிய ஐந்து நாடுகளுக்கு சிறப்பு சட்ட உரிமை பெற்றது. இதனால் ஹென்றி டேவிசன் முயற்சியால் ஜெர்மனி, ஆஸ்திரியா, ஹங்கேரி, பல்கேரியா மற்றும் துருக்கி ஆகிய ஐந்து நாடுகளின் தேசிய செஞ்சிலுவை சங்கங்களை நடுவன் சக்தியில் நிறந்தரமாக ஒதுக்கிவைக்கும் முடிவும் மற்றும் ரஷ்யாவின் செஞ்சிலுவை சங்கம் வெளியேற்றும் முடிவும் ஏடுத்தார். ஆனால் இந்த சிறப்பு சட்ட உரிமை செஞ்சிலுவை சங்கங்களின் கூட்டமைப்பின் அடிப்படை சட்டத்திற்கு எதிரானதாக உள்ளது.

IFRC இன் தலைவர்கள்

2017 இல், IFRC இன் தலைவர் பிரான்செஸ்கோ ரோக்கா (இத்தாலிய செஞ்சிலுவை சங்கம்). உப தலைவர்களாக அன்னேமேரி ஹூபர்-ஹாட்ஸ் (சுவிஸ் செஞ்சிலுவை சங்கம்), மிகுவல் வில்லரோயல் (வெனிசுலா செஞ்சிலுவைச் சங்கம்), அப்துல் அஜீஸ் டியாலோ (செனகல் செஞ்சிலுவை சங்கம்), கெரெம் கினிக் (துருக்கிய சிவப்பு பிறை), சென் ஜு (சீனாவின் செஞ்சிலுவை சங்கம்) உள்ளனர்.

  • 1919-1922: ஹென்றி டேவிசன் (அமெரிக்கா)
  • 1922-1935: ஜான் பார்டன் பெய்ன் (அமெரிக்கா)
  • 1935-1938: கேரி ட்ராவர்ஸ் கிரேசன் (அமெரிக்கா)
  • 1938-1944: நார்மன் டேவிஸ் (அமெரிக்கா)
  • 1944-1945: ஜீன் டி முரட் (சுவிட்சர்லாந்து)
  • 1945-1950: பசில் ஓ'கானர் (அமெரிக்கா)
  • 1950-1959: எமில் சண்ட்ஸ்ட்ம் (ஸ்வீடன்)
  • 1959-1965: ஜான் மேக்அலேய் (கனடா)
  • 1965-1977: ஜோஸ் பரோசோ சாவேஸ் (மெக்ஸிக்கோ)
  • 1977-1981: அடடேஞ்சி அஃப்தபராசின் (நைஜீரியா)
  • 1981-1987: என்ரிக் டி லா மத்தா (ஸ்பெயின்)
  • 1987-1997: மரியோ என்ரிக் வில்லாரௌல் லேண்டர் (வெனிசுலா)
  • 1997-2000: ஆஸ்ட்ரிட் நௌக்லேபாய் ஹெய்டெர்க் (நார்வே)
  • 2001-2009: ஜுவான் மானுவல் டெல் டோரோ ய ரிவேரா (ஸ்பெயின்)
  • 2009-2017: தாடாடெரு கொனோய் (ஜப்பான்)
  • 2017-: பிரான்செஸ்கோ ரோக்கா (இத்தாலி)

செஞ்சிலுவைச் சங்கமும் நோபல் அமைதிப் பரிசும்

பன்னாட்டு செஞ்சிலுவை இயக்கம் இதுவரை 1917, 1944 மற்றும் 1963 என மூன்று முறை அமைதிக்கான நோபல் பரிசினை வென்றுள்ளது. 1917 இல் இதன் திறமையான போர்க்கால நடவடிக்கைகளுக்காக இந் நோபல் பரிசு வழங்கப்பட்டது. அப்போது 1914 முதல் 1918 வரை நடைபெற்ற நோபல் பரிசளிப்பு அது ஒன்றுதான். 1944 நோபல் முதலாம் உலகப் போரின் , முதன்மைக் காலகட்டமான,1939 முதல் 1945 வரையான சேவைக்காக வழங்கப்பட்டது. 1936 இயக்கம் அதன் நூற்றாண்டுக் காலக் கொண்டாட்டங்களின் போது அதன் மூன்றாவது நோபல் பரிசினை பெற்றது.

