மஞ்சள் காய்ச்சல்: குருதிப்போக்கு காய்ச்சல்

மஞ்சள் காய்ச்சல் அல்லது மஞ்சட் காய்ச்சல் (Yellow fever), தீநுண்மத்தால் ஏற்படும் ஒரு கடிய குருதிப்போக்குக் காய்ச்சல் ஆகும்.

மஞ்சட் தீநுண்மக் குடும்பத்தைச் சார்ந்த ஆர்.என்.ஏ வைரசு இக்காய்ச்சலை உண்டாக்கும் தீநுண்மம் ஆகும். இந்நோய் ஆபிரிக்காவில் முதன்முதலில் தோன்றியது என நம்பப்படுகின்றது. தற்பொழுது இந்நோய் அயனமண்டல அமெரிக்கா, ஆபிரிக்கா போன்ற பகுதிகளில் காணப்படுகின்றது, ஆனால் ஆசியாவில் தோன்றுவதில்லை.

மஞ்சட்காய்ச்சல்
மஞ்சள் காய்ச்சல்: குருதிப்போக்கு காய்ச்சல்
மஞ்சட் காய்ச்சல் தீநுண்மத்தின் இலத்திரன் நுண்ணோக்கி நுண்படிமம் (234,000X உருப்பெருக்கம்).
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புinfectious diseases
ஐ.சி.டி.-10A95.
ஐ.சி.டி.-9060
நோய்களின் தரவுத்தளம்14203
மெரிசின்பிளசு001365
ஈமெடிசின்med/2432 emerg/645
ம.பா.தD015004

டெங்கு காய்ச்சல் போன்று மஞ்சட் காய்ச்சல் தீநுண்மம் இரு காவி வட்டத்தைக் கொண்டுள்ளது: வனப்பகுதி, மக்கள் வசிக்கும் பகுதி. மஞ்சட் காய்ச்சல் வைரசைக் கொசுக்கள் காவுகின்றன, குறிப்பாக ஏடிசு எகிப்தி எனும் கொசு இனத்தின் பெண் கொசுவால், அது கடிக்கும் போது உமிழ்நீரை மனித உடலில் செலுத்துகையில் பரப்பப்படுகிறது. வனப்பகுதியில் வேறு கொசு இனங்கள் காவிகளாகவும் குரங்குகள் வழங்கிகளாகவும் உள்ளன, மக்கள் வசிக்கும் பகுதியில் முதன்மைக் காவியாக ஏடிசு எகிப்திக் கொசுவும் வழங்கியாக மனிதரும் உள்ளனர்.

இக்காய்ச்சலில் உடல்வெப்பநிலை மிகையாகுவதுடன் குமட்டுதல், தலைவலி, நடுக்கம், முதுகுவலி போன்ற அறிகுறிகளும் தென்படும். சில நோயாளிகளில் இதன் விளைவு பாரதூரமாக இருக்கும், அவர்களில் கல்லீரல் கடுமையாகப் பாதிக்கப்பட்டு கல்லீரல் அழற்சி மற்றும் கல்லீரல் இழைய இறப்பு ஏற்படும், இதன் காரணமாக மஞ்சள் காமாலை ஏற்படும், இதுவே இந்நோய்க்குரிய பெயர்க்காரணம். இந்நோயில் கடுமையாக குருதிப்போக்கு ஏற்படுவதால் குருதிப்போக்குக் காய்ச்சல் வகைக்குள் இந்நோய் அடங்குகின்றது.

நோய்க்காரணி

மஞ்சட் தீநுண்மக் குடும்பத்தைச் (Flaviviridae ) சார்ந்த ஆர்.என்.ஏ கொண்டுள்ள தீநுண்மம் இக்காய்ச்சலுக்குக் காரணமான நுண்ணுயிரி ஆகும். இது 38 நானோமீட்டர் அகலமுள்ள சுற்றுறையைக் கொண்டுள்ளது. இவை வழங்கியின் உடலுக்குள் கொசு மூலம் செலுத்தப்பட்ட பின்னர் வழங்கியின் உயிரணுவின் மேற்பரப்பில் ஏற்பி ஒன்று மூலம் இணைக்கப்படுகின்றது; பின்னர் உயிரணுக்களுக்குள் அகவுடல் நுண்குமிழி (endosomal vesicle) மூலம் எடுக்கப்படுகின்றது; இறுதியில் குழியமுதலுருக்குள் தீநுண்மத்தின் மரபணுக்கூறுகள் வெளிவிடப்படுகின்றது; இவை அழுத்தமற்ற அகக்கலகருவுருச் சிறுவலையுள் பல்கிப்பெருகுகின்றன.

