அபிய் அகமது

அபிய் அகமது அலி (Abiy Ahmed Ali; பிறப்பு: 15 ஆகத்து 1976) எத்தியோப்பிய அரசியலாளர்.

இவர் எத்தியோபியாவின் 15-வது தலைமை அமைச்சராக 2018 ஏப்ரல் 2 முதல் பதவியில் உள்ளார். 20-ஆண்டுகால எரித்திரிய-எத்தியோப்பியப் பிணக்கை முடிவுக்குக் கொண்டு வந்தமைக்காக 2019 அக்டோபர் 11 இல் இவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பெற்றது.

அபிய் அகமது அலி
Abiy Ahmed Ali
அபிய் அகமது
2018 இல் அபிய் அகமது
எத்தியோப்பியாவின் 15-வது பிரதமர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2 ஏப்ரல் 2018
குடியரசுத் தலைவர்முலாத்து தெசோமே
சாலி-வோர்க் சேவ்தி
முன்னையவர்ஐலிமரியாம் தேசாலென்
எத்தியோப்பிய மக்கள் புரட்சிகர சனநாயக முன்னணியின் 3-வது தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
27 மார்ச்சு 2018
Deputyதெமென்னி மெக்கோனென்
ஒரோமோ சனநாயகக் கட்சியின் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
22 பெப்ரவரி 2018
Deputyஇலெம்மா மெகர்சா
முன்னையவர்இலெம்மா மெகர்சா
அறிவியல், தொழில்நுட்ப அமைச்சர்
பதவியில்
6 அக்டோபர் 2015 – 1 நவம்பர் 2016
பிரதமர்ஐலிமரியாம் தெசாலென்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு15 ஆகத்து 1976 (1976-08-15) (அகவை 47)
பெசாசா, எத்தியோப்பியா
அரசியல் கட்சிஒரோமோ சனநாயகக் கட்சி
பிற அரசியல்
தொடர்புகள்
எத்தியோப்பிய மக்கள் புரட்சிகர சனநாயக முன்னணி
துணைவர்சினாசு த்யாச்செவ்
பிள்ளைகள்3 பெண்கள், வளர்ப்பு மகன் ஒருவர்
கல்விமைக்ரோலிங்க் தகவல் தொழில்நுட்பக் கல்லூரி (BA)
கிரீனிச்சுப் பல்கலைக்கழகம் (முதுகலை)
ஆசுலாந்து பல்கலைக்கழகம் (MBA)
அடிசு அபாபா பல்கலைக்கழகம் (PhD)
விருதுகள்அமைதிக்கான நோபல் பரிசு (2019)
இணையத்தளம்FDRE Office of the Prime Minister
Military service
பற்றிணைப்புஅபிய் அகமது எதியோப்பியா
கிளை/சேவைஎத்தியோப்பிய இராணுவம்
சேவை ஆண்டுகள்1991–2010
தரம்அபிய் அகமது லெப். கேணல்
போர்கள்/யுத்தங்கள்எத்தியோப்பிய உள்நாட்டுப் போர்
ஐநா உருவாண்டா பணி
எரித்திரிய-எத்தியோப்பியப் போர்

ஆளும் மக்கள் புரட்சிகர சனநாயக முன்னணி கட்சி, ஒரோமோ சனநாயகக் கட்சி ஆகியவற்றின் தலைவராக அபிய் அகமது இருந்து வருகிறார். முன்னாள் இராணுவப் புலனாய்வு அதிகாரியான அபிய் அகமது, எத்தியோப்பியத் தலைமையமைச்சர் ஆனது முதல், அரசியல், பொருளாதார சீர்திருத்தங்களுக்கான ஒரு பரந்த திட்டத்தை நாட்டில் அறிமுகப்படுத்தினார்.

அக்டோபர் 2021 இல், அபி 5 அகமது இரண்டாவது முறையாக 5 ஆண்டு காலத்திற்கு அதிகாரப்பூர்வமாக பதவியேற்றார்.

வாழ்க்கை வரலாறு

இளமை

அபிய் அகமது எத்தியோப்பியாவில், காப்பியின் தோற்றத்துக்குப் புகழ்பெற்ற, தென்மேற்கேயுள்ள காஃபா மாநிலத்தில் உள்ள பேசாசா என்னும் ஊரில் 1976 ஆகத்து 15 ஆம் நாளன்று பிறந்தார். இவருடைய தந்தையார் அகமது அலி ஓர் ஓரோமோ இனத்தைச் சார்ந்த இசுலாமியர். அம்ஃகாரா இனத்தைச் சேர்ந்த எத்தியோப்பிய மரபு கிறித்துவரான இவருடைய மறைந்த தாய் தெசெட்டா வோல்டே, இவரது தந்தையின் நான்காவது மனைவி ஆவார்.)

