சிட்னி

சிட்னி (Sydney) அவுஸ்திரேலியாவின் மிகப் பெரிய நகரமும், நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் தலைநகரமும் ஆகும்.

அவுஸ்திரேலியாவின் கிழக்குக் கரையோரத்தில் இது அமைந்துள்ளது. 1788இல் பிரித்தானியாவிலிருந்து வந்த ஆர்தர் ஃபிலிப் என்பவர் சிட்னி நகரத்தை அமைத்தார்.

சிட்னி
Sydney

நியூ சவுத் வேல்ஸ்
சிட்னி
ஜாக்சன் துறையில் சிட்னி ஒப்பேரா மாளிகை மற்றும் சிட்னி வர்த்தக மையம்
மக்கள் தொகை: 4,284,379  (1வது)
அடர்த்தி: 2058/கிமீ² (5,330.2/சதுர மைல்) (2006)
அமைப்பு: 26 ஜனவரி 1788
ஆள்கூறுகள்: 33°51′35.9″S 151°12′40″E / 33.859972°S 151.21111°E / -33.859972; 151.21111
பரப்பளவு: 12144.6 கிமீ² (4,689.1 சது மைல்)
நேர வலயம்:

 • கோடை (பசேநே)

ஆகீநே (UTC+10)

ஆகீபநே (UTC+11)

அமைவு:
உள்ளூராட்சிகள்: பல (38)
கவுண்டி: கம்பர்லாந்து
மாநில மாவட்டம்: பல (49)
நடுவண் தொகுதி: பல (22)
சராசரி அதிகபட்ச வெப்பநிலை சராசரி குறைந்தபட்ச வெப்பநிலை மழைவீழ்ச்சி
21.6 °செ
71 °
13.7 °செ
57 °
1,214.8 மிமீ
47.8 அங்
சிட்னி
ஆஸ்திரேலியாவில் சிட்னியின் அமைவு

வரலாறு

குறைந்தது 30,000 ஆண்டுகளுக்கு முன்னரிருந்து ஆஸ்திரேலியப் பழங்குடிகள் சிட்னி பகுதியில் வாழ்ந்து வருவதாக வரலாற்றாய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். 1788 இல் முதலாவது கப்பல் இங்கு வந்துறங்கிய போது 4000 முதல் 8000 வரையான பழங்குடிகள் வாழ்ந்து வந்தனர். பிரித்தானியர்கள் இவர்களை ஈயோரா என அழைத்தனர். இங்கு முக்கியமாக மூன்று மொழி பேசும் மக்கள் வாழ்ந்தனர். அவை தாருக், தரவால் மற்றும் குரிங்காய் என்பனவாகும். இவர்கள் தனித்தனியே தமக்கென தனியான பிரதேசங்களைக் கொண்டிருந்தனர்.

1770இல் பிரித்தானிய கடற்படைத் தளபதி ஜேம்ஸ் குக் பொட்டனி விரிகுடாவில் வந்திறங்கினான். இங்குதான் அவன் குவேகல் என்ற பழங்குடியினருடன் முதன்முதலாக தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டான். பிரித்தானிய அரசின் ஆணைக்கமைய ஆர்தர் பிலிப் இங்கு பிரித்தானியக் குற்றவாளிகளைக் குடியேற்றினார். இவர்கள் 11 கப்பல்களில் 1788, ஜனவரி 20 இல் பொட்டனி விரிகுடாவில் வந்திறங்கினர். இவர்கள் வந்திறங்கிய இடம் தரக்குறைவான மண்ணையும், குறைந்தளவு குடிநீரையும் கொண்டிருந்ததால் குடியேறுவதற்குத் தகுதியானதாக இருக்கவில்லை. இதனால் பிலிப் மேலும் மேற்கே சென்று ஜாக்சன் துறையின் சிட்னி கோவ் என்ற இடத்தில் ஜனவரி 26 இல் குடியேற்றத் திட்டத்தை ஆரம்பித்தார்.

