டோனால்ட் டிரம்ப்: அமெரிக்க அரசியல்வாதி.

டோனால்ட் ஜான் டிரம்ப் (Donald John Trump, பிறப்பு: சூன் 14, 1946) அமெரிக்கத் தொழிலதிபரும், அரசியல்வாதியும், ஐக்கிய அமெரிக்காவின் 45வது அரசுத்தலைவரும் ஆவார்.

குடியரசுக் கட்சி வேட்பாளராக 2016 தேர்தலில் போட்டியிட்டு, மக்களாட்சிக் கட்சி வேட்பாளர் இலரி கிளின்டனை 2016 நவம்பர் 9 இல் வென்றார். அமெரிக்க வரலாற்றில் அதிக வயதில் (70) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதலாவது அரசுத் தலைவர் இவராவார்.

டோனால்ட் டிரம்ப்
Donald Trump
டோனால்ட் டிரம்ப்: பிறப்பும் இளமைக் காலமும், தொழிலதிபர், தொலைக்காட்சித் தொடர்களில் பங்களிப்பு
ஐக்கிய அமெரிக்காவின் 45வது குடியரசுத் தலைவர்
பதவியில்
சனவரி 20, 2017 – சனவரி 20, 2021
Vice Presidentமைக் பென்சு
முன்னையவர்பராக் ஒபாமா
பின்னவர்ஜோ பைடன்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புசூன் 14, 1946 (1946-06-14) (அகவை 77)
நியூயார்க் நகரம், நியூ யோர்க் மாநிலம், ஐக்கிய அமெரிக்கா
அரசியல் கட்சிகுடியரசுக் கட்சி (1987–1999, 2009–2011, 2012–இன்று)
பிற அரசியல்
தொடர்புகள்
மக்களாட்சிக் கட்சி (1987 இற்கு முன்னர், 2001–2009)
சீர்திருத்தக் கட்சி (1999–2001)
சுயேட்சை (2011–2012)
துணைவர்s
  • இவானா டிரம்ப்
    (தி. 1977; முறிவு 1991)
  • மார்லா மேப்பில்சு
    (தி. 1993; முறிவு 1999)
பிள்ளைகள்
  • டோனால்ட், இளை
  • இவான்கா
  • எரிக்
  • டிஃபனி
  • பாரன்
முன்னாள் கல்லூரிபோர்டாம் பல்கலைக்கழகம்
பென்சில்வேனியா பல்கலைக்கழகம் (இளங்கலை)
கையெழுத்துடோனால்ட் டிரம்ப்: பிறப்பும் இளமைக் காலமும், தொழிலதிபர், தொலைக்காட்சித் தொடர்களில் பங்களிப்பு

இவர் திரம்பு குழுமத்தின் தலைவராக உள்ளார். இவருடைய தொழில் வாழ்வில் இவர் உலகம் முழுவதும் அலுவலகக் கட்டடங்கள், சூதாட்ட விடுதிகள், தங்கும் விடுதிகள், கோல்ப் விளையாட்டு திடல்களை அமைத்துள்ளார்.

திரம்ப் தனது 2020 மறுதேர்தல் முயற்சியில் உதவ வெளிநாட்டுத் தலையீட்டைக் கோரியதாகவும், பின்னர் இதற்கான விசாரணையைத் தடுத்ததாகவும் 2019 இல் கீழவையில் இடம்பெற்ற விசாரணையில் கண்டறியப்பட்டது. திரம்பின் அரசியல் போட்டியாளர்கள் மீதான விசாரணைகளைப் பகிரங்கமாக அறிவிக்க உக்ரைனுக்கு செல்வாக்கு செலுத்துவதற்காக இராணுவ உதவிகளை திரம்ப் தடுத்து நிறுத்தியதாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. 2019 திசம்பர் 13 அன்று, கீழவையின் நடுவர் குழு அதிகார வன்முறை, மற்றும் காங்கிரசின் விசாரணைத் தடை ஆகிய குற்றச்சாட்டுகளுக்கு நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர ஒப்புதல் அளித்தது. இதன்படி, 2019 திசம்பர் 18 அன்று, கீழவையில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திரம்ப் பிரதிநிதிகள் சபையால் குற்றஞ்சாட்டப்பட்ட வரலாற்றில் மூன்றாவது அமெரிக்க அரசுத்தலைவர் ஆவார். அமெரிக்க மேலவையில் சமர்ப்பிக்கப்பட்ட இவ்வழக்கில் 2020 பெப்ரவரி 5 இல் திரம்பு இரு குற்றச்சாட்டுகளிலும் இருந்து குற்றமற்றவர் என விடுவிக்கப்பட்டார்.

