கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo, பிறப்பு: பெப்ரவரி 5, 1985) போர்த்துகீச கால்பந்து போர்த்துகீசிய நாட்டு கால்பந்தாட்ட வீரர் ஆவார்.
இவர் 2003-2022 வரை உலகின் தலைச்சிறந்த கால்பந்தாட்ட வீரர்கள் பட்டியலில் தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தார். இங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டர் யுனைடெட் கிளப்பிற்கு 2003-2009 வரை விளையாடிய நாட்கள் உலகம் முழுவதும் இவரின் பிரபலத்தை அதிகரித்தது. அதன் பின்னர் இவர் எசுப்பானியா நாட்டின் ரியல் மாட்ரிட் அணிக்காகவும் ஆடினார். புகழ்பெற்ற இத்தாலிய கால்பந்து அணியான யுவெண்டஸ் அணிக்காகவும் 2018-2021 வரை விளையாடினார். அதன் பின்னர் மான்செஸடர் யுனைடெட் அணிக்கு 2021-2022 வாக்கில் மறுபடியும் விளையாடினார். 2022 உலக கோப்பை கால்பந்து தொடருக்கு முன்னர் நேர்காணல் ஒன்றில் மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்தாட்ட அணியையும், அணியின் நிர்வாகம், பயிற்சியாளர்/மேலாளர் பற்றி கடுமையாக விமர்சனம் செய்ததற்காக அவருடைய விளையாட்டு ஒப்பந்தத்தை நிரந்தரமாக முடித்துக் கொண்டது அந்த கிளப். அதன் பின்னர் சவூதி அரேபியாவின் கிளப்பான அல் நாசர் அணிக்கு தற்போது விளையாடி வருகிறார். இவருடன் அர்ஜென்டினா அணியின் ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி சேர்ந்து உலகின் இரண்டு தலைசிறந்த கால்பந்தாட்ட வீரர்களாக ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். ரொனால்டோ தான் தற்போதைய உலகின் அதி பிரபலமாக திகழ்ந்து வருகிறார். இவருக்கு 50 முதல் 90 கோடி வரை இவரை பொது வலைதளங்களில் பின்பற்றி வருகின்றனர்.
ரொனால்டோ போர்த்துகல் அணியில் 2018 உலகக்கோப்பை காற்பந்து போட்டியில். | |||
சுய தகவல்கள் | |||
---|---|---|---|
முழுப் பெயர் | கிறிஸ்டியானோ ரொனால்டோ டொஸ் சாண்டோசு அவெய்ரோ | ||
பிறந்த நாள் | 5 பெப்ரவரி 1985 | ||
பிறந்த இடம் | பஞ்ச்சல், மதீரா, போர்த்துகல் | ||
உயரம் | 1.85 மீ | ||
ஆடும் நிலை(கள்) | முன்களம் | ||
கழகத் தகவல்கள் | |||
தற்போதைய கழகம் | Al Nassr | ||
எண் | 7 | ||
இளநிலை வாழ்வழி | |||
1992–1995 | அந்தொரீனியா | ||
1995–1997 | நசியனால் | ||
1997–2002 | ஸ்போர்ட்டிங் | ||
முதுநிலை வாழ்வழி* | |||
ஆண்டுகள் | கழகம் | தோற். | (கோல்) |
2002–2003 | ஸ்போர்ட்டிங் பி | 2 | (0) |
2002–2003 | ஸ்போர்ட்டிங் | 25 | (3) |
2003–2009 | மான்செஸ்டர் யுனைட்டட் | 196 | (84) |
2009– 2018 | ரியால் மாட்ரிட் | 292 | (311) |
2018 - 2021 | Juventus | ||
2021- 2023 | Manchester United | ||
2023 - Current | Al Nassr | ||
பன்னாட்டு வாழ்வழி‡ | |||
2001 | போர்த்துகல் கீழ்-15 | 9 | (7) |
2001–2002 | போர்த்துகல் கீழ்-17 | 7 | (5) |
2003 | போர்த்துகல் கீx-20 | 5 | (1) |
2002–2003 | போர்த்துகல் கீழ்-21 | 10 | (3) |
2004 | போர்த்துகல் கீழ்-23 | 3 | (2) |
2003– | போர்த்துகல் | 152 | (85) |
*கழக உள்ளூர் சுற்றுப் போட்டிகள் தோற்றங்களும் கோல்களும், 19 மே 2018 அன்று சேகரிக்கப்பட்டது. ‡ தேசிய அணிக்கான விளையாட்டுகளும் கோல்களும் 20 சூன் 2018 அன்று சேகரிக்கப்பட்டது. |
இப்பொழுது விளையாடிவரும் கால்பந்து வீரர்களிலேயே ஒரு கழகத்திற்காக அதிகம் விலைகொடுத்து வாங்கப்பட்ட வீரர்களில் இவர்தான் முதன்முதலாக அதிக விலைக்கு 2009 இல் மான்செஸ்டர் யுனைடெட் இல் இருந்து ரியால் மாட்ரிட் க்கு விற்கப்படார். இவருக்காக ஏலம் விட்ட தொகை சுமார் 132 மில்லியன் US$/ 80 மில்லியன்£ ஆகும்.
தனது ஆரம்ப காலங்களில் அன்டோரின்கா என்ற கழகத்திற்காக விளையாடிய ரொனால்டோ 1997ல் நிசியோனல் என்ற கழகத்திற்கு மாறினார். அதன் பின் ஸ்போர்திங் C.P என்ற கழகத்தில் விளையாடும்போது மான்செஸ்டர் யுனைடெட் அணியின் நிர்வாகியான அலெக்ஸ் பெர்குசன் இவரின் ஆட்டத்தை பார்த்து வியந்து இவரை தன்னுடைய கிளப்பிர்க்கு விலைக்கு வாங்க முடிவெடுத்தார்.
போர்த்துக்கல் நாட்டின் கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ மீண்டும் 15.09.2013 அன்று தொடர்ந்து "எசுப்பானியா" நாட்டின் கால்பந்து கிளப்பான ரியல் மாட்ரிட் கிளப்பின் தலைவர் புளோரின்டினா பெரெஸ்சும் இணைந்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்கள். இதன் மூலம் இவருக்கு ஆண்டுக்கு 143 கோடிகள் வருமானம் கிடைத்தது.
ரொனால்டோவிற்கு புகை மற்றும் குடிப்பழக்கங்கள் கிடையாது, காரணம் இவரது தந்தை இந்த காரணங்களால் இறந்ததாலே ரொனால்டோ இந்த பழக்கங்களை வெறுக்கின்றார். மற்றும் இவர் தனது உடலில் எவ்வித டேட்டுகளும் (பச்சை குத்துதல்) இட்டுக் கொள்ள மாட்டார், காரணம் இவர் ஆண்டுக்கு ஒருமுறை தனது சொந்த ஊரில் உள்ள மருத்துவமனையில் இரத்த தானம் செய்து கொள்ளும் பழக்கம் கொண்டவர்.[சான்று தேவை]
This article uses material from the Wikipedia தமிழ் article கிறிஸ்டியானோ ரொனால்டோ, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.