கால அளவு நொடி

அனைத்துலக முறை அலகுகள்(SI) குழுமத்தினரால் நிர்ணயித்தபடி, நேரத்தின் அடிப்படை அலகு, நொடி அல்லது வினாடி ஆகும்.

இதன் குறியீடு மற்றும் சுருக்கக் குறியீடு பின்வருமாறு:

கால அளவு நொடி
ஒரு ஊசலால் நிர்வகிக்கப்படும் கடிகாரம், ஒவ்வொரு வினாடியும் துடிக்கும், தப்பிக்கும் சுழல் சக்கர கடிகாரம்

குறியீடு: (ஆங்கிலம்: s; தமிழ்: வி அல்லது வினாடி அல்லது நொடி) சுருக்கக் குறியீடு: (சுருக்கக் குறியீடு: ஆங்கிலம்: s; தமிழ்: வி).

மணிநேரத்தினை முதல் முறையாக அறுபது பிரிவுகளகப் பிரிக்கும்போது நிமிடங்கள் கிடைக்கின்றன. மணிநேரத்தினை முதல் முறையாகப் பிரித்துக் கிடைக்கும் நிமிடங்களை இரண்டாவது முறையாக அறுபது பிரிவுகளகப் பிரிக்கும்போது நொடிகள் அல்லது வினாடிகள் கிடைக்கின்றன. இரண்டாவது முறையாகப் பிரித்தலை ஆங்கிலத்தில் 'Second' - 'செகண்டு' என்கிறோம். சீசியம் (அணு நிறை:133) அணு இயல்நிலையில் இரண்டு மீ நுண் மட்டங்களுக்கு இடையே  நிலைமாற்றம் கொள்ளும்போது தோன்றும் கதிர்வீச்சுக்கான காலம் 9 192 631 770 கால அளவுகள் ஆகும். இதுவே SI அலகில் நொடி அல்லது வினாடி எனப்படுகிறது.

நொடி (அல்லது வினாடி) என்பது காலத்தை அளவிடப் பயன்படும் அடிப்படை அலகு. 60 நொடிகள் = 1 நிமிடம் (மணித்துளி) ஆகும்.

வரையறை வரலாறு

ஆரம்பகால நாகரிகங்கள்:

ஆரம்ப கால நாகரிகங்கள் ஒரு நாளை சிறு பிளவுகளாக்கி பகுத்துக் கூறுகளுக்கு தனித்தனி பெயரிட்டன. ஆனால் கூறாகிய நேரத்தின் சிறு பகுதிக்கு வினாடி அல்லது நொடி என்ற வார்த்தையை யாரும் முறையாக பயன்படுத்தவில்லை. 

  • கி.மு. 2000ல் எகிப்தியர்கள் ஒரு நாளை பகல் பன்னிரண்டு மணிநேரம் என்றும், இரவு பன்னிரண்டு மணிநேரம் என்றும், சமமாகப் பிரித்திருந்தனர். எனவே பருவகால மாறுபாடுகளுக்கு ஏற்ப பகல் மற்றும் இரவுகளில் மணிநேர நீளத்தின் அளவுகளும் வேறுபட்டன.
  • ஹெலனிய கால வானியலாளர்களான ஹிப்பார்க்கஸ் (கி.மு 150 கி.மு.) மற்றும் தொலெமி (சி.டி. 150) ஆகியோர், மணிநேரத்தை அறுபது பகுதிகளாகப் (அறுபதிற்குரிய பின்னங்களின் கீழ் எண் அமைப்பு) பிரித்தனர். ஒரு சராசரி மணி நேரத்தை (1/24 நாள்) என்றும், ஒரு மணி நேரத்தின் எளிய பின்னக்கூறுகள் (1/4, 2/3, முதலியன) என்றும், மற்றும் நேரக் கோணத்தை (1/360 நாள் அல்லது அதற்குச் சமமான நான்கு நவீன நிமிடங்கள்) என்றும் பயன்படுத்தினர்.
  • கி.மு. 300 க்குப் பின்னர் பபிலோனியர்கள் அறுபதிற்குரிய பின்னங்களின் கீழான முறையைப் பயன்படுத்தி ஒரு நாளை திட்டமிட்டனர். அடுத்துள்ள ஒவ்வொரு துணைப்பிரிவும் அறுபதுகளால் பிரிக்கப்பட்டது. அதாவது  1/60, 1/60, 1/60 என்று, அறுபதின் விசைமடங்காகக் கணக்கிடப்படுகிறது.  இதன் துல்லியத் தன்மை  2 மைக்ரோ வினாடிகளுக்குச் சமமானதாகும்.  
  • பாபிலோனியர்கள் மணிநேரத்தை பயன்படுத்தவில்லை. ஆனால் 120 நவீன நிமிடங்கள் கொண்ட இரட்டை கால அளவு பயன்படுத்தப்பட்டது. ஒரு கால அளவு-நான்கு நீடித்த நிமிடங்களாக கணிக்கப்பட்டது. ஒரு பார்லிகார்ன் என்பது 3 1/3 நவீன வினாடிகள் நீடிக்கும் (நவீன ஹீப்ரூவின் காலண்டர் வளைவு), ஆனால், அறுபதிற்குரிய பின்னங்களின் கீழ்  சிறிய அலகுகளாகப் பிரித்தெடுக்கப்படவில்லை.

