ஜோசப் ஸ்டாலின்

சோசப் சுடாலின் என்று அனைவராலும் அறியப்படுகிற இவரின் உருசிய மொழி உச்சரிப்பின் முழுப்பெயர் சோசிப் விசாரியோனவிச் சுதாலின் (Iosif Vissarionovich Stalin, சியார்சிய மொழி: იოსებ ბესარიონის ძე ჯუღაშვილი, உருசிய மொழி: Иосиф Виссарионович Сталин, திசம்பர் 18, 1878 - மார்ச்சு 5, 1953) லெனின் மறைவுக்குப் பின், சோவியத் ஒன்றியத்தின் பொதுவுடைமைக் கட்சியின் மத்தியகுழு பொதுச் செயலாளராக 1922 முதல் அவர் மறைந்த 1953 வரை, தலைவராக விளங்கினார்.

இவருடைய திட்டமிட்ட பொருளாதாரக் கொள்கை, புதிய பொருளாதார கொள்கையுன் கூடிய ஐந்தாண்டுத் திட்டங்களால் உருசியா மிகப்பெரிய தொழில்புரட்சியை கண்டது; அதன் பொருளாதாரம் மேம்பட்டது. சுடாலின் காலத்தில் செய்யப்பட்ட பொருளாதாரச் சீரமைப்புகள் குறுகிய கால நோக்கிலும் தொலை நோக்கிலும் பல உணவுப் பட்டினி போன்று பல பாதகமான விளைவுகளையும் தோற்றுவித்தது என்று சொல்லப்படுகிறது. இவரது ஆட்சியில் சோவியத் ஒன்றியம் இரண்டாம் உலகப் போரில் வெற்றிபெற்று, வல்லரசு ஆனது. 1930 களில் இவர் ஏற்படுத்திய அரசியல் தூய்மைப்படுத்தல் கொள்கையை (Great Purge) பொதுவுடமைக் கட்சியின் அறிக்கையாக, கொள்கையாகக் கடைப்பிடித்ததால், ஒழுக்கமின்மை, நம்பிக்கைத் துரோகம், நயவஞ்சகம், ஊழல் என்று குற்றம்சாட்டி பல்லாயிரக் கணக்கானோரை படுகொலை செய்ததாகச் சொல்லப்படுகிறது. இதனால் பயங்கரவாதி (Great Terror) என்றும் அழைக்கப்பட்டார்.

ஜோசப் சுடாலின்
იოსებ ბესარიონის ძე ჯუღაშვილი
Иосиф Виссарионович Сталин
Iosif Vissarionovich Stalin
ஜோசப் ஸ்டாலின்
சோவியத் ஒன்றிய பொதுவுடமைக் கட்சியின் பொதுச் செயலாளர்
பதவியில்
ஏப்ரல் 3, 1922 – மார்ச்சு 5, 1953
முன்னையவர்பதவி அறிமுகப்படுத்தவில்லை
பின்னவர்சார்சி மெலங்கோவ்
(பிரிமியர்) உருசிய மக்கள் சபைத் தலைவர்
பதவியில்
மே 6, 1941 – மார்ச்சு 19, 1946
முன்னையவர்வியாசெசுலேவ் மலடோவ்
பின்னவர்பதவி நீக்கப்பட்டது
ஒருங்கிணைந்த சோசலிச சோவியத் உருசிய அமைச்சரவையின் தலைவர்
- USSR,(பிரிமியர்)
பதவியில்
மார்ச்சு 19, 1946 – மார்ச்சு 5, 1953
முன்னையவர்பதவி அறிமுகப்படுத்தவில்லை
பின்னவர்சார்சி மலன்கோவ்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1878-12-18)திசம்பர் 18, 1878
ரஷ்யப் பேரரசின் டிப்லிசு ஆளுமைக்குட்பட்ட கோரி,
(தற்பொழுது) ஜார்சியா
இறப்புமார்ச்சு 5, 1953(1953-03-05) (அகவை 74)
மாஸ்கோ, ரஷ்சய SFSR, சோவியத் ஒன்றியம்
தேசியம்சார்சியன்
அரசியல் கட்சிசோவியத் ஒன்றியப்
பொதுவுடைமைக் கட்சி

