மலாவி: தென்கிழக்கு ஆப்பிரிக்க நாடு

மலாவி (Malawi) தென்கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ளது.

வடகிழக்கே தான்சானியா, வடமேற்கே சாம்பியா, கிழக்கு, தெற்கு, மேற்குப் பகுதிகள் மொசாம்பிக், ஆகிய நாடுகளால் சூழப்பட்ட ஒரு நாடு ஆகும். இது 'ஆப்பிரிக்காவின் இதமான இதயம்' என்ற அடைபெயர் கொண்டு அழைக்கப்படுகின்றது. மலாவியின் மிகப் பெரிய நகரமான லிலொங்வே (Lilongwe) அதன் தலைநகரமாக இருக்கின்றது.

மலாவி குடியரசு
Dziko la Malaŵi, Chalo cha Malawi
த்சிகொ ல மலாவி, சலொ ச மலாவி
கொடி of மலாவி
கொடி
சின்னம் of மலாவி
சின்னம்
குறிக்கோள்: ஒன்றியமும் சுதந்திரமும்
நாட்டுப்பண்: Mulungu dalitsa Malaŵi  (சிச்செவா)
"கடவுள் நம்ம நாடு மலாவியுக்கு ஆசீர்வாதம் குடுங்கள்"
மலாவிஅமைவிடம்
தலைநகரம்லிலொங்வே
பெரிய நகர்பிளான்டயர்
ஆட்சி மொழி(கள்)ஆங்கிலம் (ஆட்சி)
சிச்செவா (தேசிய)
மக்கள்மலாவியர்
அரசாங்கம்பல-கட்சி மக்களாட்சி
• குடியரசுத் தலைவர்
ஜொய்சு பண்டா
விடுதலை 
• விடுதலை கூற்றம்
ஜூலை 6 1964
• குடியரசு
ஜூலை 6 1966
பரப்பு
• மொத்தம்
118,484 km2 (45,747 sq mi) (99வது)
• நீர் (%)
20.6%
மக்கள் தொகை
• ஜூலை 2005 மதிப்பிடு
12,884,000 (69வது)
• 1998 கணக்கெடுப்பு
9,933,868
• அடர்த்தி
109/km2 (282.3/sq mi) (91வது)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2005 மதிப்பீடு
• மொத்தம்
$ 7.67 பில்லியன் (143வது)
• தலைவிகிதம்
$596 (181வது)
ஜினி (1997)50.3
உயர்
மமேசு (2007)மலாவி: தென்கிழக்கு ஆப்பிரிக்க நாடு 0.437
Error: Invalid HDI value · 164வது
நாணயம்குவாச்சா (D) (MWK)
நேர வலயம்ஒ.அ.நே+2 (CAT)
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே+2 (பயன்படுத்தவில்லை)
அழைப்புக்குறி265
ஐ.எசு.ஓ 3166 குறியீடுMW
இணையக் குறி.mw
1 Estimates for this country explicitly take into account the effects of excess mortality due to AIDS; this can result in lower life expectancy, higher infant mortality and death rates, lower population and growth rates, and changes in the distribution of population by age and sex than would otherwise be expected.

2016 ஜனவரி 1 வப்பட்ட கணக்கீட்டின்படி, மலாவியில் ஏறக்குறைய 17.7 மில்லியன் மக்கள் தொகை இருக்கின்றது. இந்நாட்டின் தேசிய மொழியாக சிச்சேவா (Chichewa)வும், ஆட்சி மொழியாக ஆங்கிலமும் இருக்கின்றன.

இந்நாடு மிகவும் பின் தங்கிய, வறுமையான நாடுகளில் ஒன்று. விவசாயத்தையே பெரும்பாலும் நம்பி வாழும் இந்நாட்டு மக்களின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வது இன்னும் கேள்வி குறியாக இருக்கின்றது. மலாவியில் எயிட்ஸ் நோய் பரவும் தன்மை மிக அதிகமாக இருப்பதுடன், அதுவே இறப்பிற்கான முக்கிய காரணியாகவும் உள்ளது.