சந்திர சுழற்சியின் துணைப்பிரிவுகளின் அடிப்படையில்:

கால அளவு நொடி 
தொகுப்பளவை வினாடி அல்லது நொடி
  • சிர்கா 1000, பாரசீக அறிஞர் அல்-பிருனி அரபு மொழியில் வினாடி அல்லது நொடி என்ற முறையைப் பயன்படுத்தியுள்ளார். இரண்டு அமைவாதைகளுக்கு இடையே உள்ள காலத்தை வாரங்கள், நாட்கள், மணிநேரம், நிமிடங்கள், வினாடிகள், மூன்றாவது மற்றும் நான்காவது பிற்பகல் ஞாயிறு எனப் பிரித்துள்ளார்.
  • 1267 ஆம் ஆண்டில், இடைக்கால விஞ்ஞானி ரோஜர் பேகன், லத்தீன் மொழி அறிக்கையில், மூன்றாவது மற்றும் நான்காவது முழு நிலா எனப்படும் பூரணைகளுக்கு இடையேயான பிரிவைக் கொண்டு மணிநேரங்கள் (ஹொரே-horae), நிமிடங்கள்(மினுடா-minuta), விநாடிகள்(செகுண்டா-secunda), மூன்றாவது(டெர்ஷியா-tertia) மற்றும் நான்காவது(குவார்டா-quarta) ஆகியவற்றை குறிப்பிட்ட நாட்காட்டியில் வரையறுத்தார்.
  • நவீன நொடிகள் அல்லது வினாடிகள், பின்வருமாறு தசம எண்களைப் பயன்படுத்தி பிரிக்கப்பட்டு வருகின்றன - மூன்றாவது குறியீட்டு சொல்  (160 வினாடிப்பகுதி) பிற மொழிகளிலும்  நொடிகள் அல்லது வினாடிகள் என்ற வார்த்தைப் பயன்பாடு உள்ளது. உதாரணம்: போலிய மொழி (டர்க்ஜா-tercja) மற்றும் துருக்கிய மொழி (சலிசெ-salise).

இயந்திர கடிகாரங்களின் அடிப்படையில்:

கால அளவு நொடி 
கலாட்ராவா 1(Calatrava1)

16 ஆம் நூற்றாண்டின் கடைசியில்,  நொடிகளைக் காட்டப் பயன்படும் ஆரம்பகால கடிகாரங்கள் தோன்றின.  இயந்திரக் கடிகாரங்கள் உருவானதன் பின் நொடிகள் அல்லது வினாடிகளைத் துல்லியமாக அளப்பது எளிதானது.  இது சூரிய மணிகாட்டி மூலம் காட்டப்படும் உத்தேச நேரத்திற்கு எதிரானது.

ஃப்ரேமர்ஸ்டார்ஃப் (Fremersdorf)  சேகரிப்பில் ஆர்ஃபியஸை (Orpheus) சித்தரிக்கும் கடிகாரம், சுருள் வில்லுடன் விநாடிகளைக் குறிக்கக்கும் கையுடன் கூடிய உந்துதல் கடிகாரம் ஆகியவை மக்களை மிகவும் கவர்ந்தன. இதன் தொடக்க காலம் 1560 நிறைவுறு காலம்  1570.:417–418 16 ஆம் நூற்றாண்டின் மூன்றாம் காலாண்டில், தகி-அல்-தின் (Taqi al-Din) ஒவ்வொரு 1/5 நிமிடத்தையும் காட்டும் ஒரு கடிகாரம்  உருவாக்கினார். 1579ல் ஹோஸ்த் பர்கி (Jost Bürgi) ஹெஸ்ஸ (Hesse) நாட்டின் வில்லியமுக்கு வினாடிகளைக் காட்டும் ஒரு கடிகாரம் செய்தார்.:105}} 1581ல் டைக்கோ பிராகி மறுசீரமைக்கப்பட்ட  கடிகாரங்களை உருவாக்கினார். அதனைத் தன் வானியல் ஆய்வு மையங்களில் பயன்படுத்தினார். அவை நிமிடங்களையும் நொடிகளையும் காட்டின. எனினும், அவை வினாடிகளை கணிக்கப் போதுமான துல்லியத்துடன் இல்லை. 1587 ஆம் ஆண்டில், டைக்கோ தனது நான்கு கடிகாரங்கள், நான்கு வினாடிகள் கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ வேறுபடுத்திக் காட்டியதாகk குறை கூறினார்.seconds.:104