வரலாறு

ஜோசப் ஸ்டாலின் சோவியத் ஒன்றியத்தின் அதிபராகப் பல்லாண்டுகள் ஆட்சி செய்தவர் ஆவார். இயோசிப் விசாரி யோனோவின் டிலுகாசு விலி என்பது இவருடைய இயற்பெயராகும். இவர் திசம்பர் 6, 1878 இல் சியார்சியாவில் கோரி என்னும் நகரில் கேகே மற்றும் பெசோ தம்பதியருக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தார். இவருக்கு முன் பிறந்த இரண்டு குழந்தைகளும் இறந்துவிடவே, ஒற்றை மகனாக இவர் வளர்க்கப்பட்டு வந்தார். சிறுவயது முதலே இவரின் எதிர்காலம் குறித்து இவருடைய பெற்றோரிடம் கருத்து வேறுபாடுகள் இருந்து வந்திருக்கின்றன. இவருடைய தாயார் கேகே இவரை நன்றாகப் படிக்க வைக்க விரும்பியிருக்கிறார். ஆனால், இவருடைய தந்தை பெசோ கொடிய வறுமை காரணமாக, இவரை சுயமாக உழைக்கச் செய்து குடும்பத்தை வாழவைக்கப் பணித்திருக்கிறார்.

ஜார்சியன் மொழி இவருடைய தாய்மொழியாகும். இது ரஷ்ய மொழியிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. எனினும்,ரஷ்ய மொழியை இவர் பின்நாட்களில் கற்றுக் கொண்ட போதிலும், அதனை இவர் ஜார்சிய மொழிச்சாயலுடனேயே எப்போதும் பேசி வந்தார். தாயின் அரவணைப்பில் கோரி நகரிலுள்ள ஒரு மடாலயப் பள்ளியில் பல்வேறு உதவித் தொகைகளைப் பெற்றுக்கொண்டு இவர் கல்வி பயின்றார். அங்குப் படிக்கும் காலத்திலேயே, தன்முனைப்பும், மிகுதியான துணிச்சலும் இருந்த காரணத்தினால் பல்வேறு சமூகக் குழுக்களின் தலைமைப் பண்பை ஏற்று வழிநடத்தி வந்திருக்கின்றார். இவரது தலைமையிலான குழு முதலிடத்தில் காணப்பட்டது.

பதின் பருவத்தில் டிரிப்ளிசில் ஓர் இறையியல் கல்விக் கூடத்தில் கல்வி பயிலத் தொடங்கினார். அங்கு இவருக்கு, கார்ல் மார்க்சசின் சிந்தனைகளை கற்கும் சூழல் அமைந்தது. மார்க்சியக் கொள்கைகள் மீது ஏற்பட்ட ஈர்ப்பின் காரணமாக, உடன் அங்கிருந்த உள்ளூர் பொதுவுடைமைக் கட்சி ஒன்றில் தன்னை இணைத்துக்கொண்டிருக்கிறார். அக்கால கட்டத்தில் சோவியத் நாட்டை ஆட்சி புரிந்துவந்த சிசர் நிக்கோலசு-II என்பவரின் ஆட்சிக்கு எதிராக, அப்போது உருசியாவில் பல்வேறு குழுக்களின் மனநிலை நிலவியது. சிசர் நிக்கோலசு-II இன் முதலாளித்துவம், தனியார்மயம் மற்றும் முதல் உலகப்போரில் உருசியாவை வலிந்து ஈடுபடுத்திய செயல் போன்றவை மக்களிடையே பரவலான எதிர்ப்பை உருவாக்கி இருந்திருக்கிறது. பட்டம் பெற சில மாதங்கள் இருந்த நிலையில், 1899 இல், புரட்சிக் கருத்துகளைப் பரப்புரை செய்ததற்காக கல்விக் கூடத்திலிருந்து வெளியேறும சூழ்நிலை ஏற்பட்டது. கி.பி. 1900 இல் சுடாலின், ஒரு புரட்சியாளராக, சிசர் நிக்கோலசு-II க்கு எதிராக தனது முதல் உரையை நிகழ்த்தினார்.

