சிவிங்கிப்புலி

வேங்கை அல்லது சிவிங்கிப்புலி (Cheetah) பூனைக்குடும்பத்தைச் சேர்ந்த ஊனுண்ணி வகையைச் சேர்ந்த பாலூட்டி விலங்காகும்.

Cheetah
புதைப்படிவ காலம்:Late Pliocene to Recent
சிவிங்கிப்புலி
உயிரியல் வகைப்பாடு
திணை:
விலங்கு
தொகுதி:
வகுப்பு:
பாலூட்டிகள்
வரிசை:
குடும்பம்:
துணைக்குடும்பம்:
Felinae
பேரினம்:
Acinonyx

Brookes, 1828
இனம்:
A. jubatus
இருசொற் பெயரீடு
Acinonyx jubatus
(Schreber, 1775)
மாதிரி இனம்
Acinonyx venator
Brookes, 1828 (= Felis jubata, Schreber, 1775) by monotypy
சிவிங்கிப்புலி
சிவிங்கிப்புலியின் வாழிட வரைப்படம்

இது நிலத்தில் வாழும் விலங்குகளிலேயே மிகவும் வேகமாக ஓடக்கூடியதாகும். இதனால் மணிக்கு 112 கிமீ முதல் 120 கிமீ (70 முதல் 75 மைல்) வேகத்துக்கு மேல் ஓட முடியும்.

உடல் அமைப்பு

சிவிங்கிப்புலி 
வேங்கை
சிவிங்கிப்புலி 
சிவிங்கிப் புலி, சிறுத்தை, ஜாகுவார் - வித்தியாசங்கள்

சிவிங்கிப்புலி இளம் மஞ்சள் நிறத்தில் இருக்கும். வேங்கையின் தலை சிறியதாகவும், உடல் நீளமாகவும் கால்கள் உயரமாகவும், வால் நீளமாகவும் இருக்கும். இதன் உடல் முழுவதும் 2 முதல் 3 செமீ அளவுள்ள வட்டவடிவ கருப்புப் புள்ளிகள் காணப்படும். அதன் கீழ்வயிற்றுப்பகுதியில் புள்ளிகள் எதுவும் காணப்படாமல் வெள்ளை நிறத்தில் இருக்கும். வயதுவந்த ஒரு சிவிங்கிப்புலி 40 முதல் 65 கிகி எடையும், 112 முதல் 135 செமீ நீளமான உடலும், 84 செமீ நீளமுடைய வாலும் கொண்டிருக்கும். ஆண் சிவிங்கிப்புலிகள் பெண் சிவிங்கிப்புலிகளை விட சற்றுப் பெரிய தலையை உடையதாய் இருக்கும். ஆனால் ஒரு வேங்கையைத் தனியாகப் பார்க்கும் போது அது ஆணா, பெண்ணா என இனம் பிரித்துக் காண்பது கடினமே.

வசிப்பிடம்

வேங்கை மரத்தில் ஏறக்கூடிய திறமை உடையது. இது தான் வேட்டையாடிய உணவை தேவையான போது உண்பதற்காக மரத்தில் பாதுகாப்பாக சேமித்து வைக்கும். இவை பெரும்பாலும் மரத்திலும், புதர் மறைவிலும் தான் வசிக்கின்றன.

உணவுப்பழக்கம்

வேங்கை வேட்டையாடுதல் மூலமே உணவு தேடிக்கொள்கிறது. மான், குதிரை, முயல் உள்ளிட்ட உயிரினங்களை வேட்டையாடி உண்கிறது.

வாழ்க்கைமுறை

சிவிங்கிப்புலி 
பெண் வேங்கை தன் குட்டியுடன்

பெண் வேங்கைகள் 20 முதல் 22 மாதங்களில் இனப்பெருக்கம் செய்யும் பருவத்தை எட்டுகின்றன. ஆண் வேங்கைகள் 12 மாதங்களிலேயே இப்பருவத்தை எட்டி விடுகின்றன. பெண்சிவிங்கிப்புலியின் கர்ப்பகாலம் 98 நாட்கள் ஆகும். சிவிங்கிப்புலி குட்டிகள் பிறக்கும் போது வெறும் 150 முதல் 300 கிராம் எடையுள்ளனவாகவே உள்ளன. இந்த சிறுத்தைக்குட்டிகள் கழுகுகள், ஓநாய்கள் மற்றும் சிங்கங்களால் உயிரிழப்புக்கு உள்ளாகின்றன.