புவியியல்

சிட்னியின் நகரப்பிரதேசம், கிழக்கே பசிபிக் பெருங்கடல், மேற்கே நீல மலைகள், வடக்கே ஹோக்ஸ்பரி ஆறு மற்றும் தெற்கே ரோயல் தேசிய பூங்கா ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது. சிட்னி பெருநகரப் பிரதேசத்தில் புகழ்பெற்ற பொண்டாய் கடற்கரை உட்பட சுமார் 70 துறைமுகங்கள் அல்லது கடற்கரைப்பிர்தேசங்கள் உள்ளன.

காலநிலை

சிட்னி 2000

2000-ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக்ஸ், நகரில் பல மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. நகரின் போக்குவரத்து வசதிகள், தகவல் தொடர்பு எல்லாமே கிட்டத்தட்ட புதிதாய் அமைக்கப்பட்டன. ஏராளமான புதிய உணவு விடுதிகள், குடியிருப்பு மனைகள், நகரின் அழகையும் இயல்பையும் கெடுத்து விட்டது என்பது உள்ளூர்வாசிகளின் புகார். ஆம், நான்கு கோடி மக்கள் வாழும், பிரபலமான வர்த்தக நகராக இருந்தாலும், கவர்ச்சிகரமான, எதையும் எளிதாக எடுத்துக் கொள்ளும் ஒரு சிறு நகர இயல்பு இங்கு உண்டு.

சிட்னியின் சிறப்பு இடங்கள்

ஜாக்சன் துறை எனும் சிட்னி துறைமுகம் தான் உலகிற்கு அறிமுகமான சிட்னியின் முகம். இதன் குறுக்கே உள்ள சிட்னி துறைமுகப் பாலம் பிரசித்தமானது. இந்தப் பாலமும் அருகில் இருக்கும் சிட்னி ஓப்பரா மாளிகை ஆகியன உலகம் முழுவது அறிந்துள்ள சிட்னியின் அடையாளங்கள். இந்த இயற்கைத் துறைமுகம் உண்மையில் ஒரு கடலில் மூழ்கிய பள்ளத்தாக்கு. ஆகவே சுற்றிலும் பல வளைவுகள், நெளிவுகள் துறைமுகக் கடற்கரையை சுவாரசியமாக ஆக்குகிறது. இது போதாதென்று பாரமட்டா நதி இங்கு கடலில் கலக்கிறது. கோடை காலத்தில் (டிசம்பர் - ஜனவரி) சிட்னியின் கடற்கரை நிரம்பி வழியும்.

நகரின் மையத்தில் உள்ள 'மத்திய வர்த்தக மாவட்டம்' (CBD) வானுயர்ந்த கட்டிடங்களைக் கொண்ட நகரின் வர்த்தக நாடி. நகரின் சம்பிரதாய பூங்காவான ஹைட் பார்க்கின் நடுவில் செல்லும் பார்க் தெருவின் வழியாக மற்றொரு முனையில் நகர மண்டபம் மற்றும் ஷாப்பிங் மையங்களை அடையலாம். ஹைட் பார்க்கைச் சுற்றிலும் ஆஸ்திரேலிய அரும்பொருட் காட்சியகம், போர் நினைவுச் சின்னங்கள் ஆகியவை உள்ளது.

ஒப்பரா மாளிகை அருகிலேயே பழமையான 'தி ராக்ஸ்' என்னுமிடத்தில் ஆதிவாசிகள் பாறைகள், குகைகளில் செதுக்கிய சிற்பங்களை இன்றும் காணலாம்.

நகரிலிருந்து சிறிது நேரப் படகு சவாரியில் நகரின் வெளியே உள்ள, இன்னும் கூட அதிகம் பாதிப்படையாத புதர்ப் பகுதிகளை அடையலாம். ஆஸ்திரேலிய விலங்குகளும், பறவைகளும் அதிகளவில் காணப்படுகின்றன.

