நோர்வே மொழி

நோர்வே மொழி அல்லது நோர்வேஜிய மொழி அல்லது நோர்வேசிய மொழி அல்லது நொர்ஸ்க் மொழி என்பது இந்தோ இந்தோ-ஐரோப்பிய மொழிகுடும்பத்தை சேர்ந்த செருமானிய மொழிகளுள் ஒன்றாகும்.

இது முதன்மையாக நோர்வேயில் வாழும் மக்களால் பேசப்படுகின்றது. நோர்வேயில் வாழும் கிட்டத்தட்ட 4.8 மில்லியன் மக்களும், நோர்வேயிலிருந்து முன்னைய நாளில் அமெரிக்காவில் குடியேறி அங்கே வாழ்ந்துவரும் மக்களும், அவரது சந்ததியினருமாகிய கிட்டத்தட்ட 50,000 மக்களும், கனடாவிற்கு இடம்பெயர்ந்து வாழ்ந்துவரும் கிட்டத்தட்ட 7,700 மக்களும் இந்த மொழியைப் பேசுகின்றவர்களாய் உள்ளனர்.

நோர்வே மொழி
நொர்ஸ்க்
உச்சரிப்பு[nɔʂk]
நாடு(கள்)
நோர்வே மொழி நோர்வே (4.8 million),
நோர்வே மொழி ஐக்கிய அமெரிக்கா (55,311)
நோர்வே மொழி கனடா (7,710)
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
5 million நோர்வேஜியர்கள்  (date missing)
இந்தோ ஐரோப்பிய மொழி
  • Germanic
    • North Germanic
      • Mainland Scandinavian
        • நோர்வே மொழி
Standard forms
நீநொர்ஸ்க் மொழி (அரச கரும மொழி)
பூக்மோல் மொழி (அரச கரும மொழி) / பூக்மோல் மொழி (அரச கரும மொழியல்ல)
இலத்தீன் (நோர்வேஜிய அரிச்சுவடி வேறுபாட்டுடன்)
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
நோர்வே
Nordic Council
Regulated byNorwegian Language Council (Bokmål and Nynorsk)
Norwegian Academy (Riksmål)
மொழிக் குறியீடுகள்
ISO 639-1no – நோர்வே மொழி
nbபூக்மோல்
nnநீநொர்ஸ்க்
ISO 639-2[[ISO639-3:nor – நோர்வே மொழி
nobபூக்மோல்
nnoநீநொர்ஸ்க்|nor – நோர்வே மொழி
nobபூக்மோல்
nnoநீநொர்ஸ்க்]]
ISO 639-3Variously:
nor — நோர்வே மொழி
nob — [[பூக்மோல்]]
nno — [[நீநொர்ஸ்க்]]

நோர்வே மொழியில், அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஆட்சி மொழி வடிவங்களாக பூக்மோல், நீநொர்ஸ்க் என்னும் இருவேறு எழுத்து மொழி வடிவங்கள் உள்ளன. இவ்விரு மொழி வடிவங்களுமே நோர்வேயில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

  • பூக்மோல் (Bokmål - நேரடி மொழிபெயர்ப்பு 'நூல் மொழி')- நோர்வே நாடு டென்மார்க் நாட்டுடன் இணைந்து இருந்த காலத்தில் டேனிய மொழியை தழுவி உருவானது இந்த மொழி வடிவம். பழமையைப் பாதுக்காக்கும் மொழியாகவும் கொள்ளப்படுகின்றது.
  • நீநொர்ஸ்க் (Nynorsk - நேரடி மொழிபெயர்ப்பு 'புதிய நோர்வே மொழி')- இது 19 ஆம் நூற்றாண்டில் நோர்வேயில் பயன்பாட்டில் இருந்த டேனிய மொழிக்கு ஒரு மாற்றாக உருவாக்கப்பட்ட ஒரு மொழி வடிவமே ஆகும். இது அதிகளவில் மேற்கு நோர்வேயில் பயன்பாட்டில் உள்ளது.

இவை தவிர அரசாங்க கரும மொழியாக ஏற்றுக் கொள்ளப்படாத வேறு இரு எழுத்து மொழி வடிவங்களும் உள்ளன. அவையாவன:

  • றிக்ஸ்மோல் (Riksmål - நேரடி மொழிபெயர்ப்பு 'தேசிய மொழி') - இது அதிகளவு பூக்மோலை ஒத்திருப்பதுடன் ஓரளவுக்கு டேனிய மொழியுடன் தொடர்புள்ளதாக இருக்கும்.
  • ஹோய்க்நொர்ஸ்க்(Høgnorsk - நேரடி மொழிபெயர்ப்பு 'உயர் நோர்வே மொழி') - இது நீநொர்ஸ்க்கின் துய்மையான வடிமாகக் கருதப்படுகின்றது. அத்துடன் 20 ஆம் நூற்றாண்டில் இருந்து செய்யப்பட்ட அநேகமான எழுத்துச் சீர்திருத்தத்தையும் நிராகரித்துள்ளதுடன், பரந்தளவிலான பாவனையற்றும் உள்ளது.

அரிச்சுவடி

நோர்வே மொழியின் இரு மொழி வடிவங்களும் நோர்வேசிய எழுத்துக்களைக்கொண்டே எழுதப்படுகிறது. நோர்வே மொழியில் 29 எழுத்துக்கள் உள்ளன. இவை இலத்தீன் மொழியின் எழுத்து வடிவத்தை அடிப்படையாகக் கொண்டன . அவற்றில் 26 எழுத்துக்கள் ஆங்கிலத்திலுள்ள அதே எழுத்தைக் கொண்டிருப்பினும் உச்சரிப்பில் வேற்பாட்டைக் கொண்டன. மேலதிகமாக மூன்று எழுத்துக்களும் உள்ளன.

A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z Æ Ø Å
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z æ ø å

Tags:

இந்தோ-ஐரோப்பிய மொழிகள்ஐக்கிய அமெரிக்காகனடாசந்ததிசெருமன்நோர்வேமொழி

🔥 Trending searches on Wiki தமிழ்:

தொலைக்காட்சிதேனி மக்களவைத் தொகுதிஅக்கி அம்மைமு. அ. சிதம்பரம் அரங்கம்இந்து சமயம்மலேசியாஇந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் 2019தபூக் போர்மாதவிடாய்அயோத்தி இராமர் கோயில்பல்லவர்களின் கலை மற்றும் கட்டிடக்கலைசிதம்பரம் மக்களவைத் தொகுதிஆண் தமிழ்ப் பெயர்கள்மாமல்லபுரம்அறிவியல் தமிழ்முன்மார்பு குத்தல்வீரமாமுனிவர்திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில்இடைச்சொல்சிவாஜி கணேசன்எழுவாய்இந்திய அரசியல் கட்சிகள்தமிழ்த்தாய் வாழ்த்துயானைதஞ்சாவூர் மக்களவைத் தொகுதிஇந்திய அரசியலமைப்புவியாழன் (கோள்)பிட்காயின்தட்டம்மைபுறாநீரிழிவு நோய்காதல் மன்னன் (திரைப்படம்)சேக்கிழார்தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்அணி இலக்கணம்ஆதம் (இசுலாம்)தீரன் சின்னமலைகூகுள்பௌத்தம்சமூகம்சுற்றுச்சூழல் மாசுபாடுஇந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்இராமலிங்க அடிகள்தமிழ் விக்கிப்பீடியாமருது பாண்டியர்பீப்பாய்சுப்மன் கில்பழமுதிர்சோலை முருகன் கோயில்பெரியபுராணம்தொழினுட்பம்கை கொடுக்கும் கைமனோன்மணீயம்மோனைகாரைக்கால் அம்மையார்ஆபிரகாம் லிங்கன்ஓம்தமிழ்விடு தூதுமயிலாடுதுறைசிறுநீர்ப்பாதைத் தொற்றுபாம்பன் குமரகுருதாச சுவாமிகள்விழுப்புரம் மக்களவைத் தொகுதிபழனி முருகன் கோவில்கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிதிண்டுக்கல் மக்களவைத் தொகுதிகமல்ஹாசன்திருக்குர்ஆன்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்சைவ சமயம்திராவிட முன்னேற்றக் கழகம்தமிழில் சிற்றிலக்கியங்கள்சட்டமன்ற உறுப்பினர் (இந்தியா)தமிழர் பருவ காலங்கள்கொல்கத்தா நைட் ரைடர்ஸ்வைரமுத்துதேவேந்திரகுல வேளாளர்மாநிலங்களவைநவக்கிரகம்புதிய ஏழு உலக அதிசயங்கள்🡆 More