மானிடவியல்

மானிடவியல் அல்லது மாந்தவியல் (Anthropology) மனித இனம் பற்றிய அறிவியல் கல்வித்துறை ஆகும்.

இது மனித குலத்தைச் சமூக நிலை, பண்பாட்டு நிலை, உயிரியல் நிலை போன்ற வேறுபட்ட நிலைகளில் கடந்த கால மக்களையும், சமகால மக்களையும் (அதாவது எல்லாக் காலத்து மக்களையும் எல்லா இடங்களின் மக்களையும்) ஆராயும் பரந்த விரிந்த இலக்குடையதாக உள்ளது.

இது இரண்டு வகைகளில் முழுதளாவிய (holistic) தன்மை கொண்டது: இது எல்லாக் காலங்களையும் சேர்ந்த அனைத்து மனிதர்களையும், மனித இனத்தின் அனைத்து அம்சங்களையும் பற்றிக் கருத்தில் கொள்கின்றது. பண்பாடு பற்றிய எண்ணக்கருவும், மனித இயல்பு பண்பாடே எனும் கருத்தும் (notion); அதாவது எங்களுடைய இனம் உலகத்தை குறியீட்டு முறையில் விளங்கிக் கொள்வதற்கும், சமுதாய ரீதியில் குறியீட்டு முறையில் பயிலவும் பயிற்றுவிக்கவும், அக்குறியீடுகளின் அடிப்படையில் உலகத்தையும் எங்களையும் மாற்றிக் கொள்வதற்கும் ஏதுவாக முழுமையான தகுதியை வளர்த்துக் கொண்டுள்ளது என்னும் கருத்துமே மானிடவியலின் அடிப்படையாகும்.

ஐக்கிய அமெரிக்காவில், மானிடவியல் பாரம்பரியமாக நான்கு துறைகளாக வகுக்கப்படுகிறது:

  • உடல்சார் மானிடவியல்: இது உயர் பாலூட்டியின் நடத்தைகள், மனித படிமலர்ச்சியியல், குடித்தொகை, மரபியல் என்பவை பற்றி ஆராய்கின்றது; இத் துறை சில சமயங்களில் உயிரியல்சார் மானிடவியல் எனவும் வழங்கப்படுகின்றது.
  • சமூக, பண்பாட்டு மானிடவியல்: இது சமூக மானிடவியல், பண்பாட்டு மானிடவியல் ஆகிய இரண்டையும் இணைத்து உருவாகியதாகும். இந்த ஆய்வுக் களம் சமூக வலையமைப்பு, சமூக நடத்தைகள், உறவுமுறை வடிவங்கள், அரசியல், நம்பிக்கைகள், உற்பத்தி வடிவங்கள், பரிமாற்றம், நுகர்வு மற்றும் ஏனைய பண்பாட்டு வெளிப்பாடுகள் என்பவற்றை உள்ளடக்கும்;
  • மொழிசார் மானிடவியல்: இது காலம் மற்றும் இடம் சார்ந்த நிலையில் மொழிகளின் வேறுபாடுகள், மொழியின் சமூகப் பயன்பாடு, மொழிப் பண்பாடு என்பவற்றுக்கிடையிலான தொடர்பு பற்றி ஆய்வு செய்கின்றது;
  • தொல்பொருளியல், இது மனித சமூகங்களின் பொருள்சார் எச்சங்களை ஆராய்கிறது. (இது பொதுவாக ஒரு தனியான துறையாகவே கணிக்கப்படுகின்றது).

மானிடவியல் எண்ணக்கருக்கள்

மானிடவியல் துறைகளும் துணைத் துறைகளும்

மேற்கோள்கள்

Tags:

அறிவியல்இனம் (உயிரியல்)உயிரியல்சமூகம்பண்பாடுமனிதன்

🔥 Trending searches on Wiki தமிழ்:

தளபதி (திரைப்படம்)இராமாயணம்தமன்னா பாட்டியாசந்திரமுகி (திரைப்படம்)தற்கொலை முறைகள்யானையின் தமிழ்ப்பெயர்கள்தமிழ்நாடு ஊராட்சி மன்றங்கள்பழமுதிர்சோலை முருகன் கோயில்2024 இந்தியப் பொதுத் தேர்தல்திருமூலர்வேளாண்மைமுதுமலை தேசியப் பூங்காபுதுமைப்பித்தன்முதுமொழிக்காஞ்சி (நூல்)சுரதாகாயத்ரி மந்திரம்அந்தாதிசட் யிபிடிபௌர்ணமி பூஜைஈ. வெ. இராமசாமிகிராம சபைக் கூட்டம்நந்திக் கலம்பகம்கல்லணைஅருந்ததியர்தமிழ்த் திரைப்பட நடிகர்களின் பட்டியல்சினைப்பை நோய்க்குறிகருக்காலம்வைகைநீரிழிவு நோய் (இரண்டாவது வகை)உருவக அணிபாண்டி கோயில்பாரத ஸ்டேட் வங்கிகளக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம்சித்தர்கள் பட்டியல்தாஜ் மகால்கேரளம்கா. ந. அண்ணாதுரைகுற்றாலக் குறவஞ்சிமுத்துராஜாகிராம நத்தம் (நிலம்)பசி (திரைப்படம்)ஒலிவாணிதாசன்குறிஞ்சிப் பாட்டுநவக்கிரகம்தேசிய மகளிர் ஆணையம் (இந்தியா)விருமாண்டிபாட்டாளி மக்கள் கட்சிசமணம்ஔவையார் (சங்ககாலப் புலவர்)குறிஞ்சிக்கலிதிருக்குர்ஆன்திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்நாயன்மார் பட்டியல்உ. வே. சாமிநாதையர்வேற்றுமையுருபுசிதம்பரம் நடராசர் கோயில்வசுதைவ குடும்பகம்தங்கம்கீழடி அகழாய்வு மையம்கூத்தாண்டவர் திருவிழாஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்இந்திய அரசியலமைப்புதன்வினை / பிறவினை வாக்கியங்கள்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்செரால்டு கோட்சீமுதலாம் உலகப் போர்பனிப்போர்புவி நாள்இளங்கோவடிகள்ஜெ. ஜெயலலிதாதமிழ்நாட்டின் மாவட்டங்கள்விசயகாந்துபயில்வான் ரங்கநாதன்ஜிமெயில்புளிப்புநாயன்மார்மத கஜ ராஜா🡆 More