சகீப் அல் அசன்

சகீப் அல் அசன் (Shakib Al Hasan, வங்காள மொழி: সাকিব আল হাসান, பிறப்பு: மார்ச் 24 1987) ஒரு வங்காளதேச துடுப்பாட்ட வீரர் ஆவார், இவர் ஐசிசியின் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத்தின் பன்முக ஆட்டக்காரர்கள் (All-rounders) தரவரிசையில் தொடர்ந்து 10 ஆண்டுகள் முதல் இடத்தைப் பிடித்த சாதனையைப் படைத்துள்ளார்.

சிறப்பான மட்டையாடும் திறனுக்காகவும், சிக்கனமாகப் பந்துவீசுவதற்காகவும், சிறப்பான களத்தடுப்பிற்காகவும் இவர் பரவலாக அறியப்படுகிறார். இவர் அனைத்துக் காலத்திற்குமான சிறந்த பன்முக ஆட்டக்காரர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார்.

சகீப் அல் அசன்
சகீப் அல் அசன்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்சகீப் அல் அசன்
மட்டையாட்ட நடைஇடதுகை
பந்துவீச்சு நடைமந்த இடதுகை மரபுவழா சுழல்
பங்குபன்முக ஆட்டக்காரர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 46)மே 18 2007 எ. இந்தியா
கடைசித் தேர்வுசூன் 4 2010 எ. இங்கிலாந்து
ஒநாப அறிமுகம் (தொப்பி 81)ஆகத்து 6 2006 எ. சிம்பாப்வே
கடைசி ஒநாபபிப்ரவரி 19 2011 எ. சிம்பாப்வே
ஒநாப சட்டை எண்75
இ20ப அறிமுகம் (தொப்பி 11)நவம்பர் 28 2006 எ. சிம்பாப்வே
கடைசி இ20பமே 5 2010 எ. ஆத்திரேலியா
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2004–இன்றுககுள்ன
2010–இன்றுவாசெஸ்ட்செயா
2011–இன்றுகல்கத்தா நைட்ரைடர்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா முதல் ஏ-தர
ஆட்டங்கள் 21 103 54 130
ஓட்டங்கள் 1,179 2,889 2,991 3,539
மட்டையாட்ட சராசரி 31.02 35.23 32.86 33.07
100கள்/50கள் 1/5 5/18 4/14 5/23
அதியுயர் ஓட்டம் 100 134* 129 134*
வீசிய பந்துகள் 5,083 5,300 10,706 6,415
வீழ்த்தல்கள் 75 130 164 159
பந்துவீச்சு சராசரி 32.13 29.05 29.86 28.48
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
7 0 12 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0 0 0
சிறந்த பந்துவீச்சு 7/36 4/33 7/36 4/30
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
8/– 28/– 28/– 39/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், பிப்ரவரி 19 2011

2015ஆம் ஆண்டு ஐசிசியின் தேர்வு, பன்னாட்டு மற்றும் இருபது20 ஆகிய மூன்று தரவரிசைகளிலும் பன்முக ஆட்டக்காரராக முதலிடம் பெற்ற ஒரே வீரர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்தார். 13 ஜனவரி 2017 அன்று, தேர்வுப் போட்டியில் வங்காளதேச மட்டையாளர்களில் அதிகபட்ச தனிநபர் ஓட்டங்களைப் (217) பதிவு செய்தார். நவம்பர் 2018 இல், தேர்வுப் போட்டிகளில் 200 மட்டையாளர்களை வீழ்த்திய வங்காளதேசத்தின் முதல் பந்துவீச்சாளர் ஆனார். ஒருநாள் பன்னாட்டுப் போட்டிகளில் 199 ஆட்டங்களில் 6,000 ஓட்டங்கள் எடுத்து 200 மட்டையாளர்களை வீழ்த்தியதன் மூலம் அதிவேக பன்முக ஆட்டக்காரர் என்ற சாதனையைப் படைத்தார். மேலும் உலககிண்ண வரலாற்றில் 1000 ஓட்டங்கள் எடுத்து 30 மட்டையாளர்களை வீழ்த்திய ஒரே பன்முக ஆட்டக்காரர் இவர் மட்டுமே.