பிறப்பும் இளமைக் காலமும்

இவர் நியூயார்க் நகரத்தில் உள்ள குயின்சு புறநகர் பகுதியில் பிரட் திரம்புக்கும் மேரி திரம்புக்கும் 1946 ஆம் ஆண்டு பிறந்து நியூயார்க் நகர பகுதியிலேயே வளர்ந்தார். இவரின் பெற்றோருக்கு ஐந்து குழந்தைகள், தொனல்டு திரம்பு நான்காவதாக பிறந்தார். இவரின் மூத்த அண்ணன் சீனியர் திரம்பு போதை பழக்கத்தால் 1981ஆம் ஆண்டில் உயிரிழந்தார். நீதிபதியாக உள்ள மரியேன், எலிசபெத், இராபர்ட் ஆகிய மற்ற மூவரும் உயிருடன் உள்ளனர்.

திரம்பின் தந்தை நியூயார்க் நகரில் பிறந்த செருமானிய இனத்துக்காரர். தாய் இசுட்காலாந்தில் பிறந்து ஐக்கிய அமெரிக்காவில் குடியேறிய இசுகாட்லாந்து இனத்துக்காரர். திரம்பின் அனைத்து (நான்கு) பேரக்குழந்தைகளும் ஐரோப்பாவிலேயே பிறந்தனர். திரம்பின் சித்தப்பா சான் திரம்பு மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழகத்தில் பேராசியராக 1936 முதல் 1973 வரை பணியாற்றினார். இரண்டாம் உலகப்போர் சமயத்தில் நேச நாடுகளுக்காக ரேடார் தொடர்பான ஆராய்ச்சியில் பங்கெடுத்தார், நிக்கோலா தெல்சாவின் தாள்களையும் கருவிகளையும் அமெரிக்க புலன் விசாரணை கூட்டாட்சிப் பணியகம் ஆராய இவரிடம் கூறியது. தன் குடும்ப மரபணு சிறந்தது என்பதைக் காட்ட சித்தப்பாவையே அடிக்கடி திரம்பு காட்டுவார்.

திரம்பு நியூயார்க் நகரின் புறநகரான பிரான்க்சு பகுதியிலுள்ள போர்தம் பல்கலைக்கழகத்தில் ஆகத்து 1964 முதல் இரண்டு ஆண்டுகள் படித்து விட்டு பின் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் வார்ட்டன் பள்ளியில் சேர்ந்து 1968இல் பொருளாதாரத்தில் இளங்கலை பட்டம் பெற்றார் அங்கு படித்த போது குடும்ப நிறுவனமான எலிசபெத் திரம்பு & சன் (தந்தை வழி பாட்டி பெயரில் இருந்ந நிறுவனம்) என்பதில் பணி புரிந்தார்.

திரம்பு வியட்நாம் போரில் சேவையாற்ற தேர்ந்தெடுக்கப்படவில்லை . 1964 முதல் 1968 வரை நான்கு முறை மாணவர் என்ற முறையில் விலக்கு பெற்றார். 1968 இல் உடல் தகுதியுடன் இருப்பதாக கூறப்பட்டபோதிலும் மருத்துவ காரணத்துக்காக விலக்குப்பெற்றார்.

தொழிலதிபர்

கல்லூரியில் படிக்கும் காலத்தில் தந்தையின் வீட்டு மனை விற்பனை நிறுவனமான எலிசபெத் திரம்பு& சன் என்பதில் புரிந்தார். 1971இல் நிறுவனத்தின் முழு பொறுப்பும் இவரிடம் வந்தது. முதல் வேலையாக நிறுவனத்தின் பெயரை திரம்பு அமைப்பு (திரம்பு ஆர்கனிசேசன்) என மாற்றினார். 1973இல் அந்நிறுவனத்தின் தலைவராக பொறுப்பேற்றார்.