மலாவி: தென்கிழக்கு ஆப்பிரிக்க நாடு
ஏரி மலாவி

மலாவியின் கிழக்குப் பகுதியில் ஏரி மலாவி என்று அழைக்கப்படும் ஒரு பாரிய ஏரி அமைந்துள்ளது. இது மலாவி நாட்டின் கிழக்குக் கரையின் முக்கால்வாசி தூரத்தை ஆக்கிரமித்துள்ளது. இந்த ஏரி மொசாம்பிக், தான்சானியா நாடுகளின் நிலப் பகுதிகளின் சில பகுதிகளை மலாவியிலிருந்து பிரிக்கின்றது. இது தன்சானியாவின் தெற்குப் பகுதியிலும், மொசாம்பிக்கின் மேற்குப் பகுதியிலும் அமைந்துள்ளதுடன், தன்சானியாவிலும், மொசாம்பிக்கிலும் ஏரி நியாசா என்றும் அழைக்கப்படுகின்றது. இந்த ஏரியானது உலகிலுள்ள ஏரிகளில் பரப்பளவில், 9 ஆவது பெரிய ஏரியாகவும், உலகிலுள்ள நன்னீர் ஏரிகளில் 3 ஆவது ஆழமான ஏரியாகவும் இருக்கின்றது. உயிரியல் பல்வகைமையில், முக்கியமாக நன்னீர் மீன் வகைகளில், மிக முக்கியத்துவம் பெற்றிருப்பதனால் இந்த ஏரி ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் தெரிவு செய்திருக்கும் உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாகவும் இருக்கின்றது. இந்த ஏரியின் உயிரியல் பல்வகைமையைப் பேணிப் பாதுகாப்பதற்கான திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நாட்டின் ஊடே ஷயர் ஆறும் ஓடுகின்றது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

ஆப்பிரிக்காசாம்பியாதான்சானியாநாடுமொசாம்பிக்

🔥 Trending searches on Wiki தமிழ்:

மு. அ. சிதம்பரம் அரங்கம்செண்டிமீட்டர்ரோசுமேரிபுறப்பொருள்மூசாதமிழகப் பறவைகள் சரணாலயங்கள்ஆபிரகாம் லிங்கன்வேலுப்பிள்ளை பிரபாகரன்சங்க இலக்கியம்உவமைத்தொகைதமிழக வரலாறுகல்விபெரம்பலூர் மக்களவைத் தொகுதிஅரச மரம்வெண்குருதியணுஇந்தியாவில் பாலினப் பாகுபாடுபத்து தலகிராம சபைக் கூட்டம்என் ஆசை மச்சான்வாணிதாசன்நிலக்கடலைஉலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)ஜெயகாந்தன்ஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)சேரர்திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதிபரதநாட்டியம்திராவிட இயக்கம்ஔவையார் (சங்ககாலப் புலவர்)கலிங்கத்துப்பரணிபுதன் (இந்து சமயம்)தினகரன் (இந்தியா)இயேசுஅகத்தியமலைதமிழ்த் திரைப்பட நடிகர்களின் பட்டியல்வினைத்தொகைசூரரைப் போற்று (திரைப்படம்)திருவிளையாடல் புராணம்தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்பி. காளியம்மாள்சைவத் திருமுறைகள்வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்ஆயுஸ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்இந்திய அரசியல் கட்சிகள்கல்பனா சாவ்லாஐங்குறுநூறுதமிழ் எண் கணித சோதிடம்பத்துப்பாட்டுமூலிகைகள் பட்டியல்உரிச்சொல்போயர்சத்குருஅறுபது ஆண்டுகள்திருமலை நாயக்கர்திருநங்கைசென்னைபுறநானூறுதாயம் ஒண்ணுகுறிஞ்சிப் பாட்டுதமிழ்ஒளிதலைவி (திரைப்படம்)தமிழர் விளையாட்டுகள்சவூதி அரேபியாபிரபுதேவாநல்லெண்ணெய்மக்களவை (இந்தியா)தமிழர் நெசவுக்கலைதேசிக விநாயகம் பிள்ளைஎம். கே. விஷ்ணு பிரசாத்எங்கேயும் காதல்ஐ (திரைப்படம்)கேரளம்பிரம்மரிஷி விஸ்வாமித்ராரமலான்வாட்சப்கணினிஇந்திய அரசியலமைப்புஆறுமுக நாவலர்வானிலை🡆 More