அதன்பின்னர், தலைமறைவு புரட்சிக்குழுவினருடன் தன்னை இணைத்துக்கொண்ட ஸ்டாலின் முதன் முதலாகக் காவலர்களால் 1902 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு, 1903 ஆம் ஆண்டு வரை சைபீரிய சிறையில் அடைக்கப்பட்டார். சிறையிலிருந்து விடுதலைப் பெற்றதும் சிசர் நிக்கோலசு-II க்கு எதிராக நடந்த உருசியப்புரட்சி(1905) யின்போது புரட்சியாளர்களை ஒருங்கிணைக்கும் போல்செவிக்சின் (Bolsheviks) தலைமைப் பணியைச செவ்வனே செய்தார் சுடாலின். இதற்கிடையில், 1902-1913 கால கட்டத்தில் சுடாலின் பலமுறை சிறைக்குச் சென்றும், அச்சிறையிலிருந்து ஆறு தடவைத் தப்பிப் பிழைத்ததும் நடந்தேறி உள்ளன. இதனிடையில், தன்னுடன் இறையியல் கல்விக் கூடத்தில் படித்த தனது நண்பன் ஒருவனின் சகோதரியான யெகேத்தரினா என்னும் பெண்ணைக் காதலித்து 1904 இல் திருமணம் புரிந்தார்.

கி.பி.1905 இல் லெனினை ஸ்டாலின் முதன் முதலில் சந்தித்தார். அப்போது ஸ்டாலினின் திறமைகள் பற்றி அறிந்துகொண்ட லெனின் அவரை மிகவும் ஊக்கப்படுத்தினார். அதற்குப்பின் பல சமயங்களில் சுடாலின் நடத்தி முடித்த கொள்ளைகள் மூலம் போல்செவிக்சின் பொருளாதாரத்தை உயர்த்த உதவி உள்ளார். 1912 இல் லெனினின் கம்யூனிச கட்சியின் இதழான ப்ரவ்டா (Pravda) வின் செய்தியாசிரியராக (Editor) நியமனம் செய்யப்பட்டார். அதன்பின், அதே 1912 ஆம் ஆண்டில் போல்செவிக்சின் மத்திய குழுவில் ஸ்டாலின் உறுப்பினராக்கப்பட்டு கம்யூனிச இயக்கத்தின் முக்கிய நபராக உருவாக்கப்பட்டார். அவர் செய்தியாசிரியராக பணியாற்றியபோது தாம் எழுதிய முதல் புரட்சிக் கட்டுரையின் முடிவில் ஸ்டாலின் என்னும் புனைப்பெயரில் கையெழுத்திட்டதன் மூலமாக சோசப் ஸ்டாலின் எனும்பெயர் வரலாற்றில் நிலைத்துவிட்டது.

பதவியேற்றல்

1924ல் இலெனின் இறந்ததால் அந்த பதவிக்கான போட்டியில் சுடாலினும் இடிராட்சுகியும் இறங்கினர். சுடாலினும் காமனேவும் சினோவ்யேவும் தொழிற்துறை மேம்பாடடைய வேளாண்மையும் அதைச் சார்ந்த விவசாயிகள் மற்றும் இதர சமூகத்தினரின் வளர்ச்சியும் முக்கியம் எனக் கூறி வந்தனர். அதை சுடாலின் எதிர்த்ததுடன் ஒரே நாட்டில் சமவுடைமை என்னும் தத்துவத்தை முன்மொழிந்தார். ஆனால் அதை எதிர்த்த இடிராட்சுகி தொழிற்துறை வளர்ச்சி முதன்மை பெற வேண்டும் என்றும் அதில் உலகப்புரட்சி தேவை எனவும் கூறினார். ஆனால் சுடாலினின் அரசியல் வளர்ச்சியே சிறந்திருந்தது. இதனால் அவரின் சகாக்களான காமனேவும் சினோவ்யேவும் சுடாலினுக்கு எதிராக செயல்பட்டனர். ஆனால் அனைத்தையும் தாண்டி சுடாலினே ஆட்சியை பிடித்தார்.