சிவிங்கிப்புலிகள் ஆப்பிரிக்காவில் தோன்றி இந்தியாவில் பரவியிருக்கலாம் என நம்பப்படுகிறது. சிவிங்கிப்புலி இப்போது இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் அற்றுப்போய்விட்டது. மேலும் ஆப்பிரிக்க கண்டத்தில் அழிந்துவரும் உயிரினமாக வகைப்படுத்தப்பட்டு வேட்டையாடுவது தடைசெய்யப்பட்டுள்ளது.

சிவிங்கிப்புலி 
பழக்கப்படுத்திய சிவிங்கிப்புலியைக் கொண்டு தென் குசராத்தில் மானை வேட்டாயாடும் 1812 ஆண்டைய ஓவியம்

வேட்டைப் பயன்பாடு

இந்த விலங்கை பழங்காலத்தில் இருந்து மனிதர்கள் பழக்கப்படுத்தி வேட்டைக்காக பயன்படுத்தி வந்துள்ளனர். இந்தியத் துணைக்கண்டத்தில் குறுநில மன்னர்கள் பலர் சிவிங்கிப் புலியைப் பழக்கி, வெளிமான், முயல் போன்ற விலங்குகளை வேட்டையாடப் பயன்படுத்தினர்.

மேற்கோள்கள், அடிக்குறிப்புகள்

Tags:

சிவிங்கிப்புலி உடல் அமைப்புசிவிங்கிப்புலி வசிப்பிடம்சிவிங்கிப்புலி உணவுப்பழக்கம்சிவிங்கிப்புலி வாழ்க்கைமுறைசிவிங்கிப்புலி வேட்டைப் பயன்பாடுசிவிங்கிப்புலி மேற்கோள்கள், அடிக்குறிப்புகள்சிவிங்கிப்புலிஊனுண்ணிபாலூட்டி

🔥 Trending searches on Wiki தமிழ்:

இளையராஜாகுண்டூர் காரம்திராவிட இயக்கம்மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்துக் கழகம்தொட்டிய நாயக்கர்சன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்எயிட்சுமயங்கொலிச் சொற்கள்மரபுச்சொற்கள்தமிழ்நாட்டின் அடையாளங்கள்மதுரை வீரன்சிறுகதைதிருப்பதி வெங்கடாசலபதி கோயில்என் ஆசை மச்சான்பூலித்தேவன்பாலை (திணை)சதுரங்க விதிமுறைகள்செம்மொழிதிமிரு புடிச்சவன் (திரைப்படம்)விருந்தோம்பல்விசயகாந்துகள்ளர் (இனக் குழுமம்)தமிழில் சிற்றிலக்கியங்கள்இன்ஸ்ட்டாகிராம்திருச்செந்தூர்செப்பு108 வைணவத் திருத்தலங்கள்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2019யானையின் தமிழ்ப்பெயர்கள்வேற்றுமை (தமிழ் இலக்கணம்)செம்பிசீறாப் புராணம்செயற்கை நுண்ணறிவுஉரைநடைசங்க காலப் பெண்பாற் புலவர்கள்மாமல்லபுரம்கடல்நாயன்மார் பட்டியல்ஐங்குறுநூறுஆதி திராவிடர்ஆழ்வார்கள்இலங்கையின் மாவட்டங்கள்இயேசுசம்பளம்திருப்பதிவெள்ளை வாவல்சிங்கம் (திரைப்படம்)நவதானியம்கும்பகோணம்உலா (இலக்கியம்)திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்இலட்டுஇராவணன்இலக்கியம்தேவாங்குவிடுதலைச் சிறுத்தைகள் கட்சிநக்கீரர், சங்கப்புலவர்வசுதைவ குடும்பகம்ஜெயகாந்தன்தமிழ்விடு தூதுவாரிசுநாலாயிர திவ்வியப் பிரபந்தம்வேர்க்குருஅறிவியல் தமிழ்கூத்தாண்டவர் திருவிழாபூனைபனைகடையெழு வள்ளல்கள்பாட்ஷாமூலம் (நோய்)வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில்பிள்ளைத்தமிழ்தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்அன்பே ஆருயிரே (2005 திரைப்படம்)குறை ஒன்றும் இல்லை (பாடல்)விருமாண்டிசாகித்திய அகாதமி விருதுதமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி🡆 More