தட்டம்மை

தட்டம்மை அல்லது சின்னமுத்து, மணல்வாரி அம்மை, (Measles,morbilli ) என்றெல்லாம் அறியப்படும் இந்த நோய் பாராமைக்சோவைரசு குடும்பத்தைச் சேர்ந்த மோர்பில்லி தீநுண்மத்தால் ஏற்படும் ஓர் சுவாச நோய்த்தொற்றாகும்.

மோர்பி தீநுண்மங்கள் உறையுடைய, ஓரிழை எதிர்-உணர்வு ரைபோநியூக்ளிக் அமில தீநுண்மங்களாகும். நோய் அறிகுறிகளாக காய்ச்சல், இருமல், மூக்கொழுகல், சிவந்த கண்கள் ஏற்படுவதுடன் பொதுவான நீல-வெள்ளை நிற மையப்பகுதி கொண்ட சிறிய சிவப்பு நிற புள்ளிகள் போன்ற தோற்றம் வாயினுள் ஏற்படும். உடல் முழுவதும் தோலில் கொப்புளங்கள் இருக்கும்.

தட்டம்மை
தட்டம்மை
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புinfectious diseases
ஐ.சி.டி.-10B05.
ஐ.சி.டி.-9055
நோய்களின் தரவுத்தளம்7890
மெரிசின்பிளசு001569
ஈமெடிசின்derm/259 emerg/389 ped/1388
பேசியண்ட் ஐ.இதட்டம்மை
ம.பா.தD008457
தட்டம்மை
தட்டம்மையால் பாதிக்கப்பட்ட நோயாளி.
தட்டம்மை
தீநுண்ம வகைப்பாடு
குழு:
Group V ((-)ssRNA)
குடும்பம்:
Paramyxovirus
பேரினம்:
Morbillivirus
இனம்:
Measles virus

தட்டம்மை நோய்த்தொற்று உள்ளவரின் மூக்கில் அல்லது தொண்டையில் வடியும் நீருடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ தொற்றும்போது இந்நோய் பரவுகிறது. தொற்றிய இடத்தில் இரண்டுமணி நேரம் வரை வீரியத்துடன் காணப்படும். உடலில் கொப்புளங்கள் தோன்றுவதற்கு நான்கு நாட்கள் முன்பாகவும் நோய் வடிந்த பிறகு நான்கு நாட்கள் வரையும் நோயுற்றவரிடமிருந்த பிறருக்கு நோய் தொற்ற வாய்ப்புள்ளது. விரைவாகப் பரவக்கூடிய இந்த தீநுண்மம் நோயுற்றவருடன் வாழும் இடத்தை பகிரும் 90% நபர்களுக்கு தொற்றக்கூடிய வாய்ப்பு உள்ளது. தட்டம்மை தொற்றியவருக்கு முதல் தொடர்பிலிருந்து ஒன்பது முதல் பன்னிரெண்டு நாட்கள் வரை அறிகுறியில்லா அடைவுக்காலமாக இருக்கிறது.

செருமானியத் தட்டம்மை என்பது இதனையொட்டிய அறிகுறிகளைக் கொண்டிருந்தாலும் இரு நோய்களும் வெவ்வேறானவை.

சத்துக்குறைவு உள்ள இளம் குழந்தைகள் இந்த நோயால் இறக்க நேரிடலாம். இந்த நோய்க்கான தடுப்பூசிகள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றை உரிய காலத்தில் போடுவதுடன் சுகாதார பழக்கவழக்கங்களை கையாளுதலால் சிசு மரணங்களை தவிர்க்கலாம். இந்தியாவில் இந்த நோயால் 47% சிறார்கள் மரணமடைவதாக ஆய்வுக்கட்டுரையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

தட்டம்மை 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
தட்டம்மை
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

இருமல்காய்ச்சல்தீநுண்மம்தொற்று விழி வெண்படல அழற்சிநோய்த்தொற்று

🔥 Trending searches on Wiki தமிழ்:

நயினார் நாகேந்திரன்பித்தப்பைமருத்துவப் பழமொழிகளின் பட்டியல்தமிழ்சுந்தரமூர்த்தி நாயனார்தருமபுரி மக்களவைத் தொகுதிமதீச பத்திரனசைவ சமயம்லோ. முருகன்எட்டுத்தொகைமறவர் (இனக் குழுமம்)நீர்பால் (இலக்கணம்)சீரகம்பாம்புஆனந்த விகடன்முதலாம் உலகப் போர்தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்திண்டுக்கல் மக்களவைத் தொகுதிதமிழ்ப் பருவப்பெயர்கள்ஒற்றைத் தலைவலிசின்னக்கண்ணம்மாஇயற்கைசூரரைப் போற்று (திரைப்படம்)எச்.ஐ.விதமிழ் நீதி நூல்கள்அஞ்சலி (நடிகை)மருதநாயகம்சன் தொலைக்காட்சிஅழகுபுதுச்சேரிபெருஞ்சீரகம்சீவக சிந்தாமணிவிலங்குகளின் பெயர்ப் பட்டியல்டிரைகிளிசரைடுபறையர்மக்களவை (இந்தியா)இரட்டைக்கிளவிதமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்பல்லவர்சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)தங்கம் தென்னரசுதேவாங்குமொழிநாயக்கர்ஷங்கர் (திரைப்பட இயக்குநர்)குண்டூர் காரம்மூலிகைகள் பட்டியல்மண் பானைவாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனைஇரண்டாம் உலகப் போர்நெருப்புதிருவிழாதமிழ் எண்கள்தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்காரைக்கால் அம்மையார்வைதேகி காத்திருந்தாள்பரகலா பிரபாகர்ம. கோ. இராமச்சந்திரன்சிவபுராணம்ராதிகா சரத்குமார்ஆர்சனல் கால்பந்துக் கழகம்உயர் இரத்த அழுத்தம்தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிதமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்சின்னம்மைதேனி மக்களவைத் தொகுதிகணியன் பூங்குன்றனார்திராவிடர்பனிக்குட நீர்இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம்வீரன் சுந்தரலிங்கம்கண்ணகிமறைமலை அடிகள்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாட்டின் அடையாளங்கள்எஸ். ஜெகத்ரட்சகன்சாகித்திய அகாதமி விருது🡆 More