சிட்னி 
இரவில் சிட்னி துறைமுகம். இடது பக்கத்தில் ஒப்பேரா மாளிகையும் வர்த்தக மையம் நடுவிலும், துறைமுகப் பாலம் வலது பக்கத்திலும் காணப்படுகின்றன

கல்வி

சிட்னி 
சிட்னி பல்கலைக்கழகம், ஆஸ்திரேலியாவின் பழமையான பல்கலைக்கழகம்

1870 ஆம் ஆண்டில் பொதுப் பாடசாலைகள் நிறுவப்பட்டத்திலிருந்த காலத்திலிருந்தே சிட்னியில் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இந்நகரில் வசிக்கும் அதிகமானோர் கல்வி கற்றோராவர். 90% ஆனோர் பாடசாலைக் கல்வி கற்றுள்ளதுடன், 57% ஆனோர் உயர்தரக் கல்வியையும் கற்றுள்ளனர். சிட்னியில் ஆஸ்திரேலியாவின் சில முதன்மைக் கல்வி மையங்கள் அமைந்துளன. 1850இல் நிறுவப்பட்ட சிட்னி பல்கலைக்கழகம் ஆஸ்திரேலியாவின் மிகப் பெரிய மற்றும் பழமையான பல்கலைக்கழகமாக கருதப்படுகின்றது. சிட்னியில் அமைந்துள்ள மற்ற அரசு பல்கலைக்கழகங்கள் - சிட்னி தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகம், மக்குவாரி பல்கலைக்கழகம், மேற்கு சிட்னிப் பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்திரேலிய கத்தோலிக்கப் பல்கலைக்கழகம். சிட்னியில் சிறிய வளாகங்கள் வைத்திருக்கும் மற்ற பல்கலைக்கழகங்கள் நொற்ரே டேம் பல்கலைக்கழகம், வல்லன்கொங் பல்கலைக்கழகம் மற்றும் கேர்ட்டின் பல்கலைக்கழகம் ஆகும்.

சிட்னியில் அரசாங்க, கிறிஸ்துவ மற்றும் தனியார் பள்ளிக்கூடங்கள் உள்ளன.

மக்கள் தொகையியல்

Largest overseas born populations
நாட்டில் பிறந்தோர் சனத்தொகை (2011)
சிட்னி  ஐக்கிய இராச்சியம் 155,065
சிட்னி  சீனா 146,853
சிட்னி  இந்தியா 86,767
சிட்னி  நியூசிலாந்து 77,297
சிட்னி  வியட்நாம் 69,405
சிட்னி  பிலிப்பீன்சு 61,122
சிட்னி  லெபனான் 54,215
சிட்னி  தென் கொரியா 39,694
சிட்னி  இத்தாலி 39,155
சிட்னி  ஹொங் கொங் 36,804
சிட்னி  குரோசியா 33,930

1788 ஆம் ஆண்டில் சிட்னியின் சனத்தொகை 1000த்தை விடவும் குறைவானதாகும். குற்றவாளிகள் இங்கு நாடுகடத்தப்பட்டதனால் பத்து வருடங்களில், மக்கள் தொகை மூன்று மடங்காக அதாவது 2,953 என அதிகரித்தது. ஒவ்வொரு தசாப்தங்களுக்குமாக 1961 வரை 250,000 ஆக சனத்தொகை அதிகரித்துவந்தது. 2011 ஆம் ஆண்டில், சிட்னியின் மக்கள் தொகை 4,391,674 ஆகும். இச்சனத்தொகை 2061 இல் 8 அல்லது 8.5 மில்லியனாக திகரிக்கும் என்று கணிகப்பட்டது. எனினும் 2053 இல் அதிக மக்கள் தொகை கொண்ட ஆஸ்திரேலிய நகரமான இதனை மெல்பேர்ன் முந்தும் என ஆஸ்திரேலிய புள்ளிவிபரச் சபை அறிவித்தது. ஆஸ்திரேலியாவின் அதிக அடர்த்தியான் நான்கு புறநகர்களும் சிட்னியிலேயே அமைந்துள்ளன. இவற்றில் ஒவ்வொரு சதுர கிலோமீற்றர் பரப்பளவிற்கும் 13,000 உறைவிடங்கள் அமைந்துள்ளன.

சிட்னி 
சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம் சீனாடவுன், சீனர்கள் இங்கு அதிகம் வாழ்வதை இது குறிக்கிறது

சிட்னி வாசி ஒருவரின் சராசரி வயது 36 ஆகும். 12.9% ஆனோர் 65 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையோர் ஆவர். 49.7% ஆனோர் மணமுடித்தோராயும், 34.7% ஆனோர் மணம் முடிக்காதோராயும் உள்ளனர். 48.9% தம்பதியினருக்கு குழந்தைகள் உள்ளதுடன் 33.5% ஆனோருக்கு குழந்தைகள் கிடையாது. 32.5% ஆன மக்கள் ஆங்கிலம் அல்லாத அரபு மொழி, மன்டரின், கண்டோனீயம், வியட்நாமிஸ், கிரேக்கம் ஆகிய பிற மொழிகளையும் பேசி வருகின்றனர்.