1644 ஆம் ஆண்டில், மரின் மெர்சென் (Marin Mersenne) 39.1 அங்குல நீளம் (0.994) ஊசலைப் பயன்படுத்தி வினாடிகளைக் கணக்கிட்டார். அது, திட்ட புவியீர்ப்பு முடுக்கத்துடன் செயல்பட்டது. ஊசல் முன்னோக்கிச் செல்ல ஒரு விநாடியும், மீண்டும் பின்னோக்கிச் செல்ல ஒரு விநாடியும், ஆகும் எனத் துல்லியமாக கணக்கிட்டு செயல்படுத்தினார் 1670 ஆம் ஆண்டில், லண்டன் கடிகார தயாரிப்பாளர் வில்லியம் கிளெமெண்ட் (William Clement) இந்த வினாடி ஊசலை, கிறித்தியான் ஐகன்சின் அசல் ஊசல் கடிகாரத்துடன் இணைத்தார்.  1670 முதல் 1680 வரை, கிளெமெண்ட் தனது கடிகாரங்களுக்கு பல மேம்பாடுகளைச் செய்தார். 

1832 இல், கார்ல் பிரீடிரிக் காஸ் தனது மில்லிமீட்டர்-மில்லிகிராம்-வினாடி தரப்படுத்தப்பட்ட முறை அலகுகளில், நேரத்தின் அடிப்படை  அலகு வினாடி என முன்மொழிந்தார். 1862ஆம் ஆண்டு, அறிவியல் முன்னேற்றத்திற்கான பிரித்தானிய கூட்டமைப்பினர், (BAAS-British Association for the Advancement of Science) "விஞ்ஞானத்தின் அடிப்படையில், அனைத்து மாந்தர்களும் சூரிய நேரத்தின் சராசரி அடிப்படை அலகு நேரம் வினாடி என்ற கால அளவைப் பயன்படுத்த வேண்டும்" என ஒப்புக் கொண்டுள்ளனர்.

ஒரு வருடத்தின் ஒரு பகுதி என்ற அடிப்படையில்: 

புவியின் இயக்கம் சார்ந்த, நியூகோம்பின் (Newcomb) சூரிய இயக்க அட்டவணையில் (1895) ந்ப்டிகள் பற்றி விவரிக்கப்பட்டது. 1750க்கும் 1892க்கும் இடைப்பட்ட  காலத்தில் வானியல் கண்காணிப்புகளை அடிப்படையாகக் கொண்டு,  சூரிய இயக்கத்தின் மதிப்பை மதிப்பிடுவதற்கான ஒரு சூத்திரம் உருவாக்கப்பட்டது. குறிப்பாக, 20 ஆம் நூற்றாண்டின் பெரும்பகுதியில் பயன்படுத்தப்பட்ட அட்டவணைகள் நியூகொம்ஸின் சூரிய இயக்கத்தை ஒட்டியவை. (1900 முதல் 1983 வரை). மேலும், எர்னெசுட்டு வில்லியம் பிரவுனின் நிலவு அட்டவணைகள் 1923 முதல் 1983 வரை பயன்படுத்தப்பட்டன.

சீசியம் நுண்ணலை அணு கடிகாரத்தின் அடிப்படையில்:

கால அளவு நொடி 
1000000000 நொடிகள்

பல ஆண்டுகளின் வேலைகளைத் தொடர்ந்து  இங்கிலாந்தின்  டெடிங்டன், தேசிய இயற்பியல் ஆய்வகத்திலிருந்து லூயிஸ் எஸென் (Louis Essen) மற்றும் அமெரிக்க ஐக்கிய நாட்டு கடற்படையின் வானியல் நிலையத்திலிருந்து வில்லியம் மார்கோவிட்ஸ் (William Markowitz) ஆகியோர், சீசியம் அணுவின் மீ நுண் நிலைமாற்ற அதிர்வெண் மற்றும் கோளியல் காலம் ஆகியவற்றுக்கு இடையேயான உறவை உறுதிப்படுத்தினர். இதில், டபிள்யூ. டபிள்யூ. வி. (WWV) வானொலி நிலையத்திலிருந்து பெறப்பட்ட சமிக்ஞைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு பொதுவான காட்சி அளவீட்டு முறை பயன்படுத்தப்பட்டது.