அவ்வாண்டு இவரும் இவரின் தந்தையும் நீதித்துறையால் கருப்பர்களுக்கு எதிராக பிரித்துணரும் செயலை செய்கின்றனர் என்று குற்றஞ்சாட்டப்பட்டதால் கவனத்தை பெற்றனர். திரம்பின் பணியில் முதல் பெரிய திட்டம் எதுவென்றால் 1978இல் மேன்காட்டனில் உள்ள கிராண்ட் அயத் ஓட்டலை மீள் புத்துணர்வு கொண்டுவருவதற்கானது ஆகும்.

திரம்பு டவர் என்ற 58 அடுக்குமாடி கட்டடத்தை மேன்காட்டனின் நடுப்பகுதியில் கட்ட 1978இல் பேச்சு வார்த்தைகளை முடித்து 1983இல் அக்கட்டடத்தை முடித்தார். இதில் திரம்பின் வீடும் திரம்பு அமைப்பின் தலையகமும் இருந்தன. அப்பரண்டிசு என்ற தொடர் இங்கு தான் எடுக்கப்பட்டது. இங்கு தொலைக்காட்சித்தொடருக்கான முழு அரங்கம் இருந்தது.

தொலைக்காட்சித் தொடர்களில் பங்களிப்பு

இவர் திரைப்படங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் சிறு வேடத்தில் நடித்துள்ளார். 2004 இலிருந்து 2015 வரை என்பிசி தொலைக்காட்சியில் தி அப்ரன்டிசு (The Apprentice) மெய்த் தொடரில் நடித்ததுடன் அதன் இணை தயாரிப்பாளராகவும் இருந்தார். இது இவரை நாடு முழுவதும் அறியச்செய்தது.

அரசியலில் நுழைவு

2000ஆம் ஆண்டு சீர்திருத்தக் கட்சி சார்பில் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட மனு விரும்பினார், ஆனால் கட்சி தேர்தலில் வெற்றி பெறவில்லை. 2000ஆம் ஆண்டு கட்சி சாரா வேட்பாளராக அதிபர் பதவிக்கு போட்டியிட நினைத்தார். அது போலவே 2008, 2012 ஆண்டுகளிலும் நினைத்தார். பின் 2014ஆம் ஆண்டு ஆளுநர் பதவிக்கு போட்டியிட நினைத்தார். யூன் 2015இல் குடியரசு கட்சி சார்பில் அதிபர் பதவிக்கு போட்டியிட போவதாக அறிவித்தார். மே 2016இல் இவரை எதிர்த்த அனைவரும் போட்டியிலிருந்து விலகியதால் யூலை மாதம் கிலீவ்லன்டில் நடந்த குடியரசு கட்சியின் பேரவையில் அதிகாரபூர்வமாக குடியரசு கட்சி வேட்பாளராக இவர் அறிவிக்கப்பட்டார்.

குடும்பம்

டொனால்டு டிரம்புக்கு 3 மனைவிகள். முதல் 2 மனைவிகளான இவானா மற்றும் மர்லா மேப்சுள் ஆகியவர்களை விவாகரத்து செய்து விட்ட டிரம்ப், தற்போது 3-வது மனைவியான மெலேனியாவும், டிரம்பு - மெலேனியா இணையருக்குப் பிறந்த பாரன் டிரம்பு என்ற 10 வயது மகனுடன் தனியாக வசித்து வருகிறார். டொனால்ட் ட்ரம்பின் குடும்ப உறுப்பினர்கள் விவரம்:

  1. மெலானியா டிரம்பு: டொனால்ட் டிரம்பின் தற்போதைய மூன்றாவது மனைவி.
  2. பாரன் டிரம்பு: டொனால்ட் டிரம்பின் தற்போதைய மூன்றாவாது மனைவி மெலானியாவின் ஒரே மகன், வயது 10.
  3. ஜெராட் குஷ்னர்: டொனால்ட் டிரம்பின் மருமகன். டிரம்பின் மூத்த மகள் இவாங்காவின் கணவர்.
  4. இவாங்கா டிரம்ப்: டொனால்ட் டிரம்பின் மூத்த மகள். இவர் டிரம்பின் முதல் மனைவி இவானாவுக்கும், டிரம்புக்கும் பிறந்த ஒரே பெண் குழந்தை.
  5. டிஃபானி டிரம்பு: டொனால்ட் டிரம்பின் இரண்டாவது மகள். அவரது இரண்டாவது மனைவி மர்லா மேப்ள்சுளுக்குப் பிறந்தவர்.
  6. வனெசா டிரம்பு (ஹைடன்): டொனால்ட் டிரம்பின் மருமகள். அவரது மகன் டொனால்ட் ட்ரம்ப் ஜூனியரின் மனைவி.
  7. காய் டிரம்பு: டொனால்ட் டிரம்பு பேரப்பிள்ளைகளில் மூத்தவர். டொனால்ட் ஜூனியருக்கும் வனெசா ட்ரம்புக்கும் பிறந்த ஐந்து பிள்ளைகளில் மூத்த மகன்.
  8. டொனால்ட் டிரம்பு ஜூனியர்: டொனால்ட் டிரம்பின் மூத்த மகன். டொனால்ட் டிரம்புக்கும் அவரது முதல் மனைவி இவானாவுக்கும் பிறந்தவர்.
  9. எரிக் டிரம்பு: டொனால்ட் டிரம்பின் முதல் மனைவி இவானா மூலம் பிறந்த மூன்றாவது மகன்.
  10. லாரா யுனஸ்கா: டொனால்ட் டிரம்பின் மருமகள். மகன் எரிக் டிரம்பின் மனைவி.