பன்னாட்டுப் போட்டிகள்

ஆகஸ்டு 6, 2006 இல் சிம்பாப்வே துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் சகீப் அல் அசன் அறிமுகமானார். இந்தப் போட்டியில் 300 ஓட்டங்களை எடுத்தார். மேலும் எல்டன் சிகும்புரா இலக்கினை பவுல்டு முறையில் வீழ்த்தினார். மே 6, 2006 இல் இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்ட்டியில் அறிமுகமானார். சனவரி 2009 ஆம் ஆண்டு முதல் ஏப்ரல் 2011 வரை மற்றும் மார்ச் 2012 முதல் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளுக்கான சகலத் துறையர்களுக்கான தரவரிசையில் முதலிடம் பிடித்தார். டிசம்பர் 2011 ஆம் ஆண்டில் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளுக்கான சகலத் துறையர்களுக்கான தரவரிசையில் முதலிடம் பிடித்தார். பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் அனைத்து வடிவங்களுக்கான தரவரிசையிலும் முதல் மூன்று இடத்திற்குள் இருக்கும் ஒரே வீரர் எனும் பெருமையைப் பெற்றுள்ளார். 2008 ஆம் ஆண்டில் நியூசிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் 36 ஒட்டங்கள் விட்டுக்கொடுத்து 7 இலக்குகளை வீழ்த்தினார். இதுதான் இவரின் தேர்வுப் போட்டிகளில் சிறப்பான பந்துவீச்சு ஆகும்.தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அதிக இலக்குகள் எடுத்த வங்காளதேச வீரர் எனும் சாதனையைப் படைத்தார்.

சான்றுகள்

வெளியிணைப்புகள்

Tags:

1987ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்பன்னாட்டுத் துடுப்பாட்ட அவைமார்ச் 24வங்காள மொழிவங்காளதேசத் துடுப்பாட்ட அணி

🔥 Trending searches on Wiki தமிழ்:

மத கஜ ராஜாதமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் பட்டியல்தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்திருக்குறள்கருத்தரிப்புமுக்கூடற் பள்ளுஆடு ஜீவிதம்குறை ஒன்றும் இல்லை (பாடல்)ஔவையார்பெயர்ச்சொல்ஊராட்சி ஒன்றியம்இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்சூரைவைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில்இந்திய தேசியக் கொடிதிருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்குண்டூர் காரம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024அருணகிரிநாதர்சங்க இலக்கியம்அன்பே ஆருயிரே (2005 திரைப்படம்)பாலினம்அஸ்ஸலாமு அலைக்கும்பாலின சமத்துவமின்மைகைப்பந்தாட்டம்சிவவாக்கியர்போக்கிரி (திரைப்படம்)சைனம்சைவ சமயம்திருப்பரங்குன்றம் முருகன் கோவில்மாதேசுவரன் மலைசுபாஷ் சந்திர போஸ்தவமாய் தவமிருந்துவிசயகாந்துபாலினச் சமனிலைசேக்கிழார்இந்திய அரசியல் கட்சிகள்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)சௌராட்டிரர்களின் கோத்திரங்களும் குடும்பப் பெயர்களும்அன்னை தெரேசாஏறுதழுவல்மனித உரிமையாவரும் நலம்தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்அறிவியல்பெண்களின் உரிமைகள்இந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் 2019கொன்றைசினைப்பை நோய்க்குறிமருதம் (திணை)சிந்துவெளி நாகரிகம்திருமலை நாயக்கர்இந்திய ரூபாய்ரோகு மீன்புறநானூறுகுணங்குடி மஸ்தான் சாகிபுதமிழ்த்தாய் வாழ்த்துதமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2014மாத்திரை (தமிழ் இலக்கணம்)தாமசு ஆல்வா எடிசன்ஐந்து செவ்வியல் இலக்கியங்கள்முல்லைப்பாட்டுபாட்டாளி மக்கள் கட்சிநீர்பெரும்பாணாற்றுப்படைஅண்ணாமலையார் கோயில்ரா. பி. சேதுப்பிள்ளைகாம சூத்திரம்உ. வே. சாமிநாதையர்சிலம்பம்சத்ய பிரதா சாகுஐஞ்சிறு காப்பியங்கள்நான்மணிக்கடிகைஹரி (இயக்குநர்)புதன் (கோள்)முதுமலை தேசியப் பூங்காகிறிஸ்தவம்தமிழ் நீதி நூல்கள்சைவத் திருமுறைகள்🡆 More