இரண்டாம் உலகப் போரின் பின்னர் பன்னாட்டு செஞ்சிலுவை இயக்கம்

பன்னாட்டு செஞ்சிலுவை மற்றும் செம்பிறை இயக்கம் 
பன்னாட்டு செஞ்சிலுவை இயக்கத்தின் ஜெனிவாவிலுள்ள தலைமையகம்

ஜெனீவா உடன்படிக்கையில் மேலும் இரு திருத்தங்கள் ஆகஸ்டு 12, 1949 கொண்டுவரப்பட்டன. கடலிலே காயத்துக்குள்ளான, நோய்வாய்ப்பட்ட படையினரின் சுகப்படுத்தல் சம்பந்தமாக மேலதிகமான உடன்படிக்கை ஒன்று ஜெனீவா உடன்படிக்கையின் கீழ் கொண்டுவரப்பட்டது. இது ஹக் உடன்படிக்கையின் தொடர்ச்சியாக கொள்ளப்படும் இது இரண்டாவது ஜெனீவா உடன்படிக்கை எனப்படுகின்றது.

இரண்டாம் உலகப் போரில் பெற்றுக் கொண்ட அனுபவங்களில்ன் அடிப்படையில், புதிய உடன்படிக்கையான நாலாவது ஜெனீவா உடன்படிக்கையான போரின் போது பொதுமக்களைப் பாதுகாப்பதற்கான உடன்படிக்கை 1949இல் ஏற்படுத்தப்பட்டது. இதில் ஜூன் 8, 1977 இல் சேர்த்த்துக் கொள்ளப்பட்ட புதிய சரத்துக்கள் உள்நாட்டுப் போர்களில் பொதுமக்களை பாதுகாக்கும் ஏற்பாடுகளை வலியுறுத்துகின்றது. தற்போதுள்ள நாலாவது உடன்படிக்கைகளில் 600க்கு மேற்பட்ட பிரிவுகள் பொதுமக்கள் பாதுகாப்பு குறித்துப் பேசுகின்றன. ஆனால் 1864 உடன்படிக்கையில் தனியே 10 பிரிவுகளே இத்தகையனவாக இருந்தன.

அக்டோபர் 16, 1990, இல் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை செஞ்சிலுவைச் சங்கத்தை அதன் உப குழுக் கூட்டங்களுக்கு அவதானிப்பாளர்களாக அனுமதித்தது. வெளி அமைப்பொன்றை இவ்வாறு அனுமதித்தது இதுவே முதல் முறையாகும்.

அமைப்பின் நடவடிக்கைகள்

பன்னாட்டு செஞ்சிலுவை மற்றும் செம்பிறை இயக்கம் 
ஜெனிவாவில் உள்ள பன்னாட்டு செஞ்சிலுவை மற்றும் செம்பிறை இயக்க அருங்காட்சியகத்தின் முகப்பு

பன்னாட்டு செஞ்சிலுவை மற்றும் செம்பிறை இயக்கம் மற்றும் அதன் தேசிய இயக்கங்கள் என்பவற்றில் மொத்தமாக 97 மில்லியன் பேர் பணியாற்றுகின்றார்கள்.

1965 வியன்னாவில் நடைபெற்ற பன்னாட்டு மாநாட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஏழு அடிப்படைக்கொட்பாடுகளின் செயற்பட்டு வருகின்றது. இக்கோட்பாடுகள் அமைப்பின் உத்தியோக பூர்வ கோட்பாடுகளாக 1986இல் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அவை,.

  • மனிதாபிமானம்
  • பாரபட்சமின்மை
  • நடுநிலமை
  • சுதந்திரத்தன்மை
  • தொண்டுபுரிதல்
  • ஒற்றுமை
  • பரந்த வியாபகம்