மூன்று ஐந்தாண்டு திட்டங்கள் (1928 - 1942)

1927 இல் நடைபெற்ற புரட்சியின் 10 ஆம் ஆண்டு நிறைவுக் கொண்டாட்டங்களின் பின்னர், இப்புரட்சியின் அதிகார பூர்வமான பெயராக மாபெரும் அக்டோபர் சமூகவுடைமைப் புரட்சி என்னும் பெயரே வழங்கி வருகின்றது. இந்த பத்தாண்டு கொண்டாட்டத்தில் இரண்டு ஐந்தாண்டு திட்டங்களை சோசப் சுடாலின் செயல்படுத்தினார். முதலாம் ஐந்தாண்டு திட்டம் 1928ஆம் ஆண்டு முதல் 1932ஆம் ஆண்டு வரை செயல்பட்டது. இதில் கூட்டுப்பண்ணை விவசாயம், தொழிற்துறை வளர்ச்சி, தொடர்வண்டிகளின் முன்னேற்றம் போன்றவை முக்கியத்துவம் பெற்றன. இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டம் 1933ஆம் ஆண்டு முதல் 1937ஆம் ஆண்டு வரை செயல்பட்டது. இதில் முதல் ஐந்தாண்டுத் திட்டத்தை விட தொழில் வளர்ச்சி இரண்டு மடங்கு அதிகப்படுத்த திட்டம் வகுக்கப்பட்டது. அதனால் இரண்டரை மடங்கு மூலதனம் ஒதுக்கப்பட்டது.

இந்த இரண்டு திட்டங்களின் விளைவாகப் பொறியியல் துறையில் இயந்திரங்கள் 44 விழுக்காடு வளர்ந்தது. கலனினக்கன், இடிரான்சுகாகசசு பர்க்கானா ஆகிய இடங்களில் நெசவாலைகளும் செலியபிசுக், கிசல், ரோவ்கா போன்ற இடங்களில் போன்ற இடங்களில் அனல் மின் நிலையங்கள் கட்டப்பட்டன. தானியங்கள் ஏற்றுமதிக்காக துர்கிசுத்தான் சைபீரிய இருப்புப் பாதை 1500 கிமீ தூரம் போடப்பட்டதால் ஏற்றுமதி அதிகமானது. குசுனட்சுக்கு, மாக்னிதோ, கோர்சுக் ஆகிய இடங்களில் இரும்பு, எஃகு ஆலைகள் திடங்கப்பட்டதால் நாட்டின் இயந்திர இறக்குமதி சிறிது சிறிதாக குறைந்து பின்னர் நிறுத்தவும் பட்டது. 6000 தொழில் நிறுவனங்கள் தோற்றம் பெற்றன. 2.5 இலட்சம் கூட்டுப்பண்னைகள் உருவாக்கப்பட்டது. 1913ல் இருந்ததை விட 5 மடங்கு நாட்டின் வருவாய் அதிகரித்து.

மூன்றாம் ஐந்தாண்டுத் திட்டத்தால் இரசியா எண்ணெய் உற்பத்தியில் முதலாம் நாடாகவும், எஃகு உற்பத்தியில் மூன்றாம் நாடாகவும், நிலக்கரி உற்பத்தியில் நான்காம் நாடாகவும் வளர்ந்தது. தொழில் ஏடுகள் ஏற்படுத்தப்பட்டு அதில் தொழிலாளிகளின் தினசரி அலுவல்களும் பணிகளும் பதிவு செய்யப்பட்டன.