பழங்குடி மரபைச் சேர்ந்த 54,746 பேர் 2011இல் சிட்னியில் வசித்து வந்துள்ளனர். 1840 தொடக்கம் 1930 வரையான காலப்பகுதியில் சிட்னிக்கு வந்தோர் பெரும்பாலும் பிரித்தானியரும் ஐரிஷினரும், சீனரும் ஆவர்.

இரண்டாம் உலகப் போர் இடம்பெற்ற காலப்பகுதியில் பல இனக்குழுவினர் சிட்னியில் குடியேறினர். இடாய்ச்சு மக்கள், இலங்கையர், இந்தியர், அஸ்ரியர், துருக்கியர், தாய் நாட்டவர், உருசியர், வியட்நாமியர், பிலிப்பினோ, கொரியர்], கிரேக்கர், லெபனாசியர், இத்தாயர், யூதர், செக் மக்கள், போலந்து நாட்டினர், செருமானியர், சேர்பியர் ஆகியோரே இவ்வாறான இனக்குழுவினராவர்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

சிட்னி வரலாறுசிட்னி புவியியல்சிட்னி 2000சிட்னி யின் சிறப்பு இடங்கள்சிட்னி கல்விசிட்னி மக்கள் தொகையியல்சிட்னி மேற்கோள்கள்சிட்னி வெளி இணைப்புகள்சிட்னிஅவுஸ்திரேலியாஆர்தர் ஃபிலிப்நகரம்நியூ சவுத் வேல்ஸ்பிரித்தானியா

🔥 Trending searches on Wiki தமிழ்:

தமிழக வரலாறுபிலிருபின்புணர்ச்சி (இலக்கணம்)சிறுவாபுரி முருகன் கோவில்திருத்தணி முருகன் கோயில்உயிரியற் பல்வகைமைஅணி இலக்கணம்முத்துராஜாமேற்குத் தொடர்ச்சி மலைஇந்திய செஞ்சிலுவைச் சங்கம்ராக்கி மலைத்தொடர்தனியார் பள்ளிசிற்பி பாலசுப்ரமணியம்சீவக சிந்தாமணிஅனுமன்செயற்கை நுண்ணறிவுஇலங்கைஇந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370கேழ்வரகுஇயேசு காவியம்பிரேமம் (திரைப்படம்)இந்திய மக்களவைத் தொகுதிகள்தமிழ்விடு தூதுதிருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் பட்டியல்இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்பசுமைப் புரட்சிஉலகப் புத்தக நாள்மீனாட்சிதிருப்பூர் குமரன்அதியமான்நீரிழிவு நோய்பாண்டியர்திருவோணம் (பஞ்சாங்கம்)தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024முத்துலட்சுமி ரெட்டிஇந்திய தேசிய சின்னங்கள்திருமந்திரம்இராவண காவியம்மட்பாண்டம்ஆங்கிலம்திதி, பஞ்சாங்கம்இந்தியாபணவீக்கம்ரயத்துவாரி நிலவரி முறைஎஸ். ஜானகிஇன்னா நாற்பதுசிறுநீரகம்மயில்சேக்கிழார்சூரைவிருமாண்டிசத்ய பிரதா சாகுசிங்கம்தமிழ்ஒளிநீர் பாதுகாப்புகுற்றியலுகரம்இலட்சத்தீவுகள்தமிழ்க் கல்வெட்டுகள்உலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)நம்ம வீட்டு பிள்ளைதொல்காப்பியம்தங்கராசு நடராசன்நாயக்கர்ஏப்ரல் 23சென்னை மாகாணம்வாதுமைக் கொட்டைபொன்னுக்கு வீங்கிகாடுராஜா (நடிகர்)மகேந்திரசிங் தோனிசீறாப் புராணம்இந்திய அரசியல் கட்சிகள்அன்னம்குடும்ப அட்டைகோத்திரம்தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்சஞ்சு சாம்சன்🡆 More