இவற்றையும் பார்க்கவும்

விளக்க குறிப்புகள்

குறிப்புகள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

பன்னாட்டு செஞ்சிலுவை மற்றும் செம்பிறை இயக்கம் இளம் செஞ்சிலுவைச் சங்கம்பன்னாட்டு செஞ்சிலுவை மற்றும் செம்பிறை இயக்கம் இயக்கத்தின் வரலாறுபன்னாட்டு செஞ்சிலுவை மற்றும் செம்பிறை இயக்கம் செஞ்சிலுவை சங்கம் மற்றும் செம்பிறை சங்கங்களின் (IFRC) சர்வதேச கூட்டமைப்புபன்னாட்டு செஞ்சிலுவை மற்றும் செம்பிறை இயக்கம் செஞ்சிலுவைச் சங்கமும் நோபல் அமைதிப் பரிசும்பன்னாட்டு செஞ்சிலுவை மற்றும் செம்பிறை இயக்கம் இரண்டாம் உலகப் போரின் பின்னர் பன்னாட்டு செஞ்சிலுவை இயக்கம்பன்னாட்டு செஞ்சிலுவை மற்றும் செம்பிறை இயக்கம் அமைப்பின் நடவடிக்கைகள்பன்னாட்டு செஞ்சிலுவை மற்றும் செம்பிறை இயக்கம் இவற்றையும் பார்க்கவும்பன்னாட்டு செஞ்சிலுவை மற்றும் செம்பிறை இயக்கம் விளக்க குறிப்புகள்பன்னாட்டு செஞ்சிலுவை மற்றும் செம்பிறை இயக்கம் குறிப்புகள்பன்னாட்டு செஞ்சிலுவை மற்றும் செம்பிறை இயக்கம் மேற்கோள்கள்பன்னாட்டு செஞ்சிலுவை மற்றும் செம்பிறை இயக்கம் வெளி இணைப்புகள்பன்னாட்டு செஞ்சிலுவை மற்றும் செம்பிறை இயக்கம்இனம்தன்னார்வலர்நாடுமதம்வகுப்பு

🔥 Trending searches on Wiki தமிழ்:

நயன்தாராமுல்லைப்பாட்டுவீட்டுக்கு வீடு வாசப்படிஇந்திய செஞ்சிலுவைச் சங்கம்தரணிகலிங்கத்துப்பரணிகடையெழு வள்ளல்கள்காமராசர்ராக்கி மலைத்தொடர்தகவல் தொழில்நுட்பம்கே. எல். ராகுல்முன்னின்பம்நாயன்மார்தஞ்சாவூர்அம்பேத்கர்கீர்த்தி சுரேஷ்இரட்சணிய யாத்திரிகம்கார்லசு புச்திமோன்கன்னத்தில் முத்தமிட்டால்அதியமான்ஏற்காடுரோகிணி (நட்சத்திரம்)பௌர்ணமி பூஜைசீனாபுங்கைஜெயகாந்தன்தமிழர் பண்பாடுகும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயில்ராஜசேகர் (நடிகர்)முத்தொள்ளாயிரம்குற்றாலக் குறவஞ்சிகண்டம்இந்திய தேசியக் கொடிநீர் பாதுகாப்புமகாபாரதம்சைவத் திருமுறைகள்சூல்பை நீர்க்கட்டிதிருவோணம் (பஞ்சாங்கம்)குண்டலகேசிகுறை ஒன்றும் இல்லை (பாடல்)அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்மு. களஞ்சியம்இந்திய நாடாளுமன்றம்தமிழச்சி தங்கப்பாண்டியன்இந்தியாவில் இட ஒதுக்கீடுஇணையம்சிவன்கன்னி (சோதிடம்)வாதுமைக் கொட்டைபிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்அணி இலக்கணம்பாமினி சுல்தானகம்இராமலிங்க அடிகள்சப்ஜா விதைசித்திரகுப்தர் கோயில்பொருளாதாரம்சின்ன மாப்ளேமிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுபித்தப்பைஉலா (இலக்கியம்)வைதேகி காத்திருந்தாள்சிறுகதைதமிழ்த்தாய் வாழ்த்துமு. க. ஸ்டாலின்டேனியக் கோட்டைதிருமால்மார்கஸ் ஸ்டோய்னிஸ்உடுமலைப்பேட்டைமொழிபெயர்ப்புதிருமுருகாற்றுப்படையோகாசனம்தாயுமானவர்ஷங்கர் (திரைப்பட இயக்குநர்)இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்ஐந்தாம் பத்து (பதிற்றுப்பத்து)தமிழ்நாடு அமைச்சரவைமதராசபட்டினம் (திரைப்படம்)கல்லுக்குள் ஈரம்எட்டுத்தொகை🡆 More