மணிலா பெருநகரம் அல்லது மெட்ரோ மணிலா (பிலிப்பினோ: Kalakhang Maynila, Kamaynilaan) என்பது பிலிப்பீன்சு நாட்டின் தேசியத் தலைநகரப்பகுதி (National Capital Region) ஆகும்.
இத்தேசியத் தலைநகரப்பகுதியானது பல்வேறு பிலிப்பீனியப் பெரு நகரங்களைக் கொண்டுள்ளது. மணிலா நகர் உட்பட மொத்தமாக பதினாறு நகரங்கள் இத்தேசியத் தலைநகரப்பகுதியில் காணப்படுகின்றன. இத்தேசியத் தலைநகரப்பகுதி அரசாங்க, கலாச்சார, பொருளாதார மற்றும் கல்விக்கான நாட்டின் மத்திய நிலையமாக விளங்குகின்றது. இதன் மொத்தப் பரப்பளவு 638.55 சதுர கிலோமீற்றர்கள் ஆகும். 2010 ஆம் ஆண்டின் சனத்தொகைக் கணக்கெடுப்பின் படி இப்பகுதியின் சனத்தொகை 11,855,975 ஆகும். 1975 ஆம் ஆண்டில் நவம்பர் மாதம் ஏழாம் திகதி இத்தேசியத் தலைநகரப்பகுதி நிறுவப்பட்டது.
மெட்ரோ மணிலா Metro Manila Kalakhang Maynila | |
---|---|
மாநகரம் | |
நாடு | பிலிப்பீன்சு |
நிர்வாக அமைப்பு | மெட்ரோபோலியன் மணிலா |
நிறுவுதல் | நவம்பர் 7, 1975 |
உப பகுதிகள் | பட்டியல்
|
பரப்பளவு | |
• மொத்தம் | 638.55 km2 (246.55 sq mi) |
மக்கள்தொகை (1903, 1918, 1939, 1948, 1960, 1970, 1975, 1980, 1990, 1995, 2000, 2007, 2010, 2015, 2020) | |
• மொத்தம் | 1,34,84,462 |
• அடர்த்தி | 21,000/km2 (55,000/sq mi) |
இனங்கள் | Manileño |
நேர வலயம் | பிலிப்பைன் சர்வதேச நேரம் (ஒசநே+8) |
அழைப்பு எண் | 2 |
இணையதளம் | mmda |
தட்பவெப்ப நிலைத் தகவல், Metro Manila | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) | 35 (95) | 35 (95) | 36 (97) | 37 (99) | 38 (100) | 38 (100) | 38 (100) | 36 (97) | 35 (95) | 35 (95) | 35 (95) | 34 (93) | 38 (100) |
உயர் சராசரி °C (°F) | 30 (86) | 30 (86) | 31 (88) | 33 (91) | 34 (93) | 34 (93) | 33 (91) | 31 (88) | 31 (88) | 31 (88) | 31 (88) | 31 (88) | 31 (88) |
தாழ் சராசரி °C (°F) | 21 (70) | 21 (70) | 21 (70) | 22 (72) | 23 (73) | 24 (75) | 24 (75) | 24 (75) | 24 (75) | 24 (75) | 23 (73) | 22 (72) | 23 (73) |
பதியப்பட்ட தாழ் °C (°F) | 14 (57) | 14 (57) | 16 (61) | 16 (61) | 17 (63) | 20 (68) | 22 (72) | 21 (70) | 21 (70) | 21 (70) | 19 (66) | 17 (63) | 14 (57) |
பொழிவு mm (inches) | 23 (0.91) | 23 (0.91) | 13 (0.51) | 18 (0.71) | 33 (1.3) | 130 (5.12) | 254 (10) | 432 (17.01) | 422 (16.61) | 356 (14.02) | 193 (7.6) | 145 (5.71) | 2,042 (80.39) |
ஆதாரம்: WeatherSpark |
This article uses material from the Wikipedia தமிழ் article மணிலா பெருநகரம், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.