மேற்கோள்கள்

Tags:

டோனால்ட் டிரம்ப் பிறப்பும் இளமைக் காலமும்டோனால்ட் டிரம்ப் தொழிலதிபர்டோனால்ட் டிரம்ப் தொலைக்காட்சித் தொடர்களில் பங்களிப்புடோனால்ட் டிரம்ப் அரசியலில் நுழைவுடோனால்ட் டிரம்ப் குடும்பம்டோனால்ட் டிரம்ப் மேற்கோள்கள்டோனால்ட் டிரம்ப்இலரி கிளின்டன்ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தல், 2016ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர்கள்ஐக்கிய அமெரிக்காஐக்கிய அமெரிக்காவின் குடியரசுத் தலைவர்குடியரசுக் கட்சி (ஐக்கிய அமெரிக்கா)மக்களாட்சிக் கட்சி (ஐக்கிய அமெரிக்கா)

🔥 Trending searches on Wiki தமிழ்:

சாகித்திய அகாதமி விருதுமுடக்கு வாதம்பத்து தலஜன கண மனமனம் கொத்திப் பறவை (திரைப்படம்)சங்கமம் (1999 திரைப்படம்)வேதநாயகம் பிள்ளைமுதலாம் உலகப் போர்வளைகாப்புபெண்களின் உரிமைகள்திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்கௌதம புத்தர்துரை (இயக்குநர்)வன்னியர்புனித ஜார்ஜ் கோட்டைசூர்யா (நடிகர்)கீர்த்தி சுரேஷ்தனுசு (சோதிடம்)ஏப்ரல் 23தேஜஸ்வி சூர்யாகண்டம்மரகத நாணயம் (திரைப்படம்)யாதவர்பூச்சிக்கொல்லிகாவிரி ஆறுபுறநானூறுநாயக்கர்நிலச்சரிவுஇன்ஸ்ட்டாகிராம்மருதம் (திணை)தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்108 வைணவத் திருத்தலங்கள்ரயத்துவாரி நிலவரி முறைகிராம நத்தம் (நிலம்)முருகன்பூப்புனித நீராட்டு விழாமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்அழகர் கோவில்திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்யசஸ்வி ஜைஸ்வால்வாதுமைக் கொட்டைஐங்குறுநூறுஅறிந்தும் அறியாமலும் (திரைப்படம்)சஞ்சு சாம்சன்பாரிஇராவணன்சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்ஆளுமைபறவைசிவனின் தமிழ்ப் பெயர்கள்தமிழர் நெசவுக்கலைஅம்மனின் பெயர்களின் பட்டியல்தனித் தொகுதிகள், தமிழ்நாடு சட்டமன்றம்ஆங்கிலம்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்மதுரைக்காஞ்சிதிரு. வி. கலியாணசுந்தரனார்ஏப்ரல் 22போதைப்பொருள்நாயன்மார்விருந்தோம்பல்வானியல் அலகுகலாநிதி மாறன்கணையம்திருநங்கைகண்ணதாசன்யோனிநாடாளுமன்ற உறுப்பினர்கட்டுரைதமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்ஜெயம் ரவிஜி. யு. போப்வேர்க்குருசிந்துவெளி நாகரிகம்சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்உலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)இந்தியக் குடியரசுத் தலைவர்குற்றாலக் குறவஞ்சிபுறப்பொருள்🡆 More