அபிய் அகமது அவருடைய தாய்க்கு ஆறாவதும் கடைசியுமான மகன். இவரின் தந்தையாருக்கு இவர் 13 ஆவது மகவு. இவருடைய இளமைக்கால பெயர் அபியோத்து தமிழில்: "புரட்சி"). 1974 இல் நடந்த எத்தியோப்பியப் புரட்சிக்குப் பிறகு இப்படியான பெயர்கள் கொள்வது வழக்கமாக இருந்தது. அப்பொழுது அபியோத்து என்றறியப்பட்ட அபிய் அகமது உள்ளூர் தொடக்கப்பள்ளியில் படித்தார். பின்னர் உயர்நிலை பள்ளிப்படிப்பை அகரோ நகரத்தில் தொடர்ந்தார். பல ஆவணங்களின் படி இவர் கல்வியில் மிகுந்த ஆரவம் கொண்டிருந்தார். பிறருக்கும் கல்வியில் அக்கறை கொள்ளச்செய்தார்.

அகவாழ்க்கை

அபிய் அகமது தன் வருங்கால மனைவி இசீனாசு தயாச்சேவ் என்னும் அம்ஃகாரா இனத்துப் பெண்மணியை எத்தியோப்பிய பாதுகாப்புத் துறையில் இருந்தபொழுது சந்தித்தார். இசீனாசு தயாச்சேவ் கோந்தார் என்னும் மாவட்டத்தில் இருந்து வருபவர். இவர்களுக்கு மூன்று மகள்களும், தத்து எடுத்துக்கொண்ட ஒரு மகனும் உள்ளனர். அபிய் அகமது பன்மொழி பேசுபவர். இவருக்கு அஃபான் ஒரோமோ, அம்ஃகாரி, திகிரினியா, ஆங்கிலம் ஆகிய மொழிகள் பேசத்தெரியும். இவர் உடலைத் தக்கநிலையில் வைத்திருக்கும் நற்பழக்கமும் ஆர்வமும் கொண்டவர். உடல்நலத்தோடு உளநலமும் முக்கியம் என எடுத்துரைப்பவர். இவர் பெந்தகோசுட்டு கிறித்துவ ஆர்வலர்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

அபிய் அகமது வாழ்க்கை வரலாறுஅபிய் அகமது மேற்கோள்கள்அபிய் அகமது வெளி இணைப்புகள்அபிய் அகமதுஅமைதிக்கான நோபல் பரிசுஎத்தியோப்பியா

🔥 Trending searches on Wiki தமிழ்:

இம்மையிலும் நன்மை தருவார் கோயில்வளைகாப்புநிலாபட்டினப் பாலைகரணம்சங்கம் (முச்சங்கம்)தெ. பொ. மீனாட்சிசுந்தரம்நருடோசித்திரைத் திருவிழாகா. காளிமுத்துகல்லீரல்திருவாலங்காடு வடாரண்யேசுவரர் கோயில்ஆங்கிலம்தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் பட்டியல்சுந்தர காண்டம்இந்திய தேசியக் கொடிஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதிதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்சு. வெங்கடேசன்ஆரணி மக்களவைத் தொகுதிதைனிக் பாஸ்கர்மருதமலைசதுரங்க விதிமுறைகள்மாதேசுவரன் மலைமயிலாடுதுறை மக்களவைத் தொகுதிசாம்பல்வைணவ சமயம்கார்த்திக் (தமிழ் நடிகர்)மோகன்தாசு கரம்சந்த் காந்திகற்றது தமிழ்தேவாரம்நம்ம வீட்டு பிள்ளைஅறுபடைவீடுகள்தமிழ்நாடு அமைச்சரவைநிர்மலா சீதாராமன்கரூர் மக்களவைத் தொகுதிவிருதுநகர் மக்களவைத் தொகுதிவேலு நாச்சியார்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்இளையராஜாமதுரை வீரன்அக்பர்காயத்ரி மந்திரம்விளக்கெண்ணெய்வன்னியர்விவேகானந்தர்மாதவிடாய்கலித்தொகைசரோஜாதேவிஅருந்ததியர்கருக்காலம்தங்கம்அழகர் ஆற்றில் இறங்குதல் (விழா)சூரரைப் போற்று (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குநடுக்குவாதம்அளபெடைவிஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்டிரைகிளிசரைடுநாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்அழகர் கோவில்வைதேகி காத்திருந்தாள்மனித மூளைராஜரிஷிவைரமுத்துஓ. பன்னீர்செல்வம்திருவண்ணாமலைகொன்றைமாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்காவிரி ஆறுரமலான்பள்ளர்நோட்டா (இந்தியா)ஐந்திணைகளும் உரிப்பொருளும்தேனி மக்களவைத் தொகுதிபலாமு. க. தமிழரசுஆடு ஜீவிதம்🡆 More