காவி

மஞ்சட் காய்ச்சல்த் தீநுண்மம் முதன்மையாக ஏடிசு எகிப்திப் பெண் கொசுவின் கடி மூலம் பரப்பப்பட்டாலும், வேறு இன வகை கொசுக்களும் இந்நோயைப் பரப்புவதுண்டு. அவற்றுள் புலிக் கொசு என அழைக்கப்படும் ஏடிசு அல்போப்டிக்கசுவும் அடங்குகின்றது. நோயுற்ற குரங்கு அல்லது மனிதரைக் கடிக்கும் பெண் கொசு அவர்களின் தீநுண்மம் கொண்ட இரத்தத்தை உறிஞ்சுகின்றது, கொசுவின் இரைப்பையை அடைந்த தீநுண்மங்கள் மேலணி இழையங்களில் பெருகுகின்றன, ஒரு குறிப்பிட்ட தொகையை அடைந்ததும் அங்கிருந்து கொசுவின் சுற்றோட்டத் தொகுதியை அடைந்து அங்கிருந்து உமிழ்நீர்ச சுரப்பியை அடைகின்றன. மீண்டும் இவை மனிதரைக் கடிக்கும் போது முதலில் குத்திய காயத்துள் உமிழ்நீரைச் செலுத்துகின்றன, அதனுடன் செலுத்தப்பட்ட தீநுண்மங்கள் கடிவாங்கியவரின் குருதியை அடைகின்றன.

உசாத்துணைகள்

Tags:

குருதிப்போக்குக் காய்ச்சல்

🔥 Trending searches on Wiki தமிழ்:

உன்னை நினைத்துபரிவுபௌர்ணமி பூஜைதமிழ்நாட்டின் மாநகராட்சிகள்மு. கருணாநிதிவிசயகாந்துஊராட்சி ஒன்றியம்வி.ஐ.பி (திரைப்படம்)பௌத்தம்தமிழ் எழுத்து முறைஈ. வெ. இராமசாமிதமிழர் பருவ காலங்கள்மாடுகாவிரி ஆறுஏப்ரல் 22அறிந்தும் அறியாமலும் (திரைப்படம்)முல்லைப்பாட்டுதிருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்ஏறுதழுவல்நரேந்திர மோதிமுகலாயப் பேரரசுநாலடியார்சந்திரமுகி (திரைப்படம்)உலகத் தமிழாராய்ச்சி மாநாடுஇன்னா நாற்பதுகம்பராமாயணத்தின் அமைப்புகோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிசப்தகன்னியர்கற்றது தமிழ்சிலேடைகாதல் (திரைப்படம்)தமிழ் இலக்கியம்ஆண்டாள்சிவபெருமானின் பெயர் பட்டியல்வாலி (இராமாயணம்)இயேசுஇந்தியத் தேர்தல்கள் 2024பக்கவாதம்தமிழ் நீதி நூல்கள்கணையம்மோகன்தாசு கரம்சந்த் காந்திசாக்கிரட்டீசுநிலாகாடழிப்புசித்தர்மருதமலை முருகன் கோயில்அத்தம் (பஞ்சாங்கம்)மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுபாரத ஸ்டேட் வங்கிவசுதைவ குடும்பகம்விருந்தோம்பல்திருவிழாபஞ்சாயத்து ராஜ் சட்டம்கட்டபொம்மன்இந்திய அரசியலமைப்புபண்டாரம் (சமய மரபு)திருப்போரூர் கந்தசாமி கோயில்கருக்கலைப்புசின்னம்மைதிருவாசகம்சிங்கப்பூர்ரெட் (2002 திரைப்படம்)ஐக்கிய நாடுகள் அவைஉணவுச் சங்கிலிநீக்ரோஇந்திய தேசிய சின்னங்கள்கண்டம்பனிக்குட நீர்தமிழர் பண்பாடுதற்கொலை முறைகள்சிறுத்தொண்ட நாயனார்விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்பாலை (திணை)விலங்குகளின் பெயர்ப் பட்டியல்மெய்யெழுத்துபாவலரேறு பெருஞ்சித்திரனார்தமிழ்நாட்டின் நகராட்சிகள்ஆயுள் தண்டனைதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)🡆 More