அவர்கள் கோளியல் காலம் (ET), நொடி அல்லது வினாடி, தேர்ந்தெடுக்கப்பட்ட சீசியம் அணுவின் அதிர்வெண் ஆகியவை ஒரே அளவிலான 9,192,631,770 ± 20 சுழற்சிகளைப் பெற்றுள்ளன என்பதை கண்டறிந்து உறுதி செய்தனர். 

படிமம்:FOCS-1.jpg
எஃப். ஓ. சி. எஸ். 1 (FOCS 1), சுவிட்சர்லாந்தில், உள்ள ஒரு தொடர்ச்சியான குளிர் சீஸியம் நீரூற்று அணு கடிகாரம் 2004 இல் இயங்கத் தொடங்கியது. இதன் நிச்சயமற்ற நிலை, 30 மில்லியன் ஆண்டுகளில் ஒரு வினாடி.

(SI வினாடி ஏற்கெனவே ஏற்கப்பட்டது. SI வினாடியானது, சராசரி சூரிய காலத்தின் வினாடி மதிப்பைக் காட்டிலும் சிறிது குறுகியதாக இருந்தது.)

சார்பியல் ரீதியாக, SI வினாடி மதிப்பு பூமிவடிவத்தின் மற்றும் சுழற்சியின்  சரியான நேரமாக வரையறுக்கப்படுகிறது.

முன்மொழியப்பட்ட ஒளியியல் அணு கடிகாரத்தின் அடிப்படையில்:

லட்லோ எட் ஆல் (Ludlow et al) மேற்கோள்: இன்று, நுண்ணலைப் பகுதியில் செயல்படும் அணு கடிகாரங்களுக்கு, ஒளியியல் அணு கடிகாரங்கள் ஒரு சவாலாக அமையும்.

கனடிய தேசிய ஆராய்ச்சி கவுன்சில் 2.5 × 10−11 "ஒப்பீட்டளவில் நிச்சயமற்றது" என்பதைக் குறிக்கிறது.  அயோடின் (அணு எடை 127) மூலக்கூறை அடிப்படையாகக் கொண்டிருக்கும் அணு கடிகாரத்திற்கு பதிலாக, ஸ்ட்ரான்சியம் (அணு எடை 88) அயனி பொறியைப் பயன்படுத்துவதை ஆதரிக்கிறது.

நிச்சயமற்ற நிலைகள் நுண்ணலைப் பகுதியில் உள்ள NIST-F1 சீசியம் அணுக் கடிகாரத்தை எதிர்த்து நிற்கின்றன, அதிர்வெண் அடிப்படையில் ஒரு நாளின் பகுதிகள் சராசரியாக பத்தின் அடுக்கு பதினாறு என்று மதிப்பிடப்படுகின்றன.

SI multiples for வினாடி (எஸ் (s))
Submultiples Multiples
Value Symbol Name Value Symbol Name
10−1 எஸ் (s) dஎஸ் (s) deciவினாடி 101 எஸ் (s) daஎஸ் (s) decaவினாடி
10−2 எஸ் (s) cஎஸ் (s) centiவினாடி 102 எஸ் (s) hஎஸ் (s) hectoவினாடி
10−3 எஸ் (s) mஎஸ் (s) milliவினாடி 103 எஸ் (s) kஎஸ் (s) kiloவினாடி
10−6 எஸ் (s) µஎஸ் (s) microவினாடி 106 எஸ் (s) Mஎஸ் (s) megaவினாடி
10−9 எஸ் (s) nஎஸ் (s) nanoவினாடி 109 எஸ் (s) Gஎஸ் (s) gigaவினாடி
10−12 எஸ் (s) pஎஸ் (s) picoவினாடி 1012 எஸ் (s) Tஎஸ் (s) teraவினாடி
10−15 எஸ் (s) fஎஸ் (s) femtoவினாடி 1015 எஸ் (s) Pஎஸ் (s) petaவினாடி
10−18 எஸ் (s) aஎஸ் (s) attoவினாடி 1018 எஸ் (s) Eஎஸ் (s) exaவினாடி
10−21 எஸ் (s) zஎஸ் (s) zeptoவினாடி 1021 எஸ் (s) Zஎஸ் (s) zettaவினாடி
10−24 எஸ் (s) yஎஸ் (s) yoctoவினாடி 1024 எஸ் (s) Yஎஸ் (s) yottaவினாடி
பொதுவான முன்னொட்டுகள் தடித்த எழுத்துகளில்

ஒரு நொடி என்பது துல்லியமான நிலைநாட்டலின் படி கீழ்க்காணுமாறு குறிப்பிடப்படும். சீசியம்-133 என்னும் அணு, தன் அடி நிலையில் இருக்கும் பொழுது அதன் அணுக்கருவில் உள்ள காந்தப்புலனின் விளைவால் நிகழும் மீ நுண் ஆற்றல் வேறுபாடுகளின் அடிப்படையில் ஒரு நொடி என்பது விளக்கபடுகின்றது. ஒரு நொடி என்பது அசையாது 0 K (கெல்வின்) வெப்பநிலையில் இருக்கும் ஒரு சீசியம்-133அணுவின் அடி நிலையில் உள்ள இரு வேறு மிக நுண்ணிய ஆற்றல் இடைவெளிகளுக்கிடையே நிகழும் 192 631 770 அலைவுகளின் கால அளவு ஆகும்.

ஒரு நாளில் 3600 விநாடிகள் உள்ளன. ஒரு நாளில் 24 மணி நேரமும், ஒரு மணி நேரத்தில் 60 நிமிடங்களும், ஒரு நிமிடத்தில் 60 செக்கன்களும் உள்ளன. எனவே ஒரு விநாடி 24 செக்கன்களுக்குச் சமமாகும்.

குறிப்புகளும் மேற்கோள்களும்

Tags:

கால அளவு நொடி வரையறை வரலாறுகால அளவு நொடி குறிப்புகளும் மேற்கோள்களும்கால அளவு நொடிஅனைத்துலக முறை அலகுகள்

🔥 Trending searches on Wiki தமிழ்:

சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்வடமொழிச் சொற்களுக்கான தமிழ்ச் சொற்கள்இம்மையிலும் நன்மை தருவார் கோயில்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்தமிழ்நாடு மாநிலங்களவை உறுப்பினர்களின் பட்டியல்இந்தியப் பொதுத் தேர்தல்கள்தனுஷ் (நடிகர்)ஏப்ரல் 16சின்னம்மைஅங்குலம்வாட்சப்தமிழ்க் கல்வெட்டுகள்இராவணன்சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)இந்திய தேசிய சின்னங்கள்சுற்றுச்சூழல் பாதுகாப்புமருது பாண்டியர்சுதேசி இயக்கம்பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்தமிழ்கனிமொழி கருணாநிதிஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)திதி, பஞ்சாங்கம்வேலுப்பிள்ளை பிரபாகரன்பூக்கள் பட்டியல்தருமபுரி மக்களவைத் தொகுதிமுதலாம் உலகப் போர்அழகிய தமிழ்மகன்ஔவையார்தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்பரிபாடல்திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்கில்லி (திரைப்படம்)பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்நாயக்கர்கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிகுற்றாலக் குறவஞ்சிபாரிதமிழ்நாடு சட்டப் பேரவைநாமக்கல் மக்களவைத் தொகுதிபிலிருபின்மாத்திரை (தமிழ் இலக்கணம்)பதிற்றுப்பத்துபொதுத்துறை நிறுவனங்கள், இந்தியாஅகமுடையார்தொல்காப்பியர்இரவீந்திரநாத் தாகூர்தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021ஆந்திரப் பிரதேசம்ஹர்திக் பாண்டியாமூங்கில்அம்மன் கோவில் வாசலிலேஇந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல்மொழிபெயர்ப்புமிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுமருதமலை முருகன் கோயில்தமிழ் இலக்கணம்சுந்தரமூர்த்தி நாயனார்மாநிலங்களவைவிடுதலை பகுதி 1பனிக்குட நீர்தேவநேயப் பாவாணர்தாலாட்டுப் பாடல்ராசாத்தி அம்மாள்ஆதிமந்திகம்பராமாயணம்சாரைப்பாம்புதிருநெல்வேலி மக்களவைத் தொகுதிசங்கம் (முச்சங்கம்)மூலம் (நோய்)முன்னின்பம்ஆடுஜீவிதம் (திரைப்படம்)சூல்பை நீர்க்கட்டிஇரட்டைக்கிளவிஅயோத்தி தாசர்மு. க. ஸ்டாலின்போக்கிரி (திரைப்படம்)🡆 More