இறப்பு

இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டிருந்த போதே சுடாலினின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இவரின் அதிக புகைப்பிடிக்கும் பழக்கத்தால் தமனிக்கூழ்மைத் தடிப்பு ஏற்பட்டது. மார்ச்சு 5,1953 ஆம் ஆண்டு இவருக்கு இதயத்திசு இறப்பு ஏற்பட்டதால் இறந்தார்.

மூலம்

  • முனைவர் A. சுவாமிநாதன். நாகரிக வரலாறு (கி. பி. 1453 - 1990 வரை). 2003: சுபா பதிப்பகம். பக். 139 - 153. 

மேற்கோள்களும் குறிப்புகளும்

வெளி இணைப்புகள்

இவற்றையும் பார்க்க

Tags:

ஜோசப் ஸ்டாலின் வரலாறுஜோசப் ஸ்டாலின் பதவியேற்றல்ஜோசப் ஸ்டாலின் மூன்று ஐந்தாண்டு திட்டங்கள் (1928 - 1942)ஜோசப் ஸ்டாலின் இறப்புஜோசப் ஸ்டாலின் மூலம்ஜோசப் ஸ்டாலின் மேற்கோள்களும் குறிப்புகளும்ஜோசப் ஸ்டாலின் வெளி இணைப்புகள்ஜோசப் ஸ்டாலின் இவற்றையும் பார்க்கஜோசப் ஸ்டாலின்1878192219301953இரண்டாம் உலகப் போர்உருசிய மொழிஉருசியாசியார்சிய மொழிசோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சிதிசம்பர் 18பயங்கரவாதம்மார்ச்சு 5வல்லரசுவிளாடிமிர் லெனின்

🔥 Trending searches on Wiki தமிழ்:

தீபிகா பள்ளிக்கல்அக்கி அம்மைசீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிதிருமலை நாயக்கர்புணர்ச்சி (இலக்கணம்)தகவல் தொழில்நுட்பம்சூழல் மண்டலம்பெயர்ச்சொல்கீழடி அகழாய்வு மையம்ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்தற்கொலை முறைகள்புதுமைப்பித்தன்உ. வே. சாமிநாதையர்ஜீரோ (2016 திரைப்படம்)அருந்ததியர்திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்மருதமலை முருகன் கோயில்சக்க போடு போடு ராஜாதன்வினை / பிறவினை வாக்கியங்கள்காலநிலை மாற்றம்காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில்கல்வி உரிமைதமிழக மக்களவைத் தொகுதிகள்நிலாஇளையராஜாசாக்கிரட்டீசுநான் அவனில்லை (2007 திரைப்படம்)ரோசுமேரிஇயேசுஐம்பெருங் காப்பியங்கள்அம்பேத்கர்சீமான் (அரசியல்வாதி)பழமொழி நானூறுவேதநாயகம் பிள்ளைவிஜய் (நடிகர்)கருக்கலைப்புஇணைச்சொல்சுயமரியாதை இயக்கம்பௌத்தம்திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்கூத்தாண்டவர் திருவிழாநீர் மாசுபாடுதேசிக விநாயகம் பிள்ளைஅஸ்ஸலாமு அலைக்கும்அகரவரிசைகிராம ஊராட்சிவரலாறுபாரத ரத்னாபழமுதிர்சோலை முருகன் கோயில்குறுந்தொகைசேக்கிழார்வீட்டுக்கு வீடு வாசப்படிமழைமரகத நாணயம் (திரைப்படம்)யசஸ்வி ஜைஸ்வால்நீலகிரி வரையாடுதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கணியன் பூங்குன்றனார்சுப்பிரமணியசுவாமி கோயில், எட்டுக்குடிஆகு பெயர்சத்ய பிரதா சாகுஇந்தியத் தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணிதைப்பொங்கல்பரதநாட்டியம்காய்கறிகர்மாதுரை (இயக்குநர்)மழைநீர் சேகரிப்புஐங்குறுநூறுஇதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்மத கஜ ராஜாபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்நரேந்திர மோதிமதுரைக் காஞ்சிகுஷி (திரைப்படம்)சைவத் திருமுறைகள்கண்டம்மாதேசுவரன